25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Feb 26, 2024

கோவை மாநகராட்சியில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகள் விரைவில் பளபளப்பாக மாறப்போகிறது

கடந்த 20 வருடங்களில் கோவை மாநகரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. கோவை மாநகர பகுதிகளில் மக்கள் நெருக்கம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கோவை மாநகராட்சியில் பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படும் நிலையில், சாலைகள் விரைவில் பளபளப்பாக மாறப்போகிறது கோவையில் அவினாசி சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை என ஏராளமான நெடுஞ்சாலைகள் இருக்கிறது. நெடுஞ்சாலைகளில் சாலைகள் சரியாக இருந்தாலும் மாநகராட்சிக்கு சொந்தமான சாலைகளில் பல இடங்களில் பள்ளமாக காணப்படுகிறது.கோவை மாநகராட்சியை பொறுத்தவரை நீண்டகாலமாக விரிவாக்கம் செய்யப்படவில்லை... விரிவாக்கம் செய்யப்படாத நிலையிலும் கோவையில் 100 வார்டுகள் உள்ளன. சுமார் 5 லட்சம் வீடுகள் இருக்கிறது. சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். புறநகர் பகுதிகளை சேர்ந்தால் 25 முதல் 30 லட்சம் பேர் கோவையில வசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை நகரத்தை பொறுத்தவரை சுமார் 7 ஆயிரம் வீதிகள் உள்ளன.கோவை மாநகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் பல இடங்களில் விறுவிறுப்பாக நடக்கிறது. இதேபோல் கோவை மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் கியாஸ் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர 24 மணி நேர குடிநீர் திட்டம், தொலை தொடர்பு சேவைக்காக கேபிள் பதிக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மாநகரின் பல்வேறு இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.இதனால் கோவையின் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியப்பதால், இந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.. இந்நிலையில் முதற்கட்டமாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கோவை மாநகராட்சி சாலைகள் சீரமைக்கப்பட்டன. 2-ம் கட்டமாக கோவை மாநகரில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க ரூ.106 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கோவை மாநகரில் உள்ள சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு உட்கட்டமைப்பு திட்டம் (டூரிப்) திட்டத்தின் கீழ் ரூ.50¾ கோடி, நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் (என்.எஸ்.எம்.டி.) திட்டத்தின் கீழ் ரூ.28¾ கோடி, மாநில மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.26½ கோடி உள்பட 203 கி.மீ. தூரத்திற்கு சாலைகள் சீரமைக்க மொத்தம் ரூ.106 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Feb 24, 2024

நோய் இல்லாத காலத்தின் சிந்திக்க சில உண்மைகள்

சீனி இல்லாதகாலத்தில் சர்க்கரை நோய் வரவில்லை ஷாம்பு இல்லாதகாலத்தில் தலைமுடிகள் கொட்டவில்லை  மினரல்வாட்டர் இல்லாதகாலத்தில் சிறுநீரில் கல் வரவில்லை. பாலிதீன் பொருட்கள் இல்லாதகாலத்தில் புற்றுநோய் வரவில்லை. - அயோடின் உப்பு இல்லாதகாலத்தில் தைராய்டு வரவில்லை. ரிபைன்ட் பாமாயில் இல்லாதகாலத்தில் மாரடைப்பு வரவில்லை. பிராய்லர் கோழி இல்லாதகாலத்தில் பெண்குழந்தை சிறுவயதில் பருவமடையவில்லை. மிக்சி கிரைண்டர், வாசிங்மெஷின் இல்லாதகாலத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கவில்லை. பேஸ்ட் இல்லாதகாலத்தில் பல் சம்பந்தமான நோய் வரவில்லை. நாப்கின் வருவதற்கு முன் கர்பப்பை நோய் எதுவும் வரவில்லை. சோப்பு இல்லாத காலத்தில் தோல் நோய் எதுவும் வரவில்லை ஆங்கில வழி மருந்துகள் வருவதற்கு முன் நோய்கள் எதுவும் வரவில்லை தாய்மொழி மூலம் கல்வி கற்கும் வரை சிந்தனை திறன் குறையவில்லை 

Feb 24, 2024

.நாட்டின் மிகப்பெரும் பணக்காரராக , கஞ்சத்தனமாக இருந்தஐதராபாத் நிஜாம் நவாப் மிர் உஸ்மான் அலி கானின் மரண பயம்

