2022 -2023ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த விழுதுகளை வேர்களாக்க உயர்கல்வி வழிகாட்டி வகுப்பு மாவட்ட நிர்வாகத்தால் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேற்படி ஆலோசனை முகாம்களை Mass Movement for Transformation(MMT) and NURTURE என்ற தன்னார்வ இயக்கம் பிற தன்னார்வ இயக்கங்களுடனும் இணைந்து செயல்பட முன்வந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர்கள் 20.04.2023 அன்று காலை 10.00 மணியளவில் AAA பொறியியல் கல்லூரியில் நடைபெறவிருக்கும் விழுதுகளை வேர்களாக்க உயர்கல்வி ஆலோசனை வகுப்பில் (Career Guidance Program) கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆதார் நம்மோடு ஒன்றிவிட்டநிலையில் ஆதார் எண் பெற்ற ஒவ்வொருவரும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதாரை புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற புதிய தகவலை, இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு வெளியிட்டுள்ளது ஆதாரில் திருத்தங்கள் செய்வதற்கும், ஆதாரை புதுப்பித்தல் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது.ஆதாரை பதிவு செய்து 10 வருடம் ஆனவர்கள் புதுப்பிக்க வரும் ஜூன் 14ம் தேதி வரை எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு தெரிவித்துள்ளது.இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (Unique Identification Authority of India), இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு ஆதார் அடையாள எண் வழங்குவதற்காக கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தனித்துவமாக பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் எண் வழங்கப்படுகிறது.பிறந்த குழந்தை முதல், இறந்த பின்னர் அந்த பிணத்திற்கு இறுதி செய்யும் வரை இப்போது எல்லா இடங்களிலும் ஆதார் கேட்கப்படுகிறது. கடந்த 10 வருடங்களில் இந்திய மக்களின் வாழ்க்கையில் 'ஆதார்' மிகப்பெரிய அங்கமாகிவிட்டது. சிம்கார்டு வாங்குவதாகட்டும், அரசின் மானியங்கள் கிடைக்க வேண்டும் என்றாலும், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் எது வாங்க வேண்டுமானாலும் ஆதார் கார்டை கையோடு கொண்டு போக வேண்டும்.போலி கார்டுகள் தமிழகத்தில் ஒரே நபர் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ரேஷன் அட்டை வைத்திருந்த போது ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டபோது தமிழகத்தில் எங்கு வசித்தாலும் ஒரே ஒரு ரேஷன் கார்டில் மட்டுமே பெயரை இணைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் பல லட்சக்கணக்கான போலி ரேஷன்கார்டுகள் ஒழிந்து போனது,வங்கி கணக்கு இதேபோல் பான்கார்டு உடன் ஆதார் இணைப்பால் இப்போது யாரும் வருமான வரியில் முறைகேட்டில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கைரேகை வங்கி பணப்பரிவர்த்தனையில் ஆதார் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது ஏ.டி.எம். கார்டு இல்லாமல், வங்கி கணக்கு எண் இல்லாமல் ஆதார் எண், கைரேகை வைத்து பணம் எடுக்கக்கூடிய ஏ.இ.பி.எஸ். எனப்படும் ஆதார் எனேபல் பேமெண்ட் சிஸ்டம் (ஆதார் ஏ.டி.எம்.) என்ற பணப்பரிவர்த்தனை மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. முகவரி சான்று ஆதார் பதிவு செய்த பொதுமக்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதாரை மேலும் வலுப்படுத்தும் வண்ணம் கூடுதல் ஆவணங்களை வைத்து ஆதாரை புதுப்பிக்க வேண்டும். வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதி வரை myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பதிவேற்றம் செய்து கொண்டு ஆதாரை புதுப்பித்து பலப்படுத்த முடியும்.. அதன்பிறகு கட்டணம் வசூலிப்பார்கள். எனவே myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் அல்லது உங்களது மொபைல் போனில் mAadhaar App என்ற ஆன்ட்ராய்டு ஆப் அல்லது IOS செயலியை பதிவிறக்கம் செய்து அல்லது மொபைல் மூலமாகவும் ஆவணங்களை எளிதாக புதுப்பிக்கலாம்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம் மற்றும் நகரம், இராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி உயர்வு, தண்ணீர் வரி உயர்வு, பாதாள சாக்கடைத்திட்டம், தாமிரபரணி குடிநீர் திட்டம் மற்றும் இரயில்வே மேம்பால பணிகளை விரைவாக முடிப்பது தொடர்பாக இராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போரட்டக்குழு சார்பில் 28.03.2023 அன்று நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவித்தது தொடர்பாக இரண்டு தரப்பினரையும் அழைத்து சமாதானக்கூட்டம் இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து 26.03.2023 அன்று மாலை 05.00 மணியளவில் சிறப்பு அழைப்பாளர்களாக இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர், இராஜபாளையம் நகர்மன்ற தலைவர், இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் முன்னிலையில் இராஜபாளையம் வட்டாட்சியர் அவர்களின் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது.1 மேற்படி கூட்டத்தில் கலந்துகொண்ட அலுவலர்களின் விபரம்:1. வருவாய் ஆய்வாளர், இராஜபாளையம்2. கிராம நிர்வாக அலுவலர், இராஜபாளையம்3.சார்பு ஆய்வாளர், தெற்கு காவல் நிலையம், இராஜபாளையம்/I-நகராட்சி தரப்பினர் சார்பாக கலந்து கொண்டவர்கள்Tதகராட்சி ஆணையாளர், இராஜபாளையம்இராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போரட்டக்குழு சார்பாக கலந்து கொண்டவர்கள்1.திரு.மாரியப்பன், (போரட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்) 9488717452.2. திரு.என்.ஏ. ராமச்சந்திரராஜா (போரட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்)3. திரு.எம்.மணிகண்டன் (போரட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்) மற்றும் 15 நபர்கள்மேற்படி கூட்டத்தில் கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டது;1.08.03.2023-ல் நகர்மன்ற தீர்மானம் எண்:94-ன்படி வரிவிதிப்பு குறைப்பிற்கான நடவடிக்கை அரசாணை வருகிற எப்ரல் மாதம் 20-ம் தேதிக்குள் பெற்றுத் தருவதாக நகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.2. சொத்து வரி விகிதம் (Basic Kate) 19% இருந்து 16 ஆக குறைப்பதற்கான நடவடிக்கைகள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் சட்டமன்றத்தில், நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். 3. குடிநீர் இணைப்புக் கட்டணம் மற்றும் கூடுதலாக செலுத்தப்பட்ட சொத்துவரி, செலுத்தியவர்களின் தொகை அடுத்து வரும் நிதியாண்டிற்கான கட்டணத்தில் அல்லது வைப்பு தொகையில் ஈடு செய்யப்படும்.4. மேற்கண்ட முடிவுகளின் அடிப்படையில் 28.03.2023 அன்று நடைபெற இருந்த முற்றுகை போரட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்படும் என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
மதுரை-திருமங்கலம் இடையேயான இரட்டை அகலப்பாதைக்கான தண்டவாள இணைப்பு பணிகள் முடிந்து வழக்கமான ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. திருச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. . அதாவது, தாம்பரம் ரெயில் நிறுத்தம் வழங்கிய பின்னர் , மதுரையில் இருந்து சென்னைக்கு ,தேஜஸ் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலில், சென்னை வரை முன்பதிவு செய்திருந்த பயணிகள் தாம்பரம் நிறுத்தத்தில் இறங்க வசதியாக இருப்பதாக தெரிவித்தனர். அத்துடன், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பயணிகள் தாம்பரம் ரெயில் நிறுத்தத்தால் மகிழ்ச்சியுடன் பயணம் செய்கின்றனர்.
