சிவகாசி மாநகராட்சி 27-வது வார்டு தென்றல் நகரில் மேம்பாடு பணிகள் முடிக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காவினைஅமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி 27-வது வார்டு தென்றல் நகரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூ.34 இலட்சம் மதிப்பில் மேம்பாடு பணிகள் முடிக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி.சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் (17.10.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராமப்புறங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மூலம் அடிப்படை தேவைகளான குடிநீர் இணைப்புகள், சுகாதாரம், உள்புறச் சாலைகள், தெருவிளக்குகள், பூங்காக்கள், சமுதாய கூடங்கள் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.அதன்படி, சிவகாசி மாநகராட்சி நூற்றாண்டு விழா திட்டம் 2020-2021-ன் கீழ் ரூ.1.66 கோடி மதிப்பீட்டில் ஏற்கனவே 4 பூங்காக்கள் அமைக்கும் பணி முடிவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து இன்று, சிவகாசி மாநகராட்சி 27-வது வார்டு தென்றல் நகரில் ரூ.34 இலட்சம் மதிப்பில் மேம்பாடு பணிகள் முடிக்கப்பட்டு, ஆக மொத்தம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 5 சிறுவர் பூங்காக்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவை சுற்றி நடைபாதை, மின் விளக்குகள், இருக்கைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், அலங்காரச் செடிகள், தண்ணீர் வசதி, சுற்றுச் சுவர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் காலை, மாலை வேளைகளில் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்வதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும் ஏற்றதாக அமையும் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி முத்துலட்சுமி, சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திரு.விவேகன்ராஜ், சிவகாசி மாநகராட்சி துணை மேயர் திருமதி விக்னேஷ் பிரியா, மாநகர பொறியாளர் திரு.இராமசாமி, மாமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply