வாக்காளப் பெருமக்களுக்கு ஓர் விழிப்புணர்வு
நாம் நம் வீடு, நம் குடும்பத்திற்கு மட்டுமே முதலிடம் தருவது மிகச் சரியானதுதான். ஆனால் நாம் இருக்கும் தேசத்தின் மீது பற்றுதல் மிக மிக அவசியம். முக்கியமும் கூட நம்வீடு, குடும்பம் என்ற வட்டத்திற்குள் இருந்து விட்டால் நம்மைச் சுற்றியுள்ள மற்ற இடங்கள், அரசாங்க அலுவலகங்கள், சட்டத்தை மதிக்கும் அரசாங்கம், மக்களுடைய தேவையறிந்து பூர்த்தி செய்தல், போன்ற நல்ல காரியங்களுக்கு நல்லதொரு தலைவன் நமக்குத் தேவை இல்லையா? ஒரு பிரச்சனை என்றால் ஏழைகளுக்கோ, பணக்காரர்களுக்கோ, சமமான உதவி கிடைக்க வேண்டும். ஜாதி ,மதம் பாகுபாடு இருக்கவே கூடாது.
நமக்கு நீதி நேர்மை தவறாத தலைவர்கள் தேவை. அப்படிப்பட்ட தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு ஜனநாயக உரிமைப்படி, நம்மிடம் தான் இருக்கிறது. இந்த தேர்தலில் நன்றாகப் படித்த, சட்டம் தெரிந்த தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்குத்தான் இருக்கிறது. ஒருவரின் அழகைப் பார்த்தோ, பேச்சாற்றலைப் பார்த்தோ, இலவசங்களை அள்ளித்தருவதாக கூறுபவர்களுக்கு, வாக்களிப்பது மக்களாகிய நமக்கு நாமே குழி தோண்டி புதைத்துக் கொள்வதற்குச் சமம்.
இலவசங்கள் எல்லாம், நாம் கட்டும் வரிப்பணத்தில் இருந்துதான் தர முடியும். தலைவர்கள் கையில் இருந்து இல்லவே இல்லை, நாம் கட்டும் வரிப் பணத்தில் பேரிடர் காலமாகிய வெள்ளம், பூகம்பம், புயல் போன்ற காலங்களில் நமக்குத் தேவை, அதைத் தவிர்த்து இலவசங்களாகத் தந்து விட்டால் மக்களுக்கு யார் உதவி செய்வார்கள். சிந்தியுங்கள் மக்களே! ஒவ்வொருவருக்கும்ஒரு நாட்டை நல்லபடி நடத்திட உதவும்,.உங்கள் ஒட்டு ஒரு சரியான தலைவரை தேர்ந்தெடுப்பதில் இருக்க வேண்டும்.
அதைத் தவிர்த்து கொள்ளை அடிப்பவனுக்கும், மக்களை அலட்சியப் படுத்துபவனுக்கும் கிடையாது. அரசியல் வாதிகளுக்கு நாம் பயப்படாமல், நம் தேவைக்கு எந்த நேரமும் தைரியமாகச் சென்று நம்முடைய உரிமைகளை, கோரிக்கைகளை தைரியமாகக் கூற ,அனுமதி தரும், தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்அரசியல் தலைவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை அவர்களின் நல்ல செயல்களுக்கு மட்டுமே.மற்றபடி அவர்கள் நம்மைப் போல் இந் நாட்டு மக்களே. அதை மனதில் கொண்டு வாக்களியுங்கள்.அரசியல் தலைவர்கள் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தவறானவருக்கு வாக்களித்தால் அடுத்த எலக்சன் வரை ஒன்றுமே செய்ய முடியாது.
April19th.சம்பளத்துடன்விடுமுறைஅளித்திருப்பதுவாக்களிப்பதற்காகத் தான். அதைத் தவிர்த்து வீட்டில் தூங்கி, டி.வி பார்ப்பதற்கு அல்ல. ஒவ்வொரு குடிமகனும் கண்டிப்பாக வாக்களித்து நல்லதொரு தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
நம் பிரச்சனைகளை சரி செய்யும் நல்ல அரசியல் தவைர்களின் சேவை நமக்குத் தேவை.
0
Leave a Reply