வள்ளலாரின் முப்பெரும் விழாவினை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ / மாணவிற்கான பல்வேறு போட்டிகள்
“உயிர்த்திறள் ஒன்றெனக்கோரி தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்திய வள்ளல் பெருமானாரின் தருமசாலை துவக்கி 156வது ஆண்டு தொடக்கமும் (25.06.2022) வள்ளல் பெருமான் இவ்வுலகத்திற்கு வருவிக்க உற்ற 200-வது ஆண்டு தொடக்கமும் (05.10.2022) ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டும் (05.02.2023) வரவிருப்பதால் இம்மூன்று நிகழ்வுகளையும் இணைத்து அவரது 200-வது அவதார ஆண்டான அக்டோபர் 2022 முதல் 2023 வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா அரசு சார்பாக அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது“.
இதனைத்தொடர்ந்து, மதுரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலம் சார்பில் 02.07.2023 அன்று வள்ளலார் முப்பெரும் விழா விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது.
அதற்கு முன்னோடியாக விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளும் வள்ளலார் அவர்களின் வாழ்க்கை மற்றும் பாடல்கள் குறித்த பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி, பாடல் போட்டி, ஓவியம் வரைதல் போட்டி ஆகியன விருதுநகர், கே.வி.எஸ். வித்யாசலா மேல்நிலைப்பள்ளியில் வைத்து 20.06.2023 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
மேற்படி போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு 02.07.2023 அன்று நடைபெறும் முப்பெரும் விழாவின் போது பரிசுகள் வழங்கப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களை விருதுநகர், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் தெரிந்து கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
தலைமை எழுத்தர் அலைபேசி எண் - 9688041776
பிரிவு எழுத்தர் அலைபேசி எண் - 9360687563
அலுவலக தொலைபேசி எண் - 04562 294607
0
Leave a Reply