25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


சர்வதேச செய்திகள்

Aug 03, 2026

டிராபிக் சிக்னல் இல்லாமல் இயங்கும் நாடு... பூடானின் தனிச்சிறப்பு!

இந்தியாவின் அண்டை நாடான பூடானில், தலைநகர் திம்பு உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் இல்லை. 1990-களில் சிக்னல்கள் அமைக்கப்பட்டாலும், பொதுமக்களின் எதிர்ப்பால் அவை அகற்றப்பட்டன. அதன்பிறகு, போக்குவரத்து காவலர்களின் கைசைகைகளே வாகனங்களை ஒழுங்குபடுத்தும் முக்கிய முறையாக இருந்து வருகிறது.

Aug 01, 2026

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்... மீண்டும் சிங்கப்பூருக்கே முதலிடம்!

Henley Passport Index 2026 பட்டியலில், உலகின் மிகவும் வலிமையான பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், 192 நாடுகளுக்கு விசா இல்லாமலோ அல்லது வருகையின்போது விசா பெற்றோ எளிதாக பயணம் செய்யலாம்.

Aug 01, 2026

அல் ஹிந்த் மையங்களில் இந்தியர்கள் நீண்ட வரிசை!

இந்திய தூதரகம் நேரடியாக பாஸ்போர்ட் சேவைகளை வழங்கிய காலத்தில், அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காமல் பல இந்தியர்கள் சிரமம் சந்தித்தனர்.தற்போது பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளை தற்காலிகமாக அல் ஹிந்த் நிறுவனம் வழங்கத் தொடங்கியுள்ளதால், துபாயில் உள்ள அதன் சேவை மையங்களில் ஏராளமான இந்தியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சேவைகளைப் பெற்றனர்.

Jul 31, 2026

நாசாவின் புதிய விண்வெளி கேமரா.

பிரபஞ்சத்தின் இதுவரை பதிவு செய்யப்படாத பகுதிகளை ஆய்வு செய்யும் நோக்கில் நாசா புதிய அதிநவீன விண்வெளி கேமராவை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி மூலம் புதிய விண்வெளி காட்சிகள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Jul 30, 2026

'Bread for All'... துபாயின் மனிதநேயம் முதல் ஆடம்பரம் ,, 'A Dubai Invite' வரை!

துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது தொடங்கிய 'Bread for All' திட்டத்தின் மூலம், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் தேவையுள்ளவர்களுக்கு இலவச ரொட்டி வழங்கப்படுகிறது. துபாயில் யாரும் பசியுடன் உறங்கக் கூடாது என்பதே இதன் நோக்கம்.இதுமட்டுமல்லாமல், Lamborghini, Ferrari போன்ற சூப்பர் கார்களில் ரோந்து செல்லும் போலீசார், Robot Police Officer, உலகின் மிக உயரமான Burj Khalifa, Gold ATM, 24 கேரட் Gold Ice Cream, Floating Villas போன்ற ஆடம்பரங்களாலும் துபாய் உலகை வியக்க வைக்கிறது.அதேநேரத்தில், அழுக்கான காரை பொதுஇடத்தில் நிறுத்துதல், அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது, மெட்ரோவில் சாப்பிடுதல் அல்லது சூயிங்கம் மெல்லுதல் போன்றவற்றுக்கு கடுமையான விதிமுறைகளும் அமலில் உள்ளன.மேலும், 'A Dubai Invite' திட்டத்தின் கீழ், ஜூலை 20 முதல் அக்டோபர் 31, 2026 வரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைத்து வரும் குடியிருப்போருக்கு Dh 3,000-க்கும் அதிகமான பயணச் சலுகைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

Jul 29, 2026

200 மீட்டர் அகலம்தான்... ஆனாலும் ஒரு முழு நாடு!

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள துவாலு,உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும். சில பகுதிகளில் வெறும் 200 மீட்டர் அகலமும், சுமார்26 கிலோமீட்டர் நீளமும் மட்டுமே கொண்ட இந்த தீவு நாட்டில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

Jul 28, 2026

உலகின் டாப்-5 நிதி மையங்களில் சிங்கப்பூர்.

'நியூ ஃபைனான்ஷியல்' வெளியிட்ட ஆய்வறிக்கையில், உலகின் சிறந்த 5 நிதி மையங்களில் ஒன்றாக சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2015-ல் 9வது இடத்தில் இருந்த சிங்கப்பூர், தற்போது சீனாவை முந்தி முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், ஹாங்காங் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

Jul 27, 2026

எளிமையான வீட்டில் வாழும் உலகின் பணக்காரர் எலான் மஸ்க்.

உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க், பல லட்சம் கோடி ரூபாய் சொத்துகளை வைத்திருந்தாலும் மிகவும் எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்.ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா, நியூராலிங்க், தி போரிங் கம்பெனி, xAI மற்றும் எக்ஸ் (X) போன்ற முன்னணி நிறுவனங்களின் தலைவரான அவர், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் போகா சிகா பகுதியில் உள்ள சுமார் 400 சதுர அடி பரப்பளவு கொண்ட சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.அந்த வீட்டில் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை மற்றும் குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மட்டுமே உள்ளன. அபரிமிதமான செல்வம் இருந்தும் எளிமையான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Jul 27, 2026

ஆஸ்திரேலியா கடற்கரையில் மர்ம உலோகப் பந்துகள்.

ஆஸ்திரேலியாவின் பாரஸ்ட் கடற்கரையில் மர்மமான உலோகப் பந்துகள் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விண்வெளியில் இருந்து விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இந்தப் பொருட்கள் குறித்து விண்வெளி முகமை முதற்கட்ட ஆய்வு நடத்தியதில், அவை ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் அழுத்தக் கலன்கள் (Pressure Vessels) என தெரியவந்துள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இந்த உலோகப் பொருட்களை யாரும் தொட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இவை எந்த நாட்டின் ராக்கெட்டில் இருந்து பிரிந்து விழுந்தன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Jul 25, 2026

19 வயதில் ட்ரோன் நிறுவனம்; பள்ளி தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.95 லட்சம் நன்கொடை.

சீனாவின் ஷென்செனைச் சேர்ந்த 19 வயது மாணவர் வெய் சியுவான், படிப்புடன் ட்ரோன் மற்றும் AI தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மலிவு விலை ட்ரோன்களை உருவாக்கி வெற்றி பெற்ற அவர், தனது பள்ளியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்காக ஓய்வறை அமைக்க ரூ.95 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.16 வயதிலேயே நண்பர்களுடன் நிறுவனத்தைத் தொடங்கிய அவர், உணவக வேலை மற்றும் உணவு விநியோகம் செய்து ஆரம்பச் செலவுகளை சமாளித்தார். தற்போது 11 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அவரது நிறுவனம், புதிய AI தயாரிப்புகளையும் உருவாக்கி வருகிறது. சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்ட அவரது நன்கொடை நடவடிக்கை பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது

1 2 ... 6 7 8 9 10 11 12 13 14 15

AD's



More News