25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆரோக்கியம்

May 27, 2024

உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள்  தரும் கிராம்பு

மசாலா பொருட்களில் கிராம்புக்கு தனி இடம் உண்டு. இது உணவுகளில் தனித்துவமான சுவையை சேர்கிறது. உணவுக்கு வாசனை மற்றும் சுவையை கூட்டுவதை தாண்டி கிராம்பு பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் அமைகிறது.கிராம்பு மரத்தின் உலர்ந்த பூக்களில் இருந்து பெறப்படும் கிராம்புகள் ஊட்டச்சத்து மதிப்பு நிறைந்த ஒரு மசாலா பொருளாகும். சரிவிகித உணவின் ஒரு பகுதியாக மிதமான அளவு கிராம்பை சாப்பிட்டு வர நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. எனினும் தினமும் கிராம்பை அதிக அளவில் சாப்பிடுவதால் ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படலாம். கிராம்பு முக்கியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் அற்புதமான மூலமாக அமைகிறது. கிராம்பில் காணப்படும் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸிற்கு எதிராக நமது உடலை பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் கிராம்புகளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகிறது. வாய்வழி ஆரோக்கிய பலன்களுக்கு கிராம்பு பெயர் போனது. கிராம்பில் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அது வாயில் இருக்கும் பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு பற்சொத்தை மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. ஒரு சில வாய்வழி சிகிச்சைகள் மற்றும் ப்ராடக்டுகளில் கிராம்பு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. கிராம்புகள் பாரம்பரியமாக செரிமானத்தை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டி, இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கிராம்புகள் சாப்பிடுவதால் வாயு மற்றும் வயிற்று உப்புசம் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கிராம்புகள் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒரு சில ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன. இது ரத்த குளுக்கோஸ் அளவுகளை சீராக்கி இன்சுலின் உணர்திறனை ஊக்குவிக்கிறது.கிராம்புகளில் எக்கச்சக்கமான ஆன்டிஆக்சிடன்ட்கள் இருப்பதால் அது ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைத்து ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகிறது. அதுமட்டுமல்லாமல் கிராம்பில் வலி நிவாரண பண்புகளும் உள்ளது. மிதமான அளவுகளில் கிராம்பு சாப்பிடுவது பெரும்பாலான நபர்களுக்கு பாதுகாப்பாக கருதப்பட்டாலும் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் பக்க விளைவுகள் உண்டாகும். கிராம்பு எண்ணெயை அதிகப்படியாக பருகும் பொழுது அதனால் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான கோளாறுகள் ஏற்படலாம். எனவே கிராம்பு எண்ணெயை அதிக அளவில் சாப்பிட கூடாது. கிராம்பு பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் நபருக்கு நபர் மாறுபடும். மேலும் ஒரு சில நபர்களில் கிராம்புகள் அலர்ஜி வினைகளை கூட உண்டாக்கலாம். கிராம்பு சாப்பிட்டதால் உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஏதேனும் மருத்துவ நிலையினால் பாதிக்கப்பட்டிருந்தால் கிராம்பு எடுத்துக் கொள்ளும் முன்பு உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளலாம்.

