25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


உதவி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உதவி

வாட்டசாட்டமாக இருந்து கொண்டு வேலைக்குச் செல்லாமல் நாலு இடத்திலே பிச்சை எடுத்து சாப்பிட்டு விட்டு சுகமாகத் தூங்குபவர்களுக்கு பிச்சையிடுவதில் பயன் இல்லை. இப்பொழுது பிச்சைக்காரர்கள் செல்போன் சகிதமாக அலைந்து திரிந்து பிச்சையெடுத்து அந்திம காலத்திற்கு வங்கியில் பணம் போட்டு வைத்து ஒய்யாரமாக பிச்சை எடுக்கிறார்கள். வசதியாக வாழ்ந்தாலும் கையில் இருந்து சல்லி காசு செலவு செய்யாமல் மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் பலர். இவர்களுக்கு உதவி செய்தால் வாங்கியவர்கள் நம்மை ஏமாளிகள் என்று நினைத்து பல விதங்களில் தங்கள் கஷ்டங்களைக் கூறி உதவி கோருவார்கள். இவர்களுக்கு உதவி செய்வதில் எந்த ப்ரயோஜனமும் இல்லை.

 அனைவரும்  அன்னதானம், செய்வதற்கு தயாராக இருக்கின்றனர். விரும்பியும் செய்கின்றனர். அன்னதானம் செய்கிறேன். என்ற பெயரில் நன்கொடை கேட்டு நோட்டும் பேனாவுமாக பலர் தொழிலே செய்கின்றனர். ஐம்பதோ, நூறோ கொடுங்கள் என்று சிட்டையை நீட்டுகின்றனர். ஐம்பது, நூறு, இந்த காலத்தில் மிகச் சிறிய தொகைதான். இந்த நன்கொடை ரசீதை எத்தனை பேரிடம் காட்டி வாங்குகிறார்கள். என்பதே கேள்வி ஆயிரம் பேரிடம் வெறும் 50 ரூபாய் வாங்கினால் எவ்வளவு வரும் கணக்கு போடுங்கள். 50 * 1000  = 50000 ஆயிரம் ரூபாய் வசூல் செய்கின்றனர். அன்னதானத்திற்கு 25,000 ரூபாய் செலவழித்து விட்டு மீதியை பாக்கெட்டில் போட்டுக் கொள்கின்றனர்.

எப்படியோ எடுத்துத் தொலையட்டும், நாம சமைத்துப் போட முடியாது. இவர்களாவது செய்கிறார்களே என்று விட்டு விடுகிறோம். இப்படி விடக் கூடாது என்று ஒரு குழுவினர் தாங்களாகவே கடைகளில் தயிர் சாதம், சாம்பார் சாதம், இட்லி, சட்னி, பொட்டலங்களை தினமும் ஐந்தோ, பத்தோ, பாக்கெட்களை வாங்குகின்றனர். அவர்கள் ஆபிசிற்கோ, தொழிற்சாலைக்கோ செல்லும் வழியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர், வயதானவர்கள் இவர்களை கவனித்து அவர்கள் கையில் பொட்டலத்தை பிரித்து கொடுக்கின்றனர். அவர்களும் சந்தோஷமாக சாப்பிடுகின்றனர். இந்த அன்னதானம் மேலான அன்னதானம்.

அன்னதானம் என்ற பெயரில் நன்றாக உழைப்பவர்கள் கூட வேலைக்கு லீவு போட்டு வயிறார அன்னதானச் சாப்பாட்டை சாப்பிட்டுச் செல்கின்றனர். இவற்றை அன்னதானம் செய்வோர் தவிர்க்க முடியாது தான்.எந்த உதவி ஒருவர் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தி அவர்களுடைய வாரிசுகளுக்கும் நல்ல வாழ்க்கையை கொடுக்கிறதோ 'அதுவே உதவி' உதவி பணத்தால் மட்டும் செய்வது இல்லை. எத்தனையோ விஷயங்களில் செய்யலாம். கல்வியால், சேவையால், வாழ்க்கையை முன்னேறச் செய்யும் பல நல்ல விஷயங்களால் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் பொழுது பயோடேட்டா பார்க்க முடியாமா ? என்கிறீர்களா ? முடியாதுதான். உதவி செய்யும் பொழுது மனம் இரங்கி 'பாவம்' என்று தான் நம் கையிலிருந்து காசையோ, பணத்தையோ கொடுக்கிறோம். சற்று யோசித்து இவர்களுக்கு கொடுக்கலாமா ? என்று யோசித்துக் கொடுக்கவும். சென்னை போன்ற பெருநகரங்களில் சிக்னல்களில் பச்சிளங் குழந்தைகளை கையில் ஏந்தி பிச்சை எடுப்பவர்கள் பலர். அப்படி இருப்பவர்கள் குழந்தைக்கு 1 நாள் வாடகை ரூ.100 பெற்றோரிடம் கொடுத்துவிட்டு காயும் வெயிலில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பிச்சை எடுக்கின்றனர். குழந்தைக்கு வாய் இருக்கிறதா ? இல்லையே ! இவர்களுக்கு பிச்சை போட்டு குழந்தையின் சாபத்தை நாம் பெற வேண்டாமே ! இந்தக் கொடுமையை உதவி செய்து மேலும் வளர்க்க வேண்டாம்.இப்படி எத்தனையோ தானங்கள் உரியவர்களுக்குச் சென்றடைவதில்லை. (உதவியை காலமறிந்து, இடமறிந்து, செய்யும் உதவியே சரியான உதவியாகும்) ஆக உதவியை செய்வதற்கு முன் யாருக்குச் செய்வது என்பது மிக முக்கியம்.நல்லவர்களுக்கு நாம் செய்யும் உதவிகள் கல்லில் பதித்த எழுத்துக்களாக என்றும் மறையாது. ஆனால் “ஈரம் இல்லாத நெஞ்சங்களுக்கு செய்யும் உதவி, நீரின் மேல் எழுதியதற்குச் சமம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News