நமது உடலின்இரண்டாவது பெரியஉறுப்பு கல்லீரல்.இது கழிவுகளைவெளியேற்றவும், உணவைஜீரணிக்கவும், ரத்தம்உறைவதற்கு உதவும்புரதங்களின் உற்பத்தியையும்செய்வதுடன் ஹார்மோன்களைசீர் செய்வதுபோன்ற பலவகையான வேலைகளைசெய்கிறது. எனவேஇதயம், நுரையீரல்,சிறுநீரகம் போன்றஉறுப்புகளுக்கு கொடுக்கும்அதே முக்கியத்துவத்தைகல்லீரலுக்கும் கொடுக்கவேண்டும் என்றுமருத்துவர்கள் கூறுகின்றனர்.ஏனெனில் உடலில்ஏற்படும்90 சதவீதநோய்களுக்கு கல்லீரலில்ஏற்படும் பிரச்சனைகள்தான் காரணமாகின்றன.உடலில் டீடாக்ஸ் பேக்டரியாக செயல்படும் கல்லீரல், உடலின் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நமது செரிமான அமைப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். இல்லையெனில் கல்லீரல் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.கல்லீரல் பாதிப்பை சில அறிகுறிகள்.கல்லீரலில் பிரச்சனை ஏற்படுமாயின் நச்சுக்கள் சரியாக வெளியேறாமல் வயிறு பெருத்து காணப்படுவதுடன் வயிற்றுப் பகுதியில் வீக்கமும் ஏற்படும்.பாதங்கள் வீங்குதல், பாதங்களில் கூச்ச உணர்வு ஏற்படுவது போன்றவை தோன்றும்.செரிமானத்தில் கல்லீரல் முக்கிய பங்கு வகிப்பதால், அது செயல்படாமல் இருக்கும்போது வயிற்றுப்போக்கு உண்டாகும்.தோல் அரிப்பு, கை கால்கள் வீங்குவது போன்றவை உண்டாகும்.கவனமின்மை, நினைவாற்றல் இழப்புபசியின்மை எடை இழப்பு, வயிற்று வலி, குமட்டல் போன்றவை ஏற்படும்.கல்லீரல் நன்றாக இயங்க சாப்பிட வேண்டியவை:நெல்லிக்காய், இஞ்சி, பீட்ரூட், மஞ்சள், திராட்சை , வால்நட் போன்றவை கல்லீரலை பாதுகாக்க உதவும்.தினமும் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதால் ஹெப்பாடிட்டிஸ் பி மற்றும் சி ஆகியவற்றிற்கு காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது.கல்லீரல் நோய்க்கு பப்பாளி பழம் சிறந்த மருந்தாகும். பப்பாளி பழத்துடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து ஜூஸாக பருக நல்ல பலன் கிடைக்கும்.கீரை சூப், கேரட் ஜூஸ் பருகலாம்.அதிமதுரப் பொடியை டீத்தூளுடன் கலந்து, டீ தயாரித்து பருக சிறந்தது. சில கல்லீரல் நோய்களுக்கு அதிமதுரம் சிறந்த ஆயுர்வேத மருந்தாகும்.கல்லீரல் சுத்தமாக, ஆப்பிள் சீடர் வினிகரை தினம் இரு முறை ஒரு கப் நீரில் ஒரு ஸ்பூன் அளவில் கலந்து பருகுவது நல்லது.முட்டைகோஸ், வெங்காயம், பூண்டு, ப்ராக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றில் உள்ள சல்ஃபர் என்சைம் உற்பத்தியை அதிகரித்து உடலின் நச்சுக்களை நீக்க உதவுகிறது.ஆரம்பக் கட்டத்தில்இருக்கும் கல்லீரல்நோய்களுக்கு மருத்துவரின்ஆலோசனைப்படி மருந்துமற்றும் வாழ்க்கைமுறையை மாற்றுவதன்மூலம் குணப்படுத்தமுடியும். எனவேகல்லீரல் பாதிப்புக்கானஅறிகுறிகள் தெரிந்தால்தகுந்த மருத்துவரைகலந்தாலோசிப்பது நல்லது
கோடையின் வெப்ப அலையை சமாளிக்கவும் உடலை நீரேற்றத்துடன் வைக்கவும் வித விதமான பழச் சாறுகளை அருந்தியும் வருகிறோம். அவற்றுள் நம் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் பல வகையான ஆரோக்கிய நன்மைகளையும் தரக்கூடியது கரும்பு ஜூஸ். கரும்பு ஜூஸில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, வைட்டமின்A,C,B1,B2,B3,B5,B6 ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. கரும்பு ஜூஸ் குடிப்பதால் உடலின் மொத்த ஆரோக்கியமும் மேம்படும்.