25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆரோக்கியம்

Feb 27, 2024

பருத்திப் பால்

மதுரை என்றாலே சாப்பிடும் பொருட்களில் முதலில் நினைவுக்கு வருவது ஜிகர்தண்டா. அடுத்து நினைவுக்கு வருபவை பருத்திப்பால், மல்லிப்பூ இட்லி ஆகியவையும் பிரபலமாகும்பருத்தி விதையிலிருந்து பால் எடுத்து அதில் சுக்கு, மிளகு, ஏலக்காய், சித்தரத்தை, தேங்காய் பால், வெல்லம் அல்லது கருப்பட்டி போன்ற பொருட்கள் சேர்த்து செய்யப்படுவதுதான் பருத்திப்பால். இதில் நிறைய வைட்டமின்கள், புரதங்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், கொழுப்பு அமிலங்கள், கனிம சத்துக்கள் அதிகமாக உள்ளன. மேலும், பருத்தி விதையில் நார் சத்துக்கள் அதிகம்.காலையில் காபி, டீக்கு பதில் பருகி வர நமக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதுடன் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு ஆகிய பிரச்னைகளையும் சரி செய்கிறது. இதனை நீரிழிவு நோயாளிகளும் தாராளமாகக் குடிக்கலாம். பருத்திப் பாலை காலை வெறும் வயிற்றில் குடித்து வர அல்சர், வயிற்றுப்புண், குடல் புண் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளும் குணமாகும்.உணவு முறை மற்றும் மாறி வரும் பழக்க வழக்கங்களால் மாதவிடாய் சிலருக்கு சரியாக வருவதில்லை. அப்படிப்பட்டவர்கள் வாரம் ஒரு முறை இந்த பருத்திப் பாலை குடிப்பதன் மூலம் மாதவிடாய் சரியான நேரத்தில் வெளிவரும். அது மட்டுமின்றி, பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மை பருத்தி விதைகளுக்கு உண்டு. எனவே, கர்ப்ப காலத்திலும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களும் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.பருத்தி விதையுடன் கருப்பட்டியும் பச்சரிசியும் சேர்க்கப்படுவதால் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் மாவுச்சத்தும் இருப்பதால் எலும்புகளையும் உடலையும் வலுவாக வைத்துக்கொள்ள உதவும். தாவரங்களின் விதைகளில் இருந்து பெறப்படும் பால், தேங்காய் பால், பாதாம் பால், பருத்தி பால் ஆகியவை. இவை அனைத்துமே நம் உடலுக்கு வலிமையை தரக்கூடியவை.பசும்பால் குடித்தால் அலர்ஜி ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தாராளமாக பருத்தி பாலை அருந்தலாம். இது இரத்த அழுத்தத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 

Feb 26, 2024

ஏழைகளின் தங்க பஸ்பம் பொன்னாங்கண்ணி கீரை

இரு வகைகளில் பொன்னாங்கண்ணி கிடைக்கிறது. பச்சை நிறத்தில் இருப்பது. நாட்டு பொன்னாங்கண்ணி என்றும், சற்ற சிவப்பு நிறம் கலந்து இருப்பது சீமை பொன்னாங்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு வகை நிறக் கீரைகளுமே ஏறக்குறைய ஒரே மாதிரியான சத்துக்கள் கொண்டவை. பொன்னாங்கண்ணி இந்தியாவில் பல இடங்களில் பயிராகக் கூடிய கொடி வகையை சேர்ந்த கீரை .எல்லா காலங்களிலும் கிடைக்கக் கூடியது. இக்கீரையில் கால்சியம், பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, இரும்புச் சத்து மற்றம் வைட்டமீன் சி.ஏ போன்ற சத்துக்கள் அதிகளவில் தரக்கூடியது. பொன்னாங்கண்ணி கீரையை வாரம் ஒரு முறையோ அல்லது10 நாட்களுக்கு ஒரு முறையோ, தவறாமல் உணவில் எடுத்து கொள்வது நல்லது.கண் நோய், சர்க்கரை குறைபாடு நோய்த்தொற்று, கொலஸ்ட்ரால், சத்துக் குறைவு, ரத்த சோகை, உடல் சூடு, மூல வியாதி, வாதநோய் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கக் கூடியது. மேலும், தோலுக்க பொன்னிறத்தையும், நல்ல மினுமினுப்பையும் தரக்கூடியது.தினமும் பொன்னாங்கண்ணி கீரையை உண்டு வர தேகம் அழகு பெறும். உப்பில்லாமல் வேக வைத்து, வெண்ணெய் சேர்த்து40 நாட்களுக்கு உண்ண, கண் நோய்கள் நீங்கும். இக்கீரையுடன் பூண்டு அதிகம் சேர்த்து அடிக்கடி உண்டு வர மூலவியாதி நீங்கும். பொன்னாங்கண்ணி கீரையை அரைத்து சிறு சிறு வில்லைகளாகத் தட்டி காய வைத்து கண்களில் வைத்து கட்டி கொள்ள சூடு குறைந்து, கண் நோய்கள் நீங்கும்.வாரம் இரண்டு முறையாவது இக்கீரையை சாப்பிட்டு வர மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சியும், நன்றாக செயல்படவும் உதவி செய்யும். சிறுநீர் எரிச்சல் நீங்கவும், சிறுநீரகம் நன்கு செயல்படவும் பொன்னாங்கண்ணியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். கால்சியம் இரும்பு மற்றம் தங்கச் சத்துக்கள் பொன்னாங்கண்ணியில் இருப்பதால் இது ஏழைகளின் தங்க பஸ்பம் என அழைக்கப்படுகிறது.

