25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ஆரோக்கியம்

Apr 22, 2024

பாதாம் பிசினில் உள்ள எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்

பாதாம் பிசினில்எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்உள்ளன.தென்மேற்கு ஆசியா மற்றும் ஈரான், இந்தியா, பாகிஸ்தானில் கிடைக்கிறது. மரத்தில் இருந்து வெளியேறும் பிசின் கத்தியில் வெட்டி எடுக்கப்படுகிறது. இதற்கு சுவையும், மணமும் கிடையாது. இயற்கையானது, தண்ணீரில் கரையக்கூடியது. இது காயவைத்து சந்தைக்கு அனுப்பப்படுகிறது.ஜெல்லி போல் இருக்கும் பாதாம் பிசினை காயவைத்தால் அது கட்டியாகிவிடும். இதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஒருமாதம் வரை இவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.கற்கண்டு போல் இருக்கும். மரத்தில் கொஞ்சம் இலைகளும், பூக்களும் இருக்கும் இலையுதிர் காலத்தில் இது பெறப்படுகிறது. காய்ந்த பாதாம் பிசின் ஊறவைத்து பயன்படுத்தப்படுகிறது.பாதாம் பிசின் அல்சர், அசிடிட்டி, வயிறு உப்புசம், வயிறு எரிச்சல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது. இதில் உள்ள குளிர்விக்கும் திறன், உடலின் சூட்டை குறைக்கிறது. மூலநோய் கொண்டவர்களும், பாதாம் பிசினில் இருந்து நன்மைகளை பெற முடியும். பாதாம்  பிசின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. .பாதாம் பிசின் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. இதில்90 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. இதனால் அது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. இதை பாலில் சேர்த்து பருக ஒல்லியானவர்கள், உடல் எடையை அதிகரிக்கலாம்.நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது. தசைகளை வலுப்படுத்துகிறது  உடலை இயற்கையான முறையில் குளிர்விக்கிறது.இருமல், சளி மற்றும் சளி அடைத்துக்கொள்வதை குணப்படுத்துகிறது. இது மேலும் பல குளிர்கால பிரச்னைகளையும் சரிசெய்கிறது. கோடை காலத்தில் உடலின் வெப்ப நிலையை முறைப்படுத்துகிறது. இதில் உள்ள குளிர்விக்கும் உட்பொருட்கள் கோடை கால சரும வறட்சியை போக்க கருவுறுதலுக்கு முன் உடலை வலுப்படுத்த பாதாம் பிசின் உதவுகிறது.கர்ப்ப காலத்தில் எலும்பை உறுதிப்படுத்தி, உடலுக்கு வலு கொடுக்கிறது. கரு வளர்ச்சிக்கு உதவுகிறது. இது பிரசவித்த பின்னர் மாதவிடாய் சுழற்சி முறையாவதற்கு உதவுகிறது.பாதாம் பிசின் உடல் எடை அதிகரிப்பில் மட்டுமல்ல உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை மாற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்தஉணர்வைகொடுப்பதால்பசியைக்கட்டுப்படுத்துகிறது.பாதாம் பிசினை கோடைக்காலத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும். மற்ற காலங்களிலும் பயன்படுத்தலாம். இதை அதிகளவில் எடுத்துக்கொள்வது, வயிற்றில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. எனவே இதை மிதமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பாதாம் பிசின் எண்ணற்ற நன்மைகளை உடலுக்கு தருகிறது.

Apr 21, 2024

வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதுடன் நாளைத் தொடங்குவதால் பயனுள்ள ஆரோக்கிய நன்மைகள் 

காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதுடன் நாளைத் தொடங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை அருந்துவது உடல் எடை இழப்புக்கு உதவுகிறது.வெதுவெதுப்பான நீர் அருந்துவது செரிமானத்திற்கு நேர்மறையான விளைவைத் தருகிறது. இதன் காரணமாக வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம் நாளைத் தொடங்குவது மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றைக் குறைக்கிறது .காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கிறது காலை நேரத்தில் நீரிழப்பு பிரச்சனைகளில் இருந்து விடுபட வெறும் வயிற்றில் வெந்நீரைக் குடிக்கலாம் .

