செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகளாவிய முன்னிலை பெறும் நோக்கில், சீனா மிகப்பெரிய முதலீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 2 டிரில்லியன் யுவான் (295 பில்லியன் அமெரிக்க டாலர்) செலவில் நவீன ஏஐ டேட்டா சென்டர் கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் செயல்பட்டு வரும் கணினி மற்றும் தரவு மையங்களை ஒருங்கிணைத்து, 2028-க்குள் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த ஏஐ வலையமைப்பை உருவாக்க பெய்ஜிங் இலக்கு நிர்ணயித்துள்ளது.மேலும், இந்த கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் மற்றும் ஏஐ சிப்களில் சுமார் 80 சதவீதம் உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட உள்ளது. குறிப்பாக Huawei போன்ற சீன நிறுவனங்களுக்கு இது பெரிய வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது.இந்த நடவடிக்கை, ஏஐ தொழில்நுட்பத்தில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு சவால் விடுப்பதுடன், Nvidia மற்றும் AMD போன்ற நிறுவனங்களின் சந்தை நிலைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
சீனாவின் ஹாங்சோ (Hangzhou) இடைக்கால மக்கள் நீதிமன்றம், தொழிலாளர் நலன் சார்ந்த ஒரு மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. நிறுவனங்கள் தங்களது செலவைக் குறைப்பதற்காகவும், லாபத்தை அதிகரிப்பதற்காகவும் மட்டும், பணிபுரியும் மனித ஊழியர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.வழங்கப்பட்ட நாள்: சர்வதேச தொழிலாளர் தினத்திற்கு முன்னதாக, ஏப்ரல் 30, 2026 அன்று இந்த அதிரடி தீர்ப்பு வெளியானது.நீதிபதிகளின் கருத்து: தொழில்நுட்ப வளர்ச்சியால் நிறுவனங்கள் அடையும் லாபத்திற்காக, உழைக்கும் தொழிலாளர்களைப் பலிகடா ஆக்கக்கூடாது.சமூகப் பொறுப்பு: ஊழியர்களை நியாயமாக நடத்துவதும், அவர்களுக்குரிய ஊதியத்தை முறையாக வழங்குவதும் நிறுவனங்களின் கடமை மற்றும் சமூகப் பொறுப்பு ஆகும் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த தீர்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் மனிதர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாகவும், உலகளவில் தொழிலாளர் உரிமைகளுக்கான ஒரு புதிய வழிகாட்டியாகவும் பார்க்கப்படுகிறது.
சிறிய ரக அணு உலைகளை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா திட்டம்.தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் சிறிய ரக அணு உலைகளை இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், பிரம்மாண்ட ஏஐ (AI) டேட்டா சென்டர் அமைப்பதற்காக தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு விவசாய நிலத்தைக் கோரின. இதற்காக 86 வயதான முதிய விவசாயிக்கு 15 மில்லியன் டாலர் (சுமார் 125 கோடி ரூபாய்) தர முன்வந்தபோதும், அவர் அந்தப் பெரும் தொகையைத் துணிச்சலாக நிராகரித்தார். "என் கண் முன்னே என் விவசாய நிலம் அழிந்து போவதை என்னால் பார்க்க முடியாது" என்று அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ வீரர்களை வழங்கியதன் மூலம் வடகொரியா சுமார் 14.4 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தொகை வடகொரியாவின் ஒட்டுமொத்த ஆண்டு உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) இணையானதாகும். பணமட்டுமின்றி, ரஷ்யாவிடமிருந்து நவீன ராணுவ தொழில்நுட்பங்கள், உணவு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வடகொரியா கைமாறாகப் பெற்றுள்ளது.
அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் உலக முன்னணியை நோக்கி வேகமாக முன்னேறி வரும் சீனா, தற்போது உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன வானியல் ஆய்வு மையத்தை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.திபெத்திய பீடபூமியில் அமைந்துள்ள கிங்காய் மாகாணத்தில், சுமார் 550 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹4,600 கோடி) செலவில் இந்த பிரம்மாண்ட திட்டம் உருவாகி வருகிறது. இந்த ஆய்வு மையத்தில் 14.5 மீட்டர் விட்டம் கொண்ட சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மற்றும் நவீன விண்வெளி ஆராய்ச்சி உபகரணங்கள் நிறுவப்பட உள்ளன.2030 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த மையம், தற்போது உலகின் முக்கிய வானியல் ஆய்வு தளங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஹவாய் தீவுகளின் மௌனா கியா ஆய்வு மையத்தையும் மிஞ்சும் திறன் கொண்டதாக இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால், பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராய்வதில் சீனாவுக்கு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் முக்கிய மைல்கல்லாக அமையும்.
சிங்கப்பூரில் PayNow சேவையை பயன்படுத்தி பணம் அனுப்பும் மற்றும் பெறும் பயனர்களுக்கு முக்கியமான மாற்றம் ஒன்று ஜூன் 6 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.இதுவரை PayNow கணக்கில் பயனர்கள் அமைத்திருந்த custom nickname மற்றவர்களுக்கு காணப்பட்ட நிலையில், இனி அந்த வசதி நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள உண்மையான பெயர் பகுதியளவு மறைக்கப்பட்ட (masked) வடிவில் மட்டுமே காட்டப்படும்.உதாரணமாக, "Van Chi Hew Mersilina" என்ற பெயர் "VaX ChX HeX MersiXXXX" போன்ற வடிவில் தோன்றக்கூடும்.இந்த புதிய மாற்றம், போலி அடையாளங்களை பயன்படுத்தி நடைபெறும் scam மற்றும் மோசடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் (Association of Banks in Singapore) தெரிவித்துள்ளது.பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில காலமாக நிலவி வந்த போர்ச் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஈரான் மீது இன்று நடத்ததிட்டமிடப்பட்டிருந்த அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் அமெரிக்க அதிபர்டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளார். மேலும், இந்த அமைதி ஒப்பந்தத்தின் இறுதி முடிவுகளுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட "சம்பந்தப்பட்ட தரப்பினரும் ஒப்புதல் அனைத்து அளித்துவிட்டதாக" அவர் அறிவித்துள்ளார். பல மாத மோதலுக்குப் பிறகு எட்டப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் அடுத்த சில நாட்களில் கையெழுத்தாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
SpaceX நிறுவனத்தின் IPO காரணமாக எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 1.1 டிரில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ₹104 லட்சம் கோடி) எட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் உலகின் முதல் “டிரில்லியனர்” என்ற சாதனையை அவர் படைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவரது சொத்து மதிப்பு தைவானின் மொத்த பொருளாதார மதிப்பான 976.7 பில்லியன் டாலரையும் மிஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா முன்மொழிந்துள்ள அமைதி ஒப்பந்தம் குறித்து ஈரான் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஜூன் 19-ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தாலும், கடல்சார் முற்றுகை நீக்கம், முடக்கப்பட்ட நிதி விடுவிப்பு மற்றும் யுரேனியம் செறிவூட்டல் உரிமை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என ஈரான் விளக்கம் அளித்துள்ளது.எனவே, முழுமையான ஆய்வுக்குப் பிறகே அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.