25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

Sep 08, 2023

குலோப்ஜாமூன் மென்மையாக இருக்க

பீட்ரூட்டை மற்ற காய்களுடன் சேர்த்து சமைக்கும் போது அத கலவையில் இறங்காமளிருக்க வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பீட்ரூட்டை மட்டும் சிறிது நேரம் நன்றாக வதக்கி, பிறகு செய்தால் காய்களின் நிறம் மாறாது. கட்லெட் செய்ய 'பிரெட் கிரம்ப்ஸ் கிடைக்கவில்லையெனில் ரவையை மிக்சியில் அரைத்து பயன்படுத்தலாம். காலிப்பிளவரை அரைவேக்காடாக வேக வைத்து, அதில் சிறிது அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்தூள், உப்பு சேர்த்து, ஊற வைத்து பின் பொரித்து எடுத்தால் எண்ணெய் குடிக்காத காலிபிளவர் சில்லி ரெடி.  உளுத்தம்வடை செய்யும் போது சிறிதளவு இட்லி மாவு சேர்த்துச் செய்தால் வடை சுடும் போது அதிகம் எண்ணெய் குடிக்காததோடு. சுவையும் நன்றாக இருக்கும்.பாகற்காயை சிறிது நேரம் உப்பு நீரில் ஊறவைத்து பின்னர் சமைத்தால், கசப்பு குறைவாக இருக்கும்குலோப்ஜாமூன் செய்யும்போது உருண்டை கல் போலாகிவிட்டால் ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் மென்மையாகிவிடும்.

Sep 07, 2023

பூண்டை வெயிலில் வைத்து எடுத்தால். தோலை எளிதில் உரிக்கலாம்

இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும் பித்தளை பாத்திரங்களை கழுவிய பின் தோல் சீவிய உருளைக்கிழங்கை அந்த பாத்திரத்தின் மேல் தேய்க்க பளபளப்பு கூடும்.முட்டையோடு தக்காளி சாற்றையும் சேர்த்து ஆம்லெட் செய்யும் போது மிகவும் சுவையாக இருப்பதோடு, முட்டை வாசம் சிறிதும் வராது.எலுமிச்சம் பழத்தை உப்பு ஜாடிக்குள் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு அழுகிப்போகாமல் இருக்கும். சாம்பார் வைக்கும்போது உப்பு அதிகமாகிவிட்டால் இரண்டு உருளைகிழங்கை வெட்டிப் போட சரியாகிவிடும்.மட்டன் நன்றாக வேகவேண்டும் என்றால் சிறிய பப்பாளித் துண்டை சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

Sep 05, 2023

பச்சை காய்கறிகளை சமைக்கும் போது சிறிதளவு எலுமிச்சைசாறு பிழிந்தால் காய்களின் நிறம் மாறாது.

பொங்கல் செய்யும் போது நீர் அதிகமாகி விட்டால், அதில் வறுத்த ரவையை ஒன்று அல்லது இரண்டு கைப்பிடி போட்டு கிளறினால் பொங்கல் நன்கு சேர்ந்து கெட்டியாகி விடும்.இட்லிக்கு அரைத்த மாவில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் கலந்து வைத்தால், இட்லி மிருதுவாக இருக்கும்.உளுந்து வடை செய்யும் போது ஒரு கைப்பிடி கொத்தமல்லித்தழையை சேர்த்து ஆட்டி செய்தால் நறுக்கிப் போட்டு செய்வதை விட வாசனையாக இருக்கும்.ரவா தோசை செய்யும் போது 2 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென சுவையாக இருக்கும்.பச்சை காய்கறிகளை சமைக்கும் போது சிறிதளவு எலுமிச்சைசாறு பிழிந்தால் காய்களின் நிறம் மாறாது.

Sep 02, 2023

பொரித்த மீதி அப்பளம் சுவை மாறாமல் இருக்க

சாம்பார் நல்ல கலரா வர ,நல்ல பழுத்த தக்காளி பழம்2எடுத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். பின்பு சாம்பார் தாளிக்கும் போது தக்காளி விழுதையும் சேர்த்து தாளித்து, சாம்பார் வைத்து பாருங்கள் சுவையும் ,கலரும் அருமையாக இருக்கும்.குக்கரில் பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து வேக வைத்தால்  பஞ்சு போல பருப்பு வெந்து வரும்.பொரியல் அடி பிடிக்கும் போது உடனே கரண்டி வைத்து கிளராமல் உடனே 2 ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்து கொடுத்தால் அடி பிடித்தது உடனே சரியாகும்.பொரியல் வகைகள் மீதம் ஆகி விட்டால் அதில் ரெண்டு முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லெட் போட்டு பாருங்கள் ருசி அருமையாக இருக்கும்.காரக்குழம்பு, புளி குழம்பு வகைகள் செய்யும்,போது காரம் கொஞ்சம் அதிகமானால், அதுக்கு வெல்லம் சிறிதளவு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் காரம் குறைந்து, ருசியும் கூடும்.பொரித்த அப்பளம் மீதி ஆகி விட்டால் ஒரு டைட்டான டப்பாவில் போட்டுfridge ல் வைத்து விட்டால் சுவை மாறாமல் அப்படியே இருக்கும்.

