25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

Apr 25, 2023

கீரை மசியல்

பூண்டு உரிக்க இதை விட ஒரு சூப்பர் டிப்ஸ் நம்ம கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம். நீங்க உரிக்க வேண்டிய பூண்டு எல்லாம் ஒரு துணியில் போட்டு மூட்டை மாதிரி கட்டி எடுத்து கொள்ளுங்கள். நாம் காய் சீவும் சீவலில் இந்த பூண்டுமூட்டையை லேசா தேய்தால் போதும் உள்ள இருக்கும் பூண்டு எல்லாம் தோல் உரித்து வந்து விடும். இந்த முறையில் நீங்க பண்ணி பாருங்க எவ்வளவு பூண்டு இருந்தாலும் இனி அசால்டா உரிச்சி எடுத்துடலாம்.கீரை மசியல் செய்ய கீரையை கடையும் போது அதனுடன் கால் டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கடைய கீரை தனி சுவையுடன் இருக்கும்.கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை: பசுமையாகவும், ருசியாகவும் இருக்கும்.பச்சைக் கொத்துமல்லித் தழையைப் பச்சையாகவே துவையல் அரைக்கும் போது, புளி. போடுவதற்குப் பதிலாக, ஒரு துண்டு மாங்காயைப் போட்டு அரைத்தால் சுவையும் மணமும்  அதிகமாகும்.

Apr 24, 2023

சப்பாத்தி மிருதுவாக வர....

சப்பாத்தியை நன்கு திரட்டி அதன் மேல் எண்ணெய் ஊற்றி நான்காக மடித்து மீண்டும் ஒரு முறை திரட்டினால் சப்பாத்தி நன்கு உப்பி வரும்.    சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.கோதுமை மாவில் வண்டு வராமல் இருக்க, சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு வராது.சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிது பாலையும் ,சேர்த்துக் கொண்டால் சுவை அதிகரிக்கும்.சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சுடு தண்ணீர் ஊற்றி பிசைந்தால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

Apr 22, 2023

காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் போட்டு வைத்தால்.....

காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில்ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறி நறுக்கும் கத்தி விரைவாக கூர் மழுங்கிவிடும். அதற்கு உடைந்த டைல்ஸ் அல்லது பீங்கான் கப் பின்புறம் வைத்து கத்தியை இலேசாக சூடு பறக்கத் தேய்த்தால் போதும் புதியது போல கூர்மை ஆகிவிடும். பின்னர் நீண்ட நாட்களுக்கு கத்தி மழுங்காமல் இருக்கும்.

Apr 21, 2023

நகைகள் வெள்ளி பொருள்கள் சுத்தம் செய்ய

வெள்ளி பொருள்கள், நகைகள் எதை சுத்தம் செய்கிறோமோ அவை நீரில் மூழ்குமளவுக்கு பாத்திரத்தை எடுத்துகொள்ளுங்கள். அதிக சூடில்லாமல் மிதமான அளவு வெந்நீரை எடுத்து கையளவு கல் உப்பு போட்டு கலந்து நகைகளை, பாத்திரங்களை மூழ்க விடுங்கள்.பத்து நிமிடங்கள் கழித்து அதை எடுத்து பிரஷ்ஷை கொண்டு மென்மையாக தேய்த்து சுத்தமான நீரில் அலசி எடுங்கள். எளிமையான அதே நேரம் பொருளுக்கும் பாதிப்பில்லாத வழிமுறை இது.ஒரு பாத்திரத்தில் பட்டாணி அளவு பற்பசையை எடுத்து. நகைகள் அல்லது வெள்ளிப் பாத்திரங்களில் வட்ட வடிவ அசைவுகளுடன் தேய்த்தால், அதை மெருகூட்டவும், கறையை நீக்கவும். நிமிடங்கள்விட்டுவிட்டு, பற்பசையை தண்ணீரில் கழுவவும். இந்த நடைமுறைக்குப் பிறகு, வெள்ளி பொருள் சுத்தம் செய்யப்படுகிறது. பூசணிக்காய் சாற்றில் தங்க நகைகளை ஊற வைத்து கழுவினால் அவை நன்றாகப் பளிச்சிடும்.

