25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

Jun 21, 2023

பருப்பு நிறம் மாறவோ, பூஞ்சை பிடிக்காவோ செய்யாது

வறுத்த புழுங்கல் அரிசியை மாவாக்கி வைத்துக் கொண்டால்,கூட்டுக்கறிகள் இறக்கும் போது லேசாகத் தூவிவிட்டால், வாசனை கூடுதலாக இருக்கும்.அரிசியில் உள்ள புழுக்களை போக்க  அரிசியை காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து,அதில் சில பிரியாணிஇலைகளை போடவும்,பிளாஸ்டிக் வடிகட்டியை கூட இனி தூக்கிப் போடாமல் பயன் படுத்தலாம். இப்போது எல்லார் வீட்டிலும் இஞ்சி பூண்டு நசுக்க உரல் இருக்க தான் செய்கிறது. உரலின் கைப்பிடி அளவிற்கு வடிகட்டியில் சின்னதாக ஒரு ஓட்டை போட்டு அந்த உரலின்மேல் வைத்து ,புடியை அந்த ஓட்டையில் சொருகி வைத்து விட்டால், இஞ்சி பூண்டு என எதை நசுக்கினாலும் அதிலிருந்து எதுவும் வெளியில் தெறித்து வராது. மற்ற நேரங்களில் பூச்சி எதுவும் அதில் போய் அமராமலும் இருக்கும்.பருப்பை சேகரித்து வைத்திருக்கும் பாத்திரத்தில் நாலைந்து காய்ந்த மிளகாயைப் போட்டு வையுங்கள். பருப்பு நிறம் மாறவோ, பூஞ்சை பிடிக்காவோ செய்யாது   அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் பிசுக்கு ஒட்டி இருந்தால், டைல்ஸை சாதாரண துணியால் துடைத்த பின் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் துடைத்தால் பளிச்சென்று மின்னும்.

Jun 20, 2023

சீரகத்தைக் கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் , பொங்கல்  சுவையுடன்இருக்கும்.

சமையல் சோடா போடாமல் வடை பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க ஒரு டீஸ்பூன் வறுத்த ரவையை மாவுடன் சேர்த்து செய்தால் பலகாரங்கள் ஆறிய பின்பும் கூட மொறுமொறுப்பாக இருக்கும் சுவையும் கூடும்.சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு தயிர் அல்லது முட்டை சேர்த்துச் செய்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.தோசை மாவு, பொங்கல் போன்றவற்றில் சீரகத்தைக் கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாகவும்இருக்கும்.சோப்புத் தண்ணீர் கொண்டு கேஸ்அடுப்பைத் துடைக்கும் போது டியூபையும் துடையுங்கள். இதனால் டியூப் நெடுநாள் உழைக்கும். சுத்தமாகவும் இருக்கும்.கொசு தொல்லைக்காகப் போடப்பட்டுள்ள நெட்லானில் சிறிய துளைகள் ஏற்பட்டு விட்டால்"" செலோடேப் கட் பண்ணி ஒட்டலாம்.காளானை சுத்தப்படுத்தும் முன்பு அதனைசுத்தப்படுத்தும் நீரில் சிறிது எலுமிச்சை சாறை கலக்கவும். ஏனெனில் காளான் வெளிப்புறத்தில் உள்ள ஆக்சிஜனுடன் இணைந்து விரைவில் கருப்பு நிறமாக மாறிவிடும். எனவே எலுமிச்சைச்சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் காளான் கருப்பாவதை தடுக்கிறது.

Jun 19, 2023

முள்ளங்கி தோல் மென்மையாக இருந்தால்

முள்ளங்கி லேசாககீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு நல்ல காய், .உருளை கிழங்கு முளை விடாமல் இருக்கனும் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்.வெண்ணெயை முட்டையில் கலந்து நன்றாக கலக்கி ஆம்லெட் செய்தால் ருசியாக இருக்கும்.அதிக தண்ணீர் வைத்து காய்கறிகளை வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின், மணம், சத்துகள் போய்விடும்.மாவு அரைக்கும் போது இரண்டு மூன்று வெண்டை காய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக் கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.பொரித்த ஒரு அப்பளத்தை நொறுக்கி, இரண்டு டீஸ்பூன் துருவிய தேங்காய், கறி வேப்பிலை, புளி, ஒன்றிரண்டு பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரையுங்கள். அசத்தலான அப்பளத் துவையல் ரெடி.

Jun 16, 2023

உருளைக்கிழங்கு சிப்ஸ் வெள்ளை வெளேரென்று கரகரப்பாக இருக்க.....

