25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


முக்கிய அறிவிப்பு

Mar 10, 2024

இராஜபாளையம் மூத்தோர் நல மன்ற துவக்கக் கூட்டம்

 நம் நகரத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் நலனுக்காக வரும் 13-03-2024 புதன் கிழமை அன்று புதிய சங்கம் தொடங்க ஆலோசனை சிறப்புக்கூட்டம் நடக்கவுள்ளது.அறுபது வயது நிறைவடைந்த ஆண், பெண் இரு பாலரும் சங்கத்தில் இணைந்து கொள்வதற்கான பதிவுகள் ஏற்கப் படும்.கூட்டதேதி 13-03-2024, நேரம் . 5.00 - 7.000.இடம்-ஆனந்தா கார்டன், தென்காசி சாலை, இராஜபாளையம்.தலைமை கேப்டன் சிங்கராஜா அவர்கள்.(முன்னாள் தலைவர் சீனியர் சிட்டிசன்ஸ் பியுரோ, சென்னை)விளக்கவுரை, வாழ்த்துரை, திரு எம்.ஆர். அழகராஜா தலைவர் தென்காசி மூத்தோர் மன்றம். டாக்டர் S. குமரேசன், ஸ்ரீரெங்கா குழந்தைகள் நல மருத்துவ மனை,இராஜபாளையம்.சிறப்புரை திரு R. முத்துக்கிருஷ்ணன், முதுநிலை மேலாளர், ஹெல்ப்பேஜ் இந்தியா, சென்னை.மூத்தோர் நலச்சங்கம், பல முக்கிய நகரங்களில் நிறுவப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.நாமும் நமது இராஜை நகரில் இச்சங்கத்தினை துவக்கி பல நன்மைகள் பெறலாம்..எனவே, இராஜபாளையம் மூத்தோர் பெருமக்கள், இந்த நல்லநிகழ்ச்சியில் குடும்பத்துடன் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.இப்படிக்கு இராஜபாளையம் மூத்தோர் நல மன்ற அமைப்பு,

Mar 05, 2024

விருதுநகர் மாவட்டம் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக இந்த மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. அதன்படி படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக  08.03.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BHAVAN,  INFONET COMMUNICATION ENTERPRISES, PENTAGON GARMENTS, WILLIAMS WONDERS போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள்  கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும்  பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள்.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 08.03.2024 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது  மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் .விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 03, 2024

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் மார்ச் 14 கடைசி நாள்

ஆதார் கார்டு என்பது இந்தியர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணம் ஆகும். எல்லா வேலைகளுக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்த நிலையில், ஆதார் கார்டுகளை வழங்கும் அரசு நிறுவனமான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஆதார் கார்டில் உள்ள தனிநபர் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அதில் ஏதேனும் திருத்தம் இருந்தாலும் அதை உடனடியாக செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சிம் கார்டு வாங்குவது, வங்கிக் கணக்கைத் திறப்பது போன்ற பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெறுவதில் நீங்கள் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 10 ஆண்டுகள் பழையான ஆதார் கார்டை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். இதன்படி, ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் மார்ச் 14ஆம் தேதிக்கு முன் இதைச் செய்யவில்லை என்றால், நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான இலவச அப்டேட் தேதி மார்ச் 14 அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதைத் தாண்டி அப்டேட் செய்தால் கட்டணம் செலுத்த வேண்டும்.

Mar 01, 2024

போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்-2024

விருதுநகர் மாவட்டத்தில் 03.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, பிறந்ததிலிருந்து 5 வயதிற்குட்பட்ட (0-5 வயது) அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் 1,56,830 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள், கோயில்கள் ஆகிய இடங்களில் 1137 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம் மையங்களில் காலை 7.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.ஏற்கனவே முறையான தவணைகளில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் இம்முகாமிலும் சொட்டு மருந்து தவறாது கொடுக்கப்பட வேண்டும். லேசான காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு இருந்தாலும், போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம்.இம்முகாமில் 4548 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். இதில் சுகாதாரப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அடங்குவார்கள். குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை அடையாளம் வைக்கப்படும்.இம்மாவட்டத்தில் 25 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு, இலங்கை அகதிகள் முகாம், நரிக்குறவர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் பிறந்ததிலிருந்து 5 வயதிற்குட்பட்ட (0-5 வயது) குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் 40 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு ரயில்வே நிலையம், பேருந்து நிலையங்கள், சோதனைச் சாவடிகள், கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண விழாக்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டில் ஒரே தவணையாக 03.03.2024 தேதியன்று போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது. ஆகையால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை இந்த போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு அழைத்துச் சென்று குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாத்து போலியோ இல்லாத சமுதாயத்தை அமைக்க ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Feb 23, 2024

GRAND OPENING ANJANA INFOTECH

 ANJANA INFOTECH  NEW OFFICE OPENING 25.02.2024

Feb 23, 2024

இராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை கம்பன் விழா

இராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளைகம்பன் விழா(44ஆம் ஆண்டு)2024 பிப்ரவரி 25, ஞாயிறு காலை 9.45 மகிக்கு ஆனந்தா கார்டன்ஸ், தென்காசி ரோடு, இராஜபாளையம்.தலைப்பு :கம்பனில் பெரிதும் மிளிர்வது உறவின் அருமையா? நட்பின் பெருமையா?இலக்கிய இன்பம் பருக!!

