சுரைக்காயில்சுமார்90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. வைட்டமின் ஏ, பி, சி, ஈ, கே, இரும்பு, போலேட், மெக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற'சத்துக்கள் அதிகம் உள்ளதால் இதயத்தை பராமரிக்கிறது.சுரைக்காயையும், சிறிது புதினா இலைகளையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் சிறிது இஞ்சி,ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் ஆகியவற்றையும் சேர் க்கவும்.அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலக்கி, அதை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது கல்உப்பு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.இவ்வாறு தயாரித்த சுரைக்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தையும் பராமரிக்கிறது.சருமம் பளபளப்பாக இருக்க உதவும்..இஞ்சியை தோல் சீவி, கழுவி சுத்தம் செய்து, துருவி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கண்ணாடி பாட்டிலில், இந்த துருவிய இஞ்சி, சீரகப்பொடி, எலுமிச்சை சாறு மற்றும் கல் உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்க வேண்டும்.இந்த கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்தால் இஞ்சி ஜூஸ் ரெடி. இதனை மூன்று வேளை உணவு எடுத்துக் கொள்வதற்கு, அரை மணி நேரத்திற்குமுன்னதாக எடுத்துக்கொண்டால் நல்ல ப லன் கிடைக்கும்.இஞ்சி ஜூஸ் குடித்து வந்தால், அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம், வாய்வு தொல்லைஆகியவைநீங்கி'ஜீரணசக்திஅதிகரிக்கும்.அதேபோல் இது உடலில் கெட்ட கொழுப்புகளை தங்கவிடாமல் உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.
மூக்கிரட்டை கீரை வீட்டை சுற்றியும், சாலையோரங்களிலும், வயல் வெளிகளிலும் தரையில் படர்ந்திருக்கும்.சிறுநீரகம் மற்றும் மூலம் ஆகிய 2 பிரச்சனைகளுக்கும் தீர்வு காண இந்த மூக்கிரட்டை கீரையை தொடர்ந்து சாப்பிடலாம்.மூக்கிரட்டை கீரையை சுத்தம் செய்து அம்மியில் மை போல அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து வாயில் போட்டு விழுங்கி வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும்.இப்படி காலை மாலை என தினமும்2 வேளை சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். அதேபோல, மூலக்கட்டி இருந்தாலும் சுருங்கி குணமாகும்.இந்த கீரையுடன் அதன் தண்டுகளையும் சேர்த்து, நறுக்கி ஒரு பாத்திரத்தில்4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அது ஒரு டம்ளர் வரும்வரை காய்ச்சி குடித்தால் சிறுநீரகத்துக்கு நல்லது.சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், தொற்றுநோய்கள் இருந்தாலும் இந்த கீரை அதை குணப்படுத்திவிடும்.மஞ்சள் காமலை இருப்பவர்கள் கீழாநெல்லியுடன் இந்த கீரையை சேர்த்து சாப்பிடலாம்.இந்த இலைகளை பேஸ்ட் போல அரைத்து கண்களில் தடவ கண் இமை வீக்கம் குணமாகும். இந்த வேரை உலர்த்தி பொடி செய்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் கண் நோய்கள் குணமாகும்.இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், உடல் எடையில் மாற்றம் காணலாம்.மூக்கிரட்டை பொடியானது சிறந்த மலமிளக்கியாகவும்செயல்படுகிறது. மேலும் சில வகையான புற்றுநோய்கள் தீவிரமாவதையும் குறைக்க உதவுகிறது.
முட்டைகோஸில், வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, இ, சி, கே, கால்சியம், அயோடின், பொட்டாசியம், சல்பர், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள், தாதுக்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன.முட்டைக்கோஸை பொடிபொடியாக நறுக்கி அதனுடன் சிறிது இஞ்சி, சீரகம், கல் உப்பு, எலுமிச்சம் சாறு, மிளகுதூள், புதினா இலைகளுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து ஜூஸை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.முட்டைகோஸ் ஜூசில், குறைவான கலோரியே உள்ளதால், உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கப் பயன்படுகிறது.அல்சர் உள்ளோர், முட்டைகோஸ் தண்ணீர் அருந்தி வருவதால், விரைவில் குணமாகும். மேலும் இது வியர்வைப் பெருக்கியாக செயல்படுகிறது. சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.முட்டைகோஸ் ஜூசில் அதிகப்படியான, 'ஐசோசியனேட்' இருப்பதால், இவை நுரையீரல், வயிறு போன்ற இடங்களில் புற்றுநோய் பாதிப்பு உண்டாவதை தடுக்கின்றன.முட்டைகோஸ் ஜூஸ் தொடர்ந்து குடித்து வருவதால், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி இளமையுடன் இருக்க உதவும். மருகரும்புள்ளிகள், பருக்கள் போன்ற சரும பிரச்னைகளுக்கு, நல்ல பலன் தரும்.சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால், எலும்புகளும், பற்களும் உறுதியாகிறது. தலைமுடி உதிர்வதை குறைக்கிறது.
