25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Aug 07, 2026

2026–27ஆம் ஆண்டிற்கான முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான TVK அரசின் முதல் தமிழ்நாடு பட்ஜெட்.

2026–27ஆம் ஆண்டிற்கான முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான TVK அரசின் முதல் தமிழ்நாடு பட்ஜெட், இளைஞர்கள் மற்றும் Gen Z தலைமுறையை மையமாகக் கொண்டு கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறது.முக்கிய அறிவிப்புகள்:பள்ளிக் கல்விக்கு ₹44,527 கோடி, உயர்கல்விக்கு ₹8,393 கோடி ஒதுக்கீடு.3,734 அரசு பள்ளிகள் நவீனமயமாக்கம்; 10,000 பள்ளிகளில் Super Clean, Super Campus திட்டம்.வெற்றி மடிக்கணினி திட்டம் மூலம் மாணவர்களுக்கு லேப்டாப்; 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கல்.ஒரு லட்சம் மாணவர்களுக்கான 200 புதிய விடுதிகள் அமைக்க TNSHIC உருவாக்கம்.Tamil Nadu AI Mission தொடக்கம்; AI மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு ₹398 கோடி ஒதுக்கீடு.2031க்குள் 5 லட்சம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு AI பயிற்சி.வெற்றித்திறன் திட்டத்தின் மூலம் 13 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் இன்டர்ன்ஷிப்.SSC, RRB, IBPS தேர்வுகளுக்கான இலவச பயிற்சி; 5 புதிய ITI-கள் அமைப்பு.மாநிலம் முழுவதும் 10 Olympic Centres of Excellence அமைக்க ₹50 கோடி ஒதுக்கீடு.NEET-க்கு எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தி, 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ சேர்க்கையை மீண்டும் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தியது.மொத்தத்தில், இந்த பட்ஜெட் கல்வி, AI, டிஜிட்டல் வசதிகள், வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு மூலம் இளைஞர்களை வலுப்படுத்துவதை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது.

Aug 07, 2026

₹8,500 கோடி மின் திட்டம் அதானிக்கு!

விசாகப்பட்டினம் பகுதியில் ₹8,500 கோடி மதிப்பிலான மாநிலங்களுக்கு இடையேயான மின் பரிமாற்றத் திட்டத்தை Adani Energy Solutions கைப்பற்றியுள்ளது. இந்தத் திட்டம் கிரீன் ஹைட்ரஜன் மற்றும் கிரீன் அம்மோனியா உற்பத்திக்குத் தேவையான மின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும்.

Aug 07, 2026

போகரின் 'கெவன குளிகை' – உண்மையா?

சித்தர் போகர் குறித்து, "கெவன குளிகை" மூலம் விண்வெளி பயணம் செய்தார் என்ற கதைகள் சித்தர் மரபுகளில் காணப்படுகின்றன. ஆனால் இதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை; இது ஆன்மிக/புராண மரபின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது.

Aug 07, 2026

Samsung Galaxy Z Fold 8 விலை வெளியானதா?

Galaxy Z Fold 8-ன் ஆரம்ப விலை ₹1,99,990 ஆகவும், Galaxy Z Flip 8-ன் விலை ₹1,19,999 ஆகவும் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Aug 07, 2026

பெங்களூருவில் Aero India 2027!

ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சியான Aero India 2027 பிப்ரவரி 8–12 வரை யெலஹங்கா விமானப்படை தளத்தில் நடைபெறுகிறது. பாதுகாப்புத் துறை மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பல புதிய தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெறுகின்றன.

Aug 07, 2026

EV மறுசுழற்சி: இந்தியாவின் அடுத்த பெரிய தொழில் வாய்ப்பு.

