25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

Jul 11, 2023

ரவா இட்லி  ருசியாக இருக்க...

வறுத்த புழுங்கல் அரிசியை மாவாக்கி வைத்துக்கொண்டால், கூட்டுக்கறிகள் இறக்கும்போது ,லேசாகத் தூவிவிட்டால், வாசனை கூடுதலாக இருக்கும்.ரவா இட்லி செய்யும் போது சிறிது சேமியாவை வறுத்து, தயிரில் ஊற வைத்துச் சேர்த்தால் கூடுதல் ருசி தரும்.கீரையுடன் பயத்தம் பருப்பு சேர்த்துக் கூட்டுச் செய்யும்போது ஒரு கப் பாலைச் சேர்த்தால் மணமாக இருக்கும்.மாவு அரைக்கும் போது வேகவைத்த சாதத்தை சிறிது சேர்த்து அரைத்தால் வார்க்கும் தோசை மிருதுவாக இருக்கும்.சாம்பார் தண்ணீராக இருந்தால் பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் சேர்க்கலாம். சாம்பார் கெட்டிப்படுவதுடன் சுவையும் கூடுதலாக இருக்கும்.தேங்காயைத் துருவி அதை கொதி நீரில் போட்டு வைத்து விட்டு பிறகு கைப்பொறுக்கும் சூட்டில் எடுத்து பிழிந்தால் நல்ல கெட்டியான பால் கிடைக்கும்.வெங்காய பக்கோடாவுக்கு அரை டீஸ்பூன் சோம்பு,கறிவேப்பிலை சேர்த்தால் கொஞ்சம் வாசனையாக இருக்கும்.

Jul 08, 2023

சமையல் கேஸ் மிச்சப்படுத்த...

சமைக்கும் போது பாத்திரத்தை அடுப்பில் திறந்து வைக்காமல் மூடி வைத்தால், கொதித்தல், வேகுதல் எல்லாம் விரைவாக நடக்கும். இதன் மூலம் கேஸை சேமிக்கலாம். ஃப்ரிட்ஜில் இருந்த உணவுப் பொருளை சுடவைக்கும் போது, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் இருந்து வெளியில் எடுத்துவைத்து, பின் அடுப்பில் வைக்கலாம்.பாத்திரம் போதுமான அளவு சூடான பின்பு,நெருப்பை சிம்மில் வைக்கவும்.அடி அகலமான பாத்திரத்தை பயன்படுத்தவும். இதனால் விரைவாக சூடு ஏறும், கேஸ் மிச்சமாகும்.தேவையான அளவு மட்டும் சமையவில் தண்ணீர் சேருங்கள். ஏனெனில் தண்ணீர் கொதிப்பதற்கும். வற்றுவதற்கும் அதிக கேஸ் செலவாகும்.ரெகுலேட்டர் டியூப்கள், பர்னர் ஆகியவற்றில் லீக்கேஜ் இருக்கிறதா என்பதை அடிக்கடி செக் செய்து கொள்ளுங்கள். சமைத்து முடித்தவுடன், ரெகுலேட்டரை ஆப் செய்துவிட மறக்காதீர்கள்.

Jul 05, 2023

மாவு சலிக்கும் சல்லடை பொத்துப் போய் விட்டால்

வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பூ போன்றவற்றை கூட்டு செய்யும் போது தேங்காய் எண்ணெயில் தாளித்தாள் அதிக ருசியாக இருக்கும்.மாவு சலிக்கும் சல்லடை பொத்துப் போய் விட்டால் அந்த இடத்தில் உட்புறமாக சற்று பெரிய சைஸ் ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி விட்டால் சல்லடையை இன்னும் கொஞ்சகாலம் பயன்படுத்தலாம்.ஆழாக்கு அரிசியையும் படி ஆழாக்கு சோற்றையும் அரைத்துக் கொண்டால் திடீர் தோசை செய்யலாம்.மசாலாவை கொதிக்கும் நீரில் போட்டுவிட்டு பின் நூடுல்ஸை போட வேண்டும்.சப்பாத்தி, பூரி மீதமாகி விட்டால் தோல் சீவிய ஒருஉருளைக்கிழங்கைப் போட்டு ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட்டால் அப்படியே இருக்கும்.துவரம் பருப்பை ஊறவைத்து அதனுடன் மிளகாய்வற்றல், தனியா அரைத்து காய்கறியில்லாத சாம்பார் செய்யலாம்.ரசத்தை இறக்கும் முன்பு ஒரு ஸ்பூன் கருவேப்பிலைப் பொடிதூவி இறக்கினால் மணமாக இருக்கும்.முருங்கை இலையை உருவிய பின்னர் காம்புகளை நறுக்கிப் போட்டு மிளகு ரசம் வைக்கலாம். இது உடல், கை, கால் அசதிக்கு மிகவும் நல்லது.

