மருத்துவ பண்புகள் அடங்கிய சீத்தாப்பழ விதை
சீத்தாப்பழமானது அமெரிக்கா மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு சிறிய மரம்.
சீத்தாபழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என அனைத்துமே அரிய மருத்துவ பண்புகள் அடங்கியுள்ளது.
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான இரும்புசத்து, பாஸ்பரஸ், நீர்ச்சத்து, மாவுசத்து போன்றவை காணப் படுகிறது.
உடலில் உள்ள புண்கள் ஆற, இதின் இலைகளை அரைத்து புண்களின் மேல் பூசினால், விரைவில் புண் ஆறும்.
விதைகளை பவுடராக்கி 2 நாள் தொடர்ந்து தூவினால் எறும்பு, கரப்பான் பூச்சி, பல்லி, கொசு தொல்லையை விரட்டலாம்.
கருவை கலைக்கும் அளவுக்கு விதைகளுக்கு சக்தி உள்ளது.
நன்மை தரும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்க முடியும்.
குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
2,3 முறை பழத்தை சாப்பிட்டுவந்தால் எலும்பு மற்றும் பல்லும் உறுதியாகும், காசநோய் மட்டுப்படும்.
பழத்தின் விதையை பொடியாக்கி, அதே அளவில் சிறுபயிறு மாவு சேர்த்து தலை தேய்த்து குளித்துவர பேன்கள் ஒழிந்துவிடும், முடி பளபளப்பாகும்.
முகத்தில் அடிக்கடி வரும் பருக்களை நீக்க, பழத்தின் சதையோடு சிறிது உப்பு சேர்த்து பருக்கள் மேல் பூசிவர, பருக்கள் உடைந்து சீக்கிரம் ஆறிவிடும்.
விதையின் பொடியோடு கடலைமாவு, சிறிது எலுமிச்சைசாறு கலந்து, குளித்துவர முடி உதிர்வதை தடுக்கும்.
0
Leave a Reply