25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

Dec 29, 2023

தக்காளியின் தோல் நீக்க..... 

கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.தக்காளியின் தோல் நீக்க தக்காளியின் மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும் கத்தியால் சிறிது கீறிவிட்டு10 நொடிகள்சுடுநீரில் போட்டு எடுத்தால் தோல் சுலபமாகக் கழன்று விடும்.பஜ்ஜி மாவில் சிறிது வெள்ளை எள், கடுகு, தேங்காய்த்துருவல் மூன்றையும் சேர்த்தால் பஜ்ஜி சுவையாக இருக்கும். *வெங்காய சாம்பார் செய்யும்போது தேங்காயுடன் வெங்காயத்தை வதக்கி அரைத்து குழம்பில் சேர்க்க ருசியும். மணமும் பிரமாதமாக இருக்கும் .உளுந்து அப்பளம் நான்கு எடுத்து அடுப்பில் சுட்டுத் தூளாக்கி, அதில் தயிரை சேர்க்க. திடீர் தயிர் பச்சடி தயார்.

Dec 27, 2023

வாழைப்பழத்தின் காம்பு பகுதி கருக்காமல் இருக்க....

காய்கறி நறுக்குறதிலேயே கஷ்டமான காரியம் கொத்தவரங்கா, பீன்ஸ், வெண்டைக்காய் போன்றவற்றை நறுக்குவது தான். இவைகளை சுலபமாக நறுக்க காயைசுத்தம்செய்தபிறகுமுதலில்காய்களைஒன்றாக சேர்த்து வைத்து ரப்பர் பேண்ட் போட்ட பிறகு நறுக்கி ஒரே நேரத்தில் நிறைய காய்களை சுலபமாக நறுக்கி விடலாம்.இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும், இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும். தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொறு  மொறுப்பாக வரும்.வெந்தயத்தை கறுப்பாக வறுத்து தூள் செய்து காப்பி பொடியில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை வியாதிஉள்ளவர்களுக்கு நல்லது.சாம்பார் கீரை, புளிப்பு கூட்டு போன்றவற்றை கொதித்து இறக்கும் சமயம் துளி வெந்தய பொடி தூவி இறக்கினால் நல்ல வாசனையாக இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியம்.வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைத்தால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்.

Dec 26, 2023

மீன் குழம்பை பொடி வகைகள் போட்டு செய்வதை விட  அரைத்த மசாலா  போட்டு செய்தால் நன்றாக இருக்கும்.

மீன் குழம்பை பொடி வகைகள் போட்டு செய்வதை விட  அரைத்த மசாலா  போட்டு செய்தால் நன்றாக இருக்கும்.சிக்கன் கிரேவி செய்யும் போது.கிரேவியைஅடுப்பிலிருந்துஎடுப்பதற்கு முன் சிறிது முந்திரியுடன்பால் சேர்த்து அரைத்து கிரேவியில்சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால்சிக்கன் கிரேவி ருசியாக இருக்கும்.கறியுடன்உருளைக்கிழங்கைசேர்ந்தால்சுவையாகவும்வாசனையாகவும் இருக்கும்.தந்தூரி சிக்கன் செய்வதற்குசில்லி சிக்கன் பொடி சேர்ப்பதற்குபதிலாகமிளகாய்த்தூள்,மல்லித்தூள்சேர்த்துசெய்தால்தந்தூரிசிக்கன்சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்,வீட்டில் தினமும் வைக்கும் குழம்பு பதார்த்தங்களில் கொஞ்சமா மீந்து விடும். அதை அடுத்த நாள் சூடு செய்வதற்காக தனியாக ஒரு பாத்திரத்தை தேட வேண்டாம். அடுப்பில் தோசை கல் வைத்து சூடானதும் இந்த சிறிய கிண்ணத்தை கல்லின் மீது வைத்து சுற்றிலும் தண்ணீர் ஊற்றி அதன் பிறகு மூடியை வைத்து குழம்பை மூடி விடுங்கள். ஐந்து நிமிடத்தில் குழம்பு நன்றாக சூடாகி விடும். 