Apr 19, 2023

கார்ன்ப்ளேக்ஸ் கலந்த  மிக்சர்

அரிசி, பருப்பு வகைகளை பத்திரப்படுத்தி வைக்கு போது காய்ந்த வேப்பிலைகளை சிறிது போட்டு வைத்தால் புழு பூச்சிகள் சேராது.தோசை ஊற்றும்போது சுண்டுவதாய் தெரிந்தால், கல்லில் சிறிதளவு எண்ணையை ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு ,கல்லை தோய்த்து விட்டு ஊற்றினால், தோசை சரியாக வரும்.ஈர துணியில் இஞ்சியை சுற்றி ,தினந்தோறும் தண்ணீர் பாத்திரத்தின் மேல் வைத்துக்கொண்டு வந்தால், ஒரு வாரத்திற்கு வதங்காமல் இருக்கும்.டீ போடும்போது டீத்தூளுடன் சர்க்கரையை சேர்த்து கொதிக்க விடாதீர்கள். டீயின் சுவை குறைந்துவிடும்.பாகற்காய் பொரியல் செய்யும் பொழுது கேரட், வெங்காயம் துருவி போட்டு, நிறைய கருவேப்பிலை சேர்த்தால் கசப்பே தெரியாது.மிக்சர் செய்யும் போது கொஞ்சம் கார்ன்ப்ளேக்ஸ் கலந்து விடுங்கள். மிக்சர் சுவை அதிகமாகும்.

Apr 18, 2023

சப்பாத்தி கட்டையில் மாவு ஒட்டாமல் வர ........

 கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் போன்றவற்றை சாப்பர் இல்லாமல்ரொம்பவும் பொடியாக நறுக்க முடியாது. இந்த சமயத்தில் எப்பொழுதும் போல பெரிது பெரிதாக துண்டுகள் போட்டு மிக்ஸியில் பல்ஸ் மோடில் ஒரே ஒரு சுற்று சுற்றி எடுத்து பாருங்கள். சாப்பரில் வெட்டியது போலவே பொடி பொடியாக உங்களுக்கு காய்கறிகள் கிடைத்து விடும். சமைப்பதற்கு நேரமும் மிச்சமாகும்.சப்பாத்திக்கு மாவை சப்பாத்தி கட்டையில் தேய்க்கும் பொழுது கட்டையுடன் மாவு ஒட்டிக் கொண்டால், சிரமமாக இருக்கும். இந்த சமயத்தில் உருட்டு கட்டையையும், சப்பாத்தி கட்டையையும் சேர்த்து ஃப்ரீசரில் இரண்டிலிருந்து மூன்று நிமிடம் வைத்து எடுங்கள். அதன் பிறகு சப்பாத்தி தட்டி பாருங்கள், கொஞ்சம் கூட ஒட்டாது. சப்பாத்திக்கு மாவையும், பூரிக்கு எண்ணெயையும் தொட்டு தேய்ப்பது நல்லது.மண்ணால் செய்த தோசை கல் என்று நம்பி தானே இந்த தோசை கல்லை வாங்கினோம், ஆனால் இதிலும் கலப்படம், எப்படி எல்லாம்ஏமாற்று கிறார்கள் பாருங்கள். மண் தோசை கல் நடுவில் சிமென்ட் லேயர் வைக்கப் பட்டுள்ளது. ஆகவே இந்த தோசை கல் உங்கள் வீட்டில் இருந்தால் ஒருமுறை செக் பண்ணி பாருங்க.ஆனால் தோசை கல்லை உடைத்தால் தான் உள்ளே இருப்பது மண்ணா அல்லது சிமெண்ட்டா என்பதை கண்டு பிடிக்க முடியும். ஒரு வேளை நடுவில் சிமென்ட் லேயர் பூசிய மண் தோசை கல்லாக இருந்தால், அதில் தொடர்ந்து தோசை வாத்து சாப்பிடக்கூடாது. அது உடலுக்கு ஆரோக்கியமும் அல்ல .

Apr 15, 2023

குக்கர் ஸ்குரு சரி செய்ய

குக்கரில் கைப்பிடி ஸ்குரு அடிக்கடி லூஸ் ஆனால்,. அந்த ஸ்குருவை கழட்டி எடுத்து விடுங்கள். அதில் கொஞ்சம் தடிமனாக இருக்கும் நூலை, தேவையான அளவு சுற்றிக் கொள்ளுங்கள். (பூ கட்டும் நூல்,அல்லது துணி தைக்கும் நூலை கூட இரண்டு மூன்றாக மடித்து இந்த ஸ்குரூவில் சுற்றிக் கொள்ளலாம்) இப்போது நூல் சுற்றிய இந்த ஸ்க்ரூவை, குக்கர் கைப்பிடியில் வைத்து டைட் செய்து வைத்தால், வருடக் கணக்கானாலும் ,இந்த ஸ்க்ரூ லூஸ் ஆகாது.பால் சூடேற்றும் முன் முதலில் தண்ணீர் ஊற்றி பின் பால் ஊற்றி காய்ச்சுங்கள். இதனால் பாத்திரத்தில் பால் அடிப்பிடிக்காது. கை வலிக்க தேய்க்க வேண்டிய அவசியம்இருக்காது பாலை நன்கு காய்ச்சி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் ,சூடு படுத்திக்கொண்டால் போதும் ..ஃபிரெஷாக போட்டால் அது பொங்கி கொதிக்கும் வரை கிட்சனில் நிற்க வேண்டியிருக்கும்.