வில்வத்தில் ஏஜிலைன், மார்மின், மார்மிலோசில் போன்ற மருத்துவ வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இதன் இலை, பட்டை, காய், பழம், வேர் என, அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.வில்வ இலையில் துவர்ப்பு சத்து அதிகம். வில்வ இலையை வதக்கி, வீக்கங்களுக்கு கட்டினால், வலி மற்றும் வீக்கம் குறையும் வயிற்றில் உண்டாகும் புண்கள் மற்றும் புற்றுநோயை வில்வ இலைச் சாறு குணப்படுத்துகிறது. வயிற்று சவ்வுகளில் உள்ள புண்களை ஆற்றும் அற்புத சக்தி வில்வத்திற்கு உண்டு.வாதம் மற்றும் கப நோய்களை தீர்க்கிறது. மேலும், உடலில் உள்ள பித்தத்தை சமன்படுத்துவதோடு, ஜீரண சக்தியையும் மேம்படுத்துகிறது.ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால், நீரிழிவு பாதிப்புக்கான மருந்துகளில் வில்வம் அதிகம் சேர்க்கப்படுகிறது.மேலும், இதை கண்களுக்கு மேல் ஒத்தடம் கொடுத்தால், கண் சிவப்பு, வலி, வீக்கம் குறையும். வில்வ இலையை அரைத்து, 10 மி.லி, அளவு எடுத்து, 50 மி.லி, தயிரில் கலந்து குடித்தால், வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.வில்வ காயை வெயிலில் காய வைத்து, அதை எரித்து கரியாக்கி, பொடி செய்து தினமும் பல் துலக்கி வந்தால், பற்களில் உண்டாகும் நோய்களை போக்கும்.வில்வ மரத்தின் பட்டையை நீரில் கொதிக்க வைத்து, வடி கட்டி, காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு கொடுக்கலாம். இது, எல்லாவித காய்ச்சல்களையும் கட்டுக்குள் கொண்டு வரும்.
கோதுமைப்புல்பொடியானது உணவு செரிப்பதை எளிதாக்குகிறது. சிவப்பணு மற்றும் வெள்ளையணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.எடை குறைப்பில் உதவுகிறது.இரத்தத்தில்pH அளவை சமப்படுத்துகிறது. அற்புதமான நச்சு நீக்கும் தன்மை உள்ளது.இரத்த சோகையை குணப்படுத்துகிறது. கோதுமைப்புல் பொடிக்கு கிருமி நாசினித் தன்மை உள்ளதால், இதை புண்கள், காயங்கள், வெடிப்புகள், பூச்சிக்கடிகள், வெட்டுக்காயங்கள், சிராய்ப்புகள் ஆகியவற்றைக் குணப்படுத்த பயன்படுத்தலாம். கோதுமைப்புல் பொடியைக் கொண்டு, ஈறுகளை மசாஜ் செய்து வந்தால், ஈறுகள் வலிமையடைந்து, ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். வீட் கிராஸ் பவுடரைத் தவறாமல் சாப்பிட்டு வந்தால், கண்கள் பார்வை பொலிவு பெறும். இரத்தநாளங்கள்தடிப்புறுவதைத்தடுக்கிறது. இரத்தத்தைசுத்திகரிக்கிறது. கருவுறும்வாய்ப்பைஅதிகரிக்கிறது..இதிலுள்ள குளோரோபில் கதிரியக்கங்களின் தீமையைக் குறைக்கிறது. எனவே ஹீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி மருத்துவத்தை மேற்கொள்ளும் புற்றுநோயாளிகள், வீட்கிராஸ் பவுடரை உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. சர்க்கரைநோயை, அது எந்த நிலையில் இருந்தாலும், கட்டுப்படுத்துவதில் இது சிறப்பிடம் வகிக்கிறது. மிகவும் பயன் தரக்கூடிய சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால், வீட் கிராஸ் பவுடரானது மூல நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கையான நிவாரணியாகக் கருதப்படுகிறது. கோதுமைப்புல்பொடிக்கு கிருமி நாசினித் தன்மை உள்ளதால், இதை புண்கள், காயங்கள், வெடிப்புகள், பூச்சிக்கடிகள், வெட்டுக்காயங்கள், சிராய்ப்புகள் ஆகியவற்றைக் குணப்படுத்த பயன்படுத்தலாம். மேலும் தேமலை நீக்கவும் இது பயன்படுகிறது. வெயிலால் கருமையடைந்த சருமம், கொப்புளங்கள் மற்றும் பித்தவெடிப்புகளைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.
