தூள் பக்கோடா சுவையும் மனமும் வித்தியாசமாக இருக்க....
அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே' அதிக அளவுபாலாடை தோன்றிவிடும்.
நெய்க்காக வெண்ணையைக் காய்ச்சும் போது அரை ஸ்பூன் வெந்தையத்தைப் போட்டு இறக்கினால் நெய் மணமாக இருக்கும்.
இஞ்சி பூண்டு விழுது பெரும்பாலும் எல்லா ரெசிபிகளுக்கும் தேவைப்படும்.இஞ்சியின் அளவை குறைத்து பூண்டின் அளவை சற்று அதிகமாக எடுத்துக் கொண்டால் சமையல் இன்னும் கமகமக்கும்.
இஞ்சி பூண்டு பேஸ்டுடன், 1 தேக்கரண்டி சூடான எண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நாள்களுக்கு கெடாமல் இருக்கும்.
தூள் பக்கோடா செய்யும் போது வாழைப்பூவை காம்பை மட்டும் ஆய்ந்து விட்டு மாவுடன் கலந்து போடுங்கள். பக்கோடா மொறு மொறுவென இருப்பதுடன் பார்க்கவும்நன்றாக இருக்கும். சுவையும் மனமும் வித்தியாசமாக இருக்கும்.
0
Leave a Reply