வெண்டைக்காய் வறுவல்
தேவையான பொருட்கள் - வெண்டைக்காய் - அரை கிலோ, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கடலை மாவு -2 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு.
செய்முறை:
வெண்டைக்காயைத் தண்ணீரில் நன்கு கழுவித் துடைக்கவும். ஈரமே இருக்கக்கூடாது. வெண்டைக்காயின்தலைப்பகுதியையும், வால் பகுதியையும் நீக்கிவிட்டு இரண்டாகக் கீறவும் .நடுவில் இருக்கும் விதைகளைக் கூடியமட்டும் நீக்கவும். மேலும் மெல்லிசாக நீளவாக்கில் நறுக்கவும். இப்படியே எல்லா வெண்டைக்காய்களையும் நறுக்கிய பிறகு.மசாலாப் பொருட்கள், கடலை மாவு, அரிசி மாவு. தேவையான உப்பு சேர்த்து நன்கு கைகளால் கலக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசைந்தால், மசாலாக் கலவை வெண்டைக்காய்களுடன் நன்கு ஒட்டிவிடும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன், வெண்டைக்காய்களை எடுத்துச் சிறிது சிறிதாக உதிர்த்துப் போட்டு வேக வைக்கவும். இருபுறமும் திருப்பிப்போட்டு எடுக்கவும். மொறுமொறுப்பான சுவையான வெண்டைக்காய் வறுவல் ரெடி.
0
Leave a Reply