CHINMAYA VIDYALAYA SRIMATHI LINGAMMAL RAMARAJU MATRICULATION HIGHER SECONDARY SCHOOL.RAJAPALAYAMTWENTY EIGHTH SCHOOL YEAR SPORTS MEET.at 8.00 a.m. on Wednesday, 14th October, 2026 at the School Premises, Lingammal Ramaraju Salai, Rajapalayam. PROGRAMME : 14.10.2026 / 8.00 a.m.On the FieldArrival of the Chief GuestFlag HoistingMarch PastArrival of the Olympic TorchOath TakingDeclaring the Sports Meet OpenDemonstration of Physical ExercisesSports EventsGuest EventsOn the StagePrayerWelcome AddressFelcitationAnnual Sports ReportAddress by the Chief GuestPrize DistributionVote of ThanksNational Anthem.
ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை தொடர்பாக சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டால், அதிகாரப்பூர்வ உதவி எண்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.🪪 ரேஷன் கார்டு / TNEPDS: 1967🗳️ வாக்காளர் அட்டை / ECI: 1950🆔 ஆதார் / UIDAI: 1947⚠️ தெரியாத நபர்கள் அல்லது போலி இணையதளங்களுக்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம்.பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக மட்டும்.
ராஜபாளையம் பொன்னகரம் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (அக். 6) காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மின்சாரம் தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் குறைகளை பொதுமக்கள் நேரில் தெரிவித்துப் பயனடையலாம் என ராஜபாளையம் மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.
REWA ராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம், ராஜபாளையம்முதியோர்களின் அமைதியான வாழ்க்கையை ஊக்குவிக்கவும்,மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கக் கோரி,அமைதியான போராட்டம்.இடம்: ராஜபாளையம் ரயில் நிலையம்.தேதி: 01-10-2026நேரம்: மாலை 05:00 முதல் 05.30 வரை அன்பு நண்பர்களே,அகில இந்திய மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு, மும்பை விடுத்துள்ள அழைப்பின்படி, 01-10-2026 அன்று நாடு முழுவதும் அமைதியான போராட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும், உள்ளூர் அளவில் கோட்ட ரயில்வே மேலாளர் அல்லது, உள்ளூர் ரயில் நிலைய மேலாளர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம், தேவைக்கேற்ப கோரிக்கை மனுவும் அளிக்கப்படும்.இந்த நியாயமான கோரிக்கையை வெற்றியடையச் செய்ய, REWA உறுப்பினர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.K.pethuraja - தலைவர் , N. Thevaraajhah - செயலாளர் (REWA) , Muthuramalingam - பொருளாளர்.
முன்னோர்களை நினைவுகூரும் முக்கியமான காலமாக இந்து மரபில் கருதப்படுவது மகாளய பட்சம். ஆண்டுதோறும் முன்னோர்களுக்காக வழிபாடுகள் மற்றும் தர்ப்பணம் செய்வதற்கு இந்த 15 நாட்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.இந்த ஆண்டு மகாளய பட்சம் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 வரை நடைபெறுகிறது என குறிப்பிடப்படுகிறது. இந்த காலகட்டத்தில் முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்யும் வழக்கம் உள்ளது.தர்ப்பணம் செய்ய விரும்புபவர்கள், காலையில் 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் எள் மற்றும் தண்ணீர் கொண்டு தர்ப்பணம் செய்வது வழக்கம். 15 நாட்களிலும் செய்யலாம் அல்லது இறுதி நாளான அக்டோபர் 10-ம் தேதி அமாவாசை நாளில் மட்டும் செய்யலாம்.மேலும், காலையில் காகத்திற்கு எள் சாதம் வழங்குவதும், பசுவுக்கு அகத்திக் கீரை கொடுப்பதும் பாரம்பரிய வழக்கங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.மகாளய பட்ச நாட்களில் சுப காரியங்கள் குறித்து பேசுவதையும், புதிய ஆடைகள் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்ற நம்பிக்கையும் சிலரிடம் உள்ளது.முன்னோர்களை நினைவுகூர்ந்து செய்யப்படும் தர்ப்பணம் மற்றும் வழிபாடுகள் குடும்ப நலனுக்கும் முன்னோர்களின் ஆசீர்வாதத்திற்கும் உதவும் என்பது பாரம்பரிய நம்பிக்கையாகும்.
செப், 28, 29, 30 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்புஅனைத்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளை முழு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 4 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி முதற்கட்டமாக நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு.வங்கிகள் கீழ்கண்ட 5 நாட்கள் செயல்படாது. 1) 26.09.26 நான்காவது சனிக்கிழமை விடுமுறை.2) 27.09.26 ஞாயிறு விடுமுறை.3) 28.09.26 முதல் 30.09.26 ஸ்ட்ரைக் .
A.K.D. DHARMA RAJA WOMEN'S COLLEGE (Affiliated to Madurai Kamaraj University) RAJAPALAIYAM. 36 th SPORTS DAY CELEBRATION On Saturday, 19th September 2026 at 8.30 a.m. in our College Premises. PROGRAMMEPrayer Song : College ChoirWelcome Address : Dr. M. LAKSHMI PrincipalPresidential Address:Shri. A. K. D. KRISHNAMA RAJU CorrespondentAthletics Events / DrillsAnnual Report : Mrs. G. KANMANI Physical DirectorChief Guest's Address & Prize Distribution : Smt. K. R. GEETHA (President)Dr. K. SARAVANA KARTHIKEYANShri. RAJESHKUMAR ARJUNARAJASmt. K. K. NIVEDHITHASmt. B. DEEPIΚΑ(Committee members)Sports Key Note Address :Shri. P.R. JAYARENGAN (EX Army, Subedar Major, Sports Consultant)Vote of Thanks : Dr. S. MANJULA DEVI , Vice Principal & HOD of BBANational Anthem: Our Students .
நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஆவணி மாதம் 28ம் தேதி 14.09.2026திங்கள்கிழமை ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதீச்வர அனந்த ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் அவர்களின் பரமானுக்ரஹத்துடன் விநாயகர் சதுர்த்தி பூஜை கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது.நிகழ்ச்சி நிரல் காலை 6.00 மணிஅனுக்ஞை, சங்கல்பம், விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாசனம். கணபதி ஹோமம்.காலை 7.15 மணிபூர்ணாஹுதி, தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம்காலை 08.35 மணிதீபாராதனை ப்ரசாதம்.இப்படிக்கு "குருபக்தமணி"பி.ஆர். வெங்கட்ராம ராஜாசேர்மன் - ராம்கோ குரூப்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள சாத்தங்குடியில் 1936ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி பிறந்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டமும், மதுரை தியாகராஜர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். கல்லூரிக் காலத்திலேயே நாடகங்களை இயக்கியும் நடித்தும் தனது கலைத் திறமையை வெளிப்படுத்தினார்.பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மாணவராக இருந்த காலத்திலிருந்தே மேடைகளில் பேசி வந்த அவர், பேராசிரியராகப் பணியாற்றிய காலத்திலும் தனது பேச்சாற்றலைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டார்.1961ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியே அவரது முதல் மேடைப் பேச்சாக அமைந்தது. அதன் பின்னர் பட்டிமன்ற நடுவர்களாக இருந்த குன்றக்குடி அடிகளார், ஜோதிமுத்து உள்ளிட்டோரின் ஊக்கமும், அவரது தனித்துவமான நகைச்சுவை கலந்த பேச்சாற்றலும் அவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கின.தமிழை வெறும் பாடமாக அல்லாமல், மக்களின் வாழ்க்கையோடு இணைந்த மொழியாகக் கொண்டு சென்றவர் சாலமன் பாப்பையா. அவரது பேச்சும் எழுத்தும் தமிழ் மீது கொண்ட ஆழமான பற்றையும், தமிழை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கறையையும் வெளிப்படுத்தின.இவரது சேவையை பாராட்டி 2000 ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருதும், 2021ல் மத்திய அரசு 'பத்ம ஸ்ரீ' விருதும் வழங்கி கவுரவித்தன. அண்ணாமலை பல்கலை 2010ல் 'முத்தமிழ் பேரறிஞர் ' விருது வழங்கியது.கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், ஜாதி, மத எல்லைகளைக் கடந்து அனைவராலும் தமிழறிஞராக மதிக்கப்பட்டவர் சாலமன் பாப்பையா. தன்னை ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல், தமிழ் ஆளுமையாகவே வாழ வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது. பாரதியாரின் நினைவு நாளே தனது நினைவு நாளாகவும் அமையும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.“சாகும்போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும்; என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்ற அறிஞரின் வரிகளுக்கு ஏற்ப, தன் இறுதி தருணங்களிலும் தமிழ் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதே சாலமன் பாப்பையாவின் விருப்பமாக இருந்தது. அதற்குச் சான்றாக, நேற்று அவரது உடல் மீது அவர் எழுதிய திருக்குறள் உரை வைக்கப்பட்டிருந்தது. அவரது விருப்பத்தை மதித்து, அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.தமிழ் பேசிய குரல் ஓய்ந்தது.பட்டிமன்ற மேடையின் பேரொளி மறைந்தது.சாலமன் பாப்பையா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.22/02/1936 - 11/09/2026
கேசவ சேவா கேந்திரம் நாசே தொண்டு நிறுவனம் மற்றும் பழையபாளையம் ராஜூக்கள் மகுமை பொதுப்பண்டு இணைந்து நடத்தும் "நாசே"கிராமப்புற இலவச தொழிற்பயிற்சி திட்டம்இதற்கான விண்ணப்பம் கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் 04.09.2026, வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது.இந்த தொழிற்பயிற்சி வகுப்புகள் மூன்று மாத காலம் இலவசமாக பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்படுகிறது.இந்த தொழிற்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற கல்வி தகுதி... வயது வரம்பு... கட்டணம் ஏதும் இல்லை....பயிற்சி முகாம் நடைபெறும் இடம் - N.R.K. மண்டபம். A.K.D.R. ஆண்கள் பள்ளி அருகில், பழையபாளையம்.இராஜபாளையம் - 626117. விருதுநகர் மாவட்டம்.பயிற்சி நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை/பயனாளிகள் வசதிகேற்ப ஏதேனும் 1 மணி நேரம் பயிற்சி பெறலாம். ஒரு நபர் ஒன்றுருக்கு மேற்பட்ட பயிற்சி பெறலாம். அனைவரும் பயிற்சி பெற்று சுயதொழில் தொடங்கலாம்.தொடர்புக்கு : 98420 95550/ 99435 27521 / 96554 95550 / 88075 41551.