ஆஸ்துமா நோயாளிகள் முறையாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது அவசியம். வாகனம் ஓட்டும் போதும். சமையல் செய்யும் போதும், ஒட்டடை அடிக்கும் போதும் துணியால் முகத்தை மூடிக்கொள்வது அவசியம் ஆஸ்துமா நோயாளிகள் மருத்துவரிடம் தாங்கள் பிற நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளைக் காட்டுவது மிக முக்கியம்.யோகா பயிற்சி அவசியம். சரியாக உட்காரும். உறங்கும் முறைகள் தெரிய வேண்டும். தொப்பை, உடல் பருமனைக் குறைக்கவும். மன தைரியம், உற்சாகம், ஊக்கம் ஆகியவற்றை ஆலோசனை மூலம் அதிகரித்தல் வேண்டும். ஆஸ்துமா சிகிச்சையை மருத்துவரின் அனுமதியோடு மட்டுமே தொடங்க வேண்டும். தேவைப்படும் போது நீராவி பிடித்தல்.சைனஸ்,வயிறு எரிச்சல் போன்றவை தீர்க்கப்பட வேண்டும். இன்ப்ளுயன்சா, நிமோனியா தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். மருந்துப் பம்புகள் உபயோகிக்கும் முறையைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். தேவையெனில் சக்கர நாற்காலியை உபயோகிக்கத் தயங்கக்கூடாது. காற்றோட்டமான அறை, வீடு அவசியம். வீட்டில் அவசர உதவிக்கு அழைப்பு மணி (Alaram) தேவை.
இயற்கையாகவே இனிப்புச் சுவை உடைய. கேரட்டைச் சமைத்து உண்பதை விடப் பச்சையாகச் சாப்பிடும்போது அதில் உள்ள பெரும்பாலான சத்துகள் விரயமாகாமல் உடலுக்குள் போகும்.பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, பாஸ்பரஸ் ஆகியசத்துகள் இதில் நிறைய இருக்கின்றன. பொட்டாசியம், ஃபோலிக் அமலம், கோலின், கால்ஷியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சி ஆகியவை ஓரளவும், மிகக் குறைந்த அளவு இரும்புச்சத்தும் கேரட்டில் இருக்கிறது. கண் பார்வை கூர்மையடையவும், தோல் மற்றும் எலும்பு உறுதி ஆகவும், ரத்த விருத்திக்கும் இது மிகவும் நல்லது.வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் ஆரோக்கியமான கண்ணுக்கும், சருமத்துக்கும், உடல் வளரச்சிக்கும் மிகவும் உதவுகிறது.இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பைக் கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு அகலும், மேலும் குடல் புண் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைப்பதால் இதய நோய்களை அண்டவே விடாது. கேரட்டில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுவதால் வாரத்தில் இரண்டு நாட்களாவது சமையலில் கேரட்டைப் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. பக்கவாதத்தை அண்டவிடாது.
கோதுமைப்புல் உடல் சிறப்பாக இயங்குவதற்குத் தேவையான19 அமினோ அமிலங்களும்,92 தாதுக்களும், ஆரோக்கிய மற்றும் மருத்துவத் தன்மைகளைக் கொண்டுள்ளது. செயற்கையாக ஒளியூட்டப்பட்ட உள்கூடங்களிலும், கண்ணாடிக் கூரை பொருத்தப்பட்ட கூடங்களிலும் இது பயிரிடப்படுகிறது. கோதுமைப்புல் பொடிவீட் கிராஸ் பவுடர் என்பது கோதுமைப்புல்லின் இலைகளை அரைத்து சாறெடுத்து, பின் அதை உலர வைத்து பொடி செய்யப்படும் ஒரு உணவுப்பொருளாகும். வயலில் இயற்கையாக வளர்ந்துள்ள மூன்று மாதம் நிரம்பிய கோதுமைப்புல்லின் இலைகளை சாறு எடுத்து, நீர்ப்பதம் போக நன்கு உலர வைத்து, அதிலிருந்து கோதுமைப்புல் பொடி தயாரிக்கப்படுகிறது. இதில் குளோரோஃபில்(chlorophyll) என்னும் பச்சையமும் மிகவும் அதிகமாக நிரம்பியுள்ளது. கோதுமையில் இருப்பது போன்று, இதில் க்ளூட்டன்(gluten) என்பது இல்லாதது ஒரு சிறப்பம்சமாகும். கோதுமைப்புல் பொடியை தண்ணீரில் கலந்து, சத்து பானமாகவும் அல்லது வேறு ஏதாவது ஜூஸ்களில் கலந்தும் அருந்தலாம். கோதுமைப்புல் செடியில் உள்ள அனைத்து சத்துக்களும், கோதுமைப்புல் சாற்றிலும் உள்ளன.