கோடைக் காலங்களில் மேற்கொள்ளும் உடற்பயிற்சிக்குப் பின் கரும்பு ஜூஸ் அருந்துவது உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவும். வியர்வை மூலம் வெளியேறும் எலக்ட்ரோலைட்களையும் நீர்ச் சத்தையும் மீண்டும் இட்டு நிரப்பக் கூடியது கரும்பு ஜூஸ்கரும்பு ஜூஸிலிருக்கும் இயற்கையான இனிப்புச் சத்தானது உடனடி சக்தியைத் தரும். காஃபின் மற்றும் செயற்கை இனிப்பூட்டி இல்லாமலே உடல் சோர்வை நீக்க உதவும். கரும்பு ஜூஸில் உள்ள இயற்கையான என்சைம்கள் சிறப்பான செரிமானத்துக்கு உதவி புரிகின்றன.கரும்பு ஜூஸில் ஹெபடோப்ரொடெக்டிவ்(Hepatoprotective) குணம் உள்ளது. இது கல்லீரலில் சிதைவு ஏற்படுவதை தடுக்க உதவும்; கல்லீரலின் இயக்கம் சிறப்பாக நடைபெறவும் உதவும்.கரும்பு ஜூஸில் உள்ள மல்டிபிள் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி வலுவடைய உதவுகின்றன. இதனால் உடலைத் தாக்கும் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி ஜெயிக்க உடலுக்கு போதுமான அளவு சக்தி கிடைக்கிறது.கோடைக் காலத்தில் அனைத்துத் தரப்பினரும் சுலபமாக வாங்கி அருந்தும் விதத்தில் இதன் விலையும் குறைவு. எனவே, அனைவரும் கரும்பு ஜூஸ் அருந்தி ஆரோக்கியம் பெறுவோம்.
முகம் எங்கும் அரிப்பும், எரிச்சலும் வெயிலின் தாக்கத்தால் சிலருக்கு தோன்றக்கூடும். இதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்யலாம்.ஒரு கைப்பிடி நிறைய துளசி இலைகளை பறித்து நீரில் அலசி விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். முகத்தை கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை முகம், கழுத்து, கைகளில் தேய்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள குளிர்ச்சி சரும அரிப்பை நீக்கிவிடும்.தேங்காய் எண்ணெய் சருமத்துக்கு நன்மை செய்யக் கூடியது. மேலும். நமைச்சல் அரிப்பு போன்றவற்றுக்கும் நல்ல ஒரு மாற்றாக இருக்கும். தினமும் குளிக்கும் முன்பு முகம், கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களில் தேங்காய் எண்ணெய் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் சரும அரிப்பு குணமாகும்.ஓட்ஸில் உள்ள சரும அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அரிப்புக்கு மருந்தாக அமைகிறது. சரும எரிச்சலையும் தடுக்கிறது. இரண்டு ஸ்பூன் ஓட்ஸை குளிக்கும் நீரில் கலந்து விடவும்.15 நிமிடங்கள் கழித்து அந்தத் தண்ணீரில் குளித்தால் சருமத்திற்கு இதமாக இருக்கும். ஆப்பிள் சீடர்வினிகரில்உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் மற்றும் சரும அலர்ஜி எதிர்ப்பு திறன் தொற்று நோய்களை தடுக்க உதவும். அரிப்புகளையும் குறைக்கும். ஒரு பெரிய பக்கெட் குளிக்கும் நீரில் ஐந்து ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி கலக்கவும். அரை மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் குளித்து வந்தால் சரும அரிப்பு சரியாகும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வினிகரைக் கலந்து அதில் காட்டனை நினைத்து சருமத்தின் மீது தடவலாம். இதனாலும் சரும அரிப்பு சரியாகும்.முகத்தை வெறும் தண்ணீரில் கழுவி விட்டு சுத்தமான தயிரை முகம், கழுத்து, கை, கால்களில் தடவி விடவும்.15 நிமிடம் கழித்து முகம் மற்றும் கை, கால்களை சோப்பு போட்டு அலசவும். சரும அரிப்பு மற்றும் எரிச்சலும் விரைவில் குணமாகும்.
.நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் நிறைந்தவை சுண்டைக்காய்கள்.. இந்த காய் பச்சையாக இருந்தாலும் பலன்தரும். காய்ந்து போனாலும் பலன் தரும். பழுத்து போனாலும் பலன் தரும். இதன் இலைகளும் பலன் தரும்.வயிற்றுப்புண்களை ஆற்றுவதற்கு சுண்டைக்காய் இலைகள் உபயோகமாகின்றன.. சுண்டை பழங்களை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால்தலைவலிஉடனேநிற்கும்.துவர்ப்பும், லேசான கசப்புத்தன்மை நிறைந்த இந்த காய்கள், சர்க்கரை நோயாளிகள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு அருமருந்தாகும். எனவே, பச்சை சுண்டைக்காயை கூடுமானவரை பயன்படுத்தலாம்.. சுண்டைக்காய் கிடைக்காத சமயங்களில் வேண்டுமானால், சுண்டை வற்றலை பயன்படுத்திக்கொள்ளலாம்.. சுண்டைக்காய் வற்றலை வீட்டிலேயே நாம் தயார் செய்யலாம். முற்றின சுண்டைக்காயை நசுக்கி உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து, பிறகு அதனை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்து கொள்ளலாம்.அல்லது சுண்டைக்காயை நன்றாக நசுக்கி அதனை சுடுநீரில்5 நிமிடம் போட்டு எடுத்துவிட வேண்டும். பிறகு, புளித்த மோரில் சுண்டைக்காயை இரவு முழுவதும் போட்டு ஊறவைத்து, மறுநாள் காலை, வெறும் சுண்டைக்காயை மட்டும் எடுத்து வெயிலில் காயவைக்க வேண்டும். மீண்டும் இரவு நேரம் மோரில் சுண்டைக்காயை ஊற விட்டு, மறுநாள் காயை மட்டும் வெயிலில் காய விட வேண்டும். இப்படியே4 நாட்களும் செய்தால், சுண்டை வற்றல் ரெடி. சுண்டைக்காய் வற்றல்: வயிற்றிலுள்ள புழுக்களை நீக்கவும், செரிமானத்தை அதிகப்படுத்தவும், வயிற்றுவலி, வயிறு உப்புசம், ஏப்பம் போன்ற பிரச்சனைகளை இந்த வற்றல் சரி செய்கிறது.நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தனிமங்களும் சுண்டையில் அதிகம் என்பதால், வாரம்2 முறையாவது குழம்பு வைத்து சாப்பிடலாம்.. பசியை தூண்டக்கூடிய சக்தி சுண்டை வற்றலுக்கு உண்டு..இந்த சுண்டைக்காய் வற்றலை, பொடி செய்து, தினமும் 5 கிராம் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும் என்கிறார்கள். இதைத்தவிர, வாயுத்தொந்தரவு நீங்கி, அல்சர் புண்களையும் ஆற்றிவிடும்.சுண்டைக்காய் வற்றலுடன், மிளககு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் போன்றவைகளை சம அளவு எடுத்து வறுத்து சாப்பிட்டாலும் அஜீரணம் நீங்கி, பசி நன்றாக எடுக்கும்"சுண்டை வற்றல் சூரணம்" என்றே இப்போதெல்லாம் கடைகளில் கிடைக்கிறது இந்த சூரணத்தை, மோரில் கலந்து குடித்து வந்தால், குடல் வயிறு பகுதிகள் சுத்தமாகும்.. நல்ல நுண்கிருமிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.. ரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தக்கூடியது. இந்த சுண்டைகாய். பச்சை சுண்டைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், எலும்புகள் பலப்படும்.. பெண்களுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது இந்த சுண்டை காய்.
