25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் 2027 சிறப்பு முகாம்கள் மூலம் 4905 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் 2027 சிறப்பு முகாம்கள் மூலம் 4905 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

 இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 01.01.2027-ஐ தகுதி நாளாகக் கொண்டு நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் 2027-ன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்(படிவம்-6), பெயர் நீக்கம் செய்தல்(படிவம்-7) மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளல்(படிவம்-8) பணிகளுக்கான விண்ணப்பங்கள் 12.11.2026 முதல் 11.12.2026 வரை பெறப்பட உள்ளது. மேலும் சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், 21.11.2026 மற்றும் 22.11.2026 ஆகிய இரு நாட்கள் நடத்தப்பட்டன.

இந்த சிறப்பு முகாம்கள் மூலம் 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 497 பெயர் சேர்த்தல், 29 பெயர் நீக்கம் செய்தல், 240 திருத்தங்கள் மேற்கொள்ளல் என மொத்தம் 766 விண்ணப்பங்களும், 203-ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 461 பெயர் சேர்த்தல், 38 பெயர் நீக்கம் செய்தல், 252 திருத்தங்கள் மேற்கொள்ளல் என மொத்தம் 751 விண்ணப்பங்களும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 420 பெயர் சேர்த்தல், 13 பெயர் நீக்கம் செய்தல், 207 திருத்தங்கள் மேற்கொள்ளல் என மொத்தம் 640 விண்ணப்பங்களும்,

 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 317 பெயர் சேர்த்தல், 3 பெயர் நீக்கம் செய்தல், 214 திருத்தங்கள் மேற்கொள்ளல் என மொத்தம் 534 விண்ணப்பங்களும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 462 பெயர் சேர்த்தல், 15 பெயர் நீக்கம் செய்தல், 258 திருத்தங்கள் மேற்கொள்ளல் என மொத்தம் 735 விண்ணப்பங்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 353 பெயர் சேர்த்தல், 8 பெயர் நீக்கம் செய்தல், 396 திருத்தங்கள் மேற்கொள்ளல் என மொத்தம் 757 விண்ணப்பங்களும், 208-திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 442 பெயர் சேர்த்தல், 75 பெயர் நீக்கம் செய்தல், 205 திருத்தங்கள் மேற்கொள்ளல் என மொத்தம் 722 விண்ணப்பங்களும்,என ஆக மொத்தம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 2952 பெயர் சேர்த்தல், 181 பெயர் நீக்கம் செய்தல் மற்றும் 1772 திருத்தங்கள் மேற்கொள்ளல் என மொத்தம் 4905 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

மேலும் 29.11.2026 அன்று நடைபெற உள்ள சிறப்பு முகாமில் விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் / முதல் முறை வாக்காளர்கள் மற்றும் வாக்காளர்களாக பதிவு செய்ய விடுபட்டவர்கள் (Left Out Voters) பெயர் சேர்க்க விண்ணப்பங்கள் அளித்து பயன் பெற்றுக் கொள்ளுமாறும், ஏற்கனவே வாக்காளர்களாக பதிவு செய்தோர் விண்ணப்பங்கள் அளித்து முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் செய்து பயன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News