May 26, 2024

ரத்தசோகையை விரட்டியடிக்கும்பீட்ரூட் ஜூஸ்

தேவையான பொருட்கள்-   பீட்ரூட் 1 (தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவேண்டும். பீட்ரூட்டில் செலினியம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், சோடியம், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது. பீட்ரூடை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது சருமத்துக்கு பொலிவைத்தரும். வெயிலால் ஏற்படும் கருமையைப் போக்கும். குடலில் உள்ள நச்சுக்களை கரைத்து வெளியேற்றும்) இஞ்சி – சிறிய துண்டு (பச்சை வாசத்தை போக்கி, சுவையைத்தரும்) எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்(இனிப்புக்கு வெல்லம் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கூட சேர்த்துக்கொள்ளலாம். பீட்ரூட்டே இனிப்பு சுவையானதுதான். எனவே இது தேவையில்லை. ஆனால் அதன் பச்சை சுவை விரும்பாதவர்கள் இதை சேர்த்துக்கொள்ளலாம்.செய்முறை - அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். இதை அப்படியே பருகவேண்டும். தேவைப்பட்டால் ஜஸ் க்யூப்கள் சேர்த்து பருகலாம். எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.சாறு வடித்தபின் மிஞ்சும் சக்கையை உங்கள் முகம் உடலில் சருமத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்துகொள்வதால் சருமம் பொலிவு பெறுகிறது. அதை ஜஸ் ட்ரேயில் சேர்த்து ஐஸ் கட்டிகளாகவும் மாற்றிக்கொள்ளலாம். அதையும் வைத்து மசாஜ் செய்யலாம்.வயோதிகத்தால் ஏற்படும் பார்வை குறைபாடு மற்றும் ஞாபக மறதி ஆகியவற்றைப்போக்கும். சருமம் பொலிவு பெறும். செரிமானக் கோளாறுகள், அல்சர் மற்றும் வயிறு தொடர்பான அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வாகும். உடலில் உள்ள நச்சுக்களை அடித்து வெளியேற்றும்.

May 23, 2024

கல்லீரல் பாதிப்பு

நமதுஉடலின் இரண்டாவது பெரிய உறுப்பு கல்லீரல். இதுகழிவுகளை வெளியேற்றவும், உணவை ஜீரணிக்கவும், ரத்தம் உறைவதற்கு உதவும் புரதங்களின் உற்பத்தியையும் செய்வதுடன் ஹார்மோன்களை சீர் செய்வது போன்ற பல வகையான வேலைகளை செய்கிறது. எனவேஇதயம், நுரையீரல், சிறுநீரகம்போன்ற உறுப்புகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை கல்லீரலுக்கும் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் உடலில் ஏற்படும்90 சதவீதநோய்களுக்கு கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகள் தான் காரணமாகின்றன.உடலில் டீடாக்ஸ் பேக்டரியாக செயல்படும் கல்லீரல்,உடலின் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நமது செரிமான அமைப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை பெறவேண்டியது அவசியம். இல்லையெனில் கல்லீரல் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறிகள்கல்லீரலில் பிரச்சனை ஏற்படுமாயின் நச்சுக்கள் சரியாக வெளியேறாமல் வயிறு பெருத்து காணப்படுவதுடன் வயிற்றுப் பகுதியில் வீக்கமும் ஏற்படும். பாதங்கள் வீங்குதல், பாதங்களில் கூச்ச உணர்வு ஏற்படுவது போன்றவை தோன்றும்.செரிமானத்தில் கல்லீரல் முக்கிய பங்கு வகிப்பதால், அது செயல்படாமல் இருக்கும்போது வயிற்றுப்போக்கு உண்டாகும்.தோல் அரிப்பு, கை கால்கள் வீங்குவது போன்றவை உண்டாகும்.கவனமின்மை, நினைவாற்றல் இழப்புபசியின்மை எடை இழப்பு, வயிற்று வலி, குமட்டல் போன்றவை ஏற்படும்.கல்லீரல் நன்றாக இயங்க சாப்பிட வேண்டியவை:நெல்லிக்காய், இஞ்சி, பீட்ரூட், மஞ்சள், திராட்சை , வால்நட் போன்றவை கல்லீரலை பாதுகாக்க உதவும்.தினமும் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதால் ஹெப்பாடிட்டிஸ்‌ பி மற்றும் சிஆகியவற்றிற்கு காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது.கல்லீரல் நோய்க்கு பப்பாளி பழம் சிறந்த மருந்தாகும். பப்பாளி பழத்துடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து ஜூஸாக பருக நல்ல பலன் கிடைக்கும்.கீரை சூப், கேரட் ஜூஸ் பருகலாம்.அதிமதுரப் பொடியை டீத்தூளுடன் கலந்து, டீ தயாரித்து பருக சிறந்தது. சில கல்லீரல் நோய்களுக்கு அதிமதுரம் சிறந்த ஆயுர்வேத மருந்தாகும்.கல்லீரல் சுத்தமாக, ஆப்பிள் சீடர் வினிகரை தினம் இருமுறை ஒரு கப் நீரில் ஒரு ஸ்பூன் அளவில் கலந்து பருகுவது நல்லது.முட்டைகோஸ், வெங்காயம், பூண்டு, ப்ராக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றில் உள்ள சல்ஃபர் என்சைம் உற்பத்தியை அதிகரித்து உடலின் நச்சுக்களை நீக்க உதவுகிறது.ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் கல்லீரல் நோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் குணப்படுத்த முடியும். எனவேகல்லீரல் பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிந்தால் தகுந்த மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. 