Apr 12, 2023

ஆப்பசட்டி, பணியார சட்டிகளில் எப்பொழுதும் எண்ணெய் தடவி வைத்திருக்க வேண்டும்.

எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.ஆப்பசட்டி, பணியார சட்டிகளில் எப்பொழுதும் எண்ணெய் தடவி வைத்திருக்க  வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாதுதோசை ஊற்றும்போது சுண்டுவதாய் தெரிந்தால் ,சிறிதளவு எண்ணையை ஊற்றி ,சிட்டிகை உப்பையும் போட்டு, கல்லை தோய்த்து விட்டு ஊற்றினால் தோசை சரியாக வரும்.டீ  போடும் போது ,டீத்தூளுடன் சர்க்கரையை சேர்த்து கொதிக்க விட்டால்  டீயின் சுவை குறைந்துவிடும்.

Apr 11, 2023

கால் கொலுசு புதுசு போல் மாற.....

எலுமிச்சம்பழத்தில் உள்ள சாறு முழுமையாக வரவேண்டும், என்றால் எலுமிச்சம்பழத்தை ஃபோர்க் ஸ்பூனில் குத்தி ,லேசாக அடுப்பில் வாட்டி ,அதன் பிறகு எடுத்து நீங்கள் அழுத்தி பிழிந்தால், எலுமிச்சம் சாறு மிச்சமில்லாமல் பழத்தில் இருந்து, முற்றிலும் வெளியே வந்து விடும்.பூண்டை ஃப்ரிட்ஜில் வைத்தால் சுவை குறைந்துவிடும். பூண்டையும் பச்சை மிளகாய் போலவே வெளியில் வைத்தாலே போதும்.தோல் உரிக்காத பட்டாணியை ஒரு துணி பையில் வைத்து. கொதிக்கிற தண்ணீரில் போட்டு பிறகு எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு, பிறகு தோலை எடுத்து அந்த பட்டாணியை ஒரு மூடியுள்ள பாத்திரத்தில் வைத்து பிரிட்ஜில் வைத்து கொண்டால்  வெகு  நாட்கள் கெடாமல் இருக்கும். தயிரை சிறிய டம்ளரில் ஊற்றிக்   கால் கொலுசை போட்டு ,இரவு முழுவதும் ஊற  விடவும்.மறுநாள் காலையில்  தயிரில் ஊற வைத்த கொலுசை எடுத்து பிரஸ் போட்டு நன்கு தேய்க்கவும். தேய்க்கும் போது பல் துலக்கும் பேஸ்ட் சேர்த்து நன்குதேய்க்கவும்.பழைய கால்கொலுசு புதுசு போல் மாறிவிடும்.

Apr 10, 2023

பாயசம் நீர்த்துப்போய்விட்டால்...

தேங்காய் சட்னிஅரைக்கும் போது பச்சை மிளகாய்யைலேசாக வதக்கி அரைத்தால் சட்னி வாசனையாக இருக்கும்தேங்காய் தோல் எடுத்து அரைச்சா வெள்ளையாக இருக்கும். பொரிகடலை கொஞ்சமா சேர்க்கனும்.இரண்டு கருவேப்பிலை ஒரு பூண்டு பல் ,துளியூண்டு புளி ,உப்பு சேர்ந்து அரைத்தால்  நன்றாக இருக்கும். பாயசம் நீர்த்துப்போய்விட்டால் குலோப் ஜாமூன் மிக்ஸை பாலில் கரைத்து ஊற்றி நன்கு கலக்கவும். திக்காகவும் இருக்கும். டேஸ்ட்டாகவும் இருக்கும்.வறுத்த வேர்க்கடலைப் பொடியை, வெண் டைக்காய் ஃப்ரை செய்யும்போது, சிறிதளவு  தூவி இறக்கினால் சுவை கூடும்.இடியாப்ப மாவு பிசையும்போது அரை டம்ளர் கொதிக்கும் பாலையும் விட்டுக் கிளறி, இடியாப்பம் செய்தால் சுவை கூடும். நல்ல வெள்ளை நிறத்திலும் இருக்கும். கலந்த சாதம் செய்ய வடிக்கும் சாதத்தில் சில துளிகள் நல்லெண்ணெய் விட்டால் சாதம் குழையாமல் உதிரி உதிரியாக இருக்கும்.

1 2 ... 13 14 15 16 17 18 19 20 21 22

AD's



More News