25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

Apr 08, 2023

அடை மொறுமொறுவென்று இருக்க....

தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றினால், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.அடைக்கு அரைக்கும் போது மர வள்ளிக் கிழங்கை உரித்து சில துண்டுகள் சேர்த்து அரைக்கலாம். உருளைக் கிழங்கையும் துண்டுகளாக்கிப் போட்டு அரைக்கலாம். அடை மொறுமொறுவென்று இருக்கும் .மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்.ஊறுகாயைப் பாட்டிலில் போடுவதற்கு முன்பு, நல்லெண்ணெயை இரண்டு ஸ்பூன்விட்டு, பாட்டில் முழுக்க அது பரவும் படி செய்து விட்டு, ஊறுகாய் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.பொரியல் செய்யும்போது தேங்காய்க்கு பதிலாக, சிறிது புழுங்கல் அரிசியை வறுத்து, பொடி செய்து பொரியலில் போடலாம் .

Apr 06, 2023

இடியாப்பம்  சுவை கூட....

சிறிய வெங்காயத்தை இளம்வெயில் சிறிது நேரம் கொட்டி வையுங்கள். பின்பு காற்றோட்டம் படும்படியான பெட்டியில் அடைத்து வையுங்கள்.அரிசியை கழுவி சுத்தப்படுத்தி வேகவைக்க தேவையான அளவு தண்ணீரில் கொட்டி வைத்து விடுங்கள் மறுநாள் சீக்கிரம் அரிசி வந்துவிடும் .அனைத்தும் வேலைக்கு எளிது .ஆனால் ஆரோக்கியத்திற்கு முழுமையாக ஏற்றதல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,பாயசம் நீர்த்துப்போய்விட்டால் குலோப் ஜாமூன் மிக்ஸை பாலில் கரைத்து ஊற்றி நன்கு கலக்கவும். திக்காகவும் இருக்கும். டேஸ்ட்டாகவும் இருக்கும்.வறுத்த வேர்க்கடலைப் பொடியை, வெண் டைக்காய் ஃப்ரை செய்யும்போது, சிறிதளவு தூவி இறக்கினால் சுவை கூடும்.இடியாப்ப மாவு பிசையும்போது அரை டம்ளர் கொதிக்கும் பாலையும் விட்டுக் கிளறி, இடியாப்பம் செய்தால் சுவை கூடும். நல்ல வெள்ளை நிறத்திலும் இருக்கும்.

Apr 05, 2023

மிக்ஸியில் பிளேட் கூர்மையாக....

ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.பொரியல் செய்யும்போது தேங்காய்க்கு பதிலாக சிறிது புழுங்கல் அரிசியை வறுத்து, பொடி செய்து பொரியலில் போடலாம் ஊறுகாயைப் பாட்டிலில் போடுவதற்கு முன்பு நல்லெண்ணெயை இரண்டு ஸ்பூன்விட்டு, பாட்டில் முழுக்க அது பரவும்படி செய்து விட்டு ஊறுகாய் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது ,கடைசியில் கடலைமாவு கொஞ்சம் தூவி, ஸ்டவ்வை சிம்மில் வைத்து, கிளறி இறக்கினால், சுவை கூடும்.மிக்ஸியில் பிளேட் கூர்மை இல்லா விட்டால், அதில் சிறிதளவு கல் உப்பைப் போட்டு ,ஓடவிட்டால் பிளேட் சரியாகிவிடும்

Apr 03, 2023

மசால் வடை ருசி பிரமாதமாக இருக்க

வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது கடைசியில் ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு விடுங்கள். நெய் நல்ல மணமாகவும் இருக்கும்.. கசக்கவும் செய்யாது.டீ போடும்போது, முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரையை சேர்த்துக் கொதிக்க விடுங்கள். பின்னர் டீத்தூள் போட்டு வடிகட்டி சூடான பால் சேர்த்தால், டீ திக்காகவும் சுவையாகவும் இருப்பதோடு பாத்திரமும் கருக்காது.சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது முதலில் சிறிது கடலை மாவை எண்ணெயில் வறுத்துவிட்டு, கிழங்கைப் போட்டால் ரோஸ்ட் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.சாம்பார், வற்றல் குழம்பு ஆகியவற்றில் காரம் அதிகமாகி விட்டால், நல்லெண்ணெய்யை ஊற்றி கொஞ்சம் கொதிக்க விடுங்கள் காரம் குறைந்துவிடும்.மசால் வடை செய்யும்போது மாவு நீர்த்து போய்விட்டால் இரண்டு பிரெட் துண்டுகளை மிக்சியில் பொடித்து, மாவுடன் சேர்த்து வடை தட்டினால் வடை ருசி பிரமாதமாக இருக்கும்.

1 2 ... 13 14 15 16 17 18 19 20 21 22

AD's



More News