Apr 14, 2024

இரும்புச்சத்து அதிகம் உள்ள பொட்டுக்கடலை

பொட்டுக்கடலை சாப்பிட்டால் இதில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை குறைக்கிறது.. கலோரிகள் மிகக் குறைவு மற்றும் இரும்புச்சத்து அதிகம்.  நமது பெருங்குடலை ஹைட்ரேட் செய்வதன் மூலம் மலச்சிக்கலை தடுக்கிறது.இதய சமத்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்வதற்கு இந்த பொட்டுக்கடலை முக்கிய பங்குவகிக்கிறது.உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிஉடலை சுத்தமாக வைப்பதற்கும் உதவியாக இருக்கிறது.குழந்தைகள் சிறப்பான வளர்ச்சியை அடைவதற்கும், தசைகள் வலிமையாகுவதற்கும் இந்த பொட்டுக்கடலையில்  பல ஆரோக்கியம் நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு பொட்டுக்கடலையில் வெல்லம் சேர்த்து சாப்பிட கொடுப்பதால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் கிடைக்கிறது.உடைத்த கடலையை அதிகம் சாப்பிட்டு வந்தால் முகத்திற்கு அழகு சேர்க்கவும், சரும பிரச்சனைகளான படை, சொறி, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்கிறது.பெண்கள் கர்ப்பம் அடைந்திருக்கும் பொழுது சத்துள்ள பொருட்களை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்தவகையில் தினமும் பொட்டுக்கடலையை சாப்பிட்டு வருவதால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்..பொட்டுக்கடலையை தினமும்ஒரு கைப்பிடி அளவுஎடுத்து சாப்பிடுவதால் முடிஉதிர்வு பிரச்சனைகளில் இருந்துசரிசெய்து அடர்த்தியான முடிவளர்ச்சியை தருகிறது. அதுமட்டுமின்றி சிறியவயதில் வரும் இளநரைபிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.நோய் எதிர்ப்பு சக்திகுறைந்து காணப்படுவதால் சளி, ஜுரம் போன்ற உடல்குறைபாடுகள் ஏற்படும் பொழுதுபொட்டுக்கடலை சாப்பிடுவது நல்லது.பொட்டுக்கடலையை தினமும்ஒரு கைப்பிடி அளவுஎடுத்து சாப்பிடுவதால் முடிஉதிர்வு பிரச்சனைகளில் இருந்துசரிசெய்து அடர்த்தியான முடிவளர்ச்சியை தருகிறது. அதுமட்டுமின்றி சிறியவயதில் வரும் இளநரைபிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.நோய் எதிர்ப்பு சக்திகுறைந்து காணப்படுவதால் சளி, ஜுரம் போன்ற உடல்குறைபாடுகள் ஏற்படும் பொழுதுபொட்டுக்கடலை சாப்பிடுவது நல்லது.சர்க்கரை நோயாளிகள் தினமும் பொட்டுக்கடலை சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்..............  

Apr 11, 2024

வறுத்த  பூண்டு

வறுத்த ஆறு பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் இரைப்பையில் செரிமானமாகி உடலுக்கு சிறந்த உணவாக மாறும் இரண்டு அல்லது நான்கு மணி நேரத்தில் ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் கொலஸ்ட்ரால் அளவுகளை சீராக்கப்படும், ரத்த அழுத்தத்தை சீராக்கும் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும் பூண்டை பச்சையாக வெறும் வாயில் தின்றால் நல்லது அதிலும் காலை வேளையில் என்று சொல்வார்கள். ஆனால் தினுமும் அப்படி சாப்பிடகூடாது. அப்படி சாப்பிட்டாலும் அதன் தோலை நீக்கி சாப்பிடலாம். குறிப்பாக நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடும் போது கவனமாக இருக்கவேண்டும். தினமும் பச்சையாக சாப்பிடாமல் மாற்றி மாற்றி எடுத்துகொள்ளலாம். வேகவைத்து வறுத்து சுட்டு சாப்பி டலாம்.ஆனால் வறுத்து சாப்பிடும் போது இன்னும் பலன்களும் கிடைக்கிறது.இரவு நேரத்தில் ஒரு தம்ளர் பாலில் பூண்டின் தோலை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் கலந்து வேக வைத்து குடிக்கலாம். தற்போது சிறு குழந்தைகள் முதல் பெரியவர் கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவாக பூண்டு மாற அதை வறுத்து தயாரிக்க லாம்பூண்டின் தோலை உரித்து சுத்தம் செய்து வாணலியில் மிதமான தீயில் வைத்து வறுத்து எடுங்கள். தொடர்ந்து20 நிமிடங்கள் வரை வறுங்கள். முதலில் பூண்டிலிருந்து நாற்றமடிக்கும் மணம் வெளியேறும். அதை தொடர்ந்து பூண்டில் அலிசின் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.இதை அப்படியே சாப்பிடலாம். நாற்றமில்லாதது என்பதால் எளிதாக சாப்பிட முடியும். எனினும் சுவை விரும்பிகள் பூண்டை வறுக்கும் போது கால் டீஸ்பூன் வெண்ணெய், தேவையான அளவுக்கு மிளகுத்தூள் உப்பு சேர்த்து வறுக்கலாம். ருசி பிரமாதமாக இருக்கும். குழந்தைகள் அடம்பிடிக்காமல் சாப்பிடுவார்கள். இதனால் அவர்கள் வளரும் பருவத்தில் உடலில் அனைத்து சத்துகளையும் நிறைவாக கொண்டுவளர்வார்கள்.தினமும்,5 பல் வறுத்த பூண்டை சாப்பிடுவதால் அதிசயத்தக்க வகையில் உடலின் ஆரோக்கியமும் வேகமாக அதிகரிக்கிறதுவைட்டமின் சி சத்து தான் உடலில் இரத்த நாளங்கள். தசைகள், எலும்புகளின் வலுவை உறுதி செய்கிறது. பூண்டில் இருக்கும் செலினியம் உடலில் நன்மை செய்யும் நொதிகளை தூண்டுகிறது.உடலில் இரும்புசத்து, ஜிங்க் போன்றவை சிறப்பாக இயங்க பூண்டு உதவுகிறது என்பதை உணவு குறித்த வேதியியல் இதழ் ஒன்று வெளியிடப்பட்டது .வளரும் பிள்ளைகளுக்கு பூண்டில் சற்று கூடுதலாக வெண்ணெய் சேர்த்து கொடுங்கள். ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக இருக்கும்.