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்புஐதராபாத் நிஜாம் நவாப் மிர் உஸ்மான் அலி கான் (MirOsmanAliKhan).நாட்டின் மிகப்பெரும் பணக்காரராக இருந்தவர் 77 ஆண்டுகளுக்கு முன்பே இவரது சொத்து மதிப்பு ரூ.17.5 லட்சம் கோடி இருந்தது .அரண்மனை முழுக்க தங்கம், வைரம்.. இருந்தாலும் விஷம் வைத்து கொன்றுவிட்டு செல்வத்தை எல்லாம் பறித்து விடுவார்களோ என்ற பயம் எப்போதும் இவருக்கு இருந்ததுபிரபல டைம் இதழானது 1937ம் ஆண்டு பிப்ரவரியில் இதழில் முதல் பக்கத்தில் இவருக்கு இடம் அளித்து உலகின் மிகப் பெரிய பணக்காரராக அறிவித்ததுஇவரது அரண்மனை மேசை டிராயரில் புகழ்பெற்ற ஜேக்கப் வைரம் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். எலுமிச்சை அளவு கொண்ட இந்த வைரம் 280 காரட் இருந்தது. ஆனால் நிஜாம் இதனை பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தினார் என்றும் கூறப்படுகிறது.மேலும், இவரது தோட்டத்தில் தங்க செங்கற்கள் ஏற்றப்பட்ட லாரிகள் புதர்களுக்கு நடுவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், அரண்மனையில் வைரம், நகைகள் வைக்க இடமில்லாத நிலை இருந்ததாகவும் கூறியுள்ளனர்.நிஜாம் பெரிய பணக்காரராக இருந்தாலும் கஞ்சத்தனமாக இருப்பார். அது எப்படி என்றால் இவரிடம் நூற்றுக்கணக்கில் தங்க தட்டுகள் இருந்தாலும் டின் பாத்திரங்களில் உணவை சாப்பிடுவார். அழுக்கு துணிகளை தான் அணிவார்.குறிப்பாக இவரை சந்திக்க வந்தவர் ஆஷ்டிரேயில் அணைந்த சிகரெட்டை விட்டுச் சென்றாலும் அதனை மீண்டும் பயன்படுத்துவார்.இதனிடையே, தன்னை யாராவது விஷம் வைத்து கொன்றுவிட்டு தன் செல்வத்தை கைப்பற்றி விடுவார்களோ என்ற பயம் எப்போதும் இவரிடம் உள்ளது. இதனால், சாப்பிடும் முன்பு அதை முதலில் சாப்பிட்டு பார்ப்பதற்கு ஒரு குழுவை அழைத்துச் செல்வார்.  

Feb 24, 2024

Shark Tank India புகழ்  தொழிலதிபர், முதலீட்டாளர் மற்றும் தொலைக்காட்சி பிரபலம்  Namita Thapar.

தொழில் ரீதியாக வெற்றிகளை அவர் குவித்து வருவதுடன், சொகுசு வீட்டுக்கு சொந்தக்காரர், விலை உயர்ந்த கார்கள் மற்றும் பல கோடிகள் சொத்து மதிப்புக்கு சொந்தக்காரர் நமிதா. EmcurePharmaceuticals என்ற நிறுவனத்தின் தலைவரான NamitaThapar தொடர்ந்து 3வது சீசனாக SharkTankIndia என்ற தொலைக்காட்சி தொடரில் நடுவராகவும் செயல்பட்டு வருகிறார்.நமிதா தாபரின் சொத்து மதிப்பு ரூ 600 கோடி என்றே கூறப்படுகிறது.EmcurePharmaceuticals என்ற நிறுவனத்தில் இருந்தே பெருந்தொகை ஆதாயம் பெறுகிறார்.MBA பட்டதாரியான நமிதா தாபர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பின்னர்,GuidantCorporation என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். சில ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா திரும்பிய அவர், தந்தை சதீஷ் மேத்தா உருவாக்கிய EmcurePharmaceuticals என்ற நிறுவனத்தில் தலைமை நிதி நிர்வாக அதிகாரியாக இணைந்தார்.தொடர்ந்து மிக விரைவில் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.Emcure நிறுவனத்தில் முதன்மை பொறுப்புகளில் செயல்பட்டு வந்தாலும்,IncredibleVenturesLtd என்ற நிறுவனத்தின் தலைவராகவும்,SharkTankIndia என்ற தொலைக்காட்சி தொடரின் நடுவர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வருகிறார்.SharkTankIndia என்ற நிகழ்ச்சியின் ஒரு எபிசோடுக்கு ரூ 8 லட்சம் வசூலித்து வருகிறார். இவர் சொந்தமாக Bummer,Altor,InACan மற்றும் WakaoFoods ஆகிய நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.நமிதா தாபரின் வீடு மட்டும் ரூ 50 கோடி என்றே கூறப்படுகிறது.SharkTankIndia நிகழ்ச்சியின் போது ஒருமுறை நமிதா தாபர் அணிந்திருந்த ஷூவின் விலை ரூ 20 லட்சம் என்றே கூறப்பட்டது.