Dec 20, 2023

பூண்டு கெட்டுப்போகாமல் இருக்க.....

பூண்டு கெட்டுப்போகாமல் இருக்க கொஞ்சம் கேழ்வரகை சேர்த்து வைத்தால் புழுக்காமல் நீண்ட நாட்கள் வரை இருக்கும்.பூரி சுடும் போது நாம் ஒவ்வொரு பூரியாக திரட்டிய பிறகு தான் எண்ணெயில் போட வேண்டும். இதனால் அதிக நேரம் பிடிக்கும். அதற்கு சப்பாத்தி திரட்டும் கல்லில் சப்பாத்தி அகலத்திற்கு பெரிதாக மாவை தேய்த்து கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு சிறிய கிண்ணமோ முடியோ வைத்து சின்ன சின்ன பூரிகளாக எடுத்து விடுங்கள். இது சிறிதாக இருப்ப தால் பொரிக்கும் போதும் இரண்டு மூன்று பூரிகளாகவே போட்டுபொரிக்கலாம். இதனால் எண்ணெய்யும் மிச்சமாகும் சீக்கிரத்தில் சமையலும் முடியும்.கீரையை சுத்தம் செய்து பொரியலுக்கு நறுக்குவதும் கொஞ்சம் சிரமமான வேலை தான். அதற்கு கீரையை நன்றாக சுத்தம் செய்த பிறகு கடைகளில் பழங்கள் போட்டு தரும் வலை பையில் போட்டு விடுங்கள். அதன் பிறகு பையை வெளிப்புறமாக மடித்து கொஞ்சம் கொஞ்சமாக கீரையை நறுக்குங்கள். ஒரே நேரத்தில் மொத்த கீரையும் நறுக்கி விடலாம்,

Dec 16, 2023

மீனை சுத்தம் செய்தால் கைகளில்நாற்றம்அடிக்காது

சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்க 2 கிராம்பு அதில் போட்டு வைத்தால் எறும்பு வராது.குக்கரில் அடி பிடித்து விட்டாலோ, கரை படிந்து விட்டாலோ ஸ்க்ரப்பர் ப்ரஸ் கொண்டு சுத்தம் செய்யலாம். ஒரு கப் குளிர்ந்த நீரில் சில துளிகள் சோப்பு நீர் விட்டு குக்கரில் ஊற்றி அதை லேசாக பின்னர் கழுவினால் திப்ந்து கரை பிடித்துப் போன உணவுகள் எளிதாக வந்து விடும்.தற்போது புதிய வகையான காட்டர் பாட்டம், நான் எட்டிக் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். அவற்றை பயன்படுத்தும் போது கேஎப் அடுப்பில் தீயை அதிகமாக வைத்து பயன்படுத்தக் கூடாதுநெத்திலிக் கருவாடு வறுவல்செய்வதற்கு முன் ஒரு பாத்திரத்தில்கருவாடை போட்டு சிறிது வெந்நீரைஊற்றி, சிறிது நேரம் கழித்து அதைசுத்தம் செய்து பிறகு வறுவல்செய்தால் கருவாடு இருக்கும்.உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றிதேய் த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில்நாற்றம்அடிக்காது

