நியூரான்கள், நரம்பு திசுக்களைபாதிக்க துவங்கும்போது, நரம்புதளர்ச்சி நோய் ஏற்படுகிறது. நரம்பு தளர்ச்சிநோய் உள்ளது என்பதைஎளிதாக கண்டுபிடிக்க வேண்டும். இதுநபருக்கு நபர் மாறுபடும். சிலருக்குகை, கால், தாடைகளில்நடுக்கம் ஏற்படும்.அன்றாட வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருக்க முடியாது. வேகமாக எதையும் செய்ய முடியாது. வேகமாக நடக்க முடியாது. நடக்கும்போது தள்ளாட்டம் ஏற்படும். சிலருக்கு ஒரு விரல் ஆடும். அதிகளவில் நடுக்கம். தூங்கி எழும்போதோ அல்லது சேரில் இருந்து எழும்போதோ அவர்களால் சட்டென்று நேராக நிற்க முடியாது. கால் தரையில் படாமல் இருக்கும்.தொடர்ந்து நடக்கும்போதுதான் பாதம் தரையில் படுவதையே அவர்களால் உணர முடியும். முகத்தில் உணர்வு இருக்காது. கை-கால் வலி, வீக்கம் இருக்கும். அவர்களால் ஒரு செயலை சரியாக செய்ய முடியாது. இவை நரம்பு தளர்ச்சியின் அறிகுறிகள்தேவையான பொருட்கள்மிளகு – ஒரு ஸ்பூன்திப்பிலி – ஒரு ஸ்பூன்சுக்குப்பொடி -ஒரு ஸ்பூன்செய்முறை - மிளகு, திப்பிலி இரண்டையும் நுணுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அப்படியே பருகலாம்.தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்தும் பருகலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள், அவற்றை தவிர்ப்பது நல்லது.காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் பருகிய பின்னர் இதை பருகலாம். இதைவழக்கமாக சாப்பிட வேண்டும். 10 நாளில்மாற்றம் தெரியும்.நரம்பு தளர்ச்சியின் அறிகுறிகள் படிபடிப்படியாக குறைவதை காணலாம். இதை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.இதில் உள்ள3 பொருட்களும் நரம்பு மண்டலத்தை நன்றாக வலுப்பெறச்செய்யும். நரம்பு பிரச்னைகளை சரிசெய்து, நரம்பு தளர்ச்சி நோயை முற்றிலும் சரிசெய்யும். அனைவரும் பருகலாம். நரம்பு தளர்ச்சியால் அவதிப்பெறுபவர்களுக்கு சிறந்த பலனைத்தரும்.இந்த மூன்று பொருட்களும் இயற்கையானதுதான் என்பதால், இது எவ்வித பக்கவிளைவையும் தராது. இயற்கை நிவாரணங்களை தேடிச்செல்லவேண்டும். அது பலனளிக்கவில்லையென்றால் மட்டுமே மருத்துவரை அணுகுவது சிறந்தது.
நிறைவுறா கொழுப்புகள் மற்றும் இரும்பு, துத்தநாகம், வைட்டமின் கே, வைட்டமின் ஈ, வைட்டமின் பி, தாமிரம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் முந்திரியில் உள்ளது. முந்திரி சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் கட்டுப்படும். கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த பால் மற்றும் முந்திரி எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. இதை 1 வாரம் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் பாலில் ஊறவைத்த முந்திரி பருப்பை உட்கொள்ள வேண்டும். இதனால், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பால் மற்றும் முந்திரி இரண்டிலும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் நோய்கள் வராமல் தடுக்கிறது. இதை 1 வாரம் உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியில் அதன் விளைவைக் காண்பிக்கும். முந்திரி பருப்பை பாலில் ஊறவைத்து 1 வாரம் சாப்பிடுவதும் உடல் எடையை அதிகரிக்க உதவும். இது உடலில் இருந்து பலவீனம் மற்றும் சோர்வை நீக்குகிறது. ரத்தசோகையால் அவதிப்பட்டால், தினமும் பாலில் ஊறவைத்த முந்திரியை சாப்பிட வேண்டும். இதன் மூலம் இரத்த சோகை பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம். முந்திரி பருப்பு மற்றும் பாலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. இதை 1 வாரம் உட்கொள்வதன் மூலம், சருமத்தில் மாற்றங்கள் தெரியும். முந்திரியை பாலில் ஊறவைத்து 1 வாரம் சாப்பிட்டு வந்தால், உடல் பலவினம் நீங்கி, வலிமையைப் பாதுகாக்கும். இதனால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது.