Feb 24, 2024

சாதனை படைக்கும் பெண் விமானிகள்

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் போர் விமானி சானியா மிர்சாடிவி மெக்கானிக்கின் மகள்இந்திய போர் விமானத்தை இயக்கும் முதல் இஸ்லாமிய பெண்.பழங்குடி  பெண் விமானி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பழங்குடிப் பெண் தனது சமூகத்திலிருந்து முதல் விமானியாகி வரலாற்றை எழுதினார்.படுகா சமூகத்தைச் சேர்ந்த27 வயது பெண், ஜெயஸ்ரீ தென்னாப்பிரிக்காவில் பறக்கும் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு தனது சமூகத்திலிருந்து முதல் விமானி ஆனார்.

Feb 23, 2024

பல கோடி டாலர் சொத்துக்கு அதிபதி எமிர் தமீம் பின் ஹமத் அல் தானி

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனை, ஆடம்பர சொகுசு படகு, விஐபி விமான நிறுவனம் என பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளின் ஒரே சொந்தக்காரர் எமிர் தமீம் பின் ஹமத் அல் தானி ஆவார்.எமிர் என்பது கத்தார் நாட்டின் உயரிய ஆட்சியாளர் என்பதை குறிக்கும். இதுவரை 11 எமீர்கள் கத்தார் நாட்டில் உள்ளனர். இவர்கள் அல்தானி குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2013ம் ஆண்டு ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கு அரச பட்டம் வழங்கப்பட்டது.1980ம் ஆண்டு ஜூன் 3பிறந்த ஷேக் தமீம்(SheikhTamim), முன்னாள் அமீர் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் 4வது மகன் ஆவார்.இவர் லண்டனில் உள்ள Harrow பள்ளியில் தனது ஆரம்ப கால கல்வியை பயின்றார். அதனை தொடர்ந்து 1998ல் இங்கிலாந்தில் உள்ள ராயல் ராணுவ அகாடமியில் பட்டம் பெற்றார்.இங்கிலாந்தில் இருந்து திரும்பிய ஷேக் தமீம் கத்தார் ராணுவத்தில் இரண்டாவது லெப்டினன்ட்ஆக சேவையாற்றினார்.கத்தாரின் எமீர் தமீம் பின் ஹமத் அல் தானி உலக அரசர்களில் 9வது இடத்தில் உள்ளார்.கத்தார் அரசாங்கத்தை நிர்வகிக்கும் அல்தானி குடும்பத்தின் மொத்த சொத்துமதிப்பு சுமார் 335 பில்லியன் அமெரிக்கடாலர்கள் ஆகும்.3 திருமணங்கள் செய்து கொண்டுள்ள எமிர் தமீம் பின் ஹமத் அல் தானி மொத்தம் 13 குழந்தைகள் உள்ளனர்.ஷேக் தமீம் தனது குடும்பத்துடன் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான சொகுசு அரண்மனையில் வாழ்ந்து வருகிறார். DohaRoyalPalaceல் பெரும்பாலான பகுதிகள் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டன.இந்த அரண்மனையில் 100க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.500 கார்கள் ஒரே நேரத்தில் இந்த அரண்மனையில் நிறுத்திக் கொள்ள முடியும். அத்துடன் ஷேக் தமீம் தனக்கு சொந்தமாக 3.3 பில்லியன் டாலர் சொகுசு கப்பல் ஒன்றையும் வைத்துள்ளார்.அத்துடன் விஐபிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் விமான நிறுவனம்,BugattitoFerrari,Lamborghini,RollsRoyce ஆகிய நூற்றுக்கணக்கான சொகுசு கார்கள் ஆகியவற்றை ஷேக் தமீம் வைத்துள்ளார்.