பாதாம் பிசினில்எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்உள்ளன.தென்மேற்கு ஆசியா மற்றும் ஈரான், இந்தியா, பாகிஸ்தானில் கிடைக்கிறது. மரத்தில் இருந்து வெளியேறும் பிசின் கத்தியில் வெட்டி எடுக்கப்படுகிறது. இதற்கு சுவையும், மணமும் கிடையாது. இயற்கையானது, தண்ணீரில் கரையக்கூடியது. இது காயவைத்து சந்தைக்கு அனுப்பப்படுகிறது.ஜெல்லி போல் இருக்கும் பாதாம் பிசினை காயவைத்தால் அது கட்டியாகிவிடும். இதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஒருமாதம் வரை இவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.கற்கண்டு போல் இருக்கும். மரத்தில் கொஞ்சம் இலைகளும், பூக்களும் இருக்கும் இலையுதிர் காலத்தில் இது பெறப்படுகிறது. காய்ந்த பாதாம் பிசின் ஊறவைத்து பயன்படுத்தப்படுகிறது.பாதாம் பிசின் அல்சர், அசிடிட்டி, வயிறு உப்புசம், வயிறு எரிச்சல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது. இதில் உள்ள குளிர்விக்கும் திறன், உடலின் சூட்டை குறைக்கிறது. மூலநோய் கொண்டவர்களும், பாதாம் பிசினில் இருந்து நன்மைகளை பெற முடியும். பாதாம் பிசின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. .பாதாம் பிசின் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. இதில்90 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. இதனால் அது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. இதை பாலில் சேர்த்து பருக ஒல்லியானவர்கள், உடல் எடையை அதிகரிக்கலாம்.நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது. தசைகளை வலுப்படுத்துகிறது உடலை இயற்கையான முறையில் குளிர்விக்கிறது.இருமல், சளி மற்றும் சளி அடைத்துக்கொள்வதை குணப்படுத்துகிறது. இது மேலும் பல குளிர்கால பிரச்னைகளையும் சரிசெய்கிறது. கோடை காலத்தில் உடலின் வெப்ப நிலையை முறைப்படுத்துகிறது. இதில் உள்ள குளிர்விக்கும் உட்பொருட்கள் கோடை கால சரும வறட்சியை போக்க கருவுறுதலுக்கு முன் உடலை வலுப்படுத்த பாதாம் பிசின் உதவுகிறது.கர்ப்ப காலத்தில் எலும்பை உறுதிப்படுத்தி, உடலுக்கு வலு கொடுக்கிறது. கரு வளர்ச்சிக்கு உதவுகிறது. இது பிரசவித்த பின்னர் மாதவிடாய் சுழற்சி முறையாவதற்கு உதவுகிறது.பாதாம் பிசின் உடல் எடை அதிகரிப்பில் மட்டுமல்ல உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை மாற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்தஉணர்வைகொடுப்பதால்பசியைக்கட்டுப்படுத்துகிறது.பாதாம் பிசினை கோடைக்காலத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும். மற்ற காலங்களிலும் பயன்படுத்தலாம். இதை அதிகளவில் எடுத்துக்கொள்வது, வயிற்றில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. எனவே இதை மிதமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பாதாம் பிசின் எண்ணற்ற நன்மைகளை உடலுக்கு தருகிறது.
காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதுடன் நாளைத் தொடங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை அருந்துவது உடல் எடை இழப்புக்கு உதவுகிறது.வெதுவெதுப்பான நீர் அருந்துவது செரிமானத்திற்கு நேர்மறையான விளைவைத் தருகிறது. இதன் காரணமாக வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம் நாளைத் தொடங்குவது மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றைக் குறைக்கிறது .காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கிறது காலை நேரத்தில் நீரிழப்பு பிரச்சனைகளில் இருந்து விடுபட வெறும் வயிற்றில் வெந்நீரைக் குடிக்கலாம் .
