25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


பெய்ஜிங் உலக ரோபோ மாநாட்டில் அசத்திய மனித உருவ ரோபோக்கள்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெய்ஜிங் உலக ரோபோ மாநாட்டில் அசத்திய மனித உருவ ரோபோக்கள்!

சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற 2026 உலக ரோபோ மாநாடு, எதிர்கால தொழில்நுட்பத்தின் புதிய முகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 19 முதல் 23 வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, சுமார் 3,000 ரோபோ தயாரிப்புகளை காட்சிப்படுத்தின.

மனித உருவ ரோபோக்கள், தொழிற்சாலை ரோபோக்கள், சேவை ரோபோக்கள், மருத்துவம் மற்றும் அவசரகாலப் பயன்பாட்டுக்கான ரோபோக்கள் என பல்வேறு தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெற்றன. மாநாட்டில் 311 புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனிதர்களுடன் இயல்பாக தொடர்புகொள்ளும் வகையில் உருவாக்கப்படும் Humanoid ரோபோக்கள் தற்போது சீனாவின் ரோபோ தொழில்துறையில் முக்கிய கவனம் பெற்றுள்ளன.

வாடிக்கையாளர் சேவை, தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், மருத்துவம் மற்றும் முதியோர் பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் இத்தகைய ரோபோக்களைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் வேகமெடுத்து வருகின்றன.

ரோபோக்களின் வளர்ச்சி இனி திரைப்படங்களில் மட்டுமல்ல... நம் அன்றாட வாழ்க்கையிலும் முக்கிய இடம் பெறப்போகிறது!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News