சமையலர் தேர்வு செய்யும்பொழுது பணம் பெறுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
. 2023-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக நிதி அமைச்சர் அவர்கள் ஆற்றிய உரையின்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை விரிவுபடுத்தி ,செயல்படுத்துவது தொடர்பாக அரசிடமிருந்து வரப்பெற்றுள்ள கீழ்க்காணும் நிலையான வழிகாட்டி செயல்முறைகளின்;படி காலை உணவு சமையல் செய்வதற்கு சுய உதவிக்குழு உறுப்பினர்கள்ஃசமையலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இப்பணி முற்றிலும் தற்காலிகமானது.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தைகள் அதே பள்ளியில் படிக்க வேண்டும். அக்குழந்தை வேறு பள்ளிக்கு மாற்றப்படும் பட்சத்தில்,சமையலர்,சுய உதவிக்குழு உறுப்பினர் மாற்றப்பட்டு, அதே பள்ளியில் படிக்கும் குழந்தையின் தாயாரும் சுயஉதவிக்குழு உறுப்பினருமான வேறு நபர் பணியமர்த்தப்படுவார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள சுயஉதவிக்குழுக்கள் ஊராட்;சி அளவிலான கூட்டமைப்புஃபகுதி அளவிலான கூட்டமைப்புகளில் உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் சுயஉதவிக்குழுக்கள்ஃஊராட்;சி அளவிலான கூட்டமைப்பு பகுதி அளவிலான கூட்டமைப்புகளில் உள்ள உறுப்பினர்கள் அதே கிராம ஊராட்சியில்ஃநகர்ப்புற பகுதியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.சுய உதவிக்குழு உறுப்பினர்கள் குறைந்த பட்சக்கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு தகுதியின் அடிப்படையில் தற்காலிமாக தேர்வுசெய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினராக உள்ள சமையலர் பணியிடமானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கு சமையலர் தேர்வு செய்யும்பொழுது பணம் பெறுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்I.A.S. அவர்கள் தெரிவித்துள்ளார்.
சமையலர் தேர்வு செய்யும்பொழுது பணம் பெறுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
0
Leave a Reply