May 23, 2024

லவங்கப்பட்டை தேன் கலந்த நீர்

1 கப் வெதுவெதுப்பான நீர்,1தேக்கரண்டி தேன் மற்றும்1/2 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள்ஒரு கப் தண்ணீரை சூடாக இருக்கும் வரை சூடாக்கவும், ஆனால் கொதிக்க வேண்டாம். ஒரு தேக்கரண்டி தேன் முழுவதுமாக கரையும் வரை கலக்கவும்தேன் தண்ணீரில் அரை தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும்.இலவங்கப்பட்டை சமமாக கரையும் வரை நன்கு கலக்கவும். பின்னர் அதைப் பருகவும்.இந்த இரண்டுமே தனித்தனியாக ஆரோக்கிய நன்மைகள் கொண்டது..இலவங்கப்பட்டையின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுடன் இணைந்த தேனின் தொண்டை புண் மற்றும் இருமலைப் போக்க தேன் இலவங்கப்பட்டை தண்ணீரை ஒரு சிறந்த தீர்வாகஆக்குகிறது.தேன் மற்றும் இலவங்கப்பட்டையின் கலவையானது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், தொடர்ந்து உட்கொள்ளும் போது இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.தேன் மற்றும் இலவங்கப்பட்டை இரண்டும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன, இது வீக்கத்தைக் குறைக்கவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.இலவங்கப்பட்டை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது, இது நீரிழிவு அல்லது இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும்.சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக இதை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலமும் பசியைக் குறைப்பதன் மூலமும் எடை இழப்புக்கு உதவும்.தேன் இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடிப்பது செரிமானநொதிகளின் சுரப்பைஊக்குவிப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறதுமற்றும் இரைப்பை குடல் அசௌகரியத்தை நீக்குகிறது.தேன் மற்றும் இலவங்கப்பட்டை இரண்டும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளன, அவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

May 22, 2024

பலாப்பழ கொட்டைகள்

பலாப்பழங்களை போலவே பலாக்கொட்டைகளிலும் நிறையமருத்துவ நன்மைகள்ஒளிந்து கொண்டிருக்கின்றன. பலாக்கொட்டை. பழங்களை நாம்விரும்பி சாப்பிடும்அளவுக்கு, அந்தபழங்களின் விதைகளைநாம் சாப்பிடுவதில்லை.துத்தநாகம், வைட்டமின்கள், நார்ச்சத்துஎன ஏகப்பட்டவிஷயங்கள் இந்தபலாக்கொட்டையில் உள்ளன.. இதனால் உங்கள்திசுக்களுக்கு வலிமையையும், நோய் எதிர்ப்புசக்தியையும் வழங்குகிறது.முக்கியமாக நிறையபுரோட்டீன் உள்ளது..தசைகளை வலுவாக்கஇந்த கொட்டைகளிலுள்ளபுரதங்கள் உதவுகின்றன.100 கிராம் பலாக் கொட்டைகளில், ஒரு கிராமுக்கு குறைவாகவே கொழுப்புச்சத்துக்களும், 38 கிராம் கார்போவும் இடம்பெற்றுள்ளன... இந்த பலாக் கொட்டைகளை நன்றாக காயவைத்து, பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். செரிமான கோளாறு ஏற்படும்போதெல்லாம் இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.ஆக்ஸிஜனேற்ற பண்புகள் பலாக்கொட்டைகளிலுள்ளதால், வயதான தோற்றம், சரும சுருக்கங்களுக்கு எதிராக போரிட செய்கிறது.இரும்பு சத்து நிறைந்துள்ளதால், பெண்களை அனீமியா அண்டுவதில்லை.. நார்ச்சத்து நிறைந்துள்ள பலாப்பழ கொட்டைகள், மலச்சிக்கலை தீர்க்கின்றன.. வைட்டமின் A இந்த பலாப்பழ கொட்டைகளில் நிறைந்திருப்பதால், கண் பார்வையை அதிகரிக்க செய்கிறது.கண்புரை, மாகுலர் சிதைவு போன்ற கண்தொந்தரவுகளிலிருந்தும்தடுக்கிறது.மாலைக்கண்நோய்களும்தடுக்கப்படுகின்றன.பலாக்கொட்டையில் குழம்பு, கூட்டு, பொரியல்என எதுவேண்டுமானாலும் செய்யலாம்.ஆவியில் அவித்தும்சாப்பிடலாம்.நெருப்பில்சுட்டும் சாப்பிடலாம்.கேரளாவில் இந்தகொட்டைகளை நன்றாகஅரைத்து மாவாக்கி,அல்வா, லட்டு,புட்டு இப்படியெல்லாம்செய்வார்களாம். ஆனால்,பலாக்கொட்டைகளை சமைக்கும்போது, தேங்காய், சர்க்கரை, நெய்போன்றவற்றை அளவுடன்பயன்படுத்த வேண்டும்.