2030-க்குள் இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், பயன்படுத்தப்பட்ட பேட்டரிகள் மற்றும் வாகன உதிரிபாகங்களை மறுசுழற்சி செய்யும் (Recycling) தொழில், எதிர்காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகளில் ஒன்றாக மாறும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

Aug 06, 2026

வெள்ளை ஷூ எப்போதும் புதிதுபோல் இருக்க  டிப்ஸ்.

பற்பசை மற்றும் பழைய டூத் பிரஷ் கொண்டு மெதுவாக தேய்த்தால் சிறிய கறைகள் நீங்கும். பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலவையை பயன்படுத்தி பிடிவாதமான அழுக்குகளை அகற்றலாம். கழுவிய பிறகு நேரடி வெயிலில் அல்லாமல் நிழலில் உலர்த்துங்கள். ஷூவின் உள்ளே செய்தித்தாள் வைத்து உலர்த்தினால் ஈரப்பதம் விரைவில் குறையும். புதிய ஷூவுக்கு Water & Stain Protector Spray பயன்படுத்தினால் அழுக்கு ஒட்டுவது குறையும். கறைகள் பட்டவுடன் உடனே சுத்தம் செய்வது நல்லது. பயன்படுத்தாத நேரங்களில் ஷூவை பை அல்லது பெட்டியில் வைத்து பாதுகாத்தால் நீண்ட நாள் நீடிக்கும்.

Aug 05, 2026

2026 முதியோருக்கான முதலீடு: முக்கிய ஆலோசனைகள்.

2026-ல் ஓய்வுபெற்றோருக்கு பாதுகாப்பான முதலீடு, நிலையான வருமானம் மற்றும் நல்ல வருவாய் தரும் அரசு திட்டங்கள், வங்கி FD-கள் மற்றும் குறைந்த ஆபத்து முதலீடுகள் சிறந்த தேர்வுகளாக உள்ளன.முதலீட்டிற்கு முன் கவனிக்க வேண்டியவை:உயில் (Will) தயாரித்து சொத்து உரிமையை தெளிவுபடுத்துதல்.போதுமான மருத்துவக் காப்பீடு பெற்று மருத்துவச் செலவுகளிலிருந்து பாதுகாப்பு பெறுதல். குறைந்தது 18 மாத செலவுக்கான அவசர நிதியை எளிதில் பணமாக்கக்கூடிய FD போன்ற திட்டங்களில் வைத்திருத்தல்.

Aug 05, 2026

குளுக்கோசுக்கு பதிலா இளநீரா..??

இரண்டாம் உலகப்போரின் போது அவசர காலத்தில் குளுக்கோஸ் தட்டுப்பாடு ஏற்பட்டதால், உடைக்கப்படாத இளநீரின்இயற்கையான தூய்மையை நம்பி, காயமடைந்த வீரர்களுக்கு அதை நேரடியாக ஐவி திரவமாக நரம்பில் செலுத்தி மருத்துவர்கள் ராணுவ வீரர்களின் உயிரைக் காப்பாற்றினர்!

Aug 05, 2026

IRCTC புதிய இணையதளம்: டிக்கெட் முன்பதிவு வேகம் பல மடங்கு உயர்வு.

ரயில் பயணிகளுக்காக மேம்படுத்தப்பட்ட புதிய IRCTC இணையதளம் வரும் 15-ஆம் தேதி அறிமுகமாகிறது. இதன் மூலம், தட்கல் உள்ளிட்ட ரயில் டிக்கெட்டுகளை விரைவாக முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே தெரிவித்துள்ளது.புதிய அமைப்பில், நிமிடத்திற்கு 32 ஆயிரமாக இருந்த முன்பதிவு திறன் 1.5 லட்சமாக அதிகரிக்கிறது. மேலும், முன்பதிவின்போது CAPTCHA சரிபார்ப்பு தேவையில்லை. பயணிகள் உதவிச் சேவைகளையும் அதிகளவில் ஒரே நேரத்தில் பெறும் வகையில் தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

1 2 ... 13 14 15 16 17 18 19 ... 136 137

AD's



More News