கொதிக்கும் தண்ணீரை ஊற்றி பாதாமை ஊற வைத்தால் அதன் தோல் எளிதாக உரிந்து வரும்.ஊறுகாயில் சிறிதளவு வினிகர் சேர்த்தால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.இட்லி மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை ஊற்றினால் தோசை மொறுமொறுவென்றும், பொன்னிறமாகவும் இருக்கும்பருப்புப் பொடி செய்யும் போது துவரம் பருப்புடன் கொஞ்சம் கொள்ளுப் பயறையும் சேர்த்து கொண்டால், பொடி மிகவும் சுவையாக இருக்கும். வாய்வு பிரச்னைக்கு நல்ல மருந்தாக இருப்பதுடன் கொழுப்பையும் குறைக்கும்.வேர்க்கடலையை வறுத்து தூளாக்கி ஒரு பாட்டிலில் சேர்த்துக்கொள்ளவும். கிரேவி வகைகள், சரியான பதத்தில் இல்லாமல் சிறிது நீர்த்து இருக்கும் போது, இரண்டு டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை தூளைக் கலந்திட, கெட்டியாகவும் சுவையாகவும் கிரேவி இருக்கும்.
ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்த்தால் ஆப்பம் அதிக மென்மையாக இருக்கும்அரிசியை காற்று புகாத பாத்திரங்களில் கொட்டி வைத்தால் நீண்ட காலம் கெடாமல் பாதுகாக்கலாம். இந்த பாத்திரங்களில்4 அல்லது5 வேப்பிலைகளுடன் சிறிது காய்ந்த மிளகாயை போட்டு வைத்தால் அரிசியில் பூச்சிகள் வராது. பூஞ்சைகள்உருவாவதையும் தடுக்கலாம். ரவா லட்டு செய்யும்போது அத்துடன் அவலையும் மிக்ஸியில் ரவை போல் பொடித்து,நெய்யில் வறுத்து சேர்த்து, 4 டீஸ்பூன் பால் பவுடரையும் கலந்து ,சுவையான ல ட்டு. உருவாக்கலாம்துவையல் அரைக்கும்போது, மிளகாயை தவிர்த்து மிளகு சேர்த்து அரைக்கலாம். மிளகு கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டது.துவரம்பருப்பை வேக வைக்கும்போது ,ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
எந்த கிழங்கை வேக வைத்தாலும்10நிமிடம் உப்பு கலந்த நீரில் போட்டு வைத்து, பின் வேகவைத்தால் வேகமாக வெந்துவிடும்.சுண்டல் செய்யும் போது சீரகம், ஓமம், மிளகு ஆகியவற்றை வறுத்து பின் பெருங்காயம், சுக்கு சேர்த்து பொடி செய்யவும். எந்த சுண்டல் செய்தாலும் இறக்குவதற்கு முன் இந்த பொடியை தூவிக் கிளறினால், வாயுக்கோளாறு, வயிறு உப்புசம் ஏற்படாமல் நீங்கும்ரசம் செய்து இறக்கி வைக்கும்போதுதான் கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும் தவிர ரசத்தில் தாளிக்க நெய் பயன்படுத்தினால் ரசம் வாசனையாக இருக்கும்.பச்சை பட்டாணிகளை வேக வைக்கும் போது சிறிதளவு வினிகர் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும்.காய்கறிகள் சமைக்கும்போது பார்லி பவுடரை சிறிதளவு சேர்த்தால் சுவையாக இருக்கும்.
வற்றல் குழம்பு கொதித்த பின், நெல்லிக்காய் அளவு வெல்லம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.உப்பு ஜாடியில் தண்ணீர் வடிவதை தடுக்க சிறிது புளித்துண்டை ஜாடியில் போட்டு வைத்தால் நீரத்தன்மையை புளிஎடுத்துவிடும்.காய்கறிகள் வறுவல் செய்யும்போது எண்ணெய் சூடாகும் சமயத்தில் ,சிறிது சர்க்கரை சேர்த்து வறுவல் செய்தால் சுவையாக இருக்கும். சாம்பார், குழம்பு ரசம் இவற்றுக்கான மசாலா கலவையில் ஒரு சின்ன வெங்காயத்தையும் சேர்த்தால் மணமும், சுவையும் கூடும்.கூட்டு, குழம்பு ஆகியவற்றுக்கு அரிசி மாவை கரைத்து விடுவதற்கு பதில் பொட்டுக்கடலை மாவை சேர்த்தால் சுவையாகவும் இருக்கும்.சீக்கிரம் ஊசியும் போகாது.
காரக்குழம்பு செய்யும் போது காரம் அதிகமாகி விட்டால் சிறிது தேங்காய்பால் விட்டு கொதிக்க வைத்து இறக்கினால் காரம் குறைவதுடன் சுவையும் கூடும்.ரசத்தில் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். உடலுக்கும் நல்லது. புளி அதிகம் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.தோசை மாவிற்கு அரிசியுடன் ஜவ்வரிசி சேர்த்து ஊறவைத்தால் தோசை மொறுமொறுப்பாக இருக்கும்.எண்ணை பிசுக்கு நீங்க கேஸ் ஸ்டவ்வை கடைசியாக டிஷூவால் துடையுங்கள்.எந்த இரு இனிப்பு வகையை செய்தாலும் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொண்டு கற்கண்டை பொடியாக்கி போட்டால் அதன் சுவை கூடும்.குருமாவுக்கு காலிஃப்ளவரை வாங்கும் போது பூக்களுக்கு இடையே இடைவெளி இல்லாம வாங்க வேண்டும் இதில் தான் காம்புகள் தடிமனாக இருக்காது.
