25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2027- பணிகள்  தொடர்பான விழிப்புணர்வு பேரணி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2027- பணிகள் தொடர்பான விழிப்புணர்வு பேரணி.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கே.வி.எஸ். நடுநிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் 2027-ஐ முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் செய்வது தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் (27.11.2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 01.01.2027-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி 12.11.2026 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள், கையெழுத்து இயக்கம், உறுதிமொழி, துண்டுபிரசுரங்கள் விநியோகித்தல், வாகனங்கள் மூலம் ஒலிப்பெருக்கி, உள்ளுர் தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மூலம் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் விழிப்புணர்வு பேரணிகள் இன்று நடத்தப்பட்டது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் -2027 பணிகளில் 11.12.2026 வரை  பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும். 29.11.2026 அன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதுபோக நம்முடைய விண்ணப்பங்களை https://voters.eci.gov.in என்ற  வலைதளத்தின் மூலமாகவும் ECINET என்ற mobile app  மூலமாகவும் பதிவேற்றம் செய்யலாம்.எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் செய்தல் பணிகளை மேற்கொண்டு எந்தவொரு தகுதியான வாக்காளரும் விடுபடாத வகையில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறுவதை உறுதி செய்யுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  கே.வி.எஸ் நடுநிலைப்பள்ளியில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி நகராட்சி அலுவலகம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்வில் விருதுநகர் வட்டாட்சியர் திரு.சுந்தரமூர்த்தி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News