25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆரோக்கியம்

Mar 19, 2024

சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நுரையீரல் பாதித்தவர்கள் ,காய்கறி பீன்ஸை தொடர்ந்து சாப்பிட விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்

.அன்றாடம் உண்னவேண்டியடாப்10 காய்கறிகளில்ஒன்றாகக்குறிப்பிடப்படும்காய்கறிபீன்ஸை தொடர்ந்து சாப்பிட விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர். பச்சைபீன்ஸில்தேவையானஅளவுக்குவைட்டமின் C, A மற்றும் B6 ஆகியஅனைத்துசத்துக்களும்நிறைந்துஉள்ளன. இதில்ஃபோலிக்அமிலமும்காணப்படுகிறது. இதைத்தவிர, பச்சைபீன்ஸில்தேவையானஅளவுகால்சியம், இரும்புசத்து, மக்னீசியம், மாங்கனீஸ், பீட்டாகரோட்டின், புரதச்சத்து, பொட்டாசியம்மற்றும்காப்பர்சத்துக்கள்உள்ளன.100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின்உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. பீன்ஸ் மெலிந்த புரதங்கள் நிறைந்த உணவு. ஒரு கப் சமைத்த பீன்ஸ்15 கிராம் புரதங்கள் கொண்டது. பீன்ஸ் நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்தது. இவை தசைஉருவாக்கம் மற்றும் தசை வலிமைக்குத் தேவையான புரதங்களை வழங்குகிறது.இதில் நிறைய நார்ச்சத்து மற்றும் சிறப்பு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றம் நாள்பட்ட வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது. பீன்ஸில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்திற்கும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.பெருகி வரும் வாகனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால், சுமார்60 சதவீதம் பேர் அசுத்தமான காற்றை சுவாசித்து அதனால் நுரையீரல் பாதித்து நெஞ்சு சளி, மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தில் உள்ளனர் என்கிறது ஓர் ஆய்வு. இந்நிலையில் இந்த நோய் பாதிப்பு ஏற்படும் ஆபத்தை தவிர்க்க தினமும்50 கிராம் பச்சை பீன்ஸ் சாப்பிட்டு வர வேண்டும் என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர் . தினமும் பச்சை பீன்ஸ் சாப்பிட90 சதவீதம் நுரையீரல் பிரச்னையை தீர்க்கலாம் என்கிறார்கள்.பீன்ஸ் உட்கொள்வது உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கும். இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து தொப்பை மற்றும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. பீன்சை கறி, கூட்டு என பல வகைகளில் தயார் செய்து சாப்பிடலாம். அல்லது பீன்ஸை சாலட் வடிவிலும் சாப்பிடலாம். பீன்ஸில் வைட்டமின் ஓ உள்ளது. இது புது செல்கள் உருவாவதில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கின்றது. ஆதலால் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே பரவாமல் தடுக்குமாற்றலை பீன்ஸ் கொண்டுள்ளது.பீன்ஸ் நீரிழிவு நோயாளிகளுக்குஇன்சுலின் எதிர்ப்பை கணிசமாக குறைக்கும்.பீன்ஸ் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது. புரதச் சத்து நிறைந்துள்ளது. பீன்ஸ் டைப்2 இரத்த குளுக்கோஸ் அளவுகளை கணிசமாகக் குறைக்கும் என்கிறார்கள்

Mar 18, 2024

இன்சுலின்’ உற்பத்தி அதிகரிக்க வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுங்கள்

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியமானது பச்சை வெங்காயத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வெங்காயத்தில் க்வெர்செடின் என்ற ஆர்கானிக் சல்பர் உள்ளது. இது உடலில் இன்சுலின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. இதன் விளைவாக நீரிழிவுநோயாளிகளும்வெங்காயத்தைசாப்பிடலாம்.வெங்காயத்தில் ஆர்கானிக் கந்தகம் இருப்பதால் சற்று கடுமையான வாசனையுடன் இருக்கும். ஆனால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் வெங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது. இது இதய நோய் மற்றும் மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது.வெங்காயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, ஃபோலேட் பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் தாமிரம் நிறைந்துள்ளது. இந்த பண்புகள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் முக்கியம். வெங்காயத்தை வழக்கமாக உட்கொள்வது நரம்பியல் நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.வெங்காயம் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் தீமைகளும் உள்ளன. வெங்காயத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வெங்காயம் சரியாக ஜீரணிக்கப்படாவிட்டால், அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படுகிறது.

