அழிவின் விளிம்பில் இருந்து மீண்ட அரிய கிளி!
ஒருகாலத்தில் அழிவின் விளிம்பில் இருந்த அரிய காகாபோ (Kākāpō) கிளியை பாதுகாக்க நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
பறக்க முடியாத இந்த அரிய கிளி, உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடை கொண்ட கிளி இனங்களில் ஒன்றாகும்.
வேட்டையாடும் விலங்குகளின் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல காரணங்களால் காகாபோ இனத்தின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்த நிலையில், தீவிரமான பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கத் திட்டங்கள் மூலம் அதன் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இயற்கை பாதுகாப்பு முயற்சிகள் வெற்றியடையும்போது அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களையும் மீட்டெடுக்க முடியும் என்பதற்கு காகாபோ ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.
0
Leave a Reply