May 21, 2024

உடல் எடையை குறைக்க உதவும் மக்கானா கீர்

பாலில் செய்யப்படும் இனிப்பு வகைகளை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நம்மில் பலரும் இது போன்ற இனிப்பு வகைகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடுமோ என்று பயப்படுவார்கள்.  வீட்டில் சமைத்து சாப்பிடும் இனிப்பு வகைகளில் ஆரோக்கியம் அதிகம் நிறைந்துள்ளது. இந்த வரிசையில் உடல் எடையை குறைக்க உதவும் தாமரை விதைகள் என்று கூறப்படும் மக்கானாவை வைத்து சுவையான ஆரோக்கியம் நிறைந்த மக்கானா கீர் செய்வது எப்படி ?தேவையான பொருட்கள்:2 கப் மக்கானா, 1 லிட்டர் காய்ச்சிய பால்,1/4 கப் சர்க்கரை,  1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பாதாம், டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய முந்திரி,1 டேபிள் ஸ்பூன் திராட்சை, ½ டீஸ்பூன் ஏலக்காய் தூள்,  2 டேபிள் ஸ்பூன் நெய். செய்வது எப்படி?முதலில் அடுப்பில் ஒரு சிறிய கடாய் வைத்து ,ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சூடாக்கி கொள்ள வேண்டும். நெய் சூடானதும் அதில் 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து நன்றாக வறுக்கவும். முந்திரி மற்றும் பாதாம் சிறிது பொன்னிறமானதும் இதில் 1 டேபிள் ஸ்பூன் திராட்சையை சேர்த்து கிளறி விட வேண்டும். இதற்க்கு பிறகு கடாயை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில்2 கப் மக்கானாவை குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நன்கு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது நாம் வறுத்து வைத்துள்ள மக்கானா ஒன்றரை கப் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.இப்போது ஒரு கடாய் வைத்து மீதமுள்ள மக்கானாவை பால் ஊற்றி குறைந்தது ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பிறகு இதில் அரைத்து வைத்துள்ள மக்கானாவை சேர்த்து நன்கு கிளறி விடவும். இதற்கு பிறகு சீரான பதத்திற்கு வந்தவுடன் நாம் நெய்யில் வறுத்து வைத்த முந்திரி திராட்சை மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து இன்னும் சில நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும். இதற்கு பிறகு தேவையான அளவு சர்க்கரை மற்றும் பச்சை ஏலக்காய் சேர்த்து சுமார் மூன்று நிமிடங்கள் சமைத்து அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான மக்கானா கீர் தயார்.

May 20, 2024

சமையலுக்கு சிறந்த எண்ணெய் எது..?