Mar 11, 2024

அத்திப் பழ ஜூஸ் குடிப்பதன்மூலம் கிடைக்கும் நன்மைகள்

அத்திப் பழம் உடலுக்கு பல நன்மைகளை தரவல்லது. இருப்பினும், சிலர் அதனை தவிர்ப்பார்கள். அப்படி, அத்திப் பழத்தை வெறுமையாக சாப்பிட இயலாதவர்கள், அதில் பால் அல்லது தண்ணீர் சேர்த்து ஜூஸாக குடித்தால் ருசியாகவும் இருக்கும், உடலுக்கும் நல்லது.விலை உயர்ந்த அத்திப் பழம்,உடல்நலனை கருத்தில்கொண்டு வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டுமுறையோ அத்தி பழ ஜூஸை குடியுங்கள். இருப்பினும், அத்திப் பழ ஜூஸை எத்தனை நாள் இடைவெளியில் குடிக்கலாம் என உங்களின் மருத்துவரை கூட அணுகுவது நலம். அத்திப் பழ ஜூஸை குடிப்பதன் மூலம் தூக்கமின்மை சரியாகும் என கூறப்படுகிறது. அத்திப் பழ ஜூஸில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. தினமும் அத்திப் பழ ஜூஸை குடிப்பதன் மூலம் நீரிழிவு நோயில் இருந்து தள்ளியிருக்கலாம். இதில் இருக்கும் குளோரோஜெனிக் அமிலம்(ChlorogenicAcid) ரத்தத்தில்சர்க்கரைஅளவைகட்டுப்படுத்தும். இருப்பினும், நீரிழிவு பிரச்னைகள் இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனைக்கு பின் அருந்தலாம்., உடல்எடையைகுறைக்கநினைப்பவர்களுக்க,: அத்திப் பழத்தில் கலோரிகள் மிக குறைவு. நார்ச்சத்துஅதிகம்.இதனால்,நீங்கள்வயிறுநிறையகுடித்தாலும்கலோரிகள்ஏறவேஏராது.மேலும்அடிக்கடிபசியும்எடுக்காது.:பொட்டாசியம்அதிகளவில்இருப்பதன்மூலம்,சோடியத்தால்(சமையல்உப்பு)உடலுக்குவரும்மோசவிளைவுகளுக்கு எதிராக இது செயல்படும். இதனால், ரத்த அழுத்தம் கட்டுக்கோப்பாக இருக்கும்.   அத்திப் பழ ஜூஸில் ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படும் பீனாலிக் கலவைகள் அதிகம். மேலும், இதில் அதிக அளவு ஃபிளாவனாய்டுகள், அந்தோசயினின்கள் இருக்கின்றன. அவை ஒவ்வாமை(Allergy) எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. எனவே, வயதாகும் தன்மையை இது மெதுவாக்குகிறது.சீக்கிரம்வயதாகமாட்டீர்கள்.உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். 

Mar 08, 2024

கருவேப்பிலை நீர்:

கருவேப்பிலை நீரில்உள்ள ஜீரணத்திற்கு உதவும் தன்மை, அஜீரணம் மற்றும் வயிற்று உப்புதலை தடுக்கும். கருவேப்பிலை நீர் குடித்தால் வயிற்றின் செயல்பாடுகள் பாதிக்காது. இது கொழுப்பை நீக்கும். இதில் உள்ள பையோ ஆக்டிவ் காம்பொனன்ஸ் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் பசியை குறைக்கும். நாம் அதிகம் சாப்பிட்டதுபோல உணர்வை ஏற்படுத்தும்.இந்நிலையில் இது கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாறுவதின் வேகத்தை குறைக்கும். இதனால் ரத்த சர்க்கரை அதிகரிக்காது. மேலும் இந்த தண்ணீர் குடிப்பதால் இருமல் மற்றும் சளி ஏற்படாது. இதில் மூக்கடைப்பை, நாம் போக்குவதற்கு கருவேப்பிலையில் உள்ள பேக்டீரியாவிற்கு எதிரான பண்புகள் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை அதிகரிக்கும். இதில் உள்ள பிட்டா கரோட்டினி மற்றும் இரும்பு சத்து கூந்தல் நன்றாக வளர உதவும்.கருவேப்பிலைநீர் செய்ய .3 கொத்து கருவேப்பிலையை,4 கப் கொதிக்கும் நீரில் சேர்க்க வேண்டும். அடுப்பை அணைத்து, இதை சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள்.  வடிகட்டி குடிக்கவும்.   