Feb 25, 2024

வயிற்றில் உள்ள பாக்டீரியா குடற்புழுக்களை கொல்லும் உணவுகள்

பூண்டு வயிற்றில் உள்ள பாக்டீரியா புழுக்களை கொல்லும்மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் குடலுக்கு நல்லது.ஆண்டி பாக்டீரியல் தன்மை கொண்ட தைம், வயிற்று பூச்சிக்களை கொல்லும்.பூசணி விதைகளில் இருக்கும் குக்குர்பைடின் புழுக்களை கொல்லும்பப்பாளி விதைகள் அனைத்து விதமான குடற்புழுக்களையும் கொல்லும்.சிறிதளவு வேப்பிலை தளிரை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.வெள்ளரி, வெள்ளரி  விதைகள் புழுக்களை கொல்லும்.இஞ்சியை அன்றாட உணவில் சேர்ந்து வந்தால், குடலில் புழுக்கள் சேராது.கிராம்பு டீ, புழுக்களையும் அதன் முட்டைகளையும் அழிக்கும். 

Feb 23, 2024

ஒன்று சேர சாப்பிட கூடாதது.

இரவு – கீரை -தயிர் -- வெந்நீர்இரவு -- கேரட், உருளைக்கிழங்குஇரவு -- ஆப்பிள், கொய்யாநெய் - தேன் (சம அளவு) மருந்து - குளிர்ந்த நீர்பப்பாளி - எலுமிச்சைகொள்ளு -பால்பால் - பலாப்பழம்கேரட் ஆரஞ்சுஅன்னாசி-பால் தயிர்கொய்யா-வாழைப்பழம், ஆரஞ்சு- பப்பாளி , ஆரஞ்சு - பால், ஓட்ஸ்