Jul 04, 2023

இட்லி மிகுந்துவிட்டால் ருசியான பொங்கலாக மாற்றலாம்

ஆறு இட்லி இருந்தால், அரை கப் பாசிப்பருப்பைக் குக்கரில் வேகவைக்கவும். இட்லிகளை வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, முந்திரி4, கீறிய பச்சை மிளகாய்2, அரை டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் ஒன்றிரண்டாகத் தட்டிய மிளகு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உதிர்த்த இட்லித் துண்டுகளைப் போட்டுக் கிளறவும்; பின்னர், வேகவைத்த பாசிப்பருப்பு, கால் டீ ஸ்பூன் உப்பு(இட்லியில் ஏற்கெனவே உப்பு உள்ளதால் சிறிதளவு போதும்) சேர்த்துக் கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால், அரைஅங்குல நீலமுள்ள இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்க்கலாம் .ருசியான இட்லி பொங்கல்

Jul 03, 2023

எலுமிச்சம்பழம் சர்பத் தயாரிக்கும் போது சிறிதளவு இஞ்சிச் சாறைக் கலந்தால்....

முருங்கைக்காய் நீண்ட நாள் வாடாமல் இருக்க, சாம்பாரில் சேர்க்கும் அளவு துண்டுகளாக நறுக்கி கற்று புகாத கவர் அல்லது டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் அப்படியே இருக்கும்.எலுமிச்சை ஊறுகாய் போடுவதற்கு முன் நன்றாக கொதிக்கும் நீரில் ஒரு டீஸ்புன் சர்க்கரை மற்றும் பழங்களை போட்டு மூடி வைத்து விட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து நறுக்கி, ஊறுகாய் போட்டால் மறுநாளே உபயோகிக்கலாம். கசப்பு தன்மை இருக்காது.பால் பொங்கி கீழே வடியாமல் இருக்க, பால் காய்ச்சும் பாத்திரத்தின் மேல் ஒரு மரக்கரண்டியை வைத்தால் பால் பொங்கி கீழே வராது.எலுமிச்சம் பழத்தை வாங்கி அதனை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் பல நாட்களுக்கு விணாகாமல் பாதுகாக்கலாம்.சாம்பார் செய்யும்போது புளிப்பு சுவை அதிகமாகிவிட்டால் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து அது கரையும் வரை கொதிக்க வைக்கவும். அவ்வளவு தான் சாம்பாரில் உள்ள புளிப்பு சுவை இப்போது! குறைந்து சாம்பார் டேஸ்ட்-ஆக இருக்கும்.எலுமிச்சம்பழம் சர்பத் தயாரிக்கும் போது சிறிதளவு இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும். 

Jun 29, 2023

 ஐஸ்கிரீமை பரிமாறும் போது....

காபி தூள் பாட்டிலாக வாங்கிறவர்கள், பாட்டிலின் வாய்ப்பகுதியில் இருக்கும். அலுமினிய பேப்பர் அடைப்பை முழுமையாக நீக்கி விடவேண்டாம். அதில் ஒன்றிரண்டு துளைகள் போட்டு அதன் வழியாக காபிதூளைக் கொட்டினால், அதிக நாட்கள் பாதுக்காலாம். காபித்தூள் பாட்டிலில் ஸ்பூன் போட்டு வைப்பது நல்லதல்ல.அப்பளம் வறுக்கும் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து விட்டு, அப்பளம் வறுத்தால் அப்பளம் அதிக மொறு மொறுப்பாகவும், நல்ல நிறமாகவும் இருக்கும்.எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞ்சம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்.பெரிய துண்டுகளாக இருக்கும் ஐஸ்கிரீமை பரிமாறும் போது வெட்ட பயன்படுத்தும் ஸ்பூனை அடிக்கடி தண்ணீரில் முக்குங்கள். வேலை எளிதாக இருக்கும்.

Jun 28, 2023

வெங்காய பக்கோடா வாசனையாக இருக்க.....

கீரையுடன் பயத்தம் பருப்பு சேர்த்துக் கூட்டுச் செய்யும்போது ஒரு கப் பாலைச் சேர்த்தால் மணமாக இருக்கும்.மாவு அரைக்கும் போது வேகவைத்த சாதத்தை சிறிது சேர்த்து அரைத்தால் ,வார்க்கும் தோசை மிருதுவாக இருக்கும்.சாம்பார் தண்ணீராக இருந்தால் பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் சேர்க்கலாம். சாம்பார் கெட்டிப்படுவதுடன் சுவையும் கூடுதலாக இருக்கும்.தேங்காயைத் துருவி அதை கொதி நீரில் போட்டு வைத்து விட்டு, பிறகு கைப்பொறுக்கும் சூட்டில் எடுத்து பிழிந்தால், நல்ல கெட்டியான பால் கிடைக்கும்.வெங்காய பக்கோடாவுக்கு அரை டீஸ்பூன் சோம்பு,கறிவேப்பிலை கொஞ்சம் வாசனையாக இருக்கும்.   