Mar 05, 2024

பசியை அதிகரிக்க செய்யும் வெங்காயத்தாள்

ஸ்ப்ரிங் ஆனியன் என்ற பெயரில் பரவலாக அறியப்படும் வெங்காயத்தாள் உணவுக்கு சுவையூட்டுவதாக மட்டுமல்லாமல் பல்வேறு ஊட்டச்சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. பல உடல் பிரச்னைகளை தீர்க்கும் மருத்துவ குணம் இதில் உள்ளது.சைனீஸ் உணவுகள் சாப்பிடும்பழக்கம்மக்களிடையேஅதிகரித்துவிட்டநிலையில்தான்வெங்காயத்தாளின்அருமைமக்களுக்குப்புரியத்தொடங்கிவிட்டது.வெங்காயத்தாளில் விட்டமின் சி. விட்டமின்72 விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள், காப்பர். பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம் மாங்கனிஸ், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன.  வெங்காயத்தில் உள்ளதை போலவே வெங்காயத்தாளிலும் கந்தகச்சத்து அதிகளவில் உள்ளது.வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது.வெங்காயத் தாளில் உள்ள புரோப்பைல் டை சல்பேட் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறதுவெங்காயத் தாளை அரைத்து, அதில் வெந்தயத்தை ஊறவைத்து உல ர்த்திப் பொடி செய்து, தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால் உடல் சூடு குறையும் . இது உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து, இதய ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கிறது. ரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் உதவுகிறதுவெங்காயத்தாளில் உள்ள சல்பர் சேர்மங்கள் ரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டால் இதயக் கோளாறுகள், பக்கவாதம் போன்ற உயிருக்கு உலை வைக்கும் ஆபத்தான நோய்களில் இருந்து தப்பலாம்.வெங்காயத் தாளில் உள்ள குரோமியம் சத்தானது நீரிழிவு நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. உடலில் சர்க்கரை சத்து ரத்தத்தில் உடனடியாக அதிகரிப்பதை இது தடுக்கிறது.சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக வெங்காயத் தாளை தங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லதாகும்

Mar 04, 2024

தினமும் பூசணி விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும்  நன்மைகள்

ஆரோக்கியமான சிற்றுண்டிகளில் இப்போது உலர்ந்த விதைகள், பழங்கள், கொட்டைகள் தான் உள்ளன. அதில் பூசணி விதையும் ஒன்று..பூசணி விதைகளில் மெக்னீசியம் உள்ளது, இது இரத்த அழுத்தம், எல்டிஎல் கொழுப்பு அளவுகள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் ஆகியவற்றைக் குறைக்கும். இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.பூசணி விதைகளில் உள்ள டிரிப்டோபான் அமினோ அமிலம், செரோடோனின் மற்றும்2 மெலடோனின் உற்பத்தி செய்வதன் மூலம் நல்ல தூக்கத்தைத் தூண்டும்.துத்தநாகம், ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள இது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.கர்ப்பமாக இருக்கும் போது பூசணி விதைகளை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகவும் ..மற்றும் நார்ச்சத்து நிறைந்த பூசணி விதைகள், நீண்ட நேரம் நிறைவாக உணரவைத்து, உணவு உட்கொள்ளலைக் குறைத்து, எடையைக் குறைக்க உதவுகிறது.பூசணி விதையில் வைட்டமின் ஈ உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.தொற்று நோய்களுக்கு எதிராக பாதுகாக்கிறது. ஆண்டிமைக்ரோபியல், பூஞ்சை, ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்டுள்ளதுமக்னீசியம் நிறைந்த பூசணி விதைகள், எலும்பு வளர்ச்சி மற்றும் வலிமையை ஊக்குவிக்கிறது.துத்தநாகம் நிறைந்த பூசணி விதைகள், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து, விந்தணுக்களின் தரம் மற்றும் அளவை மேம்படுத்துகிறது.இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. மேலும் அவை நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

Mar 03, 2024

 ஏன் பிரியாணியில் ஏலக்காய் சேர்க்கிறார்கள்?