பொட்டுக்கடலை சாப்பிட்டால் இதில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை குறைக்கிறது.. கலோரிகள் மிகக் குறைவு மற்றும் இரும்புச்சத்து அதிகம். நமது பெருங்குடலை ஹைட்ரேட் செய்வதன் மூலம் மலச்சிக்கலை தடுக்கிறது.இதய சமத்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்வதற்கு இந்த பொட்டுக்கடலை முக்கிய பங்குவகிக்கிறது.உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிஉடலை சுத்தமாக வைப்பதற்கும் உதவியாக இருக்கிறது.குழந்தைகள் சிறப்பான வளர்ச்சியை அடைவதற்கும், தசைகள் வலிமையாகுவதற்கும் இந்த பொட்டுக்கடலையில் பல ஆரோக்கியம் நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு பொட்டுக்கடலையில் வெல்லம் சேர்த்து சாப்பிட கொடுப்பதால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் கிடைக்கிறது.உடைத்த கடலையை அதிகம் சாப்பிட்டு வந்தால் முகத்திற்கு அழகு சேர்க்கவும், சரும பிரச்சனைகளான படை, சொறி, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்கிறது.பெண்கள் கர்ப்பம் அடைந்திருக்கும் பொழுது சத்துள்ள பொருட்களை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்தவகையில் தினமும் பொட்டுக்கடலையை சாப்பிட்டு வருவதால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்..பொட்டுக்கடலையை தினமும்ஒரு கைப்பிடி அளவுஎடுத்து சாப்பிடுவதால் முடிஉதிர்வு பிரச்சனைகளில் இருந்துசரிசெய்து அடர்த்தியான முடிவளர்ச்சியை தருகிறது. அதுமட்டுமின்றி சிறியவயதில் வரும் இளநரைபிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.நோய் எதிர்ப்பு சக்திகுறைந்து காணப்படுவதால் சளி, ஜுரம் போன்ற உடல்குறைபாடுகள் ஏற்படும் பொழுதுபொட்டுக்கடலை சாப்பிடுவது நல்லது.பொட்டுக்கடலையை தினமும்ஒரு கைப்பிடி அளவுஎடுத்து சாப்பிடுவதால் முடிஉதிர்வு பிரச்சனைகளில் இருந்துசரிசெய்து அடர்த்தியான முடிவளர்ச்சியை தருகிறது. அதுமட்டுமின்றி சிறியவயதில் வரும் இளநரைபிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.நோய் எதிர்ப்பு சக்திகுறைந்து காணப்படுவதால் சளி, ஜுரம் போன்ற உடல்குறைபாடுகள் ஏற்படும் பொழுதுபொட்டுக்கடலை சாப்பிடுவது நல்லது.சர்க்கரை நோயாளிகள் தினமும் பொட்டுக்கடலை சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்..............
வறுத்த ஆறு பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் இரைப்பையில் செரிமானமாகி உடலுக்கு சிறந்த உணவாக மாறும் இரண்டு அல்லது நான்கு மணி நேரத்தில் ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் கொலஸ்ட்ரால் அளவுகளை சீராக்கப்படும், ரத்த அழுத்தத்தை சீராக்கும் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும் பூண்டை பச்சையாக வெறும் வாயில் தின்றால் நல்லது அதிலும் காலை வேளையில் என்று சொல்வார்கள். ஆனால் தினுமும் அப்படி சாப்பிடகூடாது. அப்படி சாப்பிட்டாலும் அதன் தோலை நீக்கி சாப்பிடலாம். குறிப்பாக நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடும் போது கவனமாக இருக்கவேண்டும். தினமும் பச்சையாக சாப்பிடாமல் மாற்றி மாற்றி எடுத்துகொள்ளலாம். வேகவைத்து வறுத்து சுட்டு சாப்பி டலாம்.ஆனால் வறுத்து சாப்பிடும் போது இன்னும் பலன்களும் கிடைக்கிறது.இரவு நேரத்தில் ஒரு தம்ளர் பாலில் பூண்டின் தோலை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் கலந்து வேக வைத்து குடிக்கலாம். தற்போது சிறு குழந்தைகள் முதல் பெரியவர் கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவாக பூண்டு மாற அதை வறுத்து தயாரிக்க லாம்பூண்டின் தோலை உரித்து சுத்தம் செய்து வாணலியில் மிதமான தீயில் வைத்து வறுத்து எடுங்கள். தொடர்ந்து20 நிமிடங்கள் வரை வறுங்கள். முதலில் பூண்டிலிருந்து நாற்றமடிக்கும் மணம் வெளியேறும். அதை தொடர்ந்து பூண்டில் அலிசின் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.