25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சர்வதேச செய்திகள்

Jun 10, 2026

அமெரிக்காவில்.....

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த ஆண்டுக்கான அகதிகள் அனுமதி உச்சவரம்பை கூடுதலாக 10,000 பேருக்கு உயர்த்த அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தென் ஆப்பிரிக்காவின் ஆப்பிரிக்கானர் (Afrikaner) இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் அமெரிக்காவில் குடியேற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இந்த இனத்தவர் இனவெறி மற்றும் வன்முறை அச்சுறுத்தலுக்கு ஆளாவதாகக் கூறி, இந்த அவசர கால நடவடிக்கையை அமெரிக்க அரசு  எடுத்துள்ளது. ஏற்கனவே இருந்த 7,500 என்ற உச்சவரம்பு தற்போது 17,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Jun 09, 2026

ஓமன் சுல்தானுக்கு பயமில்லை.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய திருப்பம்! ஓமன் நாட்டின் சுல்தான், ஈரான் உடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளைப்பெருமளவில்அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வஅவசரச்சட்டத்தில்(ExecutiveDecree) கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் மிரட்டல்களுக்குப் பணியாமல், ஓமன் தனது அண்டை நாடான ஈரானுடன் கப்பல் போக்குவரத்து, எரிசக்தி மற்றும் வர்த்தக முதலீடுகளைப் பலப்படுத்த இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. ஹார்முஸ் நீரிணை விஷயத்தில் ஏற்கனவே சர்வதேச பதற்றம் நிலவி வரும் சூழலில், ஓமன் சுல்தானின் இந்த அதிரடி உத்தரவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10

AD's



More News