உலக செஸ் சாம்பியன்ஷிப்: 3-வது சுற்று ஆட்டமும் 'டிரா'.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்புச் சாம்பியன் குகேஷ் (இந்தியா) மற்றும் ஜவோகிர் சிந்தாரோவ் (உஸ்பெகிஸ்தான்) இடையிலான 3-வது சுற்று ஆட்டமும் 'டிரா'வில் முடிந்தது.
மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில், முதல் சுற்று 38-வது நகர்த்தலிலும், 2-வது சுற்று 20-வது நகர்த்தலிலும் 'டிரா' ஆனது. இந்நிலையில், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 60-வது நகர்த்தலில் இருவரும் 'டிரா' செய்ய ஒப்புக்கொண்டனர். ஆட்டம் முடிந்தபோது குகேஷிடம் 5 காய்களும், சிந்தாரோவிடம் 4 காய்களும் எஞ்சியிருந்தன. இருவருக்கும் தலா அரைப் புள்ளி வழங்கப்பட்டதால், தற்போது 1.5 - 1.5 என்ற புள்ளிக் கணக்கில் இருவரும் சமநிலையில் உள்ளனர்.
0
Leave a Reply