25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


மனைவியின் நகைகள் யாருடைய சொத்து?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மனைவியின் நகைகள் யாருடைய சொத்து?

திருமணத்திற்கு முன், திருமணத்தின் போது அல்லது அதன்பிறகு மனைவிக்கு வழங்கப்படும் நகைகள், பணம், பரிசுகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் Stridhan எனப்படும்.

Stridhan என்பது மனைவியின் தனிப்பட்ட சொத்து,

கணவர் அல்லது அவரது குடும்பத்தினர். மனைவியின் சம்மதம் இல்லாமல் அவற்றை பயன்படுத்தினால், வைத்துக்கொண்டாலோ சட்டப்படி உரிமை இல்லை.

சட்ட ஆதாரம்:

வரதட்சணைத் தடைச் சட்டம், Act 1961 - பிரிவு 6

குறிப்பு: ஒவ்வொரு வழக்கின் உண்மைச் சூழ்நிலைக்கும் மாறுபடும். இந்த பதிவு பொதுவான சட்ட விழிப்புணவுக்காக மட்டுமே.

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

மனைவி இறந்த பிறகு நகை யாருக்கு? கணவருக்கே மட்டும் தானா?

மனைவியின் ஸ்திரிதனம் அவருடைய தனிப்பட்ட சொத்து, உயில் (Will) இல்லையெனில், சட்டப்படி வாரிசுகளுக்கு செல்லும்.

வாரிசுரிமைச் சட்டம், 1956

பிரிவு 15(1)(a)

கணவர், மகன், மகள் ஆகியோர் அனைவரும் சமமான வகையில் சட்ட வாரிசுகள்.

கணவர்,மகன்(கள்),மகள்(கள்)

வரும் சம பங்கு உரிமையாளர்கள்

ஸ்திரிதனம் (Sridhanam) என்றால் என்ன?

திருமணத்தில் கொடுக்கப்பட்ட நகைகள். 

சீர் வரிசை/ பரிசுப் பொருட்கள் 

பெற்றோர் கொடுத்த சொத்து .

மனைவி பெயரில் இருக்கும் FD வங்கி சேமிப்பு.

பணம் மற்றும் மற்ற சொத்துக்கள் .

உதாரணம்:

மனைவி + கணவர் 2 குழந்தைகள் இருந்தால், ஸ்திரீத்னம் 3 சம பங்குகளாக பிரிக்கலாம் .

3 முக்கியமான குறிப்புகள்.

1.கணவருக்கு தானாகவே முழுதும் கிடைக்காது.

குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கும் சம பங்கு உண்டு.

2.ஸ்திர்த்னத்திற்கு 'ஆதாரங்கள் அவசியம்.

பில், புகைப்படம், பட்டியல் இருந்தால் தான் உரிமையை நிரூபிக்க முடியும்.

3. குழந்தைகள் இல்லையெனில் கணவர் தவிர மற்ற சட்ட வாரிசுகள் (அம்மா, அப்பா உள்ளிட்டிடோர்) உரிமை பெறலாம்.

இது பொதுவான சட்ட விழிப்புணர்வு தகவல் மட்டுமே. உங்கள் வழக்கின் நிலவரத்திற்கு ஏற்ப சட்ட நிலை மாறலாம். தயவு செய்து ஒரு வழக்கறிஞரிடம் கவுண்சில் பெறுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News