350 வகையான கொசுக்கள்
மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே கொசுக்கள் பூமியில் இருந்தன என அறிவியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொசு இனத்தில் சுமார் 350-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை காடுகளை தான் இருப்பிடமாக கொண்டுள்ளன. மனித வாழ்விடங்களை சார்ந்து வாழும் கொசு இனங்கள் மிக குறைவு. இந்த இனங்களின் பெண் கொசுக்கள் தான் மனிதனை கடித்து நோயை பரப்புகின்றன. உண்மையில், கொசுக்களின் முதன்மை உணவுரத்தம் அல்ல.அவை பல்வேறு வகையான பூக்களில் இருந்து தேனை உறிஞ்சும் குழாய் மூலம் உணவாக உட்கொள்கின்றன. இவ்வாறு உறிஞ்சும் போது மகரந்த தாள்களை அவற்றின் உடலில் ஒட்டிக்கொள்ள அனுமதிக்கிறது. அவை தொடர்ந்து தேனுக்காக மற்ற பூக்களுக்கு செல்லும்போது மகரந்தங்களை மற்ற பூக்களுக்கு கடத்துகின்றன.
பொதுவாக கொசுக்கள் இனத்தின் பல வகைகளும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதாக கருதப்பட்டாலும் கொசுக்களின் சில இனங்கள் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களை பரப்பும். டயர்கள், குளங்கள், குட்டைகளில் கொசுக்கள் வாழும். பெண் கொசுக்கள் பொதுவாக தண்ணீரின் மீது அல்லது அருகில் முட்டையிடும். முட்டைகள் குஞ்சு பொரிக்கும் போது, அவை லார்வாக்கள் ஆகமாறிநீரில் உள்ள நுண்ணுயிரிகளை உண்ணும். லார்வா பியூபா நிலையில் இறக்கைகள் வளரும் வரை காத்தி ருக்கும். முழு வளர்ச்சியடைந்த பின், பியூபா நிலையில் இருந்து கொசுவாக மாறி தண்ணீரை விட்டுவிடும். வெப்பநிலை உயர் தொடங்கும் போது, வழக்கமாக வசந்த காலம் முதல் கோடை காலம் வரை, அவற்றின் இனப்பெருக்க காலம் தொடங்குகிறது. தண்ணீரை தேங்கவிட்டு கொசுக்கள் வாழ வழி ஏற்படுத்தி கொடுப்பது மனிதர்கள் தான். மழைக்காலத்தில் பழைய டயர்,சிரட்டை, பாட்டில்களை குப்பையில் வீசாமல் இருப்பதும், தண்ணீர் தேக்கங்களை சரியாக பராமரிப்பதும் . கொசுக்கள் பெருகாமல் இருக்கும்.
0
Leave a Reply