Feb 22, 2024

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இனிமேல் அதிவேகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது

தமிழ்நாடு மின்சார வாரியத்தை மக்கள் மற்றும் நிர்வாக வசதிக்காக பிரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மின்சார வாரியம் இரண்டாக பிரிந்துள்ளது. மாநில மின் பயன்பாட்டு நிறுவனமான தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்(டாங்கேட்கோ) முறையாக இரண்டு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அதன்படி பசுமை ஆற்றல் செயல்பாடுகளுக்காக ஒரு புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிலக்கரி மற்றும் எரிவாயு அடிப்படையிலான அனல் ஆலைகளின் பராமரிப்பு உற்பத்தி, உட்பட முழு செயல்பாடுகளையும் கவனித்துக் கொள்ளும், அதே நேரத்தில் TN பவர் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் சிறந்த நிர்வாகம் மற்றும் செயல்பாட்டுத் திறனுக்காக மீட்டர் மற்றும் பில்லிங் உள்ளிட்ட விநியோக நடவடிக்கைகளைக் கையாளும். இதற்கு இடையில் பசுமை ஆற்றல் செயல்பாடுகளுக்காக ஒரு புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இனிமேல் அதிவேகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது.அதன்படி புகார் கொடுத்த2 மணி நேரத்திற்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் தொடர்பான பிரச்சனை5 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும். பெரிய பிரச்சனைகள், டிரான்ஸ்பார்ம் பிரச்சனைகளை10 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும்.புதிய மின்சார இணைப்புகளை ஏற்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டால்24 மணி நேரத்திற்குள் அதை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.44 மின் பகிர்மான வட்டங்களாக தமிழ்நாடு மின் வாரியம் தற்போது செயல்படுகிறது. இப்படி ஒவ்வொரு வட்டத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் செயல்படுகிறது. இந்த வாரியம்தான் மக்களின் குறைகளை போக்க உள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் லண்டனில் இருந்து முக்கியமான டீம் ஒன்றை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அவர்களுக்கு சிறப்பு ப்ரொஜெக்ட் ஒன்றும் கொடுக்கப்பட உள்ளது.பொதுத்துறை நிறுவனங்களை மனதில் வைத்து முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை வகுத்து உள்ளார். அதன்படி லண்டனில் இருக்கும் பிரபல கன்சல்டன்சி நிறுவனமானErnst&Young நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த ஒப்பந்தத்தின்படிErnst&Young நிறுவனம் தமிழ்நாட்டில் இருக்கும்50 பொதுத்துறை நிறுவனங்களை ஆய்வு செய்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் ஆண்டுகாலாண்டு அறிக்கைகள், நடப்பு வருமான குறிப்புகள், இடைக்கால பொருளாதார அறிக்கைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் போக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர். அந்த நிறுவனங்களின் பல்வேறு பொருளாதார அறிக்கைகளை வைத்து இந்த நிறுவனம் அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளனர். 

Feb 22, 2024

4 சிமெண்ட் நிறுவனங்கள் உள்பட 7 நிறுவனங்கள் பங்கு விலையில் இருமடங்கு லாபம் சாதகமான ஒரு போக்கை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்

நிஃப்டி50 குறியீட்டில் உள்ள4 சிமெண்ட் நிறுவனங்கள் உள்பட7 நிறுவனங்கள் அடுத்த ஆண்டில், இரு மடங்கு வருவாயை காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். சிமெண்ட் நிறுவனங்கள் உள்பட, பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்கள், டயர் நிறுவனங்களும் இதில் அடங்கும். மேற்கண்ட பங்குகளின் இந்த ஏற்றமானது2025ம் ஆண்டில் நிறுவனங்கள் மிக வலுவான வருவாயை காணலாம் என்ற எதிர்பார்ப்பின் மத்தியில், அதன் பங்கு விலையும் உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.தொடர்ந்து தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நிறுவனத்தின் உற்பத்தி திறன் மற்றும் வலுவான ஆர்டர் என்பதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது அதன் லாபத்தை அதிகரிக்க வழிவகுக்கும். இது பங்கு விலையில் சாதகமான ஒரு போக்கை ஏற்படுத்தலாம்.