Feb 22, 2024

செரிமானத்தை ஊக்குவிக்கும் பிரண்டை

பிரண்டை செடிகளில் ஓலைப் பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, என பல வகைகள் உள்ளனவேலிகளில் படர்ந்து வளரும் தாவரம் தான் பிரண்டை, நீர் அதிகம் தேவையில்லை. அதன் தண்டை நட்டு வைத்தால் போதும், தானாகவே வளர்ந்து விடும்.தண்டு,வேர்,பழம் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. எலும்பு முறிவை குணப்படுத்து உதவுகிறது. மேலும், எலும்புகளையும், மூட்டுகளையும் வலிமையாக்குகிறது.ஒரு சிறந்த வலி தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது. வாயுவால் எலும்பு மற்றம் நரம்புகளின் இணைப்புகளில் தேவையற்ற நீர் தங்கி விடும். பின் அவை முதுகுத் தண்டு மற்றம் கழுத்து பகதிக்கு இறங்கி, பசை போல்) அங்கேயே இருந்து, தாங்க முடியாத கழுத்து மற்றும் முதுகு வலியை தரும். இதனால், கழுத்தை திருப்பவோ, குனியவோ முடியாமல் அவதிப்படுவர். பிஞ்சு பிரண்டையை உலர்த்தி, பொடி செய்து அதனடன் சிறிது வெந்நீர் கலந்து பற்று போட்டால், முதுகு மற்றும் கழுத்தில் உள்ள நீர்ப்பசை இளகி, முதுகு வலி மற்றும் கழுத்து வலி குணமாகும்.ரத்த தேங்கு நிலை மற்றம் ரத்தப் போக்கை சரி செய்ய உதவுகிறது. மேலும், மூல நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. செரிமானத்தை ஊக்குவிக்கிறது. கல்லீரல் சேதத்தை தடுக்கிறது. நரம்புகள் மற்றும் தசைகளை அமைதிப்படுத்தும் மருந்தாக பிரண்டை சாறு செயல்படுகிறது.மூலம், கீழ் வாதம் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வளிக்கிறது. பசி, எடுக்காதவர்கள் அல்லது அஜீரணத்தால் அவதிப்படுவோர் பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், வாயுத் தொல்லை மட்டுப்படும், சுவையின்மை மறைந்து, பசி அதிகரிக்கும். உடலின் அதிக எடையை குறைப்பதற்க பிரண்டையை உட்கொள்ளலாம். பிரண்டை துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், ரத்த ஓட்டம் சீராகும். இதயமும் பலப்படும்.பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி போன்றவற்றிற்கு, பிரண்டை சிறந்த மருந்தாகும். இது, உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது, புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும். பிரண்டை சாற்றைக் கொண்டு வாய் கொப்பளித்தால், பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு மற்றம் பல் ஈறுகளில் உண்டான அழற்சி போன்றவை குறையும், மேலும், பற்களில் படிந்திருக்கம் சீமை சண்ணாம்பை சுத்தமாக்கம். பிரண்டையில் உள்ள நுண்ணுயிர் வளர்ச்சி தடுக்கப்படும்.

Feb 21, 2024

ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பூண்டு

ஒரு சில பூண்டுகளை நசுக்கி, தயிருடன் உப்பு, சீரகப் பொடி கலந்து சாப்பிட்டு வர நோய்த்தொற்று தடுக்கப்படும்.பாலுடன் அரைத்த பூண்டு விழுது சேர்த்து இரவில் தூங்குவதற்கு முன்பு குடித்து வந்தால் பாலியல் ஆரோக்கியம் ஏற்படும்.:சில பூண்டு பற்களை எடுத்து நெய் சேர்த்து நன்றாக கிரிஸ்ப்பாக வரும் வரை வறுத்து அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து சாப்பிட்டு வரநன்றாக பசி எடுக்கும். செரிமானத்தை மேம்படுத்தும்.சில பூண்டு பற்களை எடுத்து, தண்ணீர் சேர்த்து அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். இதனை அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர எடை குறையும்.ஒரு சில நறுக்கிய பூண்டு பற்களை தேனுடன் சேர்த்து காலை வேளையில் சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியம் மேம்படும்.சில பூண்டு பற்களை நசுக்கி, எண்ணெயில் பிரவுனாக வரும் வரை வறுக்க வேண்டும் அந்த எண்ணெயை வடிகட்டி, பூஞ்சை தொற்று மற்றும் சொரியாசிஸ், அலற்சி உள்ள இடங்களில் தட நோய் குணமாகும்சில பூண்டு பற்களை இரவு முழுவதும் ஒயினில் ஊற வைத்து அதன் பிறகு அரைத்து வடிகட்டி ஒரு மாதம் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.சூடான பாலில் அரைத்த பூண்டு மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து குடித்து வர இருமல்.'' ஆஸ்துமா, பிற சுவாச பிரச்சனைகள் சரியாகும்.பூண்டை அப்படியே வெறும் வயிற்றில் சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். 

Feb 20, 2024

பாசுமதி அரிசி

பாஸ்மதி அரிசியில் நார்ச்சத்து அதிகம். நார்ச்சத்து அதிகம் உட்கொள்வது வகை2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும். பாசுமதி அரிசியில் ஆரோக்கியமான சருமம் மற்றும் முடியை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள பி வைட்டமின்கள் மற்றும் துத்தநாகம் பளபளப்பான சருமத்திற்கும் ஆரோக்கியமான கூந்தலுக்கும் உதவுகிறதுஅரிசியில் அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது. பாசுமதி அரிசியில் மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது. பாஸ்மதி அரிசி என்பது50 முதல்58 வரை கிளைசெமிக் அளவுகளைக் கொண்ட குறைந்த முதல் நடுத்தர கிளைசெமிக் குறியீட்டு உணவு.பாஸ்மதி அரிசியில் இயற்கையாகவே நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் கொலஸ்டரால் குறைவாக உள்ளது. ஆரோக்கியமான இருதய செயல்பாட்டிற்கு பங்களிக்கும் கார்டியோபிராக்டிவ் கலவைகள் இதில் உள்ளன. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.பாஸ்மதி அரிசியில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலைப்படுத்துகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களைப் பாதுகாப்பதிலும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

Feb 18, 2024

இதய ஆரோக்கியத்தை அதிகரித்து, சோர்வை நீக்கி ,செரிமானத்தை அதிகரிக்கிறது கோவக்காய்.

