25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

Jul 27, 2023

கேரட் எளிதாக துருவ

ரவையை நெய் விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊறவைத்து பிறகு சர்க்கரை பாகு செய்து கேசரி கிளறினால் சுவை இரட்டிப்பாகும்.வாழை இலையை பின்புறமாக தனலில் காட்டி அதன் பிறகு உணவை பொட்டலமாக கட்டினால் இலையை எவ்வளவு மடக்கினாலும் கிழியாது.பூரிக்கு மாவுபிசையும் போது ஒரு டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து பிசைந்தால் நல்ல நிறத்துடன் பூரி சுருங்காமல் வரும்.கேரட்டை தோல் சீவி ஐந்து நிமிட தண்ணீரில் ஊற வைக்கவும்.பிறகு எடுத்து துருவினால் கேரட் மிருதுவாகி, எளிதாக துருவ வரும்.பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை அதிகமாக உரிக்க வேண்டி இருந்தால்  கொதிக்கும் நீரில் போட்டு உடனேஎடுத்து குளிர்ந்த நீரில் போடவும்.பிறகு எடுத்து உரித்தால் சுலபமாக வரும். பருப்புவகைகள்,நட்ஸ்,ரவைபோன்றவற்றைவேகவைப்பதற்குமுன்பொன்னிறமாகவறுத்துஎடுத்துபின்வேகவைத்தால்உணவுநல்லமணமாகவும்.ருசியாகவும் இருக்கும்.

Jul 26, 2023

சேப்பங்கிழங்கை  மொர மொரப்பாக பொரிக்க....

வெண்டைக்காய் புதியதாக இருந்தால், சமைக்கும் போது வழுவழுப்பாக இருக்கும்.அதை தவிர்க்க, வெண்டைக்காய் மீது மோரையோ அல்லது புளி கரைத்த நீரையோ தெளித்தால் நன்றாக இருக்கும்.சேப்பங்கிழங்கை வேகவைத்து தோல் உரித்த பிறகு, அதை குளிர்பதனப் பெட்டியில்2 அல்லது3 மணி நேரம் வைக்கவேண்டும். அதன் பின், பொரித்தோமானால், ஒன்றோடு ஒன்று ஓட்டாமல், தனி தனியாகவும் மொர மொரப்பாகவும் இருக்கும்.இனிப்புகள் தயாரிக்கும்போது பாதாம், முந்திரி போன்ற உலர்பழங்களை சீரான அளவில் சிறு துண்டுகளாக வெட்ட அவற்றை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருங்கள்.ஒரு டம்ளரில் சூடான நீரை வைத்துக்கொண்டு, கத்தியை வெந்நீரில் தோய்த்து காய்களை வெட்டுவது போல் சாதாரணமாக நறுக்கினால் உலர்பழங்களை ஒரே அளவில் துண்டுகள் போட முடியும்துவையல்களை அரைக்கும்போது மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைத்து உண்டால் உடலி ல் உள்ள கொழுப்பு குறையும்.

Jul 25, 2023

வெங்காயத்தின் மேல் தோல் எளிதாக அகல

சாம்பாரில் உப்பு அதிகம் போட்டுவிட்டால் இரண்டுஉருளைக் கிழங்குகளை வேகவிட்டுத் துண்டு செய்து அதில் போட்டால் அதிகப்படியாக உள்ள உப்பைக் கிழங்கு கிரகித்துக் கொண்டு விடும்.குழம்பு போதிய அளவுக்குக் கொதித்து விட்டன என்பதற்கு அறிகுறி மிளகாய்ப் பொடியின் நெடி அடங்கி மேலே நுரைத்துக் கொண்டு வருவதுதான்.எலுமிச்சம் பழத்தைச் சற்று நேரம் வெந்நீரில் போட்டு எடுத்துச் சாறு பிழிந்தால் நிறையச் சாறு வரும். பிழிவதற்கும் சுலபமாக இருக்கும்.வெங்காயத்தின் மீது லேசாக எண்ணெய் தடவி சற்று நேரம் வெயிலில் காயவைத்துப் பின் முறத்தில் போட்டுப் புடைத்தால் எளிதாக மேல் தோல் அகன்று விடும்.சர்க்கரை சேர்த்துத்  தயாரிக்கப்படும் தின்பண் டங்களுக்கு நிறத்துக்காக கேசரி பவுடர் சேர்க்கலாம். வெல்லம் போட்டுத் தயாரிக்கும்போது இது வேண்டியதில்லை சேர்த்தாலும் நிறம் தராது . வெல்லத்  தயாரிப்புகளுக்கு நெய் சேர்ப்பதால் அதன் ருசியும் மணமும் கூடும்.

Jul 24, 2023

மசால் வடைக்கு அரைக்கும்போது...