Feb 21, 2024

அதானி குழும நிறுவனங்கள் பங்குச் சந்தையில் ஏறுமுகம்

கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், நான்கு அதானி குழும நிறுவனங்களின் கண்ணோட்டத்தை 'நெகட்டிவ்' என்பதில் இருந்து'ஸ்டேபிள்' ஆக உயர்த்தியுள்ளதுமூடிஸ்கடன் மதிப்பீட்டு நிறுவனம் . மூடிஸ் அமைப்பு தற்போது அதன் மதிப்பீட்டை உயர்த்த முக்கியமான காரணமாக கூறுவது சரியான நேரத்தில் வாங்கிய கடனுக்கு தவணைகளை திருப்பி செலுத்தியது, புதிய முதலீடுகளை ஈர்க்கும் திறன் கொண்டு இருப்பதை வைத்து மதிப்பீட்டைStable ஆக உயர்த்தியுள்ளது.அதானி கிரீன் எனர்ஜி, அதானி க்ரீன் எனர்ஜி ரெஸ்டிரிக்டட் குரூப்1, அதானி- டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி எலக்ட்ரிசிட்டி ஆகியவற்றுக்கான மதிப்பீடுகள் திருத்தப்பட்டுள்ளன என்று மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீசஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. மற்ற எட்டு அதானி குழும நிறுவனங்களுக்கான மதிப்பீடுகள்'stable' என்பதில் இருந்து மாறாமல் உள்ளது. அதானி குழுமம் நிதி வலிமையையும், நிதி திரட்டும் திறனையும்நிரூபித்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் பல கடன் பரிவர்த்தனைகளை முடித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழும பங்குகளின் விலையும், கௌதம் அதானி சொத்து மதிப்பும் தொடர்ந்து உயர்ந்து வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு சாதகமாக உள்ளது.அதானி குழுமம் கடனை அடைத்தது மட்டும் அல்லாமல்GOG மற்றும் கத்தார் முதலீட்டு ஆணையம் போன்ற முக்கிய முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீட்டை பெற்றள்ளது மூலம் பங்குச் சந்தையில் அதன் வலிமையை காட்டியுள்ளது என மூடிஸ் நிறுவன அறிக்கை கூறுகிறது.கடன் மதிப்பீடு என்பது ஒரு நிறுவனத்தின் நிதிக் கடமைகளை நிறைவேற்றும் திறனைக் குறிக்கிறது மற்றும் அத்தகைய மதிப்பீடுகளில் ஏதேனும் மாற்றம் நடந்தால் பங்கு விலை அதிகளவில் பாதிக்கிறது. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமெனில் தனிநபர்களுக்கு இருக்கும் சிபில் ஸ்கோர் போல நிறுவனங்களுக்கு கிரெடிட் ரேட்டிங் அளிக்கப்படுகிறது.  

Feb 21, 2024

திருச்சி வாலிபர் பாலமுருகன் இளம் வயது நீதிபதி

திருச்சியைச் சேர்ந்த23 வயதே ஆகும் வக்கீல் ஒருவர் நீதிபதியாக உள்ளார். திருச்சி மாவட்டம் குண்டூர் பஞ்சாயத்து அயன்புத்தூர் தான் இவரது சொந்த கிராமம். மாமுண்டி,விஜயா தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் பாலமுருகன். இவருக்கு பிரதீப் என்கிற ஒரு அண்ணனும், பிரியங்கா என்கிற சகோதரியும் உள்ளனர். சகோதரிக்கு திருமணம் ஆகிவிட்டது. தாய், தந்தை இருவரும் விவசாயம் பார்த்து வருகின்றனர். பாலமுருகன், தனது ஆரம்பக் கல்வியை செம்பட்டு ஆபட் மார்சல் பள்ளியில் முடித்தார். மேல்நிலை கல்வியை திருச்சி ஜங்ஷன் ஆர்.சி.மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர், வக்கீல் ஆக வேண்டும் என்ற கனவோடு திருச்சி காஜாமலையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்து 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டுகள் திறம்பட சட்டம் பயின்றார். 2022 ஆம் ஆண்டு கவுன்சிலில் வழக்கறிஞராக தனது பெயரை பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிவண்ணபாரதி மற்றும் வழக்கறிஞர் சாகர் ஆகியோரிடம் ஜூனியர் வழக்கறிஞராக 6 மாத காலம் பயிற்சி பெற்றார். பின்னர்2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிவில் நீதிபதி தேர்வு எழுதினார். இதில், அவர் தமிழ்நாடு அளவில்33வது இடத்தையும் திருச்சி மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்று தேர்ச்சி பெற்றார். பயிற்சிகாலத்திற்குப் பின்னர் அவர் நீதிபதியாக உள்ளார். இதுகுறித்து பாலமுருகனிடம் கேட்டபோது, தான்6வது படிக்கும் போதே வக்கீல் ஆக வேண்டும்என்ற கனவை மனதில் விதைத்து கொண்டதாகவும், தற்போது அந்த கனவு நனவாகி உள்ளதாகவும், பயிற்சிக்குப்பிறகுநீதிபதியானதும் ஏழை, பணக்காரர்என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கபாடுபடுவேன் என்று கூறினார். இவருடன் சேர்ந்துதேர்வு எழுதிய திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 10 பேர் நீதிபதியாகஉள்ளனர். 

1 2 ... 38 39 40 41 42 43 44 45 46 47

AD's



More News