25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


குளிர்கால உணவு  முறை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குளிர்கால உணவு முறை

 குளிர்காலத்தில் இனிப்பு, புளிப்பு. உப்புச்சுவை மற்றும் பசைத்தன்மை உள்ள உணவுகள் நல்லது. 

 கோதுமை கஞ்சி மற்றும் ஆட்டுக்கால் சூப்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இது உடலுக்கு சூட்டைத் தரும். சுரைக்காய், பறங்கிக்காய் போன்ற நீர்க்காய்கள் பனிக்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை. பப்பாளி, அன்னாசி பழங்கள் சாப்பிடலாம். நாட்டுக்கோழி மற்றும் வெள்ளாட்டுக் கறி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கதகதப்பான உடைகளுடன் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வது, குளிர்கால தசை இறுக்கத்தை சீராக்கும். வெயில் படும்படியாக இருப்பது நல்லது. குளிர்காலங்களில் பச்சைத் தண்ணீரை தவிர்த்து, சுடு தண்ணீரில் குளிக்கலாம். உங்களின் உடைகள், விரிப்புகள் கதகதப்பாக இருக்கட்டும்.

குளிரால், சளி உறைந்து போகும். தொண்டையைச் செருமித் துப்பினால் கூட சளி வராது. நல்லெண்ணெயில் மிளகு, சீரகம் பொரித்து வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். வெதுவெதுப்பாய் இருக்கும் எண்ணெயை,

ஐந்தாறு சொட்டு மூக்கு வழியாக விட்டால், தொண்டை வழியாக இறங்கி சளியை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து வெளியேற்றும்

ஒரு லிட்டர் தண்ணீரில், கோரைக் கிழங்கு (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) 10 கிராம், சுக்கு -5 கிராம் சேர்த்து, அரைலிட்டராக கொதிக்க வைத்து குடிக்க, மார்பில் சளி கட்டாது. துளசி தீர்த்தமும் பலன் தரும்

சுற்றிலும் பனியாய்,வானம், மப்பும் மந்தாரமுமாய் இருந்தால், சாம்பிராணி புகை போட்டு, அந்தப் புகையில், போர்வையை காட்டுங்கள். அந்த துணியால் உடம்பைப் போர்த்த கதகதப்பு கூடும். இதுவும் பழங்காலத்தில் இருந்த ஒரு பழக்கம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News