சிவப்பு தண்டு கீரை பொரியல்.
தேவையான பொருட்கள்:
ஒரு கட்டுசிவப்பு தண்டு கீரை,25 கிராம் பாசிப்பருப்பு,ஆறு சின்ன வெங்காயம்,கால் கப் தேங்காய் துருவல்,
ஒன்று பச்சை மிளகாய்,இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய்,தேவையான அளவுஉப்பு,
செய்முறை :
முதலில் கீரையை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும் பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்த பின்னர் கீரையை சேர்த்து உப்பு போட்டு வேக வைக்க வேண்டும்.
பின்னர் வேக வைத்து எடுத்த பாசிப்பருப்பை அதில் சேர்த்து தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
நன்கு வதங்கிய பின்னர் இரண்டு முதல் மூன்று சொட்டு தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி இறக்கவும் .சுவையான சிவப்பு தண்டு கீரை பொரியல் ரெடி.
கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும் .பருப்பு சேர்த்து செய்வதால் உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கிறது. மிகவும் சுவையானது எளிதில் செய்து விடலாம்.
0
Leave a Reply