கோவக்காயில்பொட்டாசிய சத்து அதிகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்து இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தி, இதய நோயை தடுக்கிறது.இரும்புச்சத்து உடல் இயங்குவதற்கு தேவையான ஒரு சத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது உடலுக்கு சுறுசுறுப்பை வழங்குகிறது. சோர்வை நீக்குகிறது. உடலில் இரும்புச்சத்து குறைபாட்டால்அனீமியா ஏற்படுகிறது. கோவக்காயில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே இதை சாப்பிடும்போது கிடைக்கும் இரும்புச்சத்து உங்களை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும், ஆற்றல் நிறைந்தவர்களாகவும் வைத்திருக்க உதவுகிறது. கோவக்காய் செரிமானத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை அதிகரிக்கிறது. கடினமான மலத்தை இலகுவாக்கி வெளியேற்ற உதவுகிறது. மலச்சிக்கல், அல்சர் போன்ற வயிறு தொடர்பான பல்வேறு சிக்கல்களையும் கேவக்காய் சரிசெய்கிறது.

Feb 16, 2024

வைட்டமின் சி சத்து நிறைந்த நெல்லிக்காய் ஜூஸ்

தேவையான பொருட்கள்-நெல்லிக்காய் – 1,கறிவேப்பிலை – ஒரு கொத்து,சீரகம் – அரை ஸ்பூன்உப்பு – தேவையான அளவு,தயிர் – ஒரு கப்செய்முறை-நெல்லிக்காய், கறிவேப்பிலை, சீரகம், தயிர்,உப்பு அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்து வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும்.நெல்லிக்காயில் வைட்டமின் சிசத்து நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. காலையில் தினமும் நெல்லிக்காய் சாறு பருவதால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. அது தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.நெல்லிக்காயில் அழற்சிக்கு எதிரான குணங்கள் உள்ளது. அது அழற்சியை குறைக்கிறது. நீண்டநாள் உடல் உபாதைகளை தடுக்கிறது. தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிடும்போது அது மூட்டு வலியை குணப்படுத்துகிறது. வீக்கத்தை தடுக்கிறது.வாயுவை கட்டுப்படுத்தும் திரவங்களை சுரந்து நெல்லிக்காய், செரிமானத்துக்கு உதவுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. அது செரிமானம், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தடுக்கிறது.நெல்லிக்காயில் வைட்டமின்களும், மினரல்களும் அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச்சாறு பருகுவதால், உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. அது உடல் எடையை பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதமாக இந்த நெல்லிக்காய் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.நெல்லிக்காய், உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது. இதில் அதிகம் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களுக்குத்தான் நன்றியுரைக்க வேண்டும்.

Feb 14, 2024

சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் செம்பருத்தி

செம்பருத்தியை பயன்படுத்தி சிறுநீர் பை, கணையத்தில் ஏற்படும் அழற்சி மற்றும் தொற்று பிரச்னைகளை தீர்க்கும் மருந்து தயாரிக்கலாம்.தேவையான பொருட்கள்செம்பருத்தி பூ, பனங்கற்கண்டு.  ஒரு பாத்திரத்தில் செம்பருத்தி பூவின் இதழ்களை போடவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும்.ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர் பையில் ஏற்படும் அழற்சி, தொற்று குணமாகும்.கணையத்தில் உண்டாகும் கட்டிகள் கரையும். சிறுநீர் பையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்.செம்பருத்தி இதயத்தை பலப்படுத்துகிறது. காயவைத்த செம்பருத்தி பூ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.இதை பயன்படுத்தியும் தேனீர் தயாரிக்கலாம். செம்பருத்தி பூக்களின் இதழ்களை சாப்பிட்டுவர பல்வேறு நன்மைகள் உண்டாகும்.செம்பருத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. புற்றுநோயை உருவாக்கும் நச்சுக்களை செம்பருத்தி வெளியேற்றும்.

1 2 ... 27 28 29 30 31 32 33 34 35 36

AD's



More News