25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


சர்வதேச செய்திகள்

Oct 08, 2026

கர்ப்பம் தரிக்கும் ரோபோட் – சீனாவில் உருவாக்கம்?

2026-ல் சீனா உலகின் முதல் கர்ப்பத்தை தாங்கும் மனித வடிவ ரோபோட்டை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் மனிதக் குழந்தை பிறப்பை சாத்தியமாக்கும் தொழில்நுட்பம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் தற்போது பெரும் கவனத்தை பெற்றுள்ளன.

Oct 07, 2026

$40 டிரில்லியனைத் தாண்டிய அமெரிக்கக் கடன்!.

அமெரிக்காவின் தேசியக் கடன் வரலாற்றில் முதன்முறையாக $40 டிரில்லியனைத் தாண்டியுள்ளது.2017-ல் ட்ரம்ப் முதன்முறையாக அதிபராக பதவியேற்றபோது சுமார் $20 டிரில்லியனாக இருந்த கடன், தற்போது இரட்டிப்பாகியுள்ளது. அதிகரிக்கும் வட்டி, அரசுச் செலவுகள் மற்றும் சமூகநலத் திட்டங்கள் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

Oct 06, 2026

 பட்டம் பெற்ற ரோபோக்கள்.

சீனாவின் ஹாங்சோ ரோபோ பள்ளியில் 2 மாத பயிற்சியை முடித்த 4 ரோபோக்கள் அதிகாரப்பூர்வமாக பட்டம் பெற்றுள்ளன. வழிகாட்டுதல், ஆய்வு மற்றும் இசை உள்ளிட்ட பணிகளில் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

Oct 06, 2026

சவுதி அரேபியாவின் புதிய மின்சார கார்.

சவுதி அரேபியா உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் CEER EXOBOT மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. EXOBOT SUV-யில் 112 kWh பேட்டரி, 850 HP சக்தி மற்றும் Dual-Motor AWD வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oct 05, 2026

ஈரானிய ரியால் மதிப்பு கடும் வீழ்ச்சி.

ஈரானிய ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான ரியாலின் மதிப்பு 25 லட்சத்தை கடந்துள்ளது. போர் சூழலால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

Oct 05, 2026

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு சர்வதேச விருதுகள்.

2026 ஸ்கைட்ராக்ஸ் விருதுகளில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், உலகின் சிறந்த விமான நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆசியாவின் சிறந்த விமான நிறுவனம் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளது. அதன் துணை நிறுவனமான Scoot, தொடர்ந்து 6-வது ஆண்டாக சிறந்த நீண்ட தூர பட்ஜெட் விமான நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது

Oct 03, 2026

விண்வெளியில் அடுத்த உலகப்போர்: சீன ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட விண்வெளி மண்டலமே உலக வல்லரசு நாடுகளின் எதிர்காலப் போர்க்களமாக மாறும் என்று சீனாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.தாக்குதல் உத்திகள்: நிலவின் சிக்கலான ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி விண்கலன்களை எதிரிகளுக்குத் தெரியாமல் மறைத்து வைத்து தாக்குதல் நடத்தவும், விண்வெளியின் முக்கியப் பாதைகளைக் கைப்பற்றி எதிரி நாட்டு விண்கலன்களை வழிமறிக்கவும் முடியும்.விண்வெளி அதிகாரம்: பூமி-நிலவு இடைப்பட்ட மண்டலத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் விண்வெளியின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றி எதிரி நாடுகளை அச்சுறுத்த முடியும் என இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாங் ஜாஹுய் தெரிவித்துள்ளார்.வெளியீடு: இந்த ஆய்வுச் கட்டுரை 'ஜர்னல் ஆஃப் கமாண்ட் அண்ட் கன்ட்ரோல்' (Journal of Command and Control) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Oct 03, 2026

ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல்.

ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதினுடன் தொடர்புடைய யுனைடெட் ரஷ்யா கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Oct 02, 2026

நிலவில் சோலார் மின்சாரம் தயாரிக்க புளூ ஆர்ஜின் திட்டம்.

நிலவில் சூரிய ஒளி தொடர்ந்து கிடைக்காததால், அங்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்க அமெரிக்காவின் 'புளூ ஆர்ஜின்' தனியார் நிறுவனம் தீர்வுகண்டுள்ளது.திட்டம்: நிலவின் தென் துருவப்பகுதிக்கு அருகே 66  அடி உயரத்தில் 'பவர் டவர்' (Power Tower) என்ற சோலார் டவரைச் செங்குத்தாக நிறுவுதல்.இலக்கு: 10 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்தல்.இடம் தேர்வு: தென் துருவப்பகுதியில் நீண்ட நேரம் சூரிய ஒளி படும் உயரமான இடங்கள் இருப்பதால் இப்பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.எதிர்காலத் திட்டம்: மேலும் பல சோலார் டவர்களை நிறுவி, லேண்டர் மட்டுமன்றித் தொலைவில் உள்ள மற்ற உபகரணங்களுக்கும் மின்சாரம் வழங்குவது.

Oct 01, 2026

உலகப் பொருளாதாரம் & சர்வதேசச் செய்திகள்

ஹாங்காங்கைக் கைப்பற்றிய 100 டன் ரஷ்யத் தங்கம்: 2026-ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் ரஷ்யாவிலிருந்து சுமார் 100 டன் தங்கம் ஹாங்காங்கிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 3 மடங்கு அதிகம். 2022 மேலைநாடுகளின் தடைகளுக்குப் பிறகு, ரஷ்யா தன் தங்க ஏற்றுமதியை ஆசியாவை நோக்கித் திருப்பியுள்ளது. இதில் 2022 முதல் இதுவரை சுமார் $35 பில்லியன் மதிப்பிலான ரஷ்யத் தங்கத்தை ஹாங்காங் நிறுவனங்கள் வாங்கியுள்ளதாக Financial Times செய்தி வெளியிட்டுள்ளது."நிலா எங்களுடையது!" - சர்ச்சையைக் கிளப்பிய டிரம்ப்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது  'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில், நிலவில் அமெரிக்கக் கொடி இருப்பது போன்ற படத்தைப் பகிர்ந்து "THE MOON IS OURS" (நிலா எங்களுடையது) எனக் குறிப்பிட்டது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி எந்த ஒரு நாடும் நிலவின் மீது தனி உரிமை கொண்டாட முடியாது என்ற சூழலில், டிரம்பின் இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 14 15

AD's



More News