நிலவில் அமைக்கப்படும் ரேடியோ தொலைநோக்கி!
பிரபஞ்சத்தின் மர்மங்களை அறிந்து கொள்ள விஞ்ஞானிகள் பல்வேறு வகையான தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் ரேடியோ தொலைநோக்கிகள் மிகவும் முக்கியமானவை.
விண்வெளியில் இருந்து வரும் ரேடியோ அலைகளை ஆய்வு செய்வதன் மூலம் கருந்துளைகள், நட்சத்திரங்கள் மற்றும் பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பான பல்வேறு தகவல்களை விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகின்றனர்.
ஆனால் பூமியில் ரேடியோ அலைகளை வெளியிடும் ஏராளமான சாதனங்கள் உள்ளன. கார் இன்ஜின்கள், செல்போன்கள், செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட மனிதர்களின் தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து வெளியாகும் ரேடியோ அலைகள், விண்வெளியில் இருந்து வரும் மங்கலான சமிக்ஞைகளை ஆய்வு செய்வதில் இடையூறாக இருக்கலாம்.
இதற்கு ஒரு தீர்வாக, நிலவில் ரேடியோ தொலைநோக்கியை அமைக்கும் திட்டங்கள் உருவாகி வருகின்றன.
அவற்றில் ஒன்றாக நாசா உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து உருவாக்கும்LuSEE-Night (Lunar Surface Electromagnetics Experiment – Night)திட்டம் குறிப்பிடப்படுகிறது.
பூமியில் இருந்து வரும் ரேடியோ குறுக்கீடுகளைத் தவிர்க்க, நிலவின் பூமியை நோக்காத மறுபக்கத்தில் இந்த கருவியை அமைப்பது திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
நிலவின் மறுபக்கம் அமைதியான ரேடியோ சூழலை வழங்குவதால், இதன் மூலம் இதுவரை பூமியில் இருந்து தெளிவாக ஆய்வு செய்ய முடியாத பிரபஞ்சத்தின் ஆரம்பகால ரேடியோ சமிக்ஞைகளை ஆராய முடியும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
நிலவின் அமைதியான சூழல்... பிரபஞ்சத்தின் பழமையான ரகசியங்களைத் திறக்கும் புதிய சாவியாக மாறுமா?
0
Leave a Reply