25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

Nov 28, 2023

வெள்ளிப் பாத்திரங்கள் புதியவை போல் இருக்க

காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒருசில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும் போது அதில் துருவிய முந்திரி, பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.வெள்ளை நிற வாஸ்பேஷன், பாத்ரும்,டைல்ஸ் மற்றும் சிங்க்கை க்ளீனிங் பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின், சொட்டு நீலம் கலந்த நீரால் அலம்பிவிட்டால் பளபளப்பு மேலும் கூடும்.வெள்ளி சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.  

Nov 27, 2023

வாழைப்பூ சுத்தம் செய்யும் போது

உருளைக்கிழங்கு அல்லது வாழைக்காய் பொடிமாஸ்செய்யும்போது கடைசியாக 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை கூடும்.வெந்தயக் குழம்பு கொதித்து இறக்கி வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி எள்ளு பொடியை போட்டால் குழம்பு மிகவும்,வாசனையுடன் இருக்கும். அல்லது ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டால் ருசி கூடும்.பால், தயிர் ஆடையை தனியே எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து சிறிது நேரம் வைத்து கடைந்தால் வெண்ணெய் உருண்டு நன்றாக வரும்.இட்லிக்கு மாவு ஆட்டும்போது ஒரு வெண்டைக்காய் சேர்த்து ஆட்டினால் இட்லி பூப்போல இருக்கும். பாத்ரூமில் ஏதாவது மூலையில் ஒரு துண்டு பச்சைக் கற்பூரம் வைத்தால் பாத்ரும் மணம் வீசும்முருங்கைக்காய் நீண்ட நாள் வாடாமல் இருக்க, சாம்பாரில் சேர்க்கும் அளவு துண்டுகளாக நறுக்கி காற்று புகாத கவர் அல்லது டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் அப்படியே இருக்கும், அப்படியே வாழைப்பூ சுத்தம் செய்யும் போது கையில் எண்ணெய் தடவி கொண்டால் கையில் கறைஒட்டாது.

Nov 22, 2023

காபிக்கு பால் ஒரு கொதிக்கு மேல் காயக்கூடாது.

வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கியபின் அரைத்தால், சட்னி கசக்காமல் ருசிக்கும். கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. ரசம் ஒரு கொதிக்கு அதிகமாக கொதிக்ககூடாது. மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. தக்காளி, வெங்காயம் ஒன்றாக வதக்கக்கூடாது. காபிக்கு பால் ஒரு கொதிக்கு மேல் காயக்கூடாது. 

Nov 21, 2023

.சாம்பார் பொடிஅரைக்கும்போது அதில் ஒருகைப்பிடி அளவு கல் உப்புசேர்த்து அரைத்தால் பூச்சிகள் வராது.

பருப்பு சாதத்திற்கு. பருப்பை வேக வைக்கும்போதே, முருங்கை காயின்நடுவில் உள்ள சதை பகுதியையும் எடுத்து வேக வைத்து, சாதத்துடன்சேர்த்தால் சுவையாக இருக்கும்.துவரம்பருப்பை வேக வைக்கும்போது சிறிது  தேங்காய் துண்டைநறுக்கி போட்டால் பருப்பு விரைவில் வெந்து பக்குவமாக இருக்கும்..சாம்பார் பொடிஅரைக்கும்போது அதில் ஒருகைப்பிடி அளவு கல் உப்புசேர்த்து அரைத்தால் பூச்சிகள் வராது.சாம்பார் புளித்தால் சிறு உருண்டை வெல்லம் சேருங்கள். புளிப்பு சுவைஉடனே சரியாகிவிடும். பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவை கூடும்.

Nov 17, 2023

புதிதாக பாயாசம் செய்பவர்களுக்கு தேவையான குறிப்பு

புதிதாக பாயாசம் செய்பவர்களுக்கு தேவையான குறிப்பு இது. பாலை ஆற வைக்காமல் பாயாசம் செய்யக் கூடாது. பால் திரிந்து விடும். அப்படி பாயாசத்தில் சேர்க்கப்படும் பால் திரிந்து போனால், அதனுடன் கொஞ்சம் 2 சிட்டிகை அளவிற்கு சமையல் சோடா சேர்த்தால் போதும், திரிந்த பால் சரியாகிவிடும்.நீங்கள் காய்கறி பிரிஞ்சி, புலாவ் மற்றும் பிரைட் ரைஸ் போன்ற ஐட்டங்களை செய்யும் பொழுது கொஞ்சம் சோளத்தை வேக வைத்து சேர்த்தால் சாப்பாடு ருசியாக அமையும், மேலும் பார்ப்பதற்கு அட்டகாசமான நி றத்தில் சூப்பராக  இருக்கும். ஆரோக்கியமும் அதிகரிக்கும்.*ஃப்ரிட்ஜில் இருக்கும் காய்கறிகள் வதங்கி வாடி போய்விட்டால் அதனை தூக்கி எறிய வேண்டிய அவசியம் இல்லை. குளிர்ந்த தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றை கலந்து சிறிது நேரம் காய்கறிகளை ஊற வைத்து பின் நறுக்கினால் எளிதாக நறுக்கி விட முடியும். இதனால் காய்கறிகள் வீணாவது தடுக்கப்படும்.வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.