ஏலக்காயை இந்தியர்கள் பல நூற்றாண்டுகளாக சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாப் பொருள் ஆகும். இது பொதுவாக இனிப்பு மற்றும் காரமான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அசைவ உணவுகளில் வாசனைக்காக அதிகமாக பயன்படுத்தப்படும். அதுமட்டும் அல்ல, தற்போது மக்கள் ஏலக்காயை பயன்படுத்தி காஃபி ,டீ ஆகியவற்றையும் தயார் செய்து வருகின்றனர். ஏலக்காய் உட்கொள்வது செரிமான அமைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கு எதிராக போராடும் திறன் கொண்டது. இது, லேசான இனிப்பு மற்றும் புதினா போன்ற சுவை கொண்டவை. எனவே, இது வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை அழிக்கிறது. மேலும், வாய் துர்நாற்றத்தைய கட்டுப்படுத்துகிறது.ஏலக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது உணவு மற்றும் காய்கறிகளின் சுவை மற்றும் மனத்தை அதிகரிக்க பயன்படுகிறது. அதுமட்டும் அல்லாது ஏலக்காயை தொற்று மற்றும் ஒவ்வாமைகளை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தலாம். இதில், பல்வேறுதாதுக்கள், இரும்பு, மாங்கனீசு, கால்சியம், பொட்டாசியம், ரிபோஃப்ளேவின், நியாசிஸ்  மற்றும் மெக்னீசியம் உள்ளது.

Mar 01, 2024

வெல்லம்.

சர்க்கரையை போல சுத்திகரிக்கப்படாததால் வெல்லத்தில்பல சத்துக்கள் உள்ளது.குளிர்காலத்தில், உடலுக்கு சூட்டை கொடுக்கக் கூடியது. புரதம், கால்ஷியம், வைட்டமின் பி12, இரும்புச்சத்து என, பல வகையான சத்துக்கள் வெல்லத்தில் உள்ளது. உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இரவு உணவுக்கு பிறகு, சிறிது வெல்லத்தை உட்கொள்வதை வழக்கமாக கொண்டால், ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.வயிற்றில் வாயு உருவாவதையும், செரிமானம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்கிறது.குளிர்காலத்தில் அல்லது ஜலதோஷத்திற்கு வெப்பத்தன்மை காரணமாக, சளி மற்றும் இருமல் ஆகியவற்றிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். பால் அல்லது தேநீரில் கலந்து பருகலாம். மேலும், எலுமிச்சை, இஞ்சி சாறில் வெல்லம் சேர்த்த பானமாக தயாரித்து குடிக்கலாம்.*தினமும், சிறிதளவு வெல்லம் சாப்பிட்டுவந்தால், முகப்பருக்கள் வராமல், சருமம்பளபளக்கும். இதிலுள்ள பொட்டாஷியம், இதயம் தொடர்பான நோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறதுமலச்சிக்கல் பிரச்னை ஏற்பட்டால், இரவு உணவுக்கு பின், ஒருதுண்டு வெல்லம் சாப்பிட்டு வந்தால், அதிலிருந்து விடுபடலாம். வெல்லத்தை இஞ்சியுடன் சேர்த்து சூடாக்கி, வெதுவெதுப்பாக சாப்பிடுவது தொண்டை புண்ணுக்கு சிறந்த மருந்து. இதன் மூலம், குரலின் தன்மை சிறப்பாக இருக்கும். தினமும் ஒரு துண்டு வெல்லத்துடன் இஞ்சி சேர்த்து சாப்பிட்டு வந்தால், மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 20 கிராம் வெல்லத்தை தினமும் உட்கொள்ளலாம். 