Dec 13, 2023

 வெண்பொங்கல் செய்ய

வாழைக்காய் பஜ்ஜி போட வாழைக்காய் சீவ கஷ்டமாக இருக்கா? உங்களுக்கான டிப்ஸ் வாழைக்காய் சீவும் கத்தியில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள், அதுக்கு அப்புறம்வாழைக்காயை சீவுங்க அழகான வடிவமாக வரும் .குக்கரில் சாதம் வைக்க வேண்டாம், அது உடம்புக்கு நல்லது கிடையாது சர்க்கரை நோய் வருவதற்கு காரணம், வடிச்ச சாதத்தை சாப்பிட வேண்டும். பிரியாணி அந்த மாதிரி மட்டும் குக்கர் யூஸ் பண்ணுங்க.பச்சரிசியில் வெண்பொங்கல் பண்ண வேண்டாம். அப்படி வெண்பொங்கல் செய்தாலும் ஒரு தடவை சாப்பிடுகிற மாதிரி வைத்துக் கொள்ளுங்கள், புழுங்கல் அரிசியில் வெண்பொங்கல் செய்து சாப்பிடலாம்.பச்சை மிளகாய் அதிகம் இருந்தால் அழுகுவதற்குள் வெந்நீரில் கொதிக்கவைத்து, பின் வெயிலில் உலர்த்தி எடுக்கவும். இதனை மோர்க்குழம்பு. அவியல், சட்னி அரைக்கும்போது உபயோகித்தால் நிறம் மாறாமல் வெண்மையாக இருப்பதுடன் காரமும் குறையாமல் இருக்கும்.பால் பிழிந்தெடுத்ததேங்காய் துருவலை வெளியே கொட்டாமல் அதனுடன்கறிவேப்பிலை சேர்த்து வறுத்து உப்பு, புளி, காரம் பூண்டு பற்கள் சேர்த்து சுவையான துவையல் செய்யலாம்.

Dec 08, 2023

முட்டை கெட்டுப் போகாமல் இருக்க .....

குழம்பில் காரம் அதிகமானால் சிறிது வெல்லம் சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.ஏலக்காயை பொடியாக அரைக்க | ஏலக்காயுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பொடி செய்தால் ஏலக்காய் பொடியாக அரைத்து விடும்.கீரை கடையல் செய்யும் போது கீரையின் கலர் மாறாமல் இருக்க சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் கீரையின் நிறம் மாறாது.பருப்பு வேக வைக்கும் போது பருப்புடன் சிறிதளவு நெய் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.முட்டை கெட்டுப் போகாமல் இருக்க முட்டையின் மீது லேசாக எண்ணெய் தடவி வைத்தால் முட்டை விரைவில் கெட்டுப்போகாமல் இருக்கும்.

Dec 06, 2023

பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடிவைக்கக் கூடாது.

அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் நேய்க்க வேண்டும். இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும். காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது. பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடிவைக்கக் கூடாது.  ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் சால்ட் கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.

Dec 01, 2023

பனீர் நிறம் மாறாமல் இருக்க

கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.மணத்தக்காளி வத்தல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் ருசியே ருசிதான்.வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கை கீரையையும் வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.எலுமிச்சை சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் வதக்கிய வெங்காய துருவலை சேர்த்தால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.பனீரை ஃபிரிஜில் வைத்தால், மஞ்சள் நிறமாகிவிடும். ஒரு வெள்ளைத்துணியில் வினிகர் கலந்த நீரை தெளித்து ,அதில் பனீரை வைத்து ஃபிரிஜில் வைத்தால் நிறம் மாறாது.

Nov 30, 2023

பாசிப்பருப்பில் புழு வராமல் இருக்க....

தக்காளி சாதம் கிளறும்போது பச்சைமிளகாய், தக்காளி, வெங்காயத்தை அரைத்துவிட்டுச் செய்தால் சுவையாக இருக்கும். நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு விட்டால் தக்காளி சாதம், பிரியாணி போல் வாசனையாக இருக்கும்.பாலுடன் இரண்டொரு நெல்மணி களைப் போட்டு வைத்தால் காலையில் கறந்தபால் இரவு வரை கெடாமல் இருக்கும் .தரையில் எண்ணெய் கொட்டிவிட்டால், துடைத்துவிட்டு, எண்ணெய் கொட்டிய இடத்தில் கோதுமை தவிட்டினைத் தூவி பெருக்கினால் எண்ணெய் பிசுக்கு இருக்காது.பாசிப்பருப்பில் புழு வராமல் இருக்க, பருப்பைவாணலியில் வறுத்து. ஆறவைத்து பின் டப்பாக்களில் அடைத்து வைக்கலாம்.இட்லிக்கு மாவு அரைக்கும்போது உளுந்தோடு வெந்தயத்தையும் சேர்த்து அரைத்தால் உடலுக்கு நல்லது, அந்த மாவைக் கொண்டு தோசை ஊற்றினால், பொன்னிறத்துடன் சுவையாகவும் இருக்கும்.

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 21 22

AD's



More News