இந்திய சமையல் அறைகளில் எண்ணெய் இன்றியமையாத ஒன்று. பெரும்பாலான இந்திய உணவு பொருட்களுக்கு எண்ணெய் தான் மூலப்பொருள். இவ்வாறு ஏராளமான மக்கள் பயன்படுத்தும் எண்ணெய்களில் எந்த எண்ணெய் சிறந்தது என பலருக்கும் குழப்பமாக இருக்கிறது.இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், எண்ணெய்களில் சிறந்தது ஆலிவ் எண்ணெய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள்நிறைந்துள்ளன.இது கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், வகை2 நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகிறது. இதுமட்டுமன்றி இது மூளைக்கும் நன்மை பயக்கும் என கூறப்படுகிறது. ஆலிவ் எண்ணெயில் லுடீன் நிறைந்துள்ளது. இது கண் ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் நல்லது.ஆலிவ் எண்ணெயில் ஆல்பாலினோலெனிக் அமிலம் உள்ளது. அது இதயத்திற்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது. வீக்கம், வாதம் ஆகிவற்றை சரிசெய்யவும் இது உதவுமாம்.இது தவிர எள் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும் நல்லது என கூறப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, எள் எண்ணெயில் ஆக்ஸிஜினேற்ற மற்றும் அழர்ச்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன என கூறப்படுகிறது.

May 19, 2024

மணத்தக்காளிக் கீரையின் அனைத்துப் பகுதிகளும் உண்பதற்கு ஏற்றவை

மணத்தக்காளிக் கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, தண்டு, காய், கனி, வேர் அனைத்துமே உபயோகப்படக்கூடியது. கசப்புத்தன்மை கொண்டது  மணத்தக்காளிக் கீரை.சருமத்தில் ஏற்படும் பிரச்னைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த கீரைகளுள் கீரையும் ஒன்று. குளிர்ச்சியை சுபாவமாகக்கொண்ட மணத்தக்காளிக் கீரை வறண்ட பகுதிகளிலும் விளையக்கூடியதுமணத்தக்காளிக் கீரையின் காய், பச்சை மணியைப் போல  இருக்கின்ற படியால் மணித்தக்காளி என்று அழைப்பார்கள். ஆகமிளகுபோல இருப்பதால் மிளகு தக்காளி என்றும் சொல்வார்கள். வறண்ட இடத்திலும் விளையும் மணத்தக்காளிக் கீரை, நீருள்ள இடங்களிலும் ஏராளமாய் செழித்து வளரும். வெள்ளை நிறத்தில் மருபூக்கள் பூக்கும். . இது பொதுவாக குப்பைகள் இருக்கும் இடத்தில் வளர கூடியது.மணத்தக்காளிக் கீரையின் அனைத்துப் பகுதிகளும் உண்பதற்கு ஏற்றவையே. இதில் அதிகளவு புரதம், மாவுச்சத்து, தாதுப்உப்புக்கள் நிறைந்துள்ளன. மணத்தக்காளிக் கீரையைப் பருப்பு சேர்த்து கூட்டு, பொரியல், குழம்பு வைக்கலாம்.மணத்தக்காளிக் கீரையினை சாறெடுத்து வாயிலிட்டு சிறிது நேரம், தொண்டையில் வைத்து, கொப்புளித் துவந்தால் வாய்ப்புண் ஆறும். கூடவே வாய் துர்நாற்றமும் நீங்கும்.மணத்தக்காளிக் கீரையின் சாறை எடுத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் பருகிவந்தால் வயிற்றுப்புண் சீக்கிரம் ஆறிவிடும். குறைந்தது பத்து நாட்களாவது பருக வேண்டும்.இதய பல வீனம் கொண்டவர்கள் வாரம் மூன்று முறை இந்த மணத்தக்காளிக் கீரையுடன் இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு கலந்து சமையல் செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலமாகும்.உடல் வலி தீரும். களைப்பை அகற்றும். உடலிலுள்ளநச்சுநீரை வெளியேற்றும். வாந்தியைப் போக்கும். இக்காயை வற்றலாக்கி வறுத்து உண்ணலாம் .காது வலியைப் போக்கும். வயிற்றுப் பொருமலை தணிக்கும். காய்ச்சலைப்போக்கும்.கருப்பப்பைக்கு வலிமை தரும்.பிரசவத்தை எளிமையாக்க உதவுகிறது.மலச்சிக்கலைப் போக்கும்.மணத்தக்காளிக் கீரையின் வேர், மூலிகை மருந்துகள் தயாரிக்க பெரும் பங்காற்றுகிறது.பொதுவாய் மணத்தக்காளிக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டுப் வந்தால், உடல் நலம் பெறுகிறது. ரத்தம் சுத்தமாகி முகம் வசீகரமாகிறது. மணத்தக்காளிக் கீரை சிறந்த மருத்துவ உணவாக நமக்கு பயன்படுகிறது. எனவே மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி பயன்படுத்துங்கள்.