Aug 31, 2023

எலுமிச்சை ஊறுகாயுடன் வதக்கிய இஞ்சித்துண்டுகள்....

ரசம்வாசனையாக இருக்க கொத்தமல்லி தழை கிடைக்காத நேரத்தில் தனியாவை (கொத்தமல்லி விதைகளை நெய்யில் வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டு ரசத்தில் சேர்க்கலாம்.கொண்டைக்கடலை,பட்டாணி, மொச்சை போன்றவற்றில் சமையலுக்கு தேவையானதை முதல் நாள் இரவு ஊற போட மறந்துவிட்டால் அவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்து விடும். எலுமிச்சை ஊறுகாயுடன் வதக்கிய இஞ்சித்துண்டுகள் சிறிதளவு சேர்த்துக் கிளறினால், மணம் தூக்கலாக இருக்கும்.ரவா லட்டு செய்யும்போது, சிறிதளவு மிக்ஸியில் ரவை போல்  பொடித்து, நெய்யில் வறுத்து சேர்த்து கொஞ்சம் பால் பவுடரையும் கலந்து லட்டு பிடித்தால் சுவை அதிகரிக்கும்.வெண்னொயை நெய்யாக உருக்கும் போது, ஒரு துளி உப்பு சேர்க்கவும். நெய் சாஃப்ட்டாக இருக்கும். துகள், துகளாக வரும் நல்ல வாசனைக்கு கொஞ்சம் கறிவேப்பிலை, வெந்தயம் சேர்க்கலாம். வடகத்தில் பூச்சி வராமல் நீண்ட நாள் இருக்க,அதனுடன் மிளகாய் வற்றலையும் கொஞ்சம் போட்டு வைத்தால் போதும்; மிளகாயின் காரத்தினால் பூச்சி அண்டாது.

Aug 30, 2023

சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைக்க....

சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு 'வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்னீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்கீரை, வெண்டைக்காய் போன்றவை முழுவதுமாக வதங்கிய பிறகு உப்பு சேர்க்க வேண்டும். ஏனெனில் அது முழுவதுமாக வதங்கியதும் அதன் உண்மையான அளவு தெரியும்,ரொட்டியை போட்டு வைக்கும் டப்பாவில் நான்கு மிளகைப் போட்டு வந்தால் நமத்துப் போகாமல் இருக்கும்.ஊறுகாய் மேலே எண்ணெய் அதிகமாக மிதந்தால் அதை கார குழம்பு வைக்கும் போது பயன்படுத்தலாம்.  சப்பாத்தி மிகுந்துவிட்டால் அதை மிக்ஸியில்  பூ போல அரைத்து ,சர்க்கரை, வறுத்தி முந்திரி சேர்த்து பரிமாறுங்கள். குழந்தைகள்  கேட்டு. விரும்பி சாப்பிடுவார்கள்.

Aug 29, 2023

பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்க......

வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து, அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால், பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.பாகற்காய் வதக்கல் செய்யும்போது அதில் தேங்காயைப் பல் பல்லாகக் கீறி எண்ணையில் வதக்குங்கள்., தேங்காயுடன் பாகற்காயை சாப்பிடும் போது மிகவும் ருசியாக இருப்பதுடன் கசப்பும் தெரியாது.

Aug 28, 2023

வெங்காய பக்கோடா மொறு மொறுப்பாக வர

 கேக்கிற்கு மாவு பிசையும் போது ஒரு மேஜைக்கரண்டி தேன் சேர்த்து பிசைந்து பாருங்கள் கேக் முட்டை வாடை போய்விடும்.மாவு டப்பாக்களில் பிரியாணி இலையை போட்டு வையுங்கள். மாவு ஈரமாகாமலும் கட்டியாகமலும் இருக்கும்.சப்பாத்தியோ, பூரியோ செய்யும்போது கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.ரவா. மைதா உள்ள டப்பாவில் பூச்சி,புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.வெங்காய பக்கோடா மொறு மொறுவென்று வர மாவுடன் சிறிது வறுத்த கடலைப் பருப்பை மிக்ஸியில் அரைத்து சேர்த்துக் கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