Apr 09, 2024

வெங்காயத்தோல்களின்நன்மைகள்.

..அனைவரது வீட்டு சமையலிலும் தவறாமல் தினசரி பயன்படுத்தப்பட்டு வரும் சமையல் பொருளாக வெங்காயம் இருக்கிறது. வெங்காயத்தை உரிக்கும் போது பலரின் கண்களில் நீர் வடிகிறது. என்றாலும் வெங்காயத்தை போலவே பலரும் தூக்கி எறியும் அதன் தோல்களிலும் நன்மைகள் இருப்பது தெரிந்தால் ஒருவேளை அவர்கள் வெங்காயம் உரிப்பதை வெறுக்காமல் இருக்கலாம்.வெங்காயத் தோல்கள் நல்ல ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகளை அளிக்கும் பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும் .நம்மில் பலரால் அதிகம் கண்டுகொள்ளப்படாத வெங்காய தோல்கள் உண்மையில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. எனவே வெங்காயத் தோல்கள் நல்ல செரிமானத்திற்கு உதவுவதோடு, குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றன. வெங்காய தோலானது ஃபிளாவனாய்ட்கள் குறிப்பாக சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஃபிளாவனாய்ட்டானQuercetinஐ கொண்டிருக்கின்றன. இது அழற்சியை குறைக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்திற்கான நன்மைகளை வழங்குகிறது. தவிர வெங்காயத் தோல்களில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட வைட்டமின்ஸ்& மினரல்ஸ் நிறைந்துள்ளன. இவை நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதோடு, பார்வை ஆரோக்கியத்திற்கும், எலும்புகளை வலிமையாக வைப்பதற்கும் மற்றும் எலக்ட்ரோலைட் பேலன்ஸிற்கும் பங்களிக்கின்றன. . வெங்காயத் தோல்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் நம் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை நடுநிலையாக்க உதவி ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்-ஐ குறைக்கின்றன. இதய நோய் மற்றும் கேனர் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன. வெங்காய தோல்களில் காணப்படும் Quercetin உள்ளிட்ட கலவைகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. அந்த வகையில் வெங்காயத்தோல் சாறு அல்லது இன்ஃப்யூஷன்ஸ் எடுத்து கொள்வது ஆர்த்ரைட்டிஸ் மற்றும் இன்ஃப்ளமேட்ரி பவுல் (inflammatory bowel) டிசீஸ் போன்ற நிலைகளில் அழற்சியை குறைக்க உதவும். வெங்காய தோல்களில் டயட்ரி ஃபைபர் உள்ளது, இது குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை சிறப்பாக வைப்பதோடு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கிறது.வெங்காய தோல்களில் காணப்படும் ஃபிளாவனாய்ட்ஸ்களானதி ப்ரீபயாடிக் விளைவுகளை ஏற்படுத்த கூடும், இதன் விளைவாக நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கப்படும். வெங்காய தோலை டீ-யாக காய்ச்சி , டயட்டில் சேர்த்து கொள்ளலாம் 

Apr 08, 2024

அதீதமாக சிந்திப்பது பிரச்னைகளை உண்டுபண்ணும்.