Jun 24, 2023

வறுத்த புழுங்கல் அரிசி மாவு

வறுத்த புழுங்கல் அரிசியைமாவாக்கி வைத்துக்கொண்டால்,கூட்டுக்கறிகள் இறக்கும்போதுலேசாகத் தூவிவிட்டால், வாசனைகூடுதலாக இருக்கும்.ரவா இட்லி செய்யும் போது சிறிது சேமியாவை வறுத்து, தயிரில் ஊற வைத்துச் சேர்த்தால் கூடுதல் ருசி தரும்.கீரையுடன் பயத்தம் பருப்பு சேர்த்துக் கூட்டுச் செய்யும்போது ஒரு கப் பாலைச் சேர்த்தால் மணமாக இருக்கும்.மாவு அரைக்கும் போது வேகவைத்த சாதத்தை, சிறிது சேர்த்து அரைத்தால் , தோசை மிருதுவாக இருக்கும்.சாம்பார் தண்ணீராக இருந்தால், பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து, சாம்பாரில் சேர்க்கலாம். சாம்பார் கெட்டிப்படுவதுடன், சுவையும் கூடுதலாக இருக்கும்.

Jun 23, 2023

வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க

தேங்காய் துருவும் பொழுதுஓட்டையும் சேர்த்து துருவி பயன்படுத்தினால் குடல் புண் உண்டாகும். அதனால் வெள்ளைப் பகுதியை மட்டும் பயன்படுத்தவும்.அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமீன்களும் அருகம்புல்லில் அதிகம்.வாழைப்பூவை நறுக்கும் போது  கைகளில் பிசுபிசுவென  ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.காலிஃப்ளவர் உணவு வகைகளை தயாரிக்கும்போது, அதில் கொஞ்சம் பால் சேர்த்தால் பச்சை வாசனை மாறிவிடும்.சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு ஏலக்காய்த் தூளும் சிறிதளவு சுக்குத்தூளும் கலந்தால் சப்பாத்தியின் சுவை அதிகரிக்கும்; எளிதாக ஜீரணமும் ஆகும்.தேங்காயை அதன் கண் பகுதி மேல் நோக்கியவாறு வைத்தால், நீண்ட நாள்வரை அழுகிப் போகாமலிருக்கும்.

Jun 22, 2023

ஜாமூன்கள் விரியாமல் கரையாமல் சுவையாக இருக்க...

 ஒரு சிலர் உப்பை அதிகமாக அல்லது குறைவாக போட்டு விடுவார்கள். குறைவாக போட்டால் கூட மீண்டும்உணவில் உப்பை சேர்த்து கொள்ளலாம் அதிகமாகிவிட்டால் யாரும் சாப்பிட முடியாது.குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால்உருளை கிழங்கை சேர்த்து கொள்ளலாம். கூட்டு, பொரியலில் உப்பு அதிகமாகிவிட்டால் 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலையை பவுடர் போலஅரைத்து கொள்ளவும், * பின் பொரியல் நன்றாக வெந்ததும்கடைசி 2 நிமிடத்தில் பொட்டுக்கடலை மாவை சிறிதளவு சேர்த்து கொஞ்ச நேரம் வேகவைத்து இறக்கி விடலாம்.இப்பொழுது உங்களுக்கு உப்பின் அளவு சமமாகி விடும்பொரித்தெடுத்த ஜாமூன்களைச் சூடான சர்க்கரைப் பாகில்சேர்க்காமல்,நன்குஆறியபிறகுசேருங்கள்.ஜாமூன்கள்விரியாமல்கரையாமல்சுவையாகஇருக்கும்ரவா லட்டு செய்யும்போது அத்துடன் அவலையும் மிக்ஸியில் ரவை போல் பொடித்து நெய்யில் வறுத்துச் சேர்த்து 3 டேபிள்ஸ்பூன் பால் பவுடரையும் கலந்து டேஸ்ட்டியான ரவா லட்டு. பிடிக்கலாம்.ஆப்பத்துக்கு மாவு கலக்கும்போது ஒரு டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு சேருங்கள், ஆப்பம் சீக்கிரம் காய்ந்து போகாது. கொத்தமல்லித் துவையல் அரைக்கும் போது புளிக்கு மாற்றாக மாங்காயைச் சேர்த்து அரைத்தால் சுவையும் மணமும் அசத்தும்,

1 2 ... 13 14 15 16 17 18 19 20 21 22

AD's



More News