உருளைக்கிழங்கைச் சீவி ஒரு வெள்ளைத் துணியில் கட்டி கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் அமிழ்த்தி வைத்து எடுத்து பிறகு குளிர்ந்த உப்பு தண்ணீரில் போட்டு கொதிக்கும் எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்தால் வெள்ளை வெளேரென்று சிப்ஸ் கரகரப்பாக இருக்கும்.கோடை காலத்தில் இட்லி மாவு புளிக்காமல் இருக்க மாவு அரைத்துவைத்தவுடன்,அதில்தேவையான அளவு உப்பு போட்டு கலந்த பிறகு. அதனுடன் 1 வெற்றிலையை காம்புடன் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்த பிறகு, நீங்கள் மாவினை வழக்கம் போல பிரிடஜில் வைத்து விடுங்கள் .இந்த முறையில் செய்தால் இட்லி மாவுகோடைகாலத்தில் புளிக்காது.பருப்பை சேகரித்து வைத்திருக்கும் பாத்திரத்தில் நாலைந்து காய்ந்த மிளகாயைப் போட்டு வையுங்கள். பருப்பு நிறம் மாறவோ, பூஞ்சை பிடிக்காவோ செய்யாது.அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் பிசுக்கு ஒட்டி இருந்தால், டைல்ஸை சாதாரண துணியால் துடைத்த பின் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் துடைத்தால் பளிச்சென்று மின்னும்.உப்பு ஜாடியில் சிறிதளவு சோள மாவைப் போட்டுவைத்தால், உப்பு நீர்த்துப்போகாமல் இருக்கும் .

Jun 14, 2023

நெய் கெட்டுப் போகாமல் இருக்க...

கத்தியை லேசாக சூடு செய்துவிட்டு அதன் பின்பு வெங்காயம் நறுக்கினால் கண்களில் தண்ணீர் வராது, நெய்யில்  ஒரு சிறிய துண்டு வெல்லக்கட்டியை போட்டு வைத்தால்,  ரொம்ப நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.வெயில் காலத்தில் தயிர் சீக்கிரம் புளித்து போய்விடும் . தயிர் புளிக்காமல் இருக்க அதில் தோல் சீவிநசுக்கிய இஞ்சி சிறிய துண்டு ,ஒரு துண்டு தேங்காய்பத்தை, இரண்டையும் தயிரில் போட்டு வைத்தால் தயிர் சீக்கிரம் புளித்து போகாது.பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும். இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டிவிட்டு இரண்டாக பிளந்து வைத்தால் பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும். சிங்க் தொட்டியில்  வீசும் துர்நாற்றத்தை போக்க ,பயன்படுத்திய எலுமிச்சை பழத்தின் தோலில் உப்பு தடவி ,சிங்க் தொட்டி முழுவதும் தேய்த்து விடவும். இதனால் துர்நாற்றம் குறைந்து நல்ல வாசனை  வரத்தொடங்கும்.

Jun 13, 2023

வெண்டைக்காய் ஃபிரஷ் ஆக இருக்க

உருளைக்கிழங்கை நகந்தை கொண்டு கீறினால் அதன் தோல் உறிய வேண்டும் இல்லையென்றால் அது நன்றாக  விளையவில்லை என அர்த்தம்.வீட்டில் வாங்கி வைத்திருக்கும் கேரட் பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினமாக இருக்கும்.அப்பொழுது அவற்றை உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது போல்'மாறிவிடும் வெட்டுவதற்கும் எளிதாக இருக்கும்.வெள்ளைப் பூண்டில் அதன் பல் வெளியே தெரிவது போல இருக்க வேண்டும்.அது நான் நல்ல பூண்டு.சில சமயம் வாங்கிய வெல்லத்தை தூள் செய்யவே முடியாது.சிரமமாக இருக்கும் ரொம்பவும் இறுகிப்போன வெல்லத்தை காய்கறித் துருவலில் வைத்து துருவினால் சீக்கிரமே வெல்ல தூள் நமக்கு  சிரமம் இல்லாமல்  கிடைக்கும்.இளசாக வாங்கிய வெண்டைக்காய்களை உடனடியாக காம்பு பகுதியையும் தலைப் பகுதியையும் நறுக்கி விடவேண்டும். அதன் பின்பு ஒரு பிளாஸ்டிக் டப்பாவுக்கு அடியில் ஒரு டிஷ்யு பேப்பரை போட்டு வெண்டைக்காய்களை அடுக்கி, மேலே ஒரு பேப்பரை போட்டு முடி பிளாஸ்டிக் டப்பாவையும் மூடி போட்டு, பிரிட்ஜில் வைத்தால் பத்து நாட்கள் வரை வெண்டைக்காய் ஃபிரஷ் ஆக இருக்கும். டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் மெல்லிசான காட்டன் துணியை பயன்படுத்தலாம்.

Jun 12, 2023

நிறம் மாறாமல் காய்கறிகள் சமைக்க....