தேன்குழல் முறுக்கு, சீடைக்கான மாவை வெண்ணீர் ஊற்றி பிசைந்தால் நன்கு மொறு மொறுவென இருக்கும்.முட்டைகோஸை வேக வைக்கும்போது ஒரு துண்டு இஞ்சி சேர்த்தால் கெட்ட வாடை இராது.கருணைக்கிழங்கு ஒரு தேக்கரண்டி புளித்தண்ணீர் சேர்த்து வேக வைத்தால் காரல் தன்மை இராது.அடை, பக்கோடா செய்யும்போது புதினா இலை சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.குருமாவில் தேங்காயின் அளவை குறைத்து, பாதாம் சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம். இது கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தும். குழந்தைகளுக்கும் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
மோர்க்குழம்பு செய்யும் போது நிலக்கடலையை அரைத்து கலந்தால் மோர்க்குழம்பு சுவையாக இருக்கும்.சமோசாவுக்கு மாவு பிசையும் போது மைதா மாவை சலித்து மெல்லிய துணியால் கட்டி இட்லித்தட்டின் மேல் வைத்து 5 நிமிடம் ஆவியில் வைக்கவும்.பிறகு உப்பு சீரகம், டால்டா போட்டு பிசைந்து செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்சட்னி வகைகள் மீந்துவிட்டால் அவற்றுடன் புளிக்காத தயிர், பொடியாக அரிந்த வெங்காயம்(அ) காராபூந்தி சேர்த்துக் கலந்தால் சுவையான ரயத்தா தயார்..'புளி, உப்பு, வெல்லம் போன்றவற்றை பிளாஸ்டிக் டப்பாக்களில் வைப்பதை தவிர்க்கவும். இவை காற்று பட்டால் நீர்விடும் தன்மை கொண்டவை. பிளாஸ்டிக்குடன் சேர்ந்து ரசாயன மாற்றம் ஏற்பட்டு ஆரோக்கியத்துக்கும் கெடுதல் ஏற்படக்கூடும். கண்ணாடி (அ ) பீங்கான் டப்பாக்களில் வையுங்கள்.ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதனுள் இரண்டு கற்பூர வில்லைகளை போட்டு, நீங்கள் படுக்கும் இடத்திற்குஅருகிலோ அல்லது கட்டிலின் அடியிலோ வைத்து விடுங்கள். கொசுவர்த்திக்கு கூட பயப்படாத கொசுக்கள் ஓடிப்போய்விடும்.
உளுந்து வடைக்கு அரைக்கும் மாவு நீர்த்துப் போய்விட்டால் சிறிது அவல் சேர்த்து வடை தட்டினால் சரியாகிவிடும்.வறுத்த பட்டையை பொடி செய்து நீரில் கலந்து பெண் பிள்ளைகளுக்கு கொடுத்து வந்தால் கர்ப்பப்பை பலம் பெறும்.மாவில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து வார்த்தால் தோசை சாஃப்ட்டாக. டேஸ்ட்டாக இருக்கும்.பிரிஜ்'ஜின் உள்ளே இருக்கும், 'பிரீசரில்' ஐஸ் கட்டிகள் படிவதை தடுக்க. சிறிதளவு உப்பை துாவி வைக்கலாம்கதவிடுக்குகளில் சிறிதளவு, 'டால்கம் பவுடரை துாவி வைத்தால் கதவு சத்தம் எழுப்புவதை தவிர்க்கும்
பால் பாயாசம் செய்யும் பொழுது பாதாம் பருப்பை அரைத்து சேர்த்தால் பாயாசம் சுவையாக இருக்கும்.தேங்காய் எடுக்க சிரமமாக இருந்தால், தேங்காய் தொட்டியை அடுப்பில் வைத்து லேசாக வாட்டி எடுத்தால், தேங்காய் எளிதாக எடுக்க வரும்.பருப்பு வேக வைக்கும் போது பருப்புடன் சிறிதளவு நெய் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.முட்டை கெட்டுப் போகாமல் இருக்க முட்டையின் மீது லேசாக எண்ணெய் தடவி வைத்தால் முட்டை விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்க 2 கிராம்பு அதில் போட்டு வைத்தால் எறும்பு வராது
சாம்பார் பொடி அரைக்கும்போது அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு சேர்த்து அரைத்தால் பூச்சிகள் வராது. சாம்பார் புளித்தால் சிறு உருண்டை வெல்லம் சேருங்கள். புளிப்பு சுவை சரியாகிவிடும்..பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவை கூடும். வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கியபின் அரைத்தால், சட்னி கசக்காமல் ருசிக்கும். உருளைக்கிழங்கு அல்லது வாழைக்காய் பொடிமாஸ் செய்யும்போது கடைசியாக2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை கூடும்.