Nov 14, 2023

கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழையை வாங்கியவுடன் வாழைப்பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.

ரோஸ்ட் செய்யும் கறிகளில், எண்ணெய் அதிகமாகி விட்டால், கறிகளின்மேல்ஒருதேக்கரண்டிஅரிசிமாவைதுாவலாம்.அதிகப்படியான எண்ணெயை அரிசி மாவு உறிஞ்சி, கறியும் மொறு மொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்..வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.துவரம்பருப்பை வேக வைக்கும்போதே, தேங்காய் துண்டு ஒன்றை நறுக்கிப் போடுங்கள். துவரம்பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். வெண்ணெய் போல் குழைவாகவும் இருக்கும்.கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழையை வாங்கியவுடன் வாழைப்பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.தேங்காய் மூடியை தண்ணீரில் வைத்தால். அல்லது மூடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.

Nov 10, 2023

வெஜிடபுள் போண்டா செய்ய...

அரிசியுடன் மஞ்சள் துண்டு, காய்ந்த வேப்பிலை அல்லது பூண்டு பற்களை கலந்து வைத்தால் அரிசியில் வண்டு வராது.பச்சை பட்டாணியை வேக வைக்கும் போது அதனுடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்ந்தால் பட்டாணி நிறம் மாறாது.கபாப் செய்யும் போது 3 பிரெட்துண்டுகளை நளைத்து பிசைந்து போட்டால் கபாப் உடையாமல் இருக்கும்.கொத்தமல்லி இலைகளை நன் ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.வெங்காயத்தை நறுக்கி அதன் மீது வெண்ணெய் தடவி வைத்தால் வெங்காயம் வாடாமல் இருக்கும்.

Nov 08, 2023

ஊறுகாயில் சிறிதளவு வினிகர் சேர்த்தால் நீண்ட நாட்கள்கெட்டுப்போகாமல் இருக்கும்.

ரசம் தயாரிக்கும்போது அதனுள் தேங்காய் தண்ணீரை சேருங்கள். ரசம் தனி ருசி கிடைக்கும்.தேங்காய்க்கு பதிலாக வேர்க்கடலை, முந்திரி போட்டு சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.ஊறுகாயில் சிறிதளவு வினிகர் சேர்த்தால் நீண்ட நாட்கள்கெட்டுப்போகாமல் இருக்கும். வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு படுத்திவிட்டு வெட்டினால்கண்களில் எரிச்சல்இருக்காது. பாகற்காய் குழம்பு வைக்கும் போது அதில் கேரட் சேர்த்தால் கசப்பு தெரியாது.

Nov 07, 2023

பக்கோடா மொறமொறப்பாக இருக்க....

கிழங்குகள் சீக்கிரம் வேக வேண்டுமெனில் பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து வேக வைத்தால் எளிதில் வெந்துவிடும்.பழுத்த தக்காளியை ஐந்து நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்துவிட்டு வெட்டுங்கள். பழம் பிய்ந்து போகாது.காய்கறி மீது எலுமிச்சை பழச்சாறு கலந்த நீரை தெளித்தால் காய்கறி பச்சையாக இருக்கும்.இறைச்சி வேக வைக்கும்போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.பக்கோடா மொறமொறப்பாக இருக்க வேண்டுமானால் மாவை கலக்கும்போது சிறிதளவு நெய்யும் உப்பிட்ட தயிரையும், கலந்து கொள்ள வேண்டும்.

Nov 06, 2023

களாக்காய் ஊறுகாய்

களாக்காயின் மருத்துவ நன்மைகளை பலவிதங்களிலும் பெறுவதற்காக களாக்காய், காயாக இருக்கும்போதே அதை எடுத்து ஊறுகாய் போட்டு நீண்ட காலத்திற்கு வைத்து பயன்படுத்துவார்க்ள். வைட்டமின் சி சத்து அதிகம் கொண்ட காய்களில் ஊறுகாய் போட்டு வைத்தால், அவற்றின் சத்து குறைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 21 22

AD's



More News