உருளைக்கிழங்கை வினிகர் சேர்த்து நீரில் வேகவைத்தால் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.காலிஃப்ளவரை சிறிது பால் கலந்த நீரில் வேக வைத்தால்,நல்ல வெண்மை நிறத்துடன்இருக்கும். சுவையும் கூடும்.கறிவேப்பிலை காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால்,வயிற்றைச் சுற்றியுள்ளஅதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.காலையில் ஒரு பேரிச்சம்பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவுஅதிகரித்து, இரத்த சோகை பிரச்சனை தீரும்.

Jun 09, 2023

உப்பு ஜாடியில் தண்ணீர் வடிவதை தடுக்க....

உப்பு ஜாடியில் தண்ணீர் வடிவதை தடுக்க சிறிது புளித்துண்டை ஜாடியில் போட்டு வைத்தால் நீர்த்தன்மையை புளி எடுத்துவிடும்.அதிகப்படியாக வாங்கி வைத்திருக்கும் எண்ணெயில் பச்சை மிளகாயைப் போட்டு வைத்தால் எண்ணெய் கசடு தங்குவது நிகழாது.அரிசியை 20 நிமிடங்கள் ஊறவைத்து வடித்தால் சோறு ஒன்றோடு ஒன்று ஓட்டாமல் இருக்கும்.ஆப்பம் சுடும் போது, சாப்டாக வரவில்லையா, ரொம்பவும் முறப்பாக இருக்கிறதா அதில்  தேவைக்கு ஏற்ப கொஞ்சம் வெதுவெதுப்பான பாலை  ஊற்றி கலந்து ஆப்பம் வார்த்தால் ஆப்பம் உடனடியாக சாப்டாக வரும். பாகற்காய் வாங்கும் போது. தட்டையானதாக வாங்க வேண்டும் .அதில் தான் சுவை அதிகம். குண்டான பாகற்காயை தவிர்த் து விடவும்.

Jun 08, 2023

கொத்தமல்லி, கருவேப்பிலை தழை

முட்டைகோஸை இஞ்சி யுடன் சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் உப்பு சேர்த்து தயிருடன் அரைத்தால் பச்சடி நன்றாக இருக்கும்.கொத்தமல்லி, கருவேப்பிலை தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல்இருக்கும்.வெல்லத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி டப்பாவில் போட்டு மூடி வைத்தால் நீர்த்து போகாமல் இருக்கும்.பயிறு வகைகள் கெடாமல் இருக்க சிறிது விளக்கெண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்தால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் கெடாமல் இருக்கும்.இட்லி பூ போன்று மென்மையாக வர ஒரு கைப்பிடி அவலை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து இட்லி மாவுடன் சேர்த்து அரையுங்கள் இட்லி பஞ்சு போல வரும்மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை சுத்தம் செய்யும் போது தண்ணீரில் எலுமிச்சை தோலை சேர்த்து கழுவினால் மீன் வாடை உடனே போய்விடும்.

Jun 07, 2023

சமோசா மொறுமொறுப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

புளியை வாங்கி வந்ததும், அதிலுள்ள கொட்டைகளையும், நார்களையும் நீக்கிவிட்டு நன்கு வெயிலில் காயவிட்டு, சிறிது கல் உப்பு சேர்த்து ஜாடியில் அடைத்துவிட்டால் ஓர் ஆண்டுக்கு மேல் புழுக்கள், பூச்சிகள் வராமலிருக்கும்.பிளாஸ்டிக் கவரில் ஒரு துளை இட்டு பிரிட்ஜில் வைத்தால் பச்சை மிளகாய் மாதக் கணக்கில் கெடாமல் இருக்கும்.எந்தக் கிழங்காக இருந்தாலும் 10 நிமிடம் உப்பு கலந்த நீரில் போட்டு வைத்திருந்து பிறகு எடுத்து வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.மஞ்சள் முள்ளங்கியை வேக வைக்கும் போது ஒரு சிட்டிகை சர்க்கரையை சேர்த்து வேக வையுங்கள். முள்ளங்கி மிகவும் வாசனையுடனும் சுவை மிகுந்தும் இருக்கும்.வெங்காயம் வெள்ளைப்பூண்டின் மீது சிறிது எண்ணெய் தடவி வெயிலில் காயவைத்தால் சுலபத்தில் தோலை நீக்கிவிடலாம்.சமோசாவுக்கு மாவு பிசையும் போது மைதா மாவை சலித்து ஒரு மெல்லிய துணியால் கட்டி இட்டிலி தட்டின் மேல் வைத்து ஐந்து நிமிடங்கள் வரை ஆவி பிடித்து பிறகு உப்பு சீரகம் டால்டா போட்டு பிசைந்தால் மொறுமொறுப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

1 2 ... 13 14 15 16 17 18 19 20 21 22

AD's



More News