குவைத் சிட்டி: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் நடத்திய கொடூர ட்ரோன் தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 63 பேர் படுகாயமடைந்துள்ளனர்.💥 அதிகாலையில் நடந்த கொடூரம்: முடங்கியது விமான நிலையம்11.06.2026 அதிகாலை குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தை (Passenger Terminal) குறிவைத்து இந்தத் திடீர் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.உயிரிழப்பு மற்றும் காயம்: இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஒரு பயணியின் உயிர் பிரிந்தது. படுகாயமடைந்த 63 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.விமான சேவைகள் ரத்து: தாக்குதலைத் தொடர்ந்து பயணிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் தற்காலிகமாக முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.🛡️ ராணுவக் கட்டுப்பாட்டில் விமான நிலையம்:தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை குவைத் பாதுகாப்புப் படையினர் உடனடியாகத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், மீண்டும் தாக்குதல் ஏதேனும் நடத்தப்படலாம் என்ற அச்சத்தால் அப்பகுதியில் ராணுவத்தினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.ஏற்கனவே அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தற்போது குவைத் மீதான ஈரானின் இந்தத் திடீர் ட்ரோன் தாக்குதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போருக்கான சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. உலக நாடுகள் இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கி, வணிக ரீதியான லாரி ஓட்டுநர் பணியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் சுமார் 30 இந்தியர்கள் அந்நாட்டு குடிவரவுத் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்கக் கொள்கைகளின்படி, தகுந்த பணி அனுமதி( Work பெர்மிட் ) மற்றும் குடியுரிமை' ஆவணங்கள் இன்றி இத்தகைய பணிகளில் ஈடுபடுவது தீவிர சட்ட மீறலாகக் கருதப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர்கள் மீதான விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்கள் நாடு கடத்தப்படவும் அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் பணிபுரியச் செல்லும் இந்தியர்கள் உரிய சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுமாறு இந்திய தூதரகம் மற்றும் அதிகாரிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த ஆண்டுக்கான அகதிகள் அனுமதி உச்சவரம்பை கூடுதலாக 10,000 பேருக்கு உயர்த்த அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தென் ஆப்பிரிக்காவின் ஆப்பிரிக்கானர் (Afrikaner) இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் அமெரிக்காவில் குடியேற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இந்த இனத்தவர் இனவெறி மற்றும் வன்முறை அச்சுறுத்தலுக்கு ஆளாவதாகக் கூறி, இந்த அவசர கால நடவடிக்கையை அமெரிக்க அரசு எடுத்துள்ளது. ஏற்கனவே இருந்த 7,500 என்ற உச்சவரம்பு தற்போது 17,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய திருப்பம்! ஓமன் நாட்டின் சுல்தான், ஈரான் உடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளைப்பெருமளவில்அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வஅவசரச்சட்டத்தில்(ExecutiveDecree) கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் மிரட்டல்களுக்குப் பணியாமல், ஓமன் தனது அண்டை நாடான ஈரானுடன் கப்பல் போக்குவரத்து, எரிசக்தி மற்றும் வர்த்தக முதலீடுகளைப் பலப்படுத்த இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. ஹார்முஸ் நீரிணை விஷயத்தில் ஏற்கனவே சர்வதேச பதற்றம் நிலவி வரும் சூழலில், ஓமன் சுல்தானின் இந்த அதிரடி உத்தரவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.