பனை மரத்தின் தண்டுகள் தண்ணீரால் நிரம்பியுள்ளன, அவை இயற்கையான கடத்திகளாகின்றன. மின்னல் தாக்கும்போது, மரம் தாக்கத்தின் பெரும்பகுதியை உறிஞ்சி, அருகிலுள்ள மக்களுக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.
ஈரான் உச்சத் தலைவர் கொமேனியின் குடும்பம் இந்தியப் பூர்வீகம் கொண்டது. அவரது தாத்தா சையது அகமது முசாவி, உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி அருகே உள்ள கிண்டூரில் பிறந்தவர். தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் கொமேனி ,ஈராக்வழியாக ஈரானில் குடியேறினார்.1970களில் இஸ்லாமியப் புரட்சியை வழிநடத்திய கொமேனி, பின்னர் நாட்டின் உயர்ந்த தலைவரானார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாகர் தீவின் சுந்தரவனக் காட்டில் ஒரு புதிய சிலந்தி இனத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு 'பிராடுலா அகுமினாடா' என்று பெயரிட்டுள்ளனர்.
அதிக குளிர் இருக்கும் இடங்களில் பேசும் போது, வாயில் இருந்து புகை வருவது போல இருக்கும். இதற்கு காரணம் காற்றில் உள்ள நீராவி தான். குளிர் பகுதிகளில் நாம் பேசினால் வாயிலிருந்து கொஞ்சம் ஈரப்பதத்துடன் காற்று வெளியே வரும். அப்போது அதில் உள்ள நீராவி கடும் குளிரில், குளிர்ந்து திரவமாக மாறி நுண் திவலைகளாக (நீர்த்துளி ) உருவாகும். அதுதான் புகை போல நமக்கு க்கு தெரிகிறது. அப்புகை என்பது மிக நுண்ணிய நீர்த்துளிகளின் தொகுப்பு. இதன் அடிப்படையில் தான், ஐஸ்கட்டி உள்ள கண்ணாடி டம்ளருக்கு வெளியே நீர்த்துளிகள் தோன்றுகிறது.
'டெலமீர்ஸ்' எனும் பாதுகாப்பு கவசம் நம் உடல் செல்களில் உள்ள குரோமோசோம் களில், இருக்கும். வயதாகும் போது இவை சிதைவதால் பல நோய்கள் உருவாகின் றன. டெலமீர்ஸை காக்கும் ஆற்றல், 'வைட்டமின் டி' சத்தில் உள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
பல்வகை பிளாஸ்டிக்கு களும் கழிவுகளில் கலந்திருப்பதால்.அன்றாடம் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் கழிவுகளில் மிகக் குறைந்த சதவீதம் தான் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இவற்றைப்பிரிக்காமல் மறுசுழற்சி செய்வதில் பல சிக்கல்கள் உள்ளன . அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நார்த் வெஸ்ட் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் கழிவுகளைப் பிரிக்காமலேயே மறுசுழற்சி செய்யும் முறையை கண்டறிந்துள்ளனர்.குப்பை போடும் பைகள், பிளாஸ்டிக் கவர்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவைஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பாலியோ லிஃபின்பிளாஸ்டிக்கால்ஆனவை.நிக்கல் அடிப்படையிலானவினையூக்கிகொண்டுஇவற்றைத்எண்ணெய்யாகவும், மெழுகாகவும் மாற்றி எரிபொருளாகப் பயன்படுத் தலாம் என்றுஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர். பிளாஸ்டிக் மறுசுழற்சியைக் குறைந்த செலவில் சுலபமாகச் செய்ய, இந்த வினையூக்கி குறைந்த வெப்ப நிலையில் செயல்படும். இந்த வேதிவினைக்குக் குறைந்த அளவு ஹைட்ரஜன் வாயுவே போதுமானது. அடுத்த சில பத்தாண்டுகளில் பிளாஸ்டிக்கின் அளவு கணிசமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. 2020ல் 46.4 கோடி டன்பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டது. 2050ல் இது 88.4 கோடி டன்னாக உயரும்.எனவே, இந்த ஆய்வுக்குழு கண்டறிந்த வினையூக்கி விரைவில் உலக அளவில் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கலாம்.