கிரைண்டரில் மசால் வடைக்கு அரைக்கும்போது, அதில் இஞ்சி, மிளகாய் சரியாக அரைபடவில்லையா? அரைக்க வைத்திருக்கும் பருப்பில் ஒரு கைப்பிடி எடுத்து அதில் இஞ்சி, மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால், நைஸாக அரைபட்டு விடும். இதை மாவோடு சேர்க்கலாம். வாழைக்காயை ஈரமில்லாத பாலித்தீன் கவரில் போட்டு இறு க்கமாக கட்டி    ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் பழுக்காது .ஓமம் கலந்த சுடுநீரை , பிளாஸ்க்கில் சிறிது நேரம் வைத்து, பின் கழுவினால் பிளாஸ்க்கில் உள்ள நாற்றம் போய் விடும்.ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே  பயன்படுத்துங்கள்.கத்திரிக்காயை நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைத்தால் கருக்காது.

Jul 22, 2023

அரிசியில் பூச்சிகள் வராமல் இருக்க

அரிசியில் சில கிராம்புகளை சேர்க்க பூச்சிகள் வராமல் இருக்கும். கிராம்பு விஷம் அல்ல. கிராம்பு எண்ணெயை சமைய லறையில் தெளித்தால் அது சமையலறை கிருமிகளை அழிக்கும்.அரிசியுடன் சிறிது காய்ந்த மிளகாயைச் சேர்த்துக் கொள்ளுங்கள், மிளகாயின் சூடு அரிசியில் உள்ள கிருமிகளை வராமல் தடுக்கும்.பூண்டு அரிசி குடற்புழு நீக்க முடியும். உரிக்கப்படாத பூண்டை அரிசி கொள்கலனில் வைக்கவும், அவை உலர்ந்தவுடன் அவ்வப் போது புதியவற்றைப் பயன்படுத்தவும்.அரிசி பைகளில் இருந்து பூச்சிகளை விலக்கி வைக்க வேப்ப இலைகள் சரியானவை. அரிசியுடன் சிறிது வேப்ப இலைகளைச் சேர்த்து, அரிசிப் பைகளைச் சுற்றிலும் வைக்கவும். புழுக்கள் அனைத்தும் மறைந்துவிடும்.அரிசியில் உள்ள புழுக்களை போக்க பிரியாணி இலை சிறந்தது. அரிசியை காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து, அதில் சில பிரியாணி இலைகளை போடவும்.

Jul 21, 2023

சேமியா பாயசம் குழைந்து போய்விட்டால்...

முழு ஆப்பிளை பிரிஜ்ஜில் வைப்பது நல்லது. நறுக்கிய ஆப்பிள் கலர் மாறாமல் இருக்க, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதில் 2 ஸ்பூன் உப்பு, எலுமிச்சை ஜூஸ் சேர்த்து அதில் ஆப்பிளை வைத்தீர்களானால் ஆப்பிள் ஆப்பிளாகவே இருக்கும்.சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும்.அடுப்பிலிருந்து பாத்திரங்களை எடுத்தவுடன், 'சிங்க்' அடியில் வைத்து குழாயைத் திருப்பிவிட்டால், அவற்றின் ஆயுள் குறையும். சூடு ஆறியதும்தான் பாத்திரங்களைக் குழாயின் அடியில் வைக்க வேண்டும்.வீட்டு அடுக்களையில் ஒரு டம்ளரில்மண் வைத்து அதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஊன்றி வைத்தால், துளிர் விட்டு வளர்ந்தும், அதன் வாடைக்குப் பல்லி வரவே வராது.வெண்டைக்காய் புதியதாக இருந்தால், சமைக்கும் போது வழுவழுப்பாக இருக்கும். அதை தவிர்க்க, வெண்டைக்காய் மீது மோரையோ அல்லது புளி கரைத்த நீரையோ தெளித்தால் நன்றாக இருக்கும்.சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்த பிறகு அதை குளிர்பதனப் பெட்டியில் 2 அல்லது 3 மணி நேரம் வைக்க வேண்டும். அதன் பின், பொரித்தோமானால், ஒன்றோடு ஒன்று ஓட்டாமல், தனி தனியாகவும் மொர மொரப்பாகவும் இருக்கும்.

Jul 20, 2023

வாழைத்தண்டை நறுக்கியதும் நிறம் மாறாமல் இருக்க

கீரையை வேக வைக்கும். போது சிறிது சர்க்கரைசேர்த்தால் பச்சை நிறம் மாறாமல் இருக்கும், உப்பு, எண்ணெய் கலந்தாலும் நிறம் மாறாது.மோரில் மஞ்சள் பொடி கலந்து அதில் நறுக்கிய காய்களை போட்டு வைத்து, பிறகு சமைத்தால் கருக்காமல் இருக்கும்.ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றை நறுக்கியதும் எலுமிச்சம் பழச்சாறு கலந்து வைத்தால், நிறம் மாறாமல் இருக்கும்.உருளைக்கிழங்கை வினிகர் சேர்த்து நீரில் வேக வைத்தால் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.காலிஃப்ளவரை சிறிது பால் கலந்த நீரில் வேக வைத்தால், நல்ல வெண்மை நிறத்துடன் இருக்கும். சுவையும் கூடும்.வாழைத்தண்டை நறுக்கியதும் மோர் கலந்த நீரில் போட்டு வைத்தால், நிறம் மாறாமல் இருக்கும். துவர்ப்பும் மட்டுப்படும்.