Feb 27, 2024

பருத்திப் பால்

மதுரை என்றாலே சாப்பிடும் பொருட்களில் முதலில் நினைவுக்கு வருவது ஜிகர்தண்டா. அடுத்து நினைவுக்கு வருபவை பருத்திப்பால், மல்லிப்பூ இட்லி ஆகியவையும் பிரபலமாகும்பருத்தி விதையிலிருந்து பால் எடுத்து அதில் சுக்கு, மிளகு, ஏலக்காய், சித்தரத்தை, தேங்காய் பால், வெல்லம் அல்லது கருப்பட்டி போன்ற பொருட்கள் சேர்த்து செய்யப்படுவதுதான் பருத்திப்பால். இதில் நிறைய வைட்டமின்கள், புரதங்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், கொழுப்பு அமிலங்கள், கனிம சத்துக்கள் அதிகமாக உள்ளன. மேலும், பருத்தி விதையில் நார் சத்துக்கள் அதிகம்.காலையில் காபி, டீக்கு பதில் பருகி வர நமக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதுடன் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு ஆகிய பிரச்னைகளையும் சரி செய்கிறது. இதனை நீரிழிவு நோயாளிகளும் தாராளமாகக் குடிக்கலாம். பருத்திப் பாலை காலை வெறும் வயிற்றில் குடித்து வர அல்சர், வயிற்றுப்புண், குடல் புண் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளும் குணமாகும்.உணவு முறை மற்றும் மாறி வரும் பழக்க வழக்கங்களால் மாதவிடாய் சிலருக்கு சரியாக வருவதில்லை. அப்படிப்பட்டவர்கள் வாரம் ஒரு முறை இந்த பருத்திப் பாலை குடிப்பதன் மூலம் மாதவிடாய் சரியான நேரத்தில் வெளிவரும். அது மட்டுமின்றி, பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மை பருத்தி விதைகளுக்கு உண்டு. எனவே, கர்ப்ப காலத்திலும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களும் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.பருத்தி விதையுடன் கருப்பட்டியும் பச்சரிசியும் சேர்க்கப்படுவதால் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் மாவுச்சத்தும் இருப்பதால் எலும்புகளையும் உடலையும் வலுவாக வைத்துக்கொள்ள உதவும். தாவரங்களின் விதைகளில் இருந்து பெறப்படும் பால், தேங்காய் பால், பாதாம் பால், பருத்தி பால் ஆகியவை. இவை அனைத்துமே நம் உடலுக்கு வலிமையை தரக்கூடியவை.பசும்பால் குடித்தால் அலர்ஜி ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தாராளமாக பருத்தி பாலை அருந்தலாம். இது இரத்த அழுத்தத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 

Feb 26, 2024

ஏழைகளின் தங்க பஸ்பம் பொன்னாங்கண்ணி கீரை

இரு வகைகளில் பொன்னாங்கண்ணி கிடைக்கிறது. பச்சை நிறத்தில் இருப்பது. நாட்டு பொன்னாங்கண்ணி என்றும், சற்ற சிவப்பு நிறம் கலந்து இருப்பது சீமை பொன்னாங்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு வகை நிறக் கீரைகளுமே ஏறக்குறைய ஒரே மாதிரியான சத்துக்கள் கொண்டவை. பொன்னாங்கண்ணி இந்தியாவில் பல இடங்களில் பயிராகக் கூடிய கொடி வகையை சேர்ந்த கீரை .எல்லா காலங்களிலும் கிடைக்கக் கூடியது. இக்கீரையில் கால்சியம், பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, இரும்புச் சத்து மற்றம் வைட்டமீன் சி.ஏ போன்ற சத்துக்கள் அதிகளவில் தரக்கூடியது. பொன்னாங்கண்ணி கீரையை வாரம் ஒரு முறையோ அல்லது10 நாட்களுக்கு ஒரு முறையோ, தவறாமல் உணவில் எடுத்து கொள்வது நல்லது.கண் நோய், சர்க்கரை குறைபாடு நோய்த்தொற்று, கொலஸ்ட்ரால், சத்துக் குறைவு, ரத்த சோகை, உடல் சூடு, மூல வியாதி, வாதநோய் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கக் கூடியது. மேலும், தோலுக்க பொன்னிறத்தையும், நல்ல மினுமினுப்பையும் தரக்கூடியது.தினமும் பொன்னாங்கண்ணி கீரையை உண்டு வர தேகம் அழகு பெறும். உப்பில்லாமல் வேக வைத்து, வெண்ணெய் சேர்த்து40 நாட்களுக்கு உண்ண, கண் நோய்கள் நீங்கும். இக்கீரையுடன் பூண்டு அதிகம் சேர்த்து அடிக்கடி உண்டு வர மூலவியாதி நீங்கும். பொன்னாங்கண்ணி கீரையை அரைத்து சிறு சிறு வில்லைகளாகத் தட்டி காய வைத்து கண்களில் வைத்து கட்டி கொள்ள சூடு குறைந்து, கண் நோய்கள் நீங்கும்.வாரம் இரண்டு முறையாவது இக்கீரையை சாப்பிட்டு வர மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சியும், நன்றாக செயல்படவும் உதவி செய்யும். சிறுநீர் எரிச்சல் நீங்கவும், சிறுநீரகம் நன்கு செயல்படவும் பொன்னாங்கண்ணியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். கால்சியம் இரும்பு மற்றம் தங்கச் சத்துக்கள் பொன்னாங்கண்ணியில் இருப்பதால் இது ஏழைகளின் தங்க பஸ்பம் என அழைக்கப்படுகிறது.

1 2 ... 27 28 29 30 31 32 33 34 35 36

AD's



More News