அமெரிக்காவைச் சேர்ந்த ரிவர்சைட் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், பூமியின் மற்ற பகுதிகளில் மரம் நடுவதை விட, வெப்ப மண்டல பகுதிகளில் மரம் நடுவதே மிக நல்ல பலன்களை தரும் என்று தெரிய வந்துள்ளது. அதிகமான மரங்களை நடுவது பூமிக்கு நல்லது.
பூச்சியினங்களில் வேகமாக பறக்கக்கூடியது தட்டான். இது மணிக்கு 58 கி.மீ., வேகத்தில் பறக்கும் திறனுடையது. இதன் இறக்கை 2 5 இன்ச். பல வகைகள் உள்ளன. கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இதன் பார்க்கும் திறன் வேகமானது. வினாடிக்கு 200 படங்களை பார்க்கிறது. இது 360 டிகிரி கோணத்தில் பார்க்கிறது. இது தன் மூளையின் திறனில் 80 சதவீதத்தை, பார்வைக்காக மட்டுமே பயன்படுத்துகிறது. அதே போல வேகமாக ஓடும் பூச்சியினம் 'ஆஸ்திரேலிய புலி வண்டு' இது மணிக்கு 9 கி.மீ., வேகத்தில் ஓடும். இதற்கு ஆறு கால்கள் இருக்கும். 2500 வகைகள் உள்ளன.
காபி எத்தியோப்பியா நாட்டில் இருந்து வந்தது. ஆடு மேய்த்த ஒருவர். சில ஆடுகள் ஒரு செடியின் பழங்களை உண்ணும் போது. மிகவும் புத்துணர் வோடு இருந்ததை பார்த்து அவரும் அந்த செடியின் பழங்களை சாப்பிட்டார். தனக்கும் ஒரு வகை புத்துணர்வு உடலில் தோன்றியதை அனுபவித்துவிட்டு அதனை மற்ற அனைவருக்கும் தெரிவித்தார்.இப்படியாக எத்தியோப்பியா முழுவதும் கமகமக்கும் காபி பரவியது. காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி இல்லாமல் ஏராளமானோருக்கு நாள் தொடங்காது. அருகில் உள்ள ஏமன் நாட்டிலும் காபி அறிமுகம் ஆகியது. குறிப்பாக ஏமன்நாட்டின் மோக்கா துறைமுகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இரவு முழுவதும்விழித்திருந்து தியானம் செய்தவர்கள் தொடர்ந்து புத்துணர்வுடன் இருக்கஅவ்வப்போது அவர்களுக்கு காபி பரிமாறப்பட் டது.17-ம் நூற்றாண்டில், ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் பரவி அங்கு முக்கியபானமாக மாறியது. ஐரோப்பிய மக்கள் சந்தித்து பேசும் இடங்கள், 'காபி ஹவுஸ்' என்ற பெயரில் பிரபலம் அடைந்தன.ஆங்கிலேயர்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று நாடு பிடித்து காலனிகளாக மாற்றியபோது ,அந்த நாடுகளிலும் காபியை பயிரிட செய்து அறிமுகம் செய்தனர். அந்த வகையில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் காபி அறிமுகம் ஆகி, இன்று உலகின்அனைத்து நாடுகளிலும் காபி கோலோச்சி வருகிறது .. இவற்றில், குறிப்பிட்டமண்ணில் விளையும் சிடாமா,யிர்காசெபி, கிரேட் ரிப்ட், லிமு, ஹரார், ஜிம்மா, குஜி போன்றவை தனித்த சுவை, மணம் கொண்ட காபிகளாக அறியப்படுகின்றன.
'கிரேட் ரிப்ட்'. 'கிழக்கு ஆப்ரிக்க பிளவு' என அழைக்கப்படும்.உலகிலுள்ள பள்ளத்தாக்குகளில் பெரியது. இது லெபனானில் துவங்கி இந்திய பெருங்கடலில் மொசாம்பிகா வரை செல்கிறது. நீளம் 7000 கி.மீ. அகலம் 48 கி.மீ.,-64 கி.மீ., இது சராசரி கடல்நீர் மட்டத்திலிருந்து, பள்ளத்தில் அமைந்துள்ளது. இதில் எரிமலை, ஏரிகள், பாலைவனம் உள்ளன. பள்ளத்தாக்கு என்பது இரு மலைகளுக்கு இடையில் உள்ள ஆழமான பகுதி. பெரும்பாலான பள்ளத்தாக்குகளின்கீழே ஆறு ஓடும். 'யு', 'வி' வடிவம் அல்லது இரண்டும் கலந்திருக்கும்.