May 17, 2024

சர்க்கரை நோயை கட்டுக்குள்வைத்திருக்க உதவும், இயற்கையான உணவுகள்

கசப்பு நிறைந்தஇலைகள், சிலவகைநோய்களுக்கு அருமருந்தாகின்றன..குறிப்பாக, ரத்தத்தில்இன்சுலின் அளவைகட்டுப்படுத்தவும் இதுபோன்றகசப்பு இலைகள்உதவுகின்றன..உதாரணத்துக்குமுருங்கைக்கீரை, வேப்பிலை, கறிவேப்பிலை, அகத்திக்கீரையைசொல்லலாம். இதில், மாவிலையையும் சேர்த்துகொள்ளலாம். வெறும்வயிற்றில் நான்கைந்துஇலைகளை மென்றுவிழுங்குவது, ரத்தத்தில்சர்க்கரையின் அளவைசீராக வைத்திருக்கஉதவுகிறதாம்..அமிர்தவல்லிஇலையை . டீ போலதயாரித்து குடிக்கலாம்,அல்லது ஜூஸ்தயாரித்தும் குடிக்கலாம்அல்லது கறிவேப்பிலையைபோல, இந்தஇலையையும் கழுவி, மென்று சாப்பிடலாம்.ரத்தத்தில் உள்ளஇன்சுலின் அளவைகட்டுப்படுத்த இந்தஇலையும் உதவுகிறது. இந்த அமிர்தவல்லிஇலையை பவுடராக்கி, ஒரு கிளாஸ்தண்ணீரில், ஒருஸ்பூன் கலந்துஇரவு தூங்கும்முன்பு ஊறவைத்துவிடவேண்டும். மறுநாள்காலை எழுந்ததுமேகுடித்து வந்தால்நீரிழிவு நோய்கட்டுக்குள் இருக்கும். ஆனால், இதுபோன்றுஉள்ளுக்குள் மருந்தாகஎடுத்து கொள்ளும்போதுடாக்டர்களின் ஆலோசனையைபெறுவது கட்டாயமாகும்.நாவல் கொட்டைகளும்நீரிழிவு நோயாளிகளுக்குமிகச்சிறந்த மருந்தாகின்றன..நாவல் கொட்டையைதூள் செய்து, சாப்பிட்டு வருபவர்களைபரிசோதனை செய்ததில்அவர்களது சர்க்கரைஅளவும், சிறுநீரில்வெளியேறிய சர்க்கரைஅளவும் குறைந்திருந்ததாம். நாவல் பழத்தின்கொட்டைகளை,7 நாட்கள்நிழலில் காயவைத்து, அதை இரண்டாகஉடைத்து வெயிலில்காய விடவேண்டும்.. இந்தகொட்டைக்குள் காணப்படும்பச்சை நிறம்முழுமையாக காயவேண்டும். இந்தகொட்டைகளை மிக்ஸியில்அரைத்து, சலித்துகொள்ள வேண்டும். இதில், தினமும்2 வேளை, ஒருடீஸ்பூன் அளவுவெந்நீரில் கலந்துகுடித்து வந்தால், ஒரு மாதத்தில்சர்க்கரையின் அளவுகட்டுக்குள் வந்துவிடும். நாவல் கொட்டைபவுடரை, மருத்துவரின்முறையான ஆலோசனையைபெற்று சாப்பிட்டு, பயனடையலாம்.சர்க்கரையை கட்டுக்குள்வைத்திருக்க, கருஞ்சீரகவிதைகளும் உதவுகின்றன.. இதற்கு முக்கியகாரணம், இந்தவிதையிலுள்ள தைமோகுயினன்என்ற பொருள்தான்.. எனவே, ரத்தத்தில்சர்க்கரையின் அளவுஅதிகரித்துவிட்டால், எதிர்ப்புசக்தி நிறைந்தஇந்த கருஞ்சீரகத்தைபயன்படுத்தலாம்.. இந்தகருஞ்சீரகத்தை அரைத்து, ஒரு டம்ளர்தண்ணீரில், கால்டீஸ்பூன் அளவுகலந்து சாப்பிட்டுவந்தாலும், ரத்தசர்க்கரை அளவுகட்டுக்குள் வரும்.. ஆனால், சர்க்கரைஅளவு கட்டுக்குள்இருப்பவர்கள், கருஞ்சீரகத்தைதொடர்ந்து எடுத்துகொள்ள கூடாது. இதனால், ரத்தத்தில்சர்க்கரை அளவுகுறைந்துவிடும். எனவே, மருத்துவர்களின் ஆலோசனையைபெற்றே இதனைபயன்படுத்த வேண்டும்.