ஓவர் திங்கிங் உடம்புக்கு ஆகாது.. இந்த ஓவர் திங்கிங் என்பதை மருத்துவத்தில்,‘ரூமினேஷன்’ என்று குறிப்பிடுகிறார்கள். ஒருவர் தனக்கு நடந்ததை பற்றியே திருப்பித் திருப்பி நினைத்துப் பார்த்து அசைபோட்டுக் கொண்டிருப்பது அவர்களை மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும். இவர்களுக்கு நிகழ்காலத்தைப் பற்றிய உணர்வு இல்லாமல் இருப்பதுடன் மன அழுத்தம் எனப்படும் டிப்ரெஷன் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இப்படி முடிந்து போன விஷயங்களை பற்றி அதிகமாக சிந்திப்பதால் ஒரு பயனும் இல்லை.நமக்குப் பிடித்த விஷயங்களை சிந்திக்கும்போது மனம் லேசாகும். தேவையில்லாத விஷயங்களை சிந்திப்பதும், கடந்த கால வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளைப் பற்றி சிந்திப்பதும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளை உண்டுபண்ணும்.சிந்திப்பது என்பது ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு தீர யோசிப்பது. அதாவது எதனையும் சிந்தித்து செயல்படுவது. அதீதமாக யோசிப்பது என்பது தேவையில்லாத வேலை. எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு பலமுறை சிந்தித்து முடிவெடுத்து செய்வதால் அந்த செயல் நாம் நினைத்தபடியே வெற்றிகரமாக முடியும்.  அதுவே ஒரு செயலை செய்வதற்கு முன் நாம் அதிகம் யோசித்தால் மன அழுத்தம், தேவையில்லாத பதற்றம் போன்றவை உண்டாகும். இதனால் இரவில் தூக்கம் கெடும். உடல்நிலை கூட பாதிக்கப்படும்.மனிதர்களைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு மூளையில்12 ஆயிரம் எண்ணங்கள் தோன்றுகின்றன என்று சொல்லப்படுகிறது. எண்ணங்கள் வாழ்க்கைக்கு அவசியம். அவை நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் திறன் கொண்டவை. ஆனால், அந்த எண்ணங்கள் (சிந்தனைகள்) நம் நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ள விஷயங்களாக இருக்க வேண்டும்.எண்ணங்களே வார்த்தைகளாகி, செயல்களாக மாறி நம்மை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்கிறது. எனவே. நாம் சிந்திக்கும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளலாமல் இருக்க பழக வேண்டும்.இதற்கு நடைப்பயிற்சி நல்ல பலன் தரும். காலை அல்லது மாலையில் மரங்கள் சூழ்ந்த இயற்கையான சூழலில் நடப்பது நம் மனதை லேசாக்கும்.உடலை அதிகம் வருத்திக்கொள்ளாமல் எளிதான உடற்பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனைப்படி செய்வது உடல் நலத்துடன் மனநலத்தையும் பாதுகாக்கும்.அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து மூச்சைஇழுத்துவெளியேவிட்டுநம் சுவாசத்தை கவனித்து பழகுதல் சிறந்தது. அத்துடன் நம் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்வதால் தேவையில்லாத எண்ணங்கள், யோசனைகள் மனதில் தோன்றாது. தேவையில்லாத எண்ணங்கள் தோன்றாததால் மனதில் குழப்பமும் உண்டாகாது. மனம் தெளிவாக இருந்தால் எந்த முடிவையும் குழப்பம் இல்லாமல் எடுக்க முடியும்..மனதில் தேவையில்லாத எண்ணங்கள் தோன்றும்போது அதில் இருந்து விடுபட, வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துவது, நண்பர்களுடன் உரையாடுவது, புது நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வது, புது சூழலில் நம்மை இருத்திக் கொள்வது, மனதுக்கு மகிழ்ச்சி தரும் பாடல்களை கேட்பது என நம் மனதை ஒருமுகப்படுத்தி அதீத யோசனை எனப்படும் ஓவர் திங்கிங்கிலிருந்து வெளிவரலாம்..