தசாங்கத்தில் உள்ள பொருட்கள்: 1. வெட்டி வேர் 2. லவங்கம் 3. வெள்ளை குங்குலியம் 4 ஜாதிக்காய் 5. மட்டிப்பால் 6. சந்தான தூள் 7 நாட்டு சர்க்கரை 8. திருவட்ட பச்சை 9. சாம்பிராணி 10 கீச்சிலி கிழங்கு இந்த தசாங்கத்தின் புகையானது உடலின் பல்வேறு உள்உறுப்புகளின் வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதன் நறுமணமே தெய்வீக உணர்வை உண்டாக்குபவையாக இருக்கும். துஷ்ட சக்திகளை இதன் புகை விரட்டி விடும். திருஷ்டி கழிக்க உபயோகிக்கலாம்.இதன் புகையை நுகர்வதால் நம் உடலும்,மனமும் சோம்பேறித்தனம் நீங்கி சுறுசுறுப்பு அடைந்து விடும். வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தால் அனைத்தும் மாயமாய் மறைந்தே போகும். இதற்கு அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த சக்தி இருக்கிறது.கோவில்களில் இருக்கும் நறுமணம், நமது வீட்டிலும் நறுமணம் நிறைந்து இருக்கும் உங்கள் தெருவே மணக்கும் .
நியூரான்கள், நரம்பு திசுக்களைபாதிக்க துவங்கும்போது, நரம்புதளர்ச்சி நோய் ஏற்படுகிறது. நரம்பு தளர்ச்சிநோய் உள்ளது என்பதைஎளிதாக கண்டுபிடிக்க வேண்டும். இதுநபருக்கு நபர் மாறுபடும். சிலருக்குகை, கால், தாடைகளில்நடுக்கம் ஏற்படும்.அன்றாட வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருக்க முடியாது. வேகமாக எதையும் செய்ய முடியாது. வேகமாக நடக்க முடியாது. நடக்கும்போது தள்ளாட்டம் ஏற்படும். சிலருக்கு ஒரு விரல் ஆடும். அதிகளவில் நடுக்கம். தூங்கி எழும்போதோ அல்லது சேரில் இருந்து எழும்போதோ அவர்களால் சட்டென்று நேராக நிற்க முடியாது. கால் தரையில் படாமல் இருக்கும்.தொடர்ந்து நடக்கும்போதுதான் பாதம் தரையில் படுவதையே அவர்களால் உணர முடியும். முகத்தில் உணர்வு இருக்காது. கை-கால் வலி, வீக்கம் இருக்கும். அவர்களால் ஒரு செயலை சரியாக செய்ய முடியாது. இவை நரம்பு தளர்ச்சியின் அறிகுறிகள்தேவையான பொருட்கள்மிளகு – ஒரு ஸ்பூன்திப்பிலி – ஒரு ஸ்பூன்சுக்குப்பொடி -ஒரு ஸ்பூன்செய்முறை - மிளகு, திப்பிலி இரண்டையும் நுணுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அப்படியே பருகலாம்.தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்தும் பருகலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள், அவற்றை தவிர்ப்பது நல்லது.காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் பருகிய பின்னர் இதை பருகலாம். இதைவழக்கமாக சாப்பிட வேண்டும். 10 நாளில்மாற்றம் தெரியும்.நரம்பு தளர்ச்சியின் அறிகுறிகள் படிபடிப்படியாக குறைவதை காணலாம். இதை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.இதில் உள்ள3 பொருட்களும் நரம்பு மண்டலத்தை நன்றாக வலுப்பெறச்செய்யும். நரம்பு பிரச்னைகளை சரிசெய்து, நரம்பு தளர்ச்சி நோயை முற்றிலும் சரிசெய்யும். அனைவரும் பருகலாம். நரம்பு தளர்ச்சியால் அவதிப்பெறுபவர்களுக்கு சிறந்த பலனைத்தரும்.இந்த மூன்று பொருட்களும் இயற்கையானதுதான் என்பதால், இது எவ்வித பக்கவிளைவையும் தராது. இயற்கை நிவாரணங்களை தேடிச்செல்லவேண்டும். அது பலனளிக்கவில்லையென்றால் மட்டுமே மருத்துவரை அணுகுவது சிறந்தது.