மனிதர்களின்ஒவ்வொரு சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்தாலும். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு, மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்இராஜபாளையம் நகராட்சியின் 42 வார்டுகளிலும் திறந்தவெளியில் சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் இல்லாத பகுதியாக (OOF++) அறிவித்தல் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இராஜபாளையம்நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளையும், திறந்தவெளி கழிப்பிடமி பகுதியாக (ODF+) அறிவிப்பதற்கு மத்திய நகர்ப்புற அமைச்சகம் தெரிவித்த நிபந்தனைகளின்படி இராஜபான நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1 முதல் 42 வரை அனைத்து வார்டுகளையும், திறந்தவெளியில் சிறுநீர் மற்றும் மலம் இல்லாத பகுதியாக (ODF++) அறிவித்து ,நகர்மன்ற நிறைவேற்றப்பட உள்ளது. இந் நகராட்சி பொதுமக்கள் இப்பொருள் தொடர்பாக ஏதேனும் ஆட் பணை இருப்பின் உரிய ஆதாரத்துடன் அலுவலக வேலை நாட்களில் அல்லது commr.rajapalayam@tn.gov.in என்ற முகவரிக்கு இந்த அறிவிப்பு செய்த 15 நாட்களுக்குள் எழுத்து பதிவு செய்யலாம் என்பது இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.ஆணையாளர்இராஜபாளையம் நகராட்சிநாள்: 20 . 02 . 2023வெ.ஆ.எண்.32/செ.ம. தொ.அ/2023
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கும் பணி நடக்கிறது.தமிழக மின் வாரியம் வீடுகள் உட்பட 2.67 கோடி இணைப்புகளுக்கு இலவசமாகவும் மானிய விலையிலும் வழங்குகிறது. இதுவரை 98 சதவீதம் பேர் ஆதார் எண் இணைத்துள்ளனர் . பிப்., 15ம் தேதி வரை அவகாசம் அளிக்கப் பட்ட அவகாசம் இன்றுடன் முடிகிறது. ஆதார் இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்.
இந்திய குடிமகன்களாகிய ஒவ்வொருவருக்கும்வாக்காளர் அட்டை எப்படி முக்கியமாக இருந்ததோ அதுபோன்று தற்போது ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை கூட18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தான் உள்ளது, ஆனால் ஆதார் அட்டை18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆதார் அட்டையில் ஏதேனும் சிறு தவறு நேர்ந்தால் கூட அது பாதகமாகிவிடும், அதேசமயம் ஆதார் அட்டையில் ஏதேனும் பிழை இருப்பின்,அதனை திருத்தம் செய்வது குறித்து அச்சப்படவேண்டிய தேவையில்லை. ஆதார் அட்டையில் திருத்தத்தங்களை மேற்கொள்ள அரசு பல்வேறு வழிவகைகளை செய்திருக்கிறது. இதுவரை நாம் ஆதார் அட்டைகளில் பெயர், பிறந்த தேதி, முகவரி, போன்ற எதையாவது திருத்தம் செய்ய வேண்டுமானால் வங்கிகளுக்கோ அல்லது தலைமை தபால் நிலையங்களுக்கோ தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது நீங்கள் அப்படி வெளியில் அலைய வேண்டிய தேவையில்லை, ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள, உங்கள் ஊரிலேயே இருக்கும் தபால் நிலையத்தின் கிளைகளுக்கு சென்றே மாற்றி கொள்ளமுடியும். தற்போது தபால் துறை கிராமின் தாக் சேவாக்களிடம் டிரான்ஸாக்ஷன் செய்வது, உள்ளிட்ட பல சேவைகளுக்கான அணுகலை வழங்கியுள்ளது, டெபாசிட் போன்ற பல சேமிப்பு திட்டங்களில் பணத்தை டெபாசிட் செய்துகொள்ளவும், ஜிடிஎஸ் மூலம் ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இங்குள்ள வங்கிகளில் ஆதார் அட்டையில் எத்தகைய திருத்தம் செய்யவேண்டுமோ அதனை செய்துகொள்ளலாம் வேண்டுமென்றால் இங்கு புதிய ஆதார் கார்டையும் பெற்றுக்கொள்ள முடியும்.