Feb 20, 2024

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம்

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் அரசு துறைகளின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்”, திட்டம் முகாமானது 21.02.2024 அன்று காலை 9 மணி முதல் மறுநாள் 22.02.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. 21.02.2024 அன்று மாலை 04.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை வத்திராயிருப்பு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் மக்களைச் சந்திக்கும் கூட்டத்தில் வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைக்களுக்கான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக கொடுக்கலாம். இதற்கான நடவடிக்கைகள் தொடர்புடைய துறைகள் மூலம் விரைந்து எடுக்கப்படும். மாலை 6 மணி முதல் முதல்நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்றவும் உள்ளனர்.இரண்டாம் நாள் (22.2.2024) காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள உள்ளாட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான செயல்பாடுகள் மற்றும் குடிநீர் விநியோகம், போக்குவரத்து மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யவுள்ளனர்.எனவே, வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Feb 18, 2024

குறு சிறு தொழில்களுக்கான கடன் வழங்கும் முகாம்

தமிழ்நாடு அரசு, சமச்சீரான அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினை குறிக்கோளாகக் கொண்டு மக்கள் நலத்திட்டத்திங்களை முனைப்புடன் செயல்படுத்திவருகிறது. அவ்வகையில், சுயவேலைவாய்ப்பினை ஊக்குவிப்பதற்காக அரசின் உத்திரவாதத்துடன் கூடிய மானியக் கடனுதவி திட்டங்களை எளிமைபடுத்தி எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் வருகிற 23.02.2024 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் “மானியத்துடன் கூடிய கடன் வசதி முகாமினை” மாவட்ட தொழில் மையம் மூலமாக சிறப்பாக நடத்த உத்தேசித்துள்ளது.அதன்படி, விருதுநகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வருகிற 23.02.2024 அன்று காலை 10.00 மணியளவில் மானியத்துடன் கூடிய கடன் வசதி முகாமானது மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், அனைத்து பொதுத்துறை/தனியார் துறை வங்கிகளின் மண்டல மேலாளர்கள், வங்கி கிளை மேலாளர்கள மற்றும் மானிய கடனுதவி திட்டத்தினை நடைமுறைபடுத்திவரும் மாவட்ட தொழில் மையம் மற்றும் இதர பல்வகை கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகிய அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து அனைத்து துறை மானிய கடனுதவி திட்டங்களின் வரையறைகளை எடுத்துரைத்து அன்றைய தினமே கடன் தொகை விடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள உள்ளன.புதிதாக கடனுதவி கோரி விண்ணப்பிக்க உள்ளவர்களும், ஏற்கனவே விண்ணப்பித்து கடன் விடுவிப்பு ஆணையினை எதிர்நோக்கியுள்ள நபர்களும் மேற்கண்ட கடன் உதவி இயக்க முகாம் நடைபெறும் நாளான 23.02.2024 அன்றே கடனுதவி பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் சுயதொழில் தொடங்கிட மானியக் கடனுதவி கோரி ஏற்கனவே விண்ணப்பித்த அனைத்து தரப்பினரும் தொழிற் கடன் வேண்டி புதிதாக விண்ணப்பிக்க உள்ள நபர்களும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு உடனடியாக பயன்பெறலாம்.மேலும், கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில்; மையம், பொது மேலாளர்அவர்களை நேரிலோ அல்லது 9080078933 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன்,  I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 11, 2024

ANANDA VIDYALAYA Nursery & Primary School

GRANDPARENTS DAY  CELEBRATION.14 / 02 /2024 AT  10 A.M.YOU ARE CORDIALLY INVITEDCORRESPONDENT   R. ANANDHIHEADMISTRESS    G. JEYABHAVANI

Feb 02, 2024

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை துணைத்தலைவர் டாக்டர் நாச்சியாருக்கு பத்மஸ்ரீ விருது.

 மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை துணைத்தலைவர் டாக்டர் நாச்சியாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. கண் மருத்துவத்தில் அவரது55ஆண்டுகால சேவையை பாராட்டி மத்திய அரசு இவ்விருதை வழங்கியுள்ளது....அரவிந்த் கண் மருத்துவமனையை நிறுவிய இவரது சகோதரர் டாக்டர் வெங்கடசாமியும்,.இம்மருத்துவமனையின் தற்போதைய கவுரவ தலைவரான இவரது கணவர் டாக்டர் நம்பெருமாள்சாமியும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள். அந்த வகையில் அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்த மூவர் இவ்விருது பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்....

1 2 ... 17 18 19 20 21 22 23 24 25 26

AD's



More News