பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.
மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் 9-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், நடப்புச் சாம்பியனும் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள அணியுமான இந்தியா, 19-வது இடத்தில் உள்ள மலேசியாவை எதிர்கொண்டது.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 6-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை எளிதில் வீழ்த்தி, 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
0
Leave a Reply