சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் உன்னதி ஹூடா, தன்வி.
லக்னோவில் நடைபெற்று வரும் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில், இந்திய வீரர் துஷார் சுவீர் 21-19, 19-21, 9-21 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் பிரிதிஸ்கா பகாஸிடம் போராடித் தோற்று வெளியேறினார்.
பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்திய இளம் வீராங்கனை உன்னதி ஹூடா 21-19, 15-21, 21-18 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான அன்மோல் கார்ப்பை வீழ்த்தினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா 21-19, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் நி காடெக் திண்டா பிராத்வியை வென்றார். இதன் மூலம் அரையிறுதியில் உன்னதி ஹூடாவும், தன்வி ஷர்மாவும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
பெண்கள் இரட்டையர் பிரிவில், நடப்புச் சாம்பியனான இந்தியாவின் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் இணையை எதிர்த்து விளையாட இருந்த பிரான்சின் மார்காட் லாம்பெர்ட் - கமிலி போக்னட் ஜோடி போட்டியிலிருந்து விலகியது. இதனால் இந்திய இணை களம் இறங்காமலேயே அரையிறுதிக்கு முன்னேறியது.
0
Leave a Reply