Apr 07, 2024

ஆரோக்கியமான வாழ்வுக்கு துளசி

பாரம்பரிய வைத்திய முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மூலிகைகளில் ஒன்றான துளசிஎனும் மூலிகை .2 கப் தண்ணீருடன்10 துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். பின் இந்த நீரில் சுவைக்கு தேன் சேர்த்து கசாயம் போல் பருகி வர சளி, காய்ச்சல், தொண்டை வலி பிரச்சனைகளை விரட்டலாம். ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த துளசி இலைகளை அழற்சி எதிர்ப்பு கொண்ட தேனுடன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிப்பில் இந்த துளசி இலைகளை அப்படியே மென்று சாறு விழுங்க, செரிமான செயல்பாடு மேம்படும்.துளசி இலைகளை சேர்த்து தேநீர் வடிவில் எடுத்துக்கொள்ள, ஆற்றல் இழப்பை தடுப்பதோடு நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்ஒரு கிளாஸ் தண்ணீரில்5to6 துளசி இலைகளை சேர்த்து, ஒரு நாள் இரவு முழுவதும் நன்கு ஊற வைக்கவும். பின் இந்த நீரினை வெறும் வயிற்றில் பருக செரிமான சிக்கல் நீங்குவதோடு ஆரோக்கிய உடல் எடையை பராமரிக்கலாம். துளசி இலைகளுடன் புதினா இலைகளை சேர்த்து அரைத்து சாறு பிரித்து பின் சிறிதளவு எலுமிச்சை சாறு, கசப்பு நீங்கும் அளவு தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் வடிவில் பருக குடல் இயக்கம் மேம்படும். 2-3 துளசி இலைகளை கிராம்பு ஒன்றுடன் சேர்த்து வாயில் மோட்டு மென்று சாற்றை மட்டும் விழுங்கிவிட, சளி - தொண்டை எரிச்சல் பிரச்சனையில் இருந்து சற்று நிவாரணம் காணலாம்செடியில் இருந்துfreshஆக பறித்த துளசி இலைகளையே பயன்படுத்த வேண்டும். பதப்படுத்தப்பட்ட/ குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட துளசி இலைகளை பயன்படுத்துவது கூடாது! .

Mar 26, 2024

தூக்கத்திற்கு உதவும் பூண்டு 

உடல் நலப் பிரச்சினைகளைக் குணப்படுத்துவதற்கும், உடல் ஆரோக்கியத்தைமேம்படுத்துவதற்கும் பூண்டை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லதுபூண்டு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு உணவு பொருள்.பூண்டின் கடுமையான நறுமணம் நாசிப் பாதைகளை சுத்தமாக்கி சுவாசத்தைசீராக்கஉதவுகிறது.உங்களுக்குஜலதோஷம்இருந்தால்இரவில் சரியாக தூங்குவதிலும் சுவாசிப்பதிலும் சிரமம்ஏற்படலாம்.தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் பூண்டைப் பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கும். பூண்டின் வாசனை மனதைத் தளர்த்தும். மன அமைதிக்கு பூண்டு மிகவும் உதவும்.பூண்டில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய இரண்டு கனிமங்கள் உள்ளன. மனிதர்களின் தரமான தூக்கத்தில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. பூண்டு தோலை துணியில் சுற்றி தலைக்கு அருகில் வைத்துக்கொள்ளலாம்.தூக்கமின்மைக்கான மற்றொரு எளிய மருந்து பூண்டு பால் செய்து குடிப்பது. இந்த பாலை தயார் செய்ய,1 கப் பாலில்2 பல் பூண்டு சேர்த்து,3 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, சிறிது தேன் சேர்த்து குடிக்கவும்.பூண்டு சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. கிருமிகள் வராமல் தடுக்கிறது. பூண்டில் உள்ள அல்லிசின் உடலில் உள்ள நுண்ணுயிரிகளை தடுக்கிறது.இரவில் உறங்கும் போது சிறியபூச்சிகள் மற்றும் கொசுக்கள்இருந்தால் உங்கள் படுக்கைக்குஅருகில் பூண்டு அல்லது பூண்டுதோல் வைத்தால் அந்தவாசத்திற்கு பூச்சிகள் வராதாம்.சிலர் பூண்டுப் பற்களை அரைத்துதண்ணீரில் போட்டு, அந்தத்தண்ணீரை பூச்சிகள் அதிகம்நடமாடும் இடங்களில்தெளிப்பார்கள். அதுவும் சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.

