25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Aug 18, 2026

UPI கட்டணம்: வணிகப் பரிவர்த்தனைகளுக்கு புதிய அனுமதி.

யுபிஐ (UPI) மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு (Merchant Transactions) 0.25% முதல் 0.4% வரை 'எம்டிஆர்' (MDR - Merchant Discount Rate) கட்டணம் விதிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Aug 18, 2026

டைப்-C சார்ஜிங் வசதியுடன் புதிய ரீசார்ஜபிள் பேட்டரிகள் அறிமுகம்.

பிரபல எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான Portronics, மொபைல் சார்ஜர் (Type-C) மூலமே நேரடியாக சார்ஜ் செய்யும் வசதி கொண்ட 'லித்தியம் புரோ' (Lithium Pro)என்ற புதிய ரீசார்ஜபிள் பேட்டரிகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.முக்கிய அம்சங்கள் & விலை:மாடல்கள்: இவை AA மற்றும் AAA ஆகிய இரு பிரபல அளவுகளில் கிடைக்கின்றன.சிறப்பம்சம்: தனி சார்ஜர் தேவையின்றி, டைப்-சி கேபிள் மூலமே எளிதாக சார்ஜ் செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.விலை விவரம்:AAA பேட்டரி: ₹499.AA பேட்டரி: ₹549.

Aug 17, 2026

அவசியம் தெரிந்துகொள்வோம்!

1.உங்கள் செல்போனிலிருந்துக்கு *#06# டயல் செய்யுங்க...2.உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்...3.இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க...4.செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.net மெயில் பண்ணுங்க....5.போலீஸக்கெல்லாம் போக வேண்டாம்...6.உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRSமற்றும்internetமூலம்கண்டுபிடிச்சுடுவாங்க....7.உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்...

Aug 17, 2026

அடுத்த ஆண்டு முதல் வாகனங்களில் V2V வசதி கட்டாயம்!

சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில், வாகனங்கள் ஒன்றுக்கொன்று தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் V2V (Vehicle-to-Vehicle) தொழில்நுட்பத்தை அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த தொழில்நுட்பத்தின் மூலம், சாலையில் பயணிக்கும் ஒரு வாகனம் தன்னைச் சுற்றியுள்ள மற்ற வாகனங்களுடன் தானாகவே தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும். இதனால் அருகில் செல்லும் வாகனத்தின் வேகம், அதன் தொலைவு உள்ளிட்ட தகவல்களை ஓட்டுநர்கள் முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கையாகச் செயல்பட முடியும்.சிம் கார்டு தேவையின்றி வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் V2V சாதனங்கள், 5.875 முதல் 5.905 GHz வரையிலான அலைவரிசையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.V2V தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான வரைவு விதிகள் தொடர்பாக பொதுமக்களிடமும் மத்திய அரசு கருத்துகளை கேட்டுள்ளது

Aug 17, 2026

கரண்ட் இல்லாமலேயே காய்கறிகளை நீண்ட நாட்கள் பாதுகாக்கலாம்!

வீட்டின் ஒரு பகுதியில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு செங்கற்களை வட்ட வடிவில் அடுக்கி, அதற்குள் ஆற்று மணலை நிரப்ப வேண்டும். பின்னர் மணலை நன்றாக தண்ணீர் ஊற்றி ஈரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதன் மீது காய்கறிகளை வைத்தால், அவை நீண்ட நேரம் அழுகாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும், காய்கறிகளில் உள்ள சத்துக்களும் பெருமளவு குறையாமல் பாதுகாக்கப்படும்.

Aug 17, 2026

திருச்சியில் ரூ.140 கோடியில் பிரம்மாண்ட 'பாரத் ஷாப்பிங் மால்'!

திருச்சியின் ஷாப்பிங் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், ரூ.140 கோடி செலவில் 5 லட்சம் சதுர அடி பிரம்மாண்ட பரப்பளவில் உருவாகிறது "பாரத் ஷாப்பிங் மால்" (Bharath Shopping Mall)!2029-இல் திறப்பு!மாபெரும் வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்:🎬 5 திரையரங்குகள் கொண்ட மல்டிப்ளெக்ஸ்: நவீன சினிமா அனுபவம்!🍔 பிரமாண்ட ஃபூட் கோர்ட் (Food Court): சுவையான உணவுகளின் சங்கமம்!🛒 டிபார்ட்மென்ட் ஸ்டோர்: ஒரே இடத்தில் அனைத்துப் பொருட்களும்!🏷️ பிரபல பிராண்டுகள்: முன்னணி சர்வதேச பிராண்டுகள் மற்றும் ஃபிரான்சைஸ்கள்.உலகத்தர பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள்:🚗 பரந்த கார் பார்க்கிங் வசதி🛗 நவீன நகரும் படிக்கட்டுகள் (Escalators)❄️ மத்திய குளிர்சாதன வசதி (Centralized A/C)📶 இலவச Wi-Fi சேவை🧒 குழந்தைகள் விளையாடும் பிரத்யேகப் பகுதி (Kids Play Area)🛡️ 24x7 முழு நேரப் பாதுகாப்புச் சேவைஷாப்பிங்... சினிமா... உணவு... அனைத்தும் ஒரே இடத்தில்!உங்கள் திருச்சியில்... உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது Bharath Shopping Mall!

Aug 15, 2026

இந்தியாவில் எலக்ட்ரீஷியன்களுக்கு அதிகரிக்கும் வேலைவாய்ப்பு.

இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் எலக்ட்ரீஷியன்களுக்கான தேவை 242 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டேட்டா சென்டர்களின் விரிவாக்கத்தால், இடையறாத மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான தேவை உயர்ந்துள்ளது. குறிப்பாக, AI டேட்டா சென்டர்களின் மின்சார மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை பராமரிக்க திறமையான எலக்ட்ரீஷியன்கள் அதிகளவில் தேவைப்படுவதால், இந்தத் துறையில் வேலைவாய்ப்பும் ஊதியமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Aug 15, 2026

டச் போன் வைத்து உள்ளவர்களுக்கு இது அவசியம் பயன்படும்.!

தங்களது செல்போனில்*#62# என டயல் செய்யுங்கள்.Not forwarded என  என செய்தி வந்தால் நலம்.மாறாக, call forward என்ற வாசகத்தின் பின்னர் ஒன்றிரண்டு தொலைபேசி இலக்கம் வந்தால், உங்கள் தொலைபேசி வழியே நீங்கள் செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன என்று பொருள்!Call forwarding நிறுத்த, ##002# என்று டயல் செய்தால் போதும்!இந்த தகவல் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்!

Aug 15, 2026

புதிய குடும்ப அட்டை ஸ்மார்ட் கார்டு.

தேவையான மிக முக்கிய ஆவணங்கள் 1.GAS BILL கணவர் அல்லது மனைவி பெயரில் இருக்க வேண்டும். 2.சொந்தமாக வீடு இருந்தால் தற்போதைய வீட்டு வரி ரசீது.வாடகை வீடு என்றால் வாடகை ஒப்பந்தம். 3.குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு. ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்  4.பெற்றோர்களின் எரிவாயு இணைப்பு ரசீது.

Aug 15, 2026

ஒரே திட்டம்! 2.40 லட்சம் கோடி முதலீடு.. 14 லட்சம் வேலை.

14 துறைகளை குறிவைத்து மத்திய அரசு அறிமுகப்படுத்திய Production Linked Incentive (PLI) திட்டத்தால், நாட்டிற்கு புதிதாக 2.40 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. 14 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தினால், 15.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி நடந்துள்ளது.

1 2 ... 9 10 11 12 13 14 15 ... 137 138

AD's



More News