Aug 25, 2023

பொரியல்களில் உப்பு அதிகமானால்

அரைத்து விட்ட சாம்பார் செய்யும் போது, அரைக்க வேண்டிய சாமான்களுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து அரைத்தால்  சாம்பார் சுவையாக இருக்கும்.பாயசம் செய்யும் போது பால் திரிந்து போனால், இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை போட்டால் திரிந்த பால் சரியாகிவிடும்.தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது என்னை வறுத்து பொடி செய்து போட்டால் ரூசி அதிகமாக இருக்கும்தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் சூசியாக இருக்கும்.ரவா  உப்புமா செய்யும்போதுபாதி தண்ணீரும்,பாதி தேங்காய் பால் அல்லது பசும்பால் சேர்த்து செய்தால் உப்புமா மிகவும் சுவையாக இருக்கும்.ரசத்தில் உப்பு அதிகமாக இருந்தால் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு ரசத்தைக் கொதிக்க விட்டு, மிளகு சீரகத்தூள் போட்டு, அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து விடுங்கள்.கத்தரிக்காய்,கோவைக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, பீட்ரூட் கேரட் போன்றவற்றுடன் வெங்காயம் நன்கு சேரும். எனவே, இந்த வகைப் பொரியல்களில் உப்பு அதிகமானால், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கிச் சேர்த்து விடலாம்.

Aug 22, 2023

நம் வீட்டு சமையல் மேடை சிங்கில் இருந்து கெட்ட வாடை வராமல் தடுக்க…

மல்லி பூ பத்து நாள் ஆனாலும் மலராமல் இருக்க ஒரு பிளாஸ்டிக் அல்லது சில்வர் மூடி போட்ட பாக்ஸ் எடுத்து அதில் கொஞ்சம் பேப்பர் வைத்து எந்த பூவாக இருந்தாலும் சரி மல்லி முல்லை பிச்சி பூ இப்படி வைத்து பிரிட்ஜில் வைத்து பாருங்க பூ அப்படியே பத்து நாள் ஆனாலும் மலரவே மலராது.செவ்வந்தி பூ ஒரு மங்களகரமான பூ இந்த பூவை பூஜைக்கு உகந்த பூ .கடவுளுக்கு இந்த பூவை மாலையாக கட்டி போட்டால் மங்களகரமாக இருக்கும் இதை கதம்பம் கட்டும் போது சேர்த்து கட்டினால் பார்க்க அழகாக இருக்கும் இதை பூஜை செய்யும் போது சாமிக்கு அர்ச்சனை செய்யும் போது இந்த பூ அதிக அளவு பயன் படுத்த படும்.   நம் வீட்டு சமையல் மேடை சிங்கில் இருந்து கெட்ட வாடை வராமல் தடுக்க…சில சமயம் தோசை கல்லில் தோசை வராது சப்பாத்தி சுட்டாலும் தோசைவராது இந்த மாதிரி தோசை வர வில்லை என்றால் கொஞ்சம் வெங்காயத்தை வதக்கி விட்டு ஊற்றினால் தோசை வரும். ஒரு பெரிய வெங்காயம் ஒன்றை பாதியாக நறுக்கி தோசை கல்லில் எண்ணெயில் தொட்டு தடவி தோசைசுட்டால் தோசை நன்கு வரும்.தோசை சுட்டு முடித்த பிறகு கல்லில் எண்ணெயில் தொட்டு தடவி வைத்தால் |தோசை கல் பளபள என இருக்கும்அசைவம் சமைத்த பிறகு பார்த்தால் நம் வீட்டு சமையல் மேடை சிங்கில் இருந்து கெட்ட வாடை வீசிக்கொண்டே இருக்கும். இது போன்ற கெட்ட வாடை வராமல் தடுக்க, எல்லா இடத்திலும் முதலில் ஒரு சிறிய துண்டு புளியை வைத்து நன்றாக தேய்த்து விடுங்கள். அதன் பின்பு, வாசம் நிறைந்த பாத்திரம் தேய்க்கும் லிக்விடை ஊற்றி கழுவி விட்டால் அசைவ வாடை உங்களுக்கு சுத்தமாக வராது.சில சமயம் வெல்லத்தை துருவ வேண்டும் என்றால், காய்கறித் துருவலில் வைத்து துருவினால் சிரமம் இல்லாமல், சீக்கிரமே வெல்ல தூள் நமக்கு கிடைக்கும்.

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 21 22

AD's



More News