இதை அப்படியே சாப்பிடலாம். நாற்றமில்லாதது என்பதால் எளிதாக சாப்பிட முடியும். எனினும் சுவை விரும்பிகள் பூண்டை வறுக்கும் போது கால் டீஸ்பூன் வெண்ணெய், தேவையான அளவுக்கு மிளகுத்தூள் உப்பு சேர்த்து வறுக்கலாம். ருசி பிரமாதமாக இருக்கும். குழந்தைகள் அடம்பிடிக்காமல் சாப்பிடுவார்கள். இதனால் அவர்கள் வளரும் பருவத்தில் உடலில் அனைத்து சத்துகளையும் நிறைவாக கொண்டுவளர்வார்கள்.தினமும்,5 பல் வறுத்த பூண்டை சாப்பிடுவதால் அதிசயத்தக்க வகையில் உடலின் ஆரோக்கியமும் வேகமாக அதிகரிக்கிறதுவைட்டமின் சி சத்து தான் உடலில் இரத்த நாளங்கள். தசைகள், எலும்புகளின் வலுவை உறுதி செய்கிறது. பூண்டில் இருக்கும் செலினியம் உடலில் நன்மை செய்யும் நொதிகளை தூண்டுகிறது.உடலில் இரும்புசத்து, ஜிங்க் போன்றவை சிறப்பாக இயங்க பூண்டு உதவுகிறது என்பதை உணவு குறித்த வேதியியல் இதழ் ஒன்று வெளியிடப்பட்டது .வளரும் பிள்ளைகளுக்கு பூண்டில் சற்று கூடுதலாக வெண்ணெய் சேர்த்து கொடுங்கள். ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக இருக்கும்.
..அனைவரது வீட்டு சமையலிலும் தவறாமல் தினசரி பயன்படுத்தப்பட்டு வரும் சமையல் பொருளாக வெங்காயம் இருக்கிறது. வெங்காயத்தை உரிக்கும் போது பலரின் கண்களில் நீர் வடிகிறது. என்றாலும் வெங்காயத்தை போலவே பலரும் தூக்கி எறியும் அதன் தோல்களிலும் நன்மைகள் இருப்பது தெரிந்தால் ஒருவேளை அவர்கள் வெங்காயம் உரிப்பதை வெறுக்காமல் இருக்கலாம்.வெங்காயத் தோல்கள் நல்ல ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகளை அளிக்கும் பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும் .நம்மில் பலரால் அதிகம் கண்டுகொள்ளப்படாத வெங்காய தோல்கள் உண்மையில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. எனவே வெங்காயத் தோல்கள் நல்ல செரிமானத்திற்கு உதவுவதோடு, குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றன. வெங்காய தோலானது ஃபிளாவனாய்ட்கள் குறிப்பாக சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஃபிளாவனாய்ட்டானQuercetinஐ கொண்டிருக்கின்றன. இது அழற்சியை குறைக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்திற்கான நன்மைகளை வழங்குகிறது. தவிர வெங்காயத் தோல்களில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட வைட்டமின்ஸ்& மினரல்ஸ் நிறைந்துள்ளன. இவை நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதோடு, பார்வை ஆரோக்கியத்திற்கும், எலும்புகளை வலிமையாக வைப்பதற்கும் மற்றும் எலக்ட்ரோலைட் பேலன்ஸிற்கும் பங்களிக்கின்றன. . வெங்காயத் தோல்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் நம் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை நடுநிலையாக்க உதவி ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்-ஐ குறைக்கின்றன. இதய நோய் மற்றும் கேனர் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன. வெங்காய தோல்களில் காணப்படும் Quercetin உள்ளிட்ட கலவைகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. அந்த வகையில் வெங்காயத்தோல் சாறு அல்லது இன்ஃப்யூஷன்ஸ் எடுத்து கொள்வது ஆர்த்ரைட்டிஸ் மற்றும் இன்ஃப்ளமேட்ரி பவுல் (inflammatory bowel) டிசீஸ் போன்ற நிலைகளில் அழற்சியை குறைக்க உதவும். வெங்காய தோல்களில் டயட்ரி ஃபைபர் உள்ளது, இது குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை சிறப்பாக வைப்பதோடு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கிறது.வெங்காய தோல்களில் காணப்படும் ஃபிளாவனாய்ட்ஸ்களானதி ப்ரீபயாடிக் விளைவுகளை ஏற்படுத்த கூடும், இதன் விளைவாக நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கப்படும். வெங்காய தோலை டீ-யாக காய்ச்சி , டயட்டில் சேர்த்து கொள்ளலாம்