May 16, 2024

மூளைக்குள் கட்டி (Brain Tumor) நோய் வருவதைத் தடுக்க.....

உடலின் மற்ற பாகங்களில் வரும் நோய்களை விட மூளைக்குள் ஏதாவது பிரச்னை என்றால் அதைக் குணப்படுத்துவது ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது. மூளைக்குள் கட்டி(BrainTumor) என்ற அபாயகரமான நோய் வருவதைத் தடுக்க நாம் உண்ண வேண்டிய உணவுகள் . ஒரு நோய் வந்த பின் அதைக் குணப்படுத்துவதை விட, அது வராமல் தடுப்பதே நலம் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அடங்கிய ஸ்ட்ரா பெரி, ப்ளூ பெரி, ராஸ் பெரி, பிளாக் பெரி போன்ற பெரி வகைப் பழங்கள்.லைக்கோபீன் என்றொரு கூட்டுப்பொருள் தக்காளியில் மிக அதிகம் உள்ளது. இது உடலில் கட்டிகளும் கேன்சரும் உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.காலிஃபிளவர், புரோக்கோலி, பிரஸ்ஸல் ஸ்பிரௌட் போன்ற க்ரூஸிஃபெரஸ் காய்கறிகள் உடல் மற்றும் மூளையின் ஆரோக்கியம் காக்க மிக அதிக அளவில் உதவி புரிபவை.மூளை ஆரோக்கியத்தை அதிகளவு மேம்படுத்தவும், ஒட்டுமொத்த உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும் உதவக் கூடியது மஞ்சள் என்ற மசாலாப் பொருள்.பீன்ஸ் காயானது உடலில் கட்டிகளும் கேன்சரும் உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளதோடு, ஏற்கெனவே கேன்சர் நோயாளியாயிருந்து குணமான ஒருவருக்கு மீண்டும் அந்நோய்த் தாக்குதல் வராமலிருக்கவும் பாதுகாப்பளிக்கிறது.பாதாம், வால் நட், பிஸ்தா போன்ற தாவர விதைக் கொட்டைகள் மூளையில் கேன்சர் கட்டிகள் உருவாகும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தக்கூடியவை. மேலும் மூளையில் உண்டாகும் வேறு எந்தவிதமான கோளாறுகளுக்கும் தீர்வு அளிக்கும் வல்லமையும் கொண்டவை . மூளை உள்பட, உடலின் எந்த பகுதியிலும் உற்பத்தியாகும் கேன்சர் செல்களை முற்றிலும் அழிக்கக்கூடிய சக்தி பூண்டில் உள்ள அல்லிசின் (Allicin) என்ற பொருளுக்கு உண்டு.மூளைக்குள் கேன்சர் செல் வளர்வதைத் தடுத்து நிறுத்தி அவற்றை அழிக்கக்கூடிய வல்லமை கொண்டது ஃபிளாக்ஸ் விதைகள் (Flax seeds).மூளைக்குள் கட்டி(BrainTumor) நோய் வருவதைத் தடுக்க உணவுகளைத் தினசரி நாம் எடுத்துக்கொள்ளும் உணவுடன் சேர்த்து உட்கொண்டு நம் மூளை மற்றும் உடலின் ஆரோக்கியம் காப்போம்.

1 2 ... 26 27 28 29 30 31 32 ... 35 36

AD's



More News