Jul 19, 2023

ருசியை கூட்டும்  சமையல் ஐடியாக்கள்

 புளி சாதம் கிளறுவதற்குமுன் சூடான சாதத்தில்கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி கிளறவும். சிறிது மிளகு, வெந்தயம், சீரகம், கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்துப்பொடி செய்து புளிக் காய்ச்சலுடன் அந்தபொடியையும், தேவையானஅளவு தூவி கிளறவும். கமகம ருசியில் புளியோதரை கோயில் பிரசாதம் போல சாப்பிட ருசியாக இருக்கும்.தேங்காய் சாதத்தில் வேர்க்கடலை மற்றும்பொட்டுக்கடலையை வறுத்து ஒன்று இரண்டாக பொடிசெய்து போட்டால் கூடுதல் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.கீரைகளுயுடன் பச்சை வேர்க்கடலையை தாளித்து,வேக வைத்து, தேங்காய் துருவலுடன் இதர சாமான்களையும் சேர்த்து கீரை சாதம் செய்தால் ருசியாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி உண்பர்.அவரக்காய், கத்தரிக்காய், பீன்ஸ் என்று எந்த பொரியல் செய்தாலும் நாலைந்து சின்ன வெங்காயம், சிறிது சீரகம் இரண்டையும் கரகரப்பாக அரைத்துப் போட்டு இறக்குங்கள். வாசனை கமகமவென இருக்கும். அதோடு தேங்காய் துருவல் போட வேண்டிய அவசியமும் இருக்காது கொதிக்கும் தண்ணீரில் சிறிது வெந்த பாசிப்பருப்பை சேர்க்கவும். பிறகு பாம்பே ரவை, அரிசி ரவை அல்லது கோதுமை ரவையைப் போட்டு உப்புமா செய்தால் ருசியாக இருக்கும்.

Jul 17, 2023

காபிதூளை அதிக நாட்கள் பாதுகாக்க

காபி தூள் பாட்டிலாக வாங்குகிறவர்கள், பாட்டிலின் வாய்ப்பகுதியில் இருக்கும். அலுமினிய பேப்பர் அடைப்பை முழுமையாக நீக்கி விடவேண்டாம். அதில் ஒன்றிரண்டு துளைகள் போட்டு அதன் வழியாக காபிதூளைக் கொட்டினால், அதிக நாட்கள்பாதுகாக்கலாம். காபித்தூள் பாட்டிலில் ஸ்பூன் போட்டு வைப்பது நல்லதல்ல.அப்பளம் வறுக்கும் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து விட்டு, அப்பளம் வறுத்தால் அப்பளம் அதிக மொறு மொறுப்பாகவும், நல்ல நிறமாகவும் இருக்கும்.பெரிய துண்டுகளாக இருக்கும் ஐஸ்கிரீமை பரிமாறும் போது வெட்ட பயன்படுத்தும் ஸ்பூனை அடிக்கடி தண்ணீரில் முக்குங்கள். வேலை எளிதாக இருக்கும்.எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொளும் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசிஅதிகமாக இருக்கும்.

Jul 12, 2023

கெட்டியான தயிர் கிடைக்க.....

உறை மற்றும் பாலில் தண்ணீர் சேர்த்திருக்கக் கூடாது. அப்படியானால்தான் கெட்டியான தயிர் கிடைக்கும். பாலில் தண்ணீர் சேர்க்கப்பட்டிருந்தால் லேசான தீயில் பாலை வைத்து வற்றச் செய்ய வேண்டும்.மீன் வறுபதற்கு மசால் தயாரிக்கும் போது அதில் சிறிதளவு புதினா, மல்லி இலை, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, சிறிய வெங்காயம் போன்றவைகளை அரைத்து சேருங்கள். அவைகளை மீனில் பூசி, ஒருமணி நேரம் வைத்துவிட்டு பிள்பு வறுத்தால் மீனுக்கு அதிகசுவை கிடைக்கும்.சூடான எண்னெயில் ஒரு தேக்கரண்டிமைதா சேர்த்து கிளறிவிட்டு பின்பு மீனை வறுங்கள். அவ்வாறு செய்தால் மீன் வாணலியில் ஒட்டிப்பிடிக்காது.மோர்க்குழம்பு செய்யும் போது ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை நன்கு பிசைந்து சேர்த்துக் கொண்டால் ருசிதான்.குருமாவின் அளவை அதிகரிக்க வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசிய வைத்து சேர்க்கலாம். சூடான பசும்பாலையும் சேர்க்கலாம்.

1 2 ... 12 13 14 15 16 17 18 ... 21 22

AD's



More News