Mar 19, 2024

சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நுரையீரல் பாதித்தவர்கள் ,காய்கறி பீன்ஸை தொடர்ந்து சாப்பிட விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்

.அன்றாடம் உண்னவேண்டியடாப்10 காய்கறிகளில்ஒன்றாகக்குறிப்பிடப்படும்காய்கறிபீன்ஸை தொடர்ந்து சாப்பிட விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர். பச்சைபீன்ஸில்தேவையானஅளவுக்குவைட்டமின் C, A மற்றும் B6 ஆகியஅனைத்துசத்துக்களும்நிறைந்துஉள்ளன. இதில்ஃபோலிக்அமிலமும்காணப்படுகிறது. இதைத்தவிர, பச்சைபீன்ஸில்தேவையானஅளவுகால்சியம், இரும்புசத்து, மக்னீசியம், மாங்கனீஸ், பீட்டாகரோட்டின், புரதச்சத்து, பொட்டாசியம்மற்றும்காப்பர்சத்துக்கள்உள்ளன.100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின்உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. பீன்ஸ் மெலிந்த புரதங்கள் நிறைந்த உணவு. ஒரு கப் சமைத்த பீன்ஸ்15 கிராம் புரதங்கள் கொண்டது. பீன்ஸ் நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்தது. இவை தசைஉருவாக்கம் மற்றும் தசை வலிமைக்குத் தேவையான புரதங்களை வழங்குகிறது.இதில் நிறைய நார்ச்சத்து மற்றும் சிறப்பு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றம் நாள்பட்ட வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது. பீன்ஸில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்திற்கும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.பெருகி வரும் வாகனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால், சுமார்60 சதவீதம் பேர் அசுத்தமான காற்றை சுவாசித்து அதனால் நுரையீரல் பாதித்து நெஞ்சு சளி, மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தில் உள்ளனர் என்கிறது ஓர் ஆய்வு. இந்நிலையில் இந்த நோய் பாதிப்பு ஏற்படும் ஆபத்தை தவிர்க்க தினமும்50 கிராம் பச்சை பீன்ஸ் சாப்பிட்டு வர வேண்டும் என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர் . தினமும் பச்சை பீன்ஸ் சாப்பிட90 சதவீதம் நுரையீரல் பிரச்னையை தீர்க்கலாம் என்கிறார்கள்.பீன்ஸ் உட்கொள்வது உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கும். இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து தொப்பை மற்றும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. பீன்சை கறி, கூட்டு என பல வகைகளில் தயார் செய்து சாப்பிடலாம். அல்லது பீன்ஸை சாலட் வடிவிலும் சாப்பிடலாம். பீன்ஸில் வைட்டமின் ஓ உள்ளது. இது புது செல்கள் உருவாவதில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கின்றது. ஆதலால் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே பரவாமல் தடுக்குமாற்றலை பீன்ஸ் கொண்டுள்ளது.பீன்ஸ் நீரிழிவு நோயாளிகளுக்குஇன்சுலின் எதிர்ப்பை கணிசமாக குறைக்கும்.பீன்ஸ் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது. புரதச் சத்து நிறைந்துள்ளது. பீன்ஸ் டைப்2 இரத்த குளுக்கோஸ் அளவுகளை கணிசமாகக் குறைக்கும் என்கிறார்கள்

Mar 18, 2024

இன்சுலின்’ உற்பத்தி அதிகரிக்க வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுங்கள்

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியமானது பச்சை வெங்காயத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வெங்காயத்தில் க்வெர்செடின் என்ற ஆர்கானிக் சல்பர் உள்ளது. இது உடலில் இன்சுலின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. இதன் விளைவாக நீரிழிவுநோயாளிகளும்வெங்காயத்தைசாப்பிடலாம்.வெங்காயத்தில் ஆர்கானிக் கந்தகம் இருப்பதால் சற்று கடுமையான வாசனையுடன் இருக்கும். ஆனால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் வெங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது. இது இதய நோய் மற்றும் மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது.வெங்காயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, ஃபோலேட் பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் தாமிரம் நிறைந்துள்ளது. இந்த பண்புகள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் முக்கியம். வெங்காயத்தை வழக்கமாக உட்கொள்வது நரம்பியல் நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.வெங்காயம் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் தீமைகளும் உள்ளன. வெங்காயத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வெங்காயம் சரியாக ஜீரணிக்கப்படாவிட்டால், அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படுகிறது.

1 2 ... 25 26 27 28 29 30 31 32 33 34

AD's



More News