ஓவர் திங்கிங் உடம்புக்கு ஆகாது.. இந்த ஓவர் திங்கிங் என்பதை மருத்துவத்தில்,‘ரூமினேஷன்’ என்று குறிப்பிடுகிறார்கள். ஒருவர் தனக்கு நடந்ததை பற்றியே திருப்பித் திருப்பி நினைத்துப் பார்த்து அசைபோட்டுக் கொண்டிருப்பது அவர்களை மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும். இவர்களுக்கு நிகழ்காலத்தைப் பற்றிய உணர்வு இல்லாமல் இருப்பதுடன் மன அழுத்தம் எனப்படும் டிப்ரெஷன் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இப்படி முடிந்து போன விஷயங்களை பற்றி அதிகமாக சிந்திப்பதால் ஒரு பயனும் இல்லை.நமக்குப் பிடித்த விஷயங்களை சிந்திக்கும்போது மனம் லேசாகும். தேவையில்லாத விஷயங்களை சிந்திப்பதும், கடந்த கால வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளைப் பற்றி சிந்திப்பதும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளை உண்டுபண்ணும்.சிந்திப்பது என்பது ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு தீர யோசிப்பது. அதாவது எதனையும் சிந்தித்து செயல்படுவது. அதீதமாக யோசிப்பது என்பது தேவையில்லாத வேலை. எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு பலமுறை சிந்தித்து முடிவெடுத்து செய்வதால் அந்த செயல் நாம் நினைத்தபடியே வெற்றிகரமாக முடியும். அதுவே ஒரு செயலை செய்வதற்கு முன் நாம் அதிகம் யோசித்தால் மன அழுத்தம், தேவையில்லாத பதற்றம் போன்றவை உண்டாகும். இதனால் இரவில் தூக்கம் கெடும். உடல்நிலை கூட பாதிக்கப்படும்.மனிதர்களைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு மூளையில்12 ஆயிரம் எண்ணங்கள் தோன்றுகின்றன என்று சொல்லப்படுகிறது. எண்ணங்கள் வாழ்க்கைக்கு அவசியம். அவை நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் திறன் கொண்டவை. ஆனால், அந்த எண்ணங்கள் (சிந்தனைகள்) நம் நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ள விஷயங்களாக இருக்க வேண்டும்.எண்ணங்களே வார்த்தைகளாகி, செயல்களாக மாறி நம்மை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்கிறது. எனவே. நாம் சிந்திக்கும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளலாமல் இருக்க பழக வேண்டும்.இதற்கு நடைப்பயிற்சி நல்ல பலன் தரும். காலை அல்லது மாலையில் மரங்கள் சூழ்ந்த இயற்கையான சூழலில் நடப்பது நம் மனதை லேசாக்கும்.உடலை அதிகம் வருத்திக்கொள்ளாமல் எளிதான உடற்பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனைப்படி செய்வது உடல் நலத்துடன் மனநலத்தையும் பாதுகாக்கும்.அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து மூச்சைஇழுத்துவெளியேவிட்டுநம் சுவாசத்தை கவனித்து பழகுதல் சிறந்தது. அத்துடன் நம் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்வதால் தேவையில்லாத எண்ணங்கள், யோசனைகள் மனதில் தோன்றாது. தேவையில்லாத எண்ணங்கள் தோன்றாததால் மனதில் குழப்பமும் உண்டாகாது. மனம் தெளிவாக இருந்தால் எந்த முடிவையும் குழப்பம் இல்லாமல் எடுக்க முடியும்..மனதில் தேவையில்லாத எண்ணங்கள் தோன்றும்போது அதில் இருந்து விடுபட, வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துவது, நண்பர்களுடன் உரையாடுவது, புது நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வது, புது சூழலில் நம்மை இருத்திக் கொள்வது, மனதுக்கு மகிழ்ச்சி தரும் பாடல்களை கேட்பது என நம் மனதை ஒருமுகப்படுத்தி அதீத யோசனை எனப்படும் ஓவர் திங்கிங்கிலிருந்து வெளிவரலாம்..