25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


சமையல் குறிப்பு

Jul 28, 2026

குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

குலோப்ஜாமுன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைத்தால் அதில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும்.

Jul 17, 2026

சமையலில் செய்யக்கூடாதவை.

சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

Jul 08, 2026

சுவையான பொரியலுக்கான எளிய குறிப்புகள்.

வாழைக்காய் பொரியல் செய்யும்போது ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்தால் நிறமும் சுவையும் அருமையாக இருக்கும்.nana சேனைக்கிழங்கு பொரியலை வறுக்கும் முன் சிறிது எலுமிச்சைச் சாறு தெளித்தால் அரிப்பு குறையும். காலிஃப்ளவர் பொரியலுக்கு சிறிதளவு சோள மாவு தூவி வறுத்தால் மொறுமொறு மொறுமொறுப்பாக வரும். முருங்கைக்கீரை பொரியலில் பூண்டு சேர்த்து வதக்கினால் ஆரோக்கியமும் அதிகரிக்கும். சுரைக்காய் பொரியலுக்கு சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்தால் தனித்துவமான சுவை கிடைக்கும்.

Jun 30, 2026

மீன் வறுக்கும்போது அடிக்கடி திருப்பிப் போடாதீர்கள்; 

காய்கறிகளை  வெட்டுவதற்கு  முன் கழுவுங்கள்; வெட்டிய பிறகு கழுவினால் சத்துக்கள் குறையலாம். கொதிக்கும் பாலில் சர்க்கரையை ஆரம்பத்திலேயே சேர்க்காதீர்கள்; பால் பொங்கும் வாய்ப்பு அதிகரிக்கும். & முட்டையை நேரடியாக ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து உடனே வேக வைக்காதீர்கள்; வெடிக்கலாம். வெங்காயத்தை அதிக தீயில் தொடர்ந்து வதக்காதீர்கள்; எளிதில் கருகி கசப்பாகிவிடும். மீன் வறுக்கும்போது அடிக்கடி திருப்பிப் போடாதீர்கள்; துண்டுகள் உடையலாம். பிரஷர் குக்கரை அதிகமாக நிரப்பாதீர்கள்; உணவு சரியாக வேகாமல் போகலாம்.

Jun 22, 2026

சமையலை சுவையாகவும், சுத்தமாகவும் மாற்ற…

காய்கறிகளை நறுக்கி நீண்ட நேரம் திறந்தவெளியில்  வைக்காதீர்கள் சத்துக்கள் குறைந்து விடும். சாதம் வெந்தவுடன் உடனே மூடி வைக்காதீர்கள்,ஆவி தங்கி சாதம் ஒட்டிக் கொள்ளும். பொரியல் செய்யும்போது அடிக்கடி கிளறாதீர்கள் காய்கள் உடைந்து விடும். உப்பை ஒரே நேரத்தில் அதிகமாக சேர்க்காதீர்கள் சுவை கெட்டுப் போகும். மாவுகளை திறந்தபடியே வைக்காதீர்கள் ஈரப்பதம் சேர்ந்து கெட்டுப்போகும். சூடான உணவை உடனே ஃபிரிட்ஜில் வைக்காதீர்கள் சீக்கிரம் கெடலாம். ஒரே கரண்டியை எல்லா உணவுக்கும் பயன்படுத்தாதீர்கள் சுவை மாறும்.

Jun 02, 2026

பன்னீர் மென்மையாக இருக்க,....

1. ரசம் கொதிக்கும் போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் ருசி கூடும். 2. சாம்பாரில் பூண்டு சேர்த்தால் வாசனை அதிகரிக்கும். 3. தோசை மாவு புளிக்காமல் இருந்தால், சிறிது புளி கலந்த தயிர் சேருங்கள். 4. உப்புமாவில் சிறிது இஞ்சி துருவி சேர்த்தால் செரிமானத்திற்கு உதவும். 5. பன்னீர் மென்மையாக இருக்க, கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.

May 29, 2026

வடாம் டிப்ஸ் !

 வடாம் மாவுடன் ஒரு கைப்பிடி உளுந்தை சேர்த்து அரைத்தால், வடாம் அதிக மொறுமொறுப்பாக இருக்கும் * மிளகாய்க்கு பதில், மிளகைப் பொடித்து சேர்த்து வடாம் பிழிந்தால், மாறுதலான சுவையோடு வடாம் மணக்கும். * வடாம் மாவில் ஓமத்தை பொடி செய்து சேர்த்து, 'புட் கலர்' ஏதாவது சேர்த்து, ஓமப்பொடி அச்சில் பிழிய வேண்டும். இதை மாலை நேர ஸ்நாக்ஸாக பொரித்து சாப்பிடலாம். * வடாம் மாவை முதல் நாள் இரவே கிளறி வைத்துக் கொண்டால், காலையில் உப்பு, காரம் சேர்த்துக் கிளறி, வெயிலுக்கு முன் வடாம் போட்டு முடித்து விடலாம் *இளம் நாரத்தை இலைகளைக் கழுவி, பொடியாக நறுக்கி வடாம் மாவில் சேர்த்துப் பிழிந்தால் மணமும், சுவையும் கூடும்.

May 06, 2026

இட்லி மாவு 10 நாளும் fresh இருக்கும். (ப்ரிட்ஜ் இல்லாமல்)

இட்லி மாவு 2-3 நாள் கழிச்சா புளிச்சு சுவை மாறிடும்.இந்த ரகசியம்பின்பற்றினா, ப்ரிட்ஜ்இல்லாமே 10 நாளும் புது மாதிரி இருக்கும். முதல்ல அரைச்ச மாவுல உப்பு போடாதீங்க. சுத்தமான ஸ்டீல் அல்லது மண் பாத்திரத்தில் வைங்க. மேல் பக்கத்துல ஒரு சின்ன கப் தண்ணி ஊற்றுங்க - இது மாவு உலராம, புளிக்காம காப்பாத்தும். தினமும் காலை அந்த மேல் தண்ணி எடுத்து போட்டுட்டு, புதுசா தண்ணி ஊற்றணும். மாவு எடுத்துக்கொள்ளும் ஸ்பூன் நனைந்திருக்க கூடாது. இந்த முறையில் சேமிச்சா, 10 நாளும் மாவு புது சுவையோடு இருக்கும்.வெற்றிலையை இட்லி மாவில் குப்புறப் போட்டு வைத்தால் மாவு,புளிக்கவோ ,பொங்கி வழியவோ செய்யாது.

Apr 28, 2026

குக்கர் கேஸ்கட் நீண்ட நாட்கள் உழைக்க...

குக்கரில் மிகவும் முக்கியமானது என்றால் அது கேஸ்கட் தான்.அதனால், குக்கரில் சமையல் செய்த பின், 15 நிமிடங்கள் கழித்து (அதாவது 1/4 மணி நேரம்) கேஸ் கட்டைத் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.பின், கேஸ் கட்டை நன்றாகச் சுத்தம் செய்து தனியாக வைக்க வேண்டும்.குக்கரில் உள்ள ரப்பர் வளையம் நீண்ட நாட்கள் உழைக்க என்ன செய்ய வேண்டும்?.குக்கரில் சமையல் செய்து முடித்தப் பின், அதன் மேல் மூடியை திறந்து வைக்க வேண்டும்.பின். அதன் மேல் மிகக் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும்.குளிர்ந்த நீரை ஊற்றுவதால் குக்கரில் உள்ள ரப்பர் வளயத்தை நீண்ட நாட்கள் உபயோகிக்க முடியும்.

Mar 30, 2026

ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.  காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.  மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.  காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 13 14

AD's



More News