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் அஸ்வகந்தா, கிலோய், அதிமதுரம், துளசிமற்றும் நெல்லிக்காய் ஆகிய ஐந்து ஆயுர்வேத மூலிகைகள் இவை உடலில் நோய் தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. இதன் மூலம் இருமல், தொண்டைப்புண், தொண்டை வலி, உடல் சோர்வு ஆகியவை குணமாகும்அஸ்வகந்தா: ஆயுர்வேதத்தின் முக்கியமான மூலிகைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும் சிறந்த மூலிகை. அரை ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை இரண்டு கப் நீரில் கொதிக்க வைத்து சிறிது இஞ்சியை சேர்த்து பாதியாக வற்றும் வரை கொதிக்க விட்டு ஆறியதும் சிறிது தேன் கலந்து பருகவும். இது சிரப் மற்றும் கேப்சூல் வடிவிலும் கூட கிடைக்கிறது.கிலோய்: இது ஆன்ட்டி ஆக்சிடென்ட், அழற்சி எதிர்ப்பு, நோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. இரண்டு ஸ்பூன் கிலோய் சாறுடன் சிறிது நீர் கலந்து எடுத்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும். இதுவும் சிரப் வடிவிலும் காப்ஸ்யூல் வடிவிலும் கிடைக்கின்றது.அதிமதுரம்: நோய் தொற்றுகளை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தி நிறைந்தது. உடலிலுள்ளதேவையற்ற பாக்டீரியா மற்றும் கிருமிகளை கண்டறிந்து அழிக்கும் ஆற்றல் கொண்டது. நோயிலிருந்துகாக்கக்கூடிய சக்தி பெற்ற அதிமதுர பொடியை 10 கிராம்அளவு எடுத்து 200 கிராம் டீத்தூளுடன் கலந்து விடவும். இதனைதினசரி நாம் டீ தயாரித்து பருக, நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.துளசி: நோய் தொற்றுகளை தடுப்பதில் முக்கியப் பங்கு வைக்கும் துளசியை டீ போல் தயாரித்து பருகலாம். ஒருகப் நீரில் பத்து துளசி இலைகளை சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு வேளை விதம் பருக, நம்உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். துளசிசெடிகளை வீட்டில் வளர்க்கலாம். துளசி இலை பொடிகள் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது.ஆம்லா(நெல்லிக்காய்): வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த நெல்லிக்காயில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். சிறந்த காயகல்பமாக விளங்கும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். இதனை தினமும் காலையில் பச்சையாகவோ அல்லது ஜூஸாக செய்தோ சாப்பிடலாம். நெல்லிக்காயை தினம் ஒன்று என சாப்பிட, பழக்கப்படுத்திக் கொண்டால் நல்லது. இது முரப்பா வடிவிலும் கிடைக்கின்றது. நெல்லிக்காய் சாறு அல்லது ஆவியில் வேகவைத்த நெல்லிக்காயை தினம் ஒன்றாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது.
சுண்டல் ஆரோக்கியமானசுவையான உணவு வகை, இது பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். சுண்டலில் காணப்படும் சில முக்கிய வைட்டமின்கள்: பி1, பி2, பி3, பி6 மற்றும் ஃபோலேட் போன்ற வைட்டமின் பி குழுக்களின் சிறந்த மூலமாகும். இந்த வைட்டமின்கள் ஆற்றல் வளர்சிதை மாற்றம், நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் செல் உற்பத்திக்கு அவசியம். சுண்டல்வைட்டமின் சியின்நல்ல மூலமாகும், இதுநோய் எதிர்ப்புசக்தி, கொலாஜன் உற்பத்திமற்றும் இரும்புஉறிஞ்சுதலுக்கு அவசியமானஒரு ஆக்ஸிஜனேற்றி.சுண்டல் வைட்டமின்கே-யின் நல்லமூலமாகும், இது இரத்தஉறைதல் மற்றும்எலும்பு ஆரோக்கியத்திற்குஅவசியமானது.சுண்டல் இரும்பின்சிறந்த மூலமாகும், இதுஆக்ஸிஜனை உடலின்செல்களுக்கு கொண்டுசெல்லும் ஹீமோகுளோபினில்காணப்படும் ஒருதாதுவாகும்.சுண்டல்மெக்னீசியத்தின் நல்லமூலமாகும், இது தசை மற்றும்நரம்பு செயல்பாடு, இரத்தசர்க்கரை கட்டுப்பாடுமற்றும் இரத்தஅழுத்தம் ஆகியவற்றில்முக்கிய பங்குவகிக்கிறது. சுண்டல்பாஸ்பரஸின் நல்லமூலமாகும், இது எலும்புகள்மற்றும் பற்கள்ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்குஅவசியமான தாதுவாகும். ஒட்டுமொத்தமாக, சுண்டல்உங்கள் உணவில்சேர்க்க வேண்டியஒரு சத்தானமற்றும் ஆரோக்கியமானஉணவாகும்,
பழ வகைகளில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கக்கூடியவற்றில் ஒன்று சாத்துக்குடி. இது மற்ற பழங்களை விட விலை சற்று குறைவாகக் கிடைக்கும். இந்தப் பழத்தை ஆங்கிலத்தில் ‘மொசம்பி ப்ரூட்’ என்கிறார்கள். சுவிட் லெமன் என்றும் அழைப்பதுண்டு. இதில் பல ரகங்கள் இருக்கின்றன. ஆனாலும், அவை அனைத்தும் மருத்துவ குணங்களில் மாறுவதில்லை. ஜூலை முதல் ஆகஸ்ட் வரை, பின்னர் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை இதன் சீசன் உள்ளது.சாத்துக்குடி பழங்கள் இந்தியா போன்ற வெப்பம் மிக்க பகுதிகளில் அதிகமாக விளைகின்றன.25 அடி உயரம் வரை வளரும் சாத்துக்குடி மரத்தில் ஆரம்பத்தில் பச்சை நிறமாக இருக்கும் சாத்துக்குடி பின்னர் பழுத்து மஞ்சள் நிறமாக மாறிவிடும். இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் இது அதிக அளவில் விளைகிறது.சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்த சாத்துக்குடியில் கால்சியம் அதிகம் இருப்பதால் குழந்தைகளின் எலும்பு மற்றும் பற்கள் வளர்ச்சிக்கு இது பயன்படுகிறது. அதோடு, கணிசமான அளவில் வைட்டமின் பி1, பி2, சி, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவையும் இதில் உள்ளன. எனவே, தேகத்திற்கு நல்ல வளர்ச்சியையும், சுறுசுறுப்பை தருவதுடன் மலச்சிக்கலை நீக்கி நல்ல ஜீரண சக்தியையும் இது தருகிறது. என்னதான் சிட்ரஸ் குடும்பமாக இருந்தாலும் மற்ற சிட்ரஸ் பழங்களை காட்டிலும் அமிலத்தன்மையானது இதில் குறைவாகவே உள்ளது.வயிற்றுப் புண்களை குணமாக்குவது முதல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக சாத்துக்குடி ஜூஸ் உள்ளது.பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை இது கொண்டுள்ளது. இந்தப் பழம் நம்மை புத்துணர்ச்சியாக வைப்பதோடு, உடலில் இருக்கும் நச்சுக்களையும் நீக்குகிறது. தினமும் இரண்டு டம்ளர் சாத்துக்குடி பழ சாறு 6 மாதம் தொடர்ந்து குடித்தால் இரத்த அழுத்தம் 7 சதவீதம் குறைவதாக அமெரிக்கா கிளீவ்லன்ட் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதில் இந்தப் பழ ஜூஸ் பயனுள்ளதாக இருக்கும். இதிலிலுள்ள வைட்டமின் சியானது கார்னைடைன் (carnitine) உற்பத்தியை அதிகரிப்பதாக நிரூபிக்கப்ட்டுள்ளது. இது இதயம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு அவசியமானது.சாத்துக்குடி பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. நமது உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்குவது, தசை வளர்ச்சிக்கு உதவுவது, சிறுநீரகப் பணியை சீராக்குவது என அனைத்தையும் பார்த்துக்கொள்வது பொட்டாசியம் சத்துதான். இதன் குறைபாடுதான் நாளடைவில் சர்க்கரை நோய் உருவாகக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வுகளில். எனவே, சர்க்கரை நோய் வராமல் தடுக்க தாராளமாக சாத்துக்குடிப் பழத்தை எடுத்துக் கொள்ளலாம். அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்பட்டால் அது பொட்டாசியம் சத்து குறைபாட்டால் ஏற்படலாம். அதனைத் தவிர்க்க சாத்துக்குடிப் பழத்தை சாப்பிடுவது நல்லது.இந்தப் பழத்தை ஜூஸாக பருகலாம். அல்லது தோலை நீக்கிவிட்டு அப்படியே சாப்பிடலாம். இந்தப் பழத்தில் ஜூஸ், ஜாம், ஊறுகாய், சாலட், சர்பத் செய்தும் சாப்பிடலாம். சாத்துக்குடி உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.
பனங்கற்கண்டில் கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது, இது எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு அவசியம். பால் புரதம் மற்றும் வைட்டமின்D ஆகியவற்றின் நல்ல மூலமாகும், பனங்கற்கண்டில் இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன. பால் வைட்டமின்A மற்றும்C ஆகியவற்றின் நல்ல மூலமாகும், இவை தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராட உதவும் ஆக்ஸிஜனேற்றிகளாகும்.பனங்கற்கண்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை சரும சேதத்தை ஏற்படுத்தும் தீவிர மூலக்கூறுகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. பால் வைட்டமின்E இன் நல்ல மூலமாகும், இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும், வயதான தோற்றத்தைக் குறைக்கவும் உதவும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும்.பனங்கற்கண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமானத்தை ஒழுங்குபடுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பால் ப்ரோபயாட்டிக்ஸின் நல்ல மூலமாகும், பனங்கற்கண்டில் மக்னீசியம் உள்ளது, இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், தளர்வு உணர்வை ஊக்குவிக்கவும் உதவும் ஒரு தாதுவாகும். பால் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலத்தின் நல்ல மூலமாகும், இது செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது, இது மகிழ்ச்சியுடன் தொடர்புடைய ஒரு நரம்பியக்கடத்தி ஆகும்.நீரிழிவு நோய் அல்லது பிற மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் பனங்கற்கண்டு பால் குடிப்பதற்கு முன் தங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். அதிகப்படியான பனங்கற்கண்டு சாப்பிடுவது பல் சிதைவு மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.வெள்ளை சர்க்கரை உடல்நலத்திற்கு தீங்கு என்று கூறப்படும் நிலையில் அதற்கு மாற்றாக பனங்கற்கண்டு எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
எந்த அளவிற்கு விரைவில் சிகிச்சை பெறுகிறார்களோ, அந்த அளவுக்கு ஆஸ்துமா விரைவில் குணமடையும்.தூக்க மாத்திரை, அவில் போன்ற அலர்ஜி மாத்திரை, நாடித்துடிப்பை மிகுதிப்படுத்தும் மருந்து, (உ.ம். அட்டிரினிலின்), உயர் ரத்த அழுத்தத்திற்குக் கொடுக்கும் மாத்திரை (உ.ம். புரோபரனலால்) • மூச்சுத் திணறல் வரும்போது தவிர்க்க வேண்டிய மருந்துகள்சளி இறுகாமலிருக்க நிறைய திரவ உணவினை வாய் மூலமோ, ஊசி மூலமோ உட்கொள்ள வேண்டும்.சுயமாக மருந்து, மாத்திரை உட்கொள்வது கூடாது.புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் விடவும்அலர்ஜி, ஆஸ்துமாவைத் தூண்டும் உணவுப் பொருட்கள் மற்றும் சூழ்நிலைகளைத் தவிர்க்கவும்மூச்சுத் திணறல், இருமல் (பக்கவாட்டு விலா எலும்பு வலி), காய்ச்சல் ஆகியவை தள்ளிப்போடாமல் மருத்துவரை அணுகவும். வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதைத் தவிர்க்கவும். உதாரணம்: பூனை, நாய், புறா, கிளிதூசு, குப்பை, அழுகிய உணவுப்பொருட்களை உடனடியா க அப்புறப்படுத்தவும்.படுக்கை, மெத்தை, தலையணை ஆகியவற்றில் ஆஸ்துமாவை உண்டாக்கும் பூச்சிகள் குடியேற வாய்ப்பு இருப்பதால் அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும்நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்படும் போது பயப் படக்கூடாதுவீட்டு உபயோக ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கத் தயங்கக்கூடாது. ஆக்சிஜன் சிலிண்டர் உபயோகப்படுத்தும் போது புகைப்பிடிக்ககூடாது, வெடித்துவிடும்.தனிமை தவிர்க்கப்பட வேண்டும்மன அழுத்தம் வராமல் இருக்க மருத்துவமும் பயிற்சியும் தேவைமார்பு ,பிசியோதெரபி தேவைப்படும்போது அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் (உள்ளிருக்கும் சளியை வெளிக்கொணர) சாப்பிட்டவுடன் படுக்கக்கூடாது.
ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட கிராம்பு பழங்காலத்தில் இருந்தே மசாலா பொருளாகவும், மருத்துவ குணங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மூலிகை, உலகம் முழுவதும் தற்போது காணப்படுகிறது. கிராம்புகளில் யூஜினோல், காரியோஃபிலின் மற்றும் அசிட்டைல் யூஜினோல் போன்ற பல சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி தொற்றுகளுக்கு எதிராக போராட உதவுகின்றன .கிராம்புகளில் உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் மற்றும் அழள்சி எதிர்ப்பு பண்புகள், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. இது வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வயிறு வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. கிராம்புகளின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி, தசைவ வலி மற்றும் பல் வலி போன்ற வலிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும். வாய் மற்றும் பற்களில் பாதிப்பு இருப்பவர்கள் தினசரி மூன்று கிராம்பு சாப்பிடுவதால் அவை விரைவில் குணமடையும். இது பல் துளைகள், ஈறுநோய் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற வாய் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. கிராம்புகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், இதய நோய் அபாயம் குறைகிறது. சில ஆய்வுகளில், கிராம்பு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என கண்டறியப்பட்டுள்ளன. இது நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.தினசரி 3 கிராம்பு சாப்பிடுவதால் உடலில் , பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகின்றன.
மூக்கடைப்பு, சளி, இருமல் போன்ற சுவாச தொந்தரவுகள் இருந்தால், கற்பூரவல்லி எனப்படும் ஓமவள்ளி இலைகளை மருந்தாக பயன்படுத்துவோம் அல்லது கருந்துளசி, நொச்சி இலைகளை பயன்படுத்துவோம். அதுபோலவே, தாளிசபத்திரியும் பயன்படுகிறது.தாளிசாதி என்றும் இதனை சொல்வார்கள்.சளி, மூக்கடைப்பு, சைனஸ், தலைவலி, நீர்க்கோவை, தலைபாரம் மட்டுமல்ல, எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் கட்டுக்குள் கொண்டு வரும் தன்மை, இந்த மரத்தின் இலைகளுக்கு உண்டு. இந்த தாளிசபத்திரி மரமானது, பச்சை நிறத்தில் நீளமாக வளரக்கூடியது.. மோனோடெர்பீன்கள், பிளேவனாய்டுகள், பைஃப்ளேவனாய்டு, கிளைகோசைடுகள், பைட்ரோ ஸ்டீரால்கள், அமினோ அமிலங்கள், சபோனின்கள், டானின்கள், ஆல்கலாயிடுகள், ட்ரைடர்பெனாய்டுகள் போன்ற சத்துக்கள் இந்த மரத்தின் இலைகளில் நிறைந்துள்ளது.முக்கியமாக, பேக்லடாக்சால் என்ற வேதிப்பொருள் இலைகளில் இருப்பதால், மருந்தாக உதவுகிறது.நுரையீரலிலுள்ள மொத்த கபமும் வெளியேறிவிடும். இந்த இலையில் கஷாயம் போல வைத்து குடிக்கலாம்.சளிக்கு மட்டுமல்ல, பயங்கர நோயான புற்றுநோயையும் இந்த இலைகள், வேதிப்பொருளாக பயன்படுகிறதாம். புற்றுக்கட்டிகளை கரைக்கும் சக்தி இதற்கு உண்டுதாளிசபத்திரி இலைகளை காயவைத்து தூள் போல தயார் செய்து வைத்து கொண்டால், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற தொந்தரவுகளுக்கு பயன்படுத்தலாம்.வெறுமனே இந்த இலைகளை பறித்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.. அல்லது குளிக்கும் வெந்நீரிலும் பயன்படுத்தலாம்.. இதனால், தலைவலி, தலைபாரம் நீங்கிவிடும். மிளகு: தாளிசபத்திரி, மிளகு, சுக்கு, அரிசி, திப்பிலி, கற்கண்டு போன்றவற்றுடன் சேர்த்து, சூரணம் போல தயார் செய்து, கடைகளில் விற்கிறார்கள்.தாளிசாதி வடகம், தாளிசாதி சூரணம் என்ற பெயரில் இது விற்பனை செய்யப்படுகிறது.கட்டுக்கடங்காத சளி, இருமலுக்கு இந்த பவுடரை பயன்படுத்துவார்கள்.. எப்பேர்ப்பட்ட ஜூரத்தையும் இது போக்கிவிடும். சுவாச உறுப்புகள் பலப்படுத்தவும், இந்த சூரணம் பேருதவி புரிகிறது.. சிலர் இந்த பொடியில் பற்களை தேய்க்க பயன்படுத்துவார்கள். இதனால் பல்வலியும் சரியாகி, ஈறுகள் பலம் பெறும்.மூச்சு திணறல் பிரச்சனை இருப்பவர்கள், இந்த தாளிசாதி சூரணம் எடுத்துகொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அதேபோல, உடல் சோர்வு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இந்த சூரணத்தை சாப்பிட்டால், பலமும், சுறுசுறுப்பும் கிடைக்கும். காது பகுதியில் ஏற்படும் இரைச்சல் வந்தாலோ அல்லது மூக்கிலிருந்து நீர் வடிந்தாலோ, அதற்கும் இந்த சூரணம் உதவுகிறது.. வயிறு எரிச்சல், பசி இல்லாத உணர்வு, அஜீரணம், வயிற்றுப்புண்களை இந்த சூரணம் சரிசெய்கிறது.மஞ்சள் காமாலை பிரச்சனை உள்ளவர்களுக்கும், இந்த தாளசபத்திரி சூரணம் கை கொடுக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை இந்த மூலிகை சூரணம் தடுத்து நிறுத்தும். ஆனாலும், சித்த மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று இதனை மருந்தாக எடுத்து கொள்ளலாம்.
உடலில் நீர்ச்சத்துக்கள் குறையும்போதுதான் நோய்கள் உண்டாகும்.சருமம் பொலிவிழக்கும். இளமையிலே முதுமை தோற்றம் ஏற்படும். கடுமையானமுடி உதிர்வு பிரச்னைகள் உருவாகும். மலச்சிக்கல்பிரச்னை அதிகமாகும். ரத்தம் சுத்தமாக குறையும்.நெல்லிக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன் தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும். இளநரை பிரச்னையை சரிசெய்யும். முதுநரையை தள்ளிப்போடும். இதில் உள்ள வெள்ளரி நமது உடலில் உள்ள நீர்ச்சத்தை அதிகரிக்கும்.ரத்தத்தை சுத்தம் செய்யும். நமது உடலில் புதிய ரத்தம் ஊறத்துவங்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கும். கல்லீரல், மண்ணீரலில் உள்ள கழிவை வெளியேற்றும். உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும். மலச்சிக்கல் பிரச்னைகளையும் சரிசெய்யும்.இதற்கு பயன்படுத்தப்படும்பொருட்களில், அதிகளவில் வைட்டமின் ஏ, சி, பி, மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட எண்ணற்றவைட்டமின்களும், மினரல்களும் உள்ளது. . தேவையானபொருட்கள் நெல்லிக்காய்-2, வெள்ளரி அரை, இஞ்சி அரை இன்ச்(அல்சர் உள்ளவர்கள் இஞ்சியை தவிர்த்துவிடலாம்), மல்லித்தழை – சிறிதளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, புதினா- சிறிதளவு, எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன் (அல்சர் உள்ளவர்கள் குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்)நாம் அன்றாட உணவில் இதில் சேர்த்துள்ள 3 இலைகளையும் கட்டாயம் சேர்க்க வேண்டும்.செய்முறைஎலுமிச்சை சாறு தவிர மற்ற பொருட்களை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.அதில் எலுமிச்சை சாறு கலந்துவிடவேண்டும். இதை அப்படியேவும் பருகலாம் அல்லது இதில் மிளகுத்தூள், இந்துப்பு சேர்த்தும் பருகலாம்.இந்த சாறில் மிளகை சேர்த்து சாப்பிடும்போது இதன் மருத்துவ பலன்கள் பன்மடங்கு அதிகரிக்கும். மிளகு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இளநரையும் மறையும். எனவே வாரத்தில் ஒரு நாள் உணவில் மிளகை இதுபோல் பொடி செய்து சேர்த்துக்கொள்ளவேண்டும்.காலையில் வெறும் வயிற்றில் இதை பருகவேண்டும். வாரத்தில் இரண்டு முறை குடித்தால் போதும். சருமம் பளபளப்பாகும். ரத்தம் சுத்திகரிப்பாகும். உடல் சுறுசுறுப்பாகும். கல்லீரல்லில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். நீர்ச்சத்து கிடைக்கும். உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்குநல்ல பலன் தரும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி.