25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சர்வதேச செய்திகள்

Aug 10, 2026

18 மணி நேரம் பறக்கும் உலகின் நீளமான விமான சேவை!

சிங்கப்பூரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் வரை இயக்கப்படும் நேரடி விமான சேவையே உலகின் மிக நீண்ட இடைவிடாத விமானப் பயணமாகும்.Airbus A350-900ULR விமானம் மூலம் இயக்கப்படும் இந்த சேவை, 15,349 கி.மீ. தூரத்தை சுமார் 18 மணி 40 நிமிடங்களில் எந்த இடத்திலும் தரையிறங்காமல் கடக்கிறது. பல நேர மண்டலங்களையும் பெருங்கடல்களையும் தாண்டும் இந்த சேவை, நவீன விமானப் போக்குவரத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.

Aug 08, 2026

₹1.61 லட்சம் கோடியில் AI Chip ஆலை!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் ₹1.61 லட்சம் கோடி முதலீட்டில் பிரம்மாண்ட AI Chip ஆலை அமைக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டெஸ்லா ரோபோக்கள் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தரவு மையங்களுக்குத் தேவையான சிப்களை தயாரிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Aug 08, 2026

மெல்ல மறையும் உலகின் மிகப்பெரிய பெருங்கடல்? உருவாகுமா ‘அமெசியா’?

பசிபிக் பெருங்கடல் தொடர்ந்து சுருங்கி வருவதாகவும், இன்னும் 20 முதல் 30 கோடி ஆண்டுகளுக்குள் அது முழுமையாக மூடப்பட வாய்ப்புள்ளதாகவும் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அவ்வாறு பசிபிக் பெருங்கடல் மூடப்பட்டால், அமெரிக்கா மற்றும் ஆசியா ஒன்றோடொன்று இணைந்து ‘அமெசியா’ என்ற புதிய சூப்பர் கண்டம் உருவாகலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஆஸ்திரேலியாவும் தற்போது ஆண்டுக்கு சுமார் 7 செ.மீ. வேகத்தில் ஆசியாவை நோக்கி நகர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Aug 08, 2026

உலக வர்த்தகத்தில் புதிய சகாப்தம்! 14 பெர்த்... 2.5 கோடி கண்டெய்னர்கள்!

சிங்கப்பூரின் Tuas Port சரக்குப் போக்குவரத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படத் தொடங்கிய PSA Tuas Port, இதுவரை 25 மில்லியன் TEU சரக்குகளைக் கையாண்டுள்ளது.TEU என்பது 20 அடி நீளமுள்ள ஒரு கண்டெய்னரைக் குறிக்கும் அளவீடு. அதாவது, 2.5 கோடி 20 அடி கண்டெய்னர்களுக்கு சமமான சரக்குகள் இங்கு கையாளப்பட்டுள்ளன.உலகின் மிகப்பெரிய முழுமையாக தானியங்கும் கண்டெய்னர் முனையமாக விளங்கும் Tuas Port, திறமையான மற்றும் தடையற்ற சரக்குப் போக்குவரத்துக்கான முக்கிய மையமாக செயல்பட்டு வருகிறது.தற்போது 14 பெர்த்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 18 ஆக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.2040-களில் ஆண்டுக்கு 65 மில்லியன் TEU சரக்குகளைக் கையாளும் வகையில் துறைமுகம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

Aug 07, 2026

24 மணி 24 நிமிடங்கள் பறந்த Airbus!

மெல்போர்னிலிருந்து டூலூஸ் வரை 24 மணி 24 நிமிடங்கள் நீடித்த சோதனைப் பயணத்தை Airbus A350-1000ULR வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்தப் பயணம் நீண்ட தூர விமான சேவைக்கான முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

Aug 07, 2026

சீன பௌத்த மரபிலும் முருகன்!

சீன மகாயான பௌத்த மரபில் Wei Tuo (வேய் துவோ) என்ற பாதுகாவலர் தெய்வம் வழிபடப்படுகிறார். சிலர் இதை இந்திய மரபுகளுடன் ஒப்பிடுகின்றனர். ஆனால் அவர் முருகனே என்பது வரலாற்று ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை.

Aug 06, 2026

கடலில் கரையும் புதிய பிளாஸ்டிக்... ஜப்பான் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கிய புதிய வகை பிளாஸ்டிக், கடல்நீரில் சில மணி நேரங்களிலேயே கரையும் தன்மை கொண்டது. இது மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உருவாக்காது. மாறாக, கடல் நுண்ணுயிரிகளால் இயற்கையாக சிதைக்கப்படும் பாதுகாப்பான பொருட்களாக மாறுகிறது.

Aug 05, 2026

உலகின் மிகப்பெரிய விமான நிலையம்... சவுதியில்!

சவுதி அரேபியாவின் தம்மாம் நகருக்கு அருகே அமைந்துள்ள கிங் ஃபஹ்த் சர்வதேச விமான நிலையம், சுமார் 776 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக திகழ்கிறது. இதன் பரப்பளவு பல நகரங்களை விட அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Aug 04, 2026

சோலார் தொழில்நுட்பத்தில் ஜப்பானின் புதிய முன்னேற்றம்.

ஜப்பான் உருவாக்கி வரும் பெரோவ்ஸ்கைட் சோலார் ஃபிலிம் தொழில்நுட்பம் மூலம் சுவர்கள், கூரைகள், ஜன்னல்கள் உள்ளிட்ட பல்வேறு மேற்பரப்புகளில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். குறைந்த செலவில் அதிக அளவில் தயாரிக்கக்கூடிய இந்த தொழில்நுட்பம், சுத்தமான ஆற்றல் துறையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Aug 03, 2026

டிராபிக் சிக்னல் இல்லாமல் இயங்கும் நாடு... பூடானின் தனிச்சிறப்பு!

இந்தியாவின் அண்டை நாடான பூடானில், தலைநகர் திம்பு உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் இல்லை. 1990-களில் சிக்னல்கள் அமைக்கப்பட்டாலும், பொதுமக்களின் எதிர்ப்பால் அவை அகற்றப்பட்டன. அதன்பிறகு, போக்குவரத்து காவலர்களின் கைசைகைகளே வாகனங்களை ஒழுங்குபடுத்தும் முக்கிய